பொன்னீலன்
கவிதைகள் இரண்டு வகை. விண்ணிலிருந்து மண்ணில் பொழிபவை ஒரு வகை. ஆவேசமும், கூர்மையும் நிறைந்தவை அவை. அறிவுருத்தும் உணர்த்தும் திறன் பெற்ரவை. சமூக எழுச்சிக் காலங்களில் இடியுடன் புயலுடன் தரையிறங்கி மனிதத் திறளை தூண்டுபவை. ஆற்றல் கொள்ள வைப்பவை. ‘ பாரதியின் சாதி மதங்களை ப் பாரோம் போல….
இன்னொரு வகை கவிதைகள் மண்ணிலிருந்து விண் நோக்கி பாய்பவை. அழுத்தம் பெற்று இறுகிப் போன சுய அனுபவங்கள்,உணர்வுகள், சிந்தனைகள், மேல் நோக்கி பீரிட்டு பாயும் போது இவ்வகைக் கவிதைகள் பிறக்கும் முன்னது பொது உணர் வைச் சமூகத்தினர் மீது பெய்து, தனிமனிதர்களின் உணர்வுகளை த் தழைக்கச் செய்யுமானால், பின்னது தனி மனித உணர்வு நிலையிலிருந்து பீறிட்டு சமூகத்தின் பொது உணர்வை துண்டிக் கனியச் செய்யவை.
தனிவுணர்வும் பொதூணர்வும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவுபடாதவை. பிரிக்கவும் முடியாதவை.
இன்று மண்ணிலிருந்து விண்ணுக்குப் பாயும் கவிதைப் போக்குப் பெருவழக்காகியுள்லது. மண் பிளவு பட்டுள்ளது. வர்க்கம்,சாதி,சமயம்,இனம் ,மொழி பால் என பிளவு பட்டுக் கிடக்கும் பூமியில் , எங்கோ ஒரு புள்ளியில் வேர் விட்டு மாட்டிக் கிடக்கிரது மனிதம். இந்த மாட்டுதலில் மூச்சு முட்டிப் போகும்மனிதத்தின் உணர்வுகள். விரிவு தேடி, எல்லைகள் அற்ற சுதந்திரம் தேடித் தாவும் இடம் வானமாகத் தான் இருக்க முடியும்..
வானத்துக்குத் தாவத் திராணியற்றுக் கீழ் நோக்கி மண்ணுக்குள் புதைந்து இருண்டு சுருண்டு போவாரும் உண்டு.
வானம் எல்லையற்ரது. சுதந்திரமானது. இறக்கைகள் இழக்கும் வரை பறந்து திரிய இடம் தருவது.இந்த மண்ணுக்கும் வின்னுக்குமான உணர்வின் தொப்புள் கொடியாக உயிர்ப் பாலமாக அமைவது தான் உயிர் உள்ல கவிதை. இம்மாதிரி உயிர் உள்ல கவிதை திலகபாமாவிடம் இருந்துபீரீட்டும் பிரவாகம் கொண்டிருக்கிறது.பெண் ஒடுக்கு முரை என்ற புள்லியிலிருந்து எல்லைகளற்ர காதல் வானை நோக்கி பீறிடுகிறது அவர் கவிதை.
தாய்
கணவன்
சமூகம்…..
ஒடுக்கு முரையின் வடிவங்களாகக் கவிஞர் அடையாளப் படுத்துவை இவை.இந்த அடையாளங்களின் பொது குறியீடாக அவருக்குத் தெரிவது தாலி. அது பெண்னின் வாழ்க்கையை இரண்டாகப் பிளவு படுத்தி விடுகின்ற வேலி.தாலிக்கு முந்தியது கனவு மயமான சுதந்திர வானம். பிந்தியது சங்கிலியில் பிணைக்கப்பட்டுச் சுருண்டு கிடக்கும் இருள் குகை.
இரண்டு வாரங்களுக்கு முன் நாகர் கோவில் மாவட்ட ஆட்சியரின் தந்தை டாக்டர் தாலோச்சன் சிங் பேடி அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். பஞ்சாபிக்காரரான அவார் தமிழுக்கும் பஞ்சாபிக்கும் உள்ல ஒற்றுமைகளை ஆய்வு சேஉது கொண்டிருப்பதாக குறிப்பிட்டர்..
