கோ. ஜோதி
“சுழன்றதும் ஏர்ப்பின்னதும் உலகம்”, “உழுவார் உலகத்தாக்கு ஆணி” இந்தியாவின் ஆன்மா கிராமாத்தில்தான் உள்ளது என்பன போன்ற கூற்றுக்கள் இன்று பொய்யாகி வருகின்றன. இந்தியா விவசாய வளர்ச்சியைச் சார்ந்துள்ள நாடு, மக்களும், அரசும் இதை கவனத்தில் கொண்டால்தான், நாட்டை வலிமை மிக்க நாடாக்க முடியும், விவசாய வளர்ச்சியோடு, தொழிற்துறை வளர்ச்சியும் தேவை. இதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் இருக்க முடியாது. ஆனால் இந்தியாவின் இன்றைய நிலை என்ன ?
ஏராளமான கிராமங்களைக் கொண்ட இந்தியாவில், கிராமங்களின் வளர்ச்சியும், விவசாய வளர்ச்சியும், தேயத் தொடங்கியது. விவசாய வளர்ச்சிக்கு அடிப்படையான நீர்ப்பாசன ஆதாரங்களில் அரசின் அக்கறையின்மை, விவசாயத்திற்கான மான்யங்களில் வெட்டு, கிரமாப்புற வளர்ச்சிக்கான திட்டங்களில் அக்கறையின்மை போன்றவை கிராமப்புறங்களில் பெறும் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. அவ்வப்போது ஏற்பட்ட வறட்சிகளும், மேலும் கிரமாப்புற மக்களை துன்பத்தில் ஆழ்த்தியது. நீண்ட கால பணப் பயிர்களான கரும்பு, வாழை போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிடத் துவங்கினர். டிராக்டர் போன்ற இயந்திர சாதனங்களும் விவசாயத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிக நிலங்களை வைத்திருப்போரிடமிருந்து உபரி நிலங்களைப் பெற்று, அவற்றை ஏழை விவசாயிகளுக்கு விநியோகிக்கும் அரசின் திட்டமும் சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் வெற்றி பெறவில்லை.
கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்தது. இதனால் கிராமப்புற மக்கள் அருகில் உள்ள நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். பல கிராமங்களைச் சுற்றி, சிறு நகரங்கள் தோன்றின. நகர்ப்புறங்களை நோக்கி இடம் பெயர்ந்து வந்த மக்களின் அடிப்படையான வசதிக்கான திட்டங்களை சரிவர நிறைவேற்ற முடியாமல் அரசு நிர்வாகம் திணறிக் கொண்டிருக்கிறது. நகர்புறத்திற்குத் தேவையான சாலைகள், மின்விளக்குகள், வீடுகள், குடி தண்ணீர், கழிப்பிட வசதி, குப்பைகளை அகற்றும் பணி போன்றவைகளில் கவனம் செலுத்த போதுமான நிதி வசதிகளும் இல்லை. இவற்றிற்கான நிதி வசதிகளை மேம்படுத்த அரசிடம் எந்த செயல் திட்டங்களும் இல்லை.
2001ம் வருடம் மார்ச் மாத மக்கள் தொகை கணக்கெடுப்பு பெருகிவரும் நகர்ப்புற வளர்ச்சியை நமக்கு உணர்த்துகிறது. 1991ஆம் ஆண்டு 25.7 விழுக்காடுகள் இருந்த நகர்ப்புற வளர்ச்சி தற்போது 2.1 விழுக்காடு உயர்ந்து 27.8 விழுக்காடு ஆகியுள்ளது.
இந்தியாவின் கிரமாப்புற மக்கள் தொகை – 2001
வ. இந்தியா/ மக்கள் தொகை கிராமப்புற
எண் மாநிலங்கள் (மில்லியனில்) மக்கள் தொகை(%)
1. இந்தியா———741.66——– 72.2
2. உத்திரப்பிரதேசம்-131.54——- 79.2
3. பீகார்———74.20——- 89.50
4. மேற்கு வங்கம்—57.73——- 72.0
5. மகாராஷ்டிரம்—-55.73——- 57.6
6. ஆந்திரா——–55.22——- 72.9
7. மத்திய பிரதேசம்–44.28——- 73.3
8. ராஜஸ்தான்—–43.27——- 76.6
9. தமிழ்நாடு ——-34.87——- 56.1
10. கர்நாடகா——-34.81——- 66.0
11. குஜராத்——–31.70——- 62.7
12. ஒரிசா———-31.21——- 85.0
13. கேரளா———23.57——- 74.0
14. ஜார்கண்ட்——-20.92——-77.8
15. சட்டிஸ்கார்——-16.62——- 79.9
16. பஞ்சாப்———16.04——- 66.1
17. ஹரியானா——-14.97——- 71.0
18. உத்திராஞ்சல்——6.21——- 74.4
இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை – 2001
வ. இந்தியா/ மக்கள் தொகை நகர்ப்புற
எண் மாநிலங்கள் (மில்லியனில்) மக்கள் தொகை(%)
1. இந்தியா——— 285.35—– 27.8
2. மகாராஷ்டிரம்—-41.05—– 42.2
3. உத்திரப்பிரதேசம்-34.51—– 20.8
4. தமிழ்நாடு ——-27.24—– 43.9
5. மேற்குவங்கம்—-22.49—– 28.0
6. ஆந்திரபிரதேசம்– 20.50—– 27.1
7. குஜராத்——–18.90—– 37.4
8. கர்நாடகம்—— 17.92—– 34.0
9. மத்திய பிரதேசம்- 16.10—– 26.7
10. பீகார்———8.68—– 10.5
11. ராஜஸ்தான்—– 13.21—– 23.4
12. கேரளா——–8.27—– 26.0
13. பஞ்சாப்——–8.25—– 34.0
14. ஹரியானா——6.11—– 29.0
15. ஜார்கண்ட்——5.99—– 22.3
16. ஒரிசா——— 5.50—– 15.0
17. சட்டிஸ்கார்——4.18—– 20.1
18. உத்திராஞ்சல்—-2.17—– 25.6
மேலே குறிப்பிட்ட பட்டியலில் மற்ற எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கிராமப்புற மக்கள் தொகை 56.1 சதவிகிதமும், நகர்ப்புற மக்கள் தொகை 43.9 சதவிகிதமும் உள்ளது. இதன் மூலம் நகரமயமாதலின் தன்மையை அறிந்து கொள்ள முடிகிறது. தமிழக கிராமப்புறங்களில் ஏற்ட்ட வறுமை, கடன் சுமை, நிலமிழப்பு, வேலையின்மை, பஞ்சம் போன்றவை இவற்றிற்குக் காரணம்.
சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இடம் பெயர்ந்த மக்களும், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சென்னை போன்ற பெருநகரங்களில் ஏராளமான குடிசைப் பகுதிகள் தோன்றியுள்ளன. இந்தக் குடிசைப்பகுதிகள் நாளடைவில், அரசியல்வாதிகளின் கைக்குள் வந்து, அந்த மக்களை தங்கள் சுயலாபத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த அப்பாவி மக்களையும், இளைஞர்களையும் சமூக விரோத சக்திகளாகவும் மாற்றி விடுகின்றனர். சென்னை நகரின் வளர்ச்சிக்காகத் தீட்டப்பட்ட பல திட்டங்களில் மேம்பாலங்கள் அமைத்தல், பறக்கும் ரயில் திட்டம் போன்ற திட்டங்கள் பெரும் தோல்வியைத் தழுவின. இத்திட்டங்களில் கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவிடப்பட்டது. தினந்தோறும் 6.03 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதற்காக தீட்டப்பட்ட பறக்கும் ரயில் திட்டத்தில் இப்போது தினந்தோறும் 3000 பயணிகளே பயணிப்பதாக புளிளி விவரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையான 1027 மில்லியனில் 742 மில்லியன் மக்கள் கிராமப்புறங்களில் 285 மக்கள் நகர்ப்புறத்திலும் வசிக்கின்றனர். இந்தியப் பொருளாதாரத்தின் மந்த வளர்ச்சியும், கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில் போதிய அக்கறையின்மையும், மக்களை நகர்ப்புறங்களை நோக்கி செல்ல வைத்து, அங்கும் அவர்களுக்கு பெரும் நெருக்கடியை உண்டாக்கி வருகிறது. இந்த நிலை தொடர்ந்து கொண்டே வந்தால் இந்தியாவின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு, ஒரு பெரும் ஆபத்தை உண்டாக்கி, நாட்டை நிலை குலையச் செய்து விடும்
- அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி
- சிக்கன விமானம் – உரைவெண்பா
- மண்
- அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி
- உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள்![Fast Breeder Reactors]
- அறிவியல் துளிகள்-17
- MANAVELI PERFORMING ARTS GROUP TO PRESENT TENTH ANNUAL FESTIVAL
- திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும் (மு.தளையசிங்கத்தின் ‘கோட்டை ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 51)
- பயணக் குறிப்புகள் 2003
- பயணக் குறிப்புகள் 2003
- மூன்றாம் பிறை
- பரீக்ஷா தமிழ் நாடகக்குழு வெள்ளி விழா கொண்டாடுகிறது.
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 14
- இந்த வாரம் இப்படி (மார்ச் 9, 2003- சாத்தன்குளம் வெற்றி, மாயாவதி ஊழல், சவர்க்கர் படத்திறப்பு, இந்தி மைல்கல்)
- மன்னிக்க வேண்டுகிறோம்
- பனியின் மடியில்….
- அன்புடனும், நன்றியுடனும் லூஸிபருக்காக
- பெண்
- நான்கு கவிதைகள்
- விஷமாகும் மனம் (பள்ளிக்கூட புத்தகங்களில் வெறுப்பு ஒரு பாடம்)
- கண்ணாடிக்கு அப்பால்
- இன்னா செய்தாரை ஒறுத்தல்…
- வாயு – அத்தியாயம் நான்கு
- நினைத்தேன்…சொல்கிறேன்…காதலும் கல்யாணமும் பற்றி…
- நசிந்த கிராமங்களும், நரகமாகும் நகரங்களும்
- ஆசியாவில் வளர்ச்சி வறுமையைக் குறைத்தது என்கிறார் சுர்ஜித் எஸ் பல்லா.
- ராஜதந்திரமும் இலக்கியமும் (சுராவின் பேட்டி)
- கடிதங்கள்
- அவனோட கணக்கு
- இந்தியாவுக்கு புத்த மதம் திரும்பி வருகிறது
- என் கண்ணில்
- உயர் மொழி !
- ‘ஊக்கும் பின்னும் ‘
- வறளையின் வீச்சு
- உறவுக்காலம்
- நீ வருவாய் என…..