தேசிய பல்துறை ஆய்வரங்கம்

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

ஹெச்.ஜி.ரசூல்


ஏலாதி சிந்தனைப் பள்ளி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தேசியப் பல்துறை ஆய்வரங்கு ஆகஸ்டு 14 மற்றும் 15 தேதிகளில் தக்கலையில் பவ்டா அரங்கில் நடைபெற்றது.

முதல் அமர்வுநவீன இலக்கியம் தலைப்பில் ஹெச்.ஜி.ரசூல் நெறிப்படுத்தினார்.

நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரி முனைவர்பட்ட ஆய்வாளர் ஜே.ஹெலன் கிறிஸ்டிபாய் சுகிர்தராணி கவிதைகளில் தலித் பெண்மொழி, மாங்குழி தூய பிரான்சிஸ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை அருட்சகோதரி அல்போன்சாள் ஐசக் அருமைராஜனின் நாவல்களில் கிறிஸ்தவ வாழ்வியல் நெருக்கடிகள், தெ.தி.இந்துக் கல்லூரி முனைவர்பட்ட ஆய்வாளர் கே.ஆர்.பீனாஇலக்கியத்தில் மானுடம்,ஜெ.எழில் முனைவர் பட்ட ஆய்வாளர் சிறுபத்திரிகை சூழலில் புதிய காற்று,ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் வாசித்தனர்.

கவிஞர் ஆர்.பிரேம்குமார், ஆய்வாளர் செந்தீநடராஜன் ஆகியோர் பகிர்வும் பதிவும் தலைப்பில் விவாதங்களை முன்வைத்தனர்.

இரண்டாம் அமர்வு மீள்வாசிப்பில் சமயமும் பண்பாடும் என்ற பொருளில் நடைபெற்றது.புதிய ஆராய்ச்சி இதழின் பொறுப்பாசிரியர் சி.சொக்கலிங்கம் தலைமை வகித்தார்.

முனைவர் எஸ்.குமரேசன் திருத்தமிழர் போராட்ட இயக்கங்கள் முனைவர் பட்ட ஆய்வாளர் சு.சுந்தர் ஹெச்.ஜி.ரசூல் கவிதைகளில் சமுதாயச் சித்தரிப்புகள்,என்.ஐ.கல்லூரி தமிழ்துறைத் தலைவர் பேரா. பத்மதேவி வள்ளலார்-நாராயணகுரு படைப்புகள் ஓர் ஒப்பீடு ஆகிய கட்டுரைகளை வாசித்தனர்.

மூன்றாம் அமர்வு நெல்லை மனோன்மணியம் பல்கலைகழக தமிழ்துறைப் பேராசிரியர் முனைவர் ஞா.ஸ்டீபன் நெறிப்படுத்தலில் இனவரைவியலும் எழுத்தும் பொருளில் நடை பெற்றது.

வி.ஆன்றெனி பிரகாஷ் பபிலா முனைவர் பட்ட ஆய்வாளர் கத்தோலிக்க சமயத்தில் புனிதர்கள் நாட்டார் வழ்க்காற்றியல் நோக்கு, எம்.டி.அருள்மொழிநங்கை குமரிமாவட்ட சலவைத் தொழிலாளர் வாழ்க்கைமுறையும் பண்பாட்டுக் கூறுகளும், முனைவர் பட்ட ஆய்வாளர் ஏஞ்சல் ஜெலட்ராணி திலகவதி நாவல்களில்பெண்ணியம் கட்டுரைகளை வாசித்தனர். ஆய்வளர் மா.பென்னி,எஸ்.ஜே.சிவசங்கர் விவாதங்களை முன்வைத்தனர்.

இரண்டாம்நாள் நான்காம் அமர்வு நாவல் புனைகதை சங்க இலக்கியம் பொருளில் நடைபெற்றது.

பேரா.நட.சிவகுமார் நிகழ்வை நெறிப்படுத்தினார். தெ.தி இந்துக் கல்லூரி தமிழ்துறை பேராசிரியை ஆர்.என்.சிறீகலா நாவல்கள் முன்வைக்கும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை மலர்சாலமன் விவிலியத்தில் கதையாடல்கள் முனைவர் பட்ட ஆய்வாளர் எம்.அழகுமுருகண் நாஞ்சில்நாட்டு வெள்ளாளரின் இன வரைவியல், தலைப்புகளில் கட்டுரைகள் வாசித்தனர். ஆய்வாளர் ஷாகுல்ஹமீது விவாத கருத்துரை ஆற்றினார்.

ஐந்தம் அமர்வினை முனைவர் பொ.நா.கமலா நெறிப்படுத்தினார்.முனைவர் பட்ட ஆய்வாளர் கே.பாலஸ் குமரிமாவட்ட குழூகுறியீட்டுச் சொற்கள், முனைவர்பட்ட ஆய்வாளர் சரஸ்வதி குன்று தோராடும் குமரன் கட்டுரைகளை வாசித்தனர். நாவலாசிரியர் மீரான்மைதீன் கருத்துரை வழங்கினார்.

ஆறாம் அமர்வினை முனைவர் வறீதையா கான் ஸ்டன்டைன் நெறிப்படுத்தினார். முனைவர்பட்ட ஆய்வாளர் ராணி மீனவர் கிராமம் ஊர்பெயர் ஆய்வு பேராசிரியை ஜி.நாகேஸ்வரி சங்க இலக்கியத்தில் மானுடவியல் முனைவர் பட்ட ஆய்வாளர் தே.மெர்லின் கலைஞரின் கவிதைநயம் கட்டுரைகளை வாசித்தனர்தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்றன.

தேசியபல்துறை ஆய்வரங்கில் திரளான முதுகலை கல்லூரிமாணவ மாணவியர்களும், படைப்பாளிகளும் பார்வையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.ஆய்வாளர்களுக்கான சிறப்புச் சான்றிதழை மருத்துவர் ஏ.பிளாட்பின்.பேரா.ஐய்யப்பன், ஹெச்.ஜி.ரசூல் ஆகியோர் வழங்கினர். புதிய காற்று ஆசிரியரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான ஹாமீம் முஸ்தபா நன்றி கூறினார்.

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்