அவர் ஒரே பொருளில் இரு மொழியிலும் கிட்டத் தட்ட ஒரே ஓசையில் பயன்படுத்தப்படும் 200 சொற்களைக் கொண்ட பட்டியலை என்னிடம் தந்தார். அதில் ஒரு சொல் தாலி . தாலிக்கு பஞ்சாஅபியில் பொருள் சிறிய பூட்டு.பஞ்சாபியில் மட்டுமல்ல. இந்தி, வடமொழி போன்ற இன்னும் சில வட இந்திய மொழிகளிலும் அது பயன்படுகிறது. ஒரு பெண்ணை ஒரு ஆணுடன் பூட்டி விடும் அடையாளம் அது என்பதால்தாலி என்று பெயர் பெற்ரது என்றார்.பூட்டுக்கு அவர் சொன்ன விளக்கம் திலகபாமாவின் கவிதைகளைத் திறக்கும் அரிய திறவு கோலாக எனக்கு கிடைத்தது ஆச்சாரியம்தான்.திலகபாமாவின் கவிதை உலகிலும் தாலி பெண்ணுக்கிடும் பூட்டகவே உருக் கொண்டிருக்கின்றது.
எத்தனை நெருக்கடி இருந்தாலும் சுதந்திரமாகக் கனவு கண்டு, சொகுசாகத் திரியும் இளமை வாழ்க்கை தாலி கட்டப்படுவதோடு பெண்ணுக்கு முடிந்து விடுகிறது.
தாலி கட்டிய பின்
முகம் இழந்து
தாலி கட்டியவனின்
உடைமைகளாகத் தரம் தாழ்ந்து
அவன் சுகத்துக்கு
வாழும் அடிமை வாழ்வாக
இழிந்து போகும் அருவறுப்பான வாழ்க்கை தாலி வாழ்க்கை. இந்த இழிவின் கொடூரத்தை, கொடூரத்தினுள் நசுங்கிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் ஏக்கங்களை சூடுடாறாமல் சொற் கிண்னங்களில் சேகரித்திருக்கிறார் கவிஞர்.
பெண்னை அதன் மிகவும் விரிவான தளத்தில் உணர்கிறார் கவிஞார். இயற்கையின் ஒரு பெருங்கூராக அவளை உணர்கிறார். பெண் ஒடுக்கு முறை இயற்கை மீது செலுத்தப்படும் ஒடுக்கு முறையாக அவருக்குள் விரிவு படுகிறது.
பூமியின் அழிவு , ஓடையின் அழிவு மரங்களின் அழிவு , இவைகளெல்லாம் அவரை ஆதிர வைக்கின்றன. கவிதைகள் முழுவதும் இயற்கையின் அற்புதமான சித்திரங்களாகவும், ஆரிவியலின் கை பட்டு அழுகிக் கொண்டிருக்கு இழிவுகளின் சித்திரங்களாகவும் விரிகின்றன.அறிவியலையும் ஆணாதிக்கத்தையும் ஒன்றாகக் காண்கிறார் கவிஞார். அவருடைய கவிதை சமூகக் கொடுமைகளுக்கு எதிரன கண்டனK குரலாகவும் சாதி வெறிக்கு எதிரான சாபமாகவும்,ஏழ்மைக்கு எதிரான கனலாகவும் கூட வெளிப்படுகின்றன. இவைகளும் கூட ஆணாதிக்கத்தின் விளைவுகளாகவே இவருக்கு ப்படுகின்றன.
.இந்த விதமான விடுதலை உணர்வுகளை ஆறிவிடாமல் தேக்கக் கவிஞர் தன் கவிதைகளில் பயன்படுத்தும் படிமங்கள் ,உவமைகள், சொல்மின்னல்கள் சிறப்பானவை. கோடை காலாத்து மின்னல்கள் கொடி வீசி வானம் முழுவதும் படார்ந்து நிற்பது போல சில கவிதைகள் ஆவேசச் சாறு செறிந்து , மொத்தமாகவு ஒளி வீசுகின்றன.
பெண்மையை ஒடுக்கி, அதன் சுதந்திரத்தைச் சங்கிலியிட்டு , ஆணுக்கு அடிமையாக்குவந்தையே லட்சியமாக கொண்டிருப்பவள் இன்றைய தாய் என்கிறார் கவிஞர். இதற்காக மகளை பொத்தி பொத்தி வளர்க்கிறாள் அவள். சுதந்திர உணர்வுகளை யாரால் பொத்தி வைக்க முடியும் ?
அம்மாவிடம் சொல்லுகிறார் கவிஞர்.
‘மழைக்குப் பயந்து
மண்ணுக்குள் வைத்தாய்
நீரூற்ருள் நான் நனைந்ததை
நீ அறிய மாட்டாய் ‘
இது படிமமா ?உவமையா ? இரண்டும் ஒன்றில் ஒன்று கலந்த புதுமையா ?
