தூங்கும் மழைத்துளி

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

திலகபாமா


அலை கடலாய் கரை அரிக்க
அரித்த கரை நெடுவிலும்
அணிவகுக்கும் சிப்பிகளின்
அலங்காரம் துலங்கும்
சமுத்திரத்தின் சங்கமமாய் நானும்
கால்களுக்கடியில் கரைந்து போகும்
மணல் துகளாய்

கரையுமென்றெண்ணிய பாவங்களுக்காய்
மூழ்கினாலும் என்றும்
மூழ்காத கடலாய்
முத்துக் குளிக்க ஆசை உனக்கு

மூச்ச்சடக்க திராணி இல்லாது
தென்றலில் ஆடியபடியே
எனை கிழித்துக் கொண்டு
மிதக்கின்ற தோணிக்கு
கரை கிட்டும்

கிட்டாது கழுத்தில் சிரிக்கும்
முத்துக்கள்
உடை சுருக்கம்
உடல் சுருக்கம் மறுத்து உன்
உணர்வு சுருக்கம்
கண்டுள்ளம் சுருங்க

விரிந்த மனதால் உள்ளம் நிறைக்க
நிறைந்த உல்ளம் நீள்கடல் மூழ்கி
அலைகடல் முத்தை
மாலையாய் தோள்களில் தவழும்
நாட்கள் எதிர்பார்த்து
சிப்பிக்குள் தூங்கும் மழைத்துளி

Series Navigation

திலகபாமா

திலகபாமா