நிந்தாஸ்துதி – கணபதி … கந்தன்

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

பி.என். விசாலாட்சி


1: கணபதி

பாம்புக்கும் உன் பரம்பரைக்கும் என்ன பந்தமென்றும்
பேசுவது யாரையும் சிக்கவைக்கும்
தந்தையோ- கழுத்திலாரமாகப் போட்டார்
தாயோ, கைகளியணியாக்கி விட்டார் …..
தம்பியோ, காலினடியினிலிழையவிட்டார்,
மாமனோ படுக்கையாக செயதுவிட்டார்,
நீரோ- மார்பின் குறுக்கே போட்டார்,
கிட்டி விட்ட iபெருமைக்கும்
காட்டுமையா! காரணத்தை -கற்பகமே!
கண்கண்ட கடவுளே, கணபதியாரே!

நிந்தாஸ்துதி 2: கந்தன்

அப்பன் சடையாண்டி!
ஆத்தாள்- மலை நீலீ!
ஒப்பரிய மாமனோ- உறி திருடி,
சப்பைககால் அண்ணன் பெருவயிறன்,
நீயோ குன்றில் குறத்தி வசம்,
சண்முகா! உன் பெருமையை என் சொல்வேன் ?
சற்றே! மன்மிரங்கி மகிமை காட்டுமையா!
iன்றே! களிறுடன் வந்தென்
குலக்கொடிiன் குறை தீரும்மையா!

– பி.என். விசாலாட்சி
***
tpsmani@hotmail.com

Series Navigation

பி.என். விசாலாட்சி

பி.என். விசாலாட்சி