பெண்மையை
‘ அடிவாரத்திலிருந்த
அணையில் முட்டக் குடித்தும்
தாகம் தணியாது
மேகத்துடன் கெஞ்சி
கிடந்த மலையும் உண்டு.
கண்மாயின் கண்ணீரில்
முழுதும் மூழ்கியிருந்தும்
அழுகாது பச்சையாய்
சிரிக்கின்ற கருவேலமுண்டு
அன்பற்ர குடும்பக் குளத்தில் தினமும் குடித்தும் தாகம் தணியாதவளாகவும் அதே குளத்தில் மூழ்கிக் கிடந்தும் அழுகி விடாமல் தன்னை உயிர்ப்பித்துக் கொள்ளுபவளாகவும் விசித்திரமாகத் தன்னைத் தக்க வைத்துக் கொண்டு வாழும் மனை வாழ்வின் நுட்பமான சித்திரங்கள் இவை.
இதை தாண்டியும் இவர் கவிதை பாய்கின்றது.
‘ கற்பின் கனலுக்கிடும் எல்லை
காற்றுக் கிடும் எல்லையென
இலட்சுமனன் கிழித்த கோட்டை
படிதாண்டி கணலை
பார் நிறைத்த சீதையுண்டு ‘
வாசிக்கத் தெரிந்தவருக்கு ஒன்றுக்குள் பலதையும் பலதுக்குள் ஒன்றையும் விரித்தும் தொகுத்தும் காட்ட இந்தப் படிமங்கள் எல்லையற்ர ஆற்றல் கொண்டவை.
‘ சீதையை விடுத்து மண்டோதரியை
சிறை வைத்த ராவனேஸ்வரர்கள் உண்டு
இந்த வாரிகளில் சீதை தாலிக்குள் அகப்படாத காமக் குறியீடாகவும் மண்டோதரி தாலி கட்டி அடிமையாகிப் போன
பெண்ணின் குறியீடாகவும் உருமாறும் அற்புதத்தை அனாயசயமாகச் செய்திருக்கிறார் கவிஞர். சூரியனுக்கும் கிழக்கே
கவிதையின் மொத்தமுமே ஒரு சரடில் கோர்க்கப்பட்ட பல மலர்களாகவும் பல மலர்களால் தொகுக்கப்பட்ட ஒரு
மாலையாகவும் சிறப்பாகவும் அமைந்திருக்கின்றது
‘ஆதி சிவனார் முதல்
தாய்வீடு அனுப்புதல்ஒரு
தண்டனையாயும்
அனுப்பதிருத்தல் ஒரு
சாபமாயும் சாதித
திருவிளையாடலாய்
அண்ணனுக்குள்ளும் தந்தைக்குள்ளும்
அடுத்த தலைமுறை பிள்ளைக்குள்ளும்
தாயாண்மையை அழிக்கத்
தூவப்பட்ட்ட வித்துக்கள்
திரும்ப திரும்ப
முளை விட்டபடி…… ‘
பெண்ணடிமைத் தனத்தின் துயர வரலாறு இந்த வரிகளில் நெருப்பு ஓடையாக கொதிக்கிறது
‘தாலியில் புது உறவுகள்
தங்கம் மட்டுமன்றி
தானும் கோர்க்கப்படலாம் ‘
ஆம், தமிழ்னாடுப் பெண்ணின் எல்லாமே தாலிதான். அவளுடைய எல்லா உறவுகளையும் தாலியே தீர்மானிக்கிறது.கவிஞர் சொல்லுகிறார்.
‘வாழ்வுகள் எம்மோடு அல்லாது
தாலியோடு வந்த உறவுகளோடு
நிர்ணயிக்கப்பட்டதில்
நிர்வானமாய் இருக்கின்ற சமூகம்
வெட்கமோ எமக்கு மட்டுமே உரியதாய் ‘
நிர்வாணம் ! எவ்வளவு வீரியமான சொல்லாட்சி.கவிஞர் தனக்குரிய ஒரு பொன்னுலகை இன்க்கவிதையில் படைத்துக்
காட்டுகிறார்.
‘பெண்ணாய் எமை நோக்கும்
பேதங்களற்ர ஒளி நோக்கி
கண்ணென எமை சொல்லி
தூசியிலும் வெப்பத்திலும்
துணை நிற்குமென்று கருப்பு கண்ணாடி மாட்டி விட்டு
உலகை இருளாய் உணரச் செய்த
உன் மத்தர்கள் இல்லா உலகு நோக்கி…. ‘
கவிஞரின்கவிதைப்
பயணம் தொடர்கின்றது.கருப்பு கண்ணாடி என்ற சொல் பெண் உணர்வுகளையே இரும்பாக்கி வைக்கும் அடிமைத் தனத்தின் கூர்மையான குறியீடு.
