நள்ளிரவின் அழைப்புகள், இதைத் தான் அறிவிக்கின்றன!

This entry is part [part not set] of 35 in the series 20080731_Issue

எஸ்.அர்ஷியா


அறிவுக்கும் உணர்வுக்குமானப் போராட்டத்தில்
என் நீள்கோட்டுப் பயணம்
பு¡¢தலுக்கு ஆளானது.

நள்ளிரவின் நிசப்தம்,
கைப்பேசியின் அலறலில் கலைய…
சள்ளையுடன் எடுத்தாலும்,
“செத்தது யாராக இருக்கும்?” என்று
யோசிக்கத் தவறவில்லை.
நள்ளிரவின் அழைப்புகள்,
இதைத் தான் அறிவிக்கின்றன.

அது, நீ தான் என்ற போது,
மனசு நம்பவில்லை!

·

நான், அனில் இல்லை
நீ, முகேஷ் இல்லை
நம் அப்பாவின் பெயரும்
திருபாய் அம்பானி இல்லை
அவர், வெறும் தாவூத் பாய் தான்!

இந்தியப் பணக்காரர் பட்டியலில்
தாவூத் பாயும்,
உலகப் பணக்காரர்கள் வா¢சையில்
நாம் இருவரும் இல்லாததால்,
நமக்குள் பங்குச் சண்டை இல்லவே இல்லை.

அதனால்
குடும்பத்தின் மூத்த சகோதரனாகவே
உன்னால்
முழு அன்பைச் செலுத்த முடிந்தது.

தூரத்திலிருக்கும் தம்பி என்று
சுற்றமும் நட்பும் தரும் அழைப்பை,
என் சார்பாய் நீ ஏற்று…
ஊருக்கும் எனக்குமான
இடைவெளியைக் குறைத்தாய்.

அப்பாவின் பாத்திரத்தை
அழகாகப் படம் பிடித்தாய்.

நீ கண்டித்தது…
நான் முரண்டியது…
எல்லாமே நடக்கத்தான் செய்தது.
என்றாலும்
அண்ணனாய் உன் பங்களிப்பு
‘பொ¢யண்ணனாய்’ இருந்தது.

திரைப்படமாய் வி¡¢யும் ஞாபகத்தை
ஒவ்வொன்றாய் அவிழ்த்துக் கொண்டே
ஓடி நான் வந்தபோது,
கூடி நின்று அழுதக் கூட்டம்
விலகி நின்று வாய்ப் பொத்த…

விழிப் பிதுங்கல், வாய்க் கோணல்,
அகோரம் எதுவுமில்லை.
நீ தூங்கிக் கொண்டிருப்பதாகவே
எண்ணிக் கொண்டேன்.

“நல்ல சாவு!” என்றார்கள்.

·

மூன்றாம் நாள் ஜியாரத் முடிந்து,
நீயும் நானும் சந்தித்துக் கொள்ளும்
அலாவுதீன் கடைக்குப் போன போது,
”பாய் இல்லாட்டி
வர மாட்டீங்களோன்னு நெனைச்சேன்”
என்று அவர் சொன்னது தான்,
நீ மெளத் ஆனதை
எனக்கு உறுதி செய்தது.

(சகோதரன் ஷாநவாஸ் நினைவுக்கு)


arshiyaas@rediffmail.com

Series Navigation

எஸ். அர்ஷியா

எஸ். அர்ஷியா