நசுக்கப்பட்ட ஆல விதைகளில்…

This entry is part [part not set] of 28 in the series 20030323_Issue

மண்ணாந்தை


சீறும் எரிமலைகளின்
கந்தகம் நிரப்பும்
மெலிதான அவ்வளி மண்டலம்
ஊடே
ஊடுருவும் ஆற்றலுடை கதிரியக்கம்
இளம் புவியின் ஆதி கடல்களில்
நெளியும் கரிம மூலக்கூறிழைகள்
நோக்கங்கள் இன்றி
திசை நோக்கும் போக்கின்றி
பிணைந்து பிரிந்தாடும்
கரிம மூலக்கூறிழைகள்
அவற்றை இயக்கும்
ஆதவனின் கதிர் வீச்சு
கட்டளைகள் இல்லை
ஒரு நாள் உதயம் இல்லை
பல கோடி வருடங்கள்
குருட்டு இயக்கங்கள்
உருவாக்கும் ஒரு கோலம்
கரிம மூலக்கூறிழைகள்
அவை பற்றி
உருவாகும் உயிரும்
அதனூடே எழுந்திடும் இச்சைகளும்
மனமும் எண்ணமும்
அறிதலும்

இளம் புவியின் ஆதி கடல்களில்
நெளியும் கரிம மூலக்கூறிழைகளை
காட்டி ஒரு வேளை
எங்கோ ஓர் தந்தை
தன் இளம் கேள்வியாளனிடம்
கூறியிருப்பானா ?
‘தத்வமஸி ‘

***
infidel_hindu@rediffmail.com

Series Navigation

மண்ணாந்தை

மண்ணாந்தை