இந்தத் தொகுப்பிலுள்ல மிக நல்ல கவிதைகளில் ஒன்று குழந்தை இழந்து விட்ட குழந்தைதனங்கள் பற்றியது.
‘ எழுதிய கவிதையை
ஏறெடுத்தும் பார்க்க முடியாமல்
குழந்தைகள் காப்பகத்தில்
ஆசையாய் பெறதை
அள்ளி எடுக்க முடியாமல் போன
நிராசையால் அளவோடு
நிறுத்தியதால்,
விளையாட ஆளின்றி
வீடியோ கேமில்
வீழ்ந்து விட்ட குழந்தை ‘
பெண்ணின் ஆழ் உணர்வுகள் சமூக வெளிச்சத்தில் மங்கிப் போய் இருந்தாலும் அந்த ஆழங்களில் கண் சிமிட்டிக் கொண்டே தான் இருக்கும் என்ற உண்மையைப் பாஞ்சாலி-கர்ணன் மானசீகக் காதல் உணர்த்தும், ஆழம் காண முடியாத இந்த உணர்வை கவிஞார் அற்புதமான படிமத்தில் அடைத்து வித்தை காட்டுகிறார்.
‘ ஆயிரம் விளக்கு வைத்தும்
அறிய முடியாமல் மின் மினிகள்
காரிருளில் கண் சிமிட்டும் ‘, என்றும்
‘ சூரிய வெளிச்சத்தில்
சுடராத நட்சத்திரங்கள்
வெண்னில ஒளியில்
வெடித்து சிதறிய மத்தாப்பாய் ‘ ‘,
பெண் குழந்தையின் சுதந்திர வாழ்வை விழுதின் சுதந்திரத்திற்கு உவமிக்கும் கவிஞர்.அவ்விழுது வேராய் இறங்குக் கிளையைச் சுமக்கத் தொடங்கியதை தாலி கட்டிய பெண்னிற்கு உவமிக்கிறார்.திருமணத்திற்குப் பின் கணவனின் ரசனைக்காக மனைவி எண்ட்று ஆகிப் போவாது எத்தனை பரிதாபம்!
‘நெற்றிப் பொட்டு வடிவம் கூட
மாற்ரி நீ வைக்கச் சொன்னதில்
வெற்றிடமாய்ப் போன மனம் ‘
காதல் பற்ரிய திலகபாமாவின் கவிதைகள் இனிமையானவை. மரபுகளை உடைத்து மடை திறந்து பாயும் வெறி மிக்கவை. குதித்துக் குதித்து பாயும் சொல்லருவிகள் அவை.
‘வெளிவரும் இலையழகை
பட்டுத் தெறிக்கும் மழைத்துளியை
சுட்டு விடும் சுடரழகை
கண்டு காதல் கொண்டு
கனிந்து போனதுண்டு ‘
என்று பரவசப்படுகிறார் கவிஞர்.
‘தவமாய் காதலைக் கட்டியணைத்து
எமனை எட்டி உதைத்திடுவேன் ‘
என்று காதலில் அமர நிலையைப் போற்றுகின்றார். எடுக்கவோ கோர்க்கவோ கவிதை வன்முறை எதிர்ப்பு உணர்வில் வெளிப்பாடாய் விரிகிறது.
‘நாரெடுத்து நரம்பு தெறிக்கக் கட்டி
கழுத்து நரம்பு நெரிக்கப்பட்டு- உன்
கழுத்துக்கு மாலையாவதை விட
உதிரியாய் இருப்பதே
உள்ளத்துக்கு இனியதாய்….. ‘
இருதிப்பயணம் ,தாலியா வேலியா, முடிச்சுப் பின்னல்களாய் சூரிய கிரகணம் ஆகிய கவிதைகள் படிக்கப் படிக்க விரிந்து செல்பவை.
‘விடிவெள்ளியோடு ஒரு விடியல் ‘ ஒரு கவிதைச் சிறுகதை. ஆணுக்காகப் பெண் காத்திருக்கும் நிலை மாறி, காதல் கனிந்து இல்லத்தில் பெண்ணுக்காக ஆண் காத்திருக்கும் நிலை வர வேண்டும் என்னிவர் விரும்புகிறார்.
‘ மல்லாந்து வானம்
பார்த்திருந்த போதும்
மண் வாசத்திற்காக
மழை ஒரு நாள்
நகம் கடித்து துப்பிய படி
காத்திருக்கட்டும் ‘
மண் வாசத்துக்காக என்னும் சொல் இந்த இடத்தில் எண்ண எண்ன விரிவும் ஆழமும் கொண்டு என்ன என்ன நிலைகளைக் காட்டுகிறது.அதே போல,
‘பொன்னகைக்கு மாற்றாய்
புன்னகையும் அணிய முடியாது
கவரிங் புன்னகையைத் தேடியபடி ‘
என்று இன்றைய பெண்ணின் முகமூடி வாழ்க்கையை சொல்லும் போது ‘ கவரிங் புன்னகை ‘ பல வண்மை காட்டும் மாயக் கண்னாடியாய் ஜொலிக்கிறது.
இவருடைய கவிதைகள் பல எளிய விளக்கத்துக்கு சிக்காத சொற்கனிகள். கனிந்த இதயம் அனுபவிக்க அனுபவிக்கவே அவற்ரின் அழகும், ஆழமும் மேலும் மேலும் புரிய முடியும்,உணர முடியும்.உணர்ந்து அனுபவிக்க முடியும்.
திலகபாமா கவிஞார் மட்டுமல்ல, பல திறமைகள் நிறைந்த அற்புதமான மனிதர். வீணை விற்பனர் . முறையாக பரத நாட்டியம் கற்ரவார். கரகாட்டத்திலும் வல்லவர். குடும்ப பொறுப்பை ஏற்ரு , மருத்துவரான தன் கணவருக்கு உதவிக் கொண்டும்குழந்தைகளை வளர்த்துக்கொண்டும் தன் பட்டங்களையெல்லம் பெருக்கிக் கொண்டும், வாழ்வாங்கு வாழும் இவர் தொழில் நகர் சிவகாசியில் பாரதியின் பெயரில் ஒரு இலக்கிய மன்றம் நிறுவி அருமையாக நடத்தியும் வருகிறார்.
இது திலகபாமாவின் முதல் தொகுப்புதான்,தான் ஒரு வீரியமிக்க கவிஞர் என்பதை அவர்ஐத்ஒகுப்பிலேயே அழுத்தமாகக் காட்டியிருக்கிறார்.படிம வார்ப்பில் அவர் கவனம் மேலும் மேலும் குவியும் போது அவர் கவிதைகள்மேலும் அழகு கூடும். அவருடைய சித்தரிப்புகள் நுட்பமான ஓவியங்களாக விரிகின்றன. 21ம் நூற்றாண்டுத் தமிழ் கவிதையை அலங்கரிக்கும் சிறந்த கவிதைக்கள் இத்தொகுப்பிலும் உல்லன என்பதில் ஐயமில்லை
***
- புராதன ஏரியின் தட்பவெப்ப ரகசியங்கள்
- எட்டாத தொலைவு
- பனி
- குழவிக் கூடு குவலயம்..
- தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)
- குமட்டும் குறள் ஹைக்கூக்கள்
- பிறவழிப் பாதைகள் – சிறுபத்திரிக்கைகள், புனைகளம், கதைசொல்லி, அட்சரம்
- எனக்குப் பிடித்த கதைகள் – 1 – புதுமைப் பித்தனின் ‘மனித யந்திரம் ‘
- தொன்னையைக் கொண்டு பாயசம் குடிக்கலாம். கடலைக் கடக்க முடியாது. (கலாச்சாரம் பற்றிய ஜெயமோகன் பதில்களுக்கு எதிர்வினை)
- திலகபாமாவின் கவிதைகள் – ஒரு மதிப்புரை
- காஷ்மீர் புலாவ்
- சிந்தி காய்கறி கூட்டு
- கண்ணுக்குள் உடலின் கடிகாரம்
- பாஞ்சாலி ராஜ்யம்
- தேடுகிறேன் தேவதையே !
- விளையாட்டுப் பொம்மை
- மீட்டிங்…
- கொடியேற்றம்
- முகங்கள்
- குளிர்! குளிர்! குளிர்!
- எதற்கும் தயாராகி நிற்போம்!
- தெளிவு
- குமட்டும் குறள் ஹைக்கூக்கள்
- ‘தர்மோ ரக்ஷதி ரக்ஷிதா ‘ (அறத்தைக் காப்பாற்றினால், அது காப்பாற்றும்)
- பெரியார் பற்றிய பல்வேறு புரிதல்கள் பற்றிய மஞ்சுளா நவநீதனின் கட்டுரைக்கு எதிர்வினை
- குரு தட்சிணை