தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஒளிமய ரூபனே ! நீயிங்கு
வந்திருக்கிறாய் !
கதவினை
உடைத்து வந்த
உனக்கு வெற்றி !
இருள் குவிந்த
இந்தக் குவலயத்தை
ஊடுருவும் உன்
உன்னதக் காட்சி
பெற்றிடுவாய் அதில் நீ
வெற்றி !
வெற்றி மாலை சூடிய
வீரனே !
புதிய தினம்
புலர்ந்திடும் போது
புது நம்பிக்கை எனும்
உடைவாளை
ஏந்தி யுள்ளாய்
உன் கரங்களில் !
உதை கொடுத்து
வலுவற்ற கோழை
உள்ளத்தை ஊடுருவிப்
பந்த பாசத்தை எனக்கு
வெட்டி விடு !
பெற்றிடுவாய் அதில் நீ
வெற்றி !
வெல்ல முடியா தவனே
வருக ! வருக !
எவருக்கும்
விட்டுக் கொடுக்கா தவனே
வருக ! வருக !
தூயவனே வருக ! வருக !
அச்சம் இல்லா தவனே
வருக ! வருக !
பெற்றிடுவாய் அவற்றில் நீ
வெற்றி !
காலை இளம் பரிதியிலே
காணச் சகிக்காத
போலி வேடத்திலே
புகுந்தி ருக்கிறாய்
துன்பப் பாதையில்
உன் சங்கை முழக்கி !
மரணத்தை அழித்துன்
ஒளிக்கதிர்
கனல்பொறி எழுப்பட்டும்
எனது நெஞ்சில் !
பெற்றிடுவாய் அதில் நீ
வெற்றி !
(தொடரும்)
************
1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra
2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023
*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (December 1, 2008)]
- இலங்கு நூல் செய்த எழுத்தாளர்கள்: ட்ரூமன் கப்போட் (1)
- முக்கோணக் கிளையில் மூன்று கிளிகள் ! (பெருங் கதை) -1
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன், சனிக் கோள்களின் துணைக் கோளில் அடித்தள திரவக் கடல் [கட்டுரை: 45]
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்)(1809-1865) காட்சி -2 பாகம் -1
- மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்…
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -13 << தீவிலே அடித்த புயல் ! >>
- தாகூரின் கீதங்கள் – 58 கனல் பொறி எழுப்பட்டும் !
- வேத வனம் விருட்சம் 13
- வாழ்வும் வலியும்
- உருவமற்ற நிழல் பொழுது/ மனம்
- நீ வரப்போவதில்லையென..
- கேமந்த் கர்கரே, அசோக் காம்தே, சந்தீப் உண்ணிகிருஷ்ணன் – ஒரு கலை அஞ்சலி
- கடவுளின் காலடிச் சத்தம் – 6 கவிதை சந்நிதி
- வனத்தின் தனிமரம்
- கொத்தணிக் குண்டுகள்-Cluster bombs
- கவிதைகள்
- ஓர் சந்திப்பு!
- கரித்துண்டால் குறித்துவைத்த தோற்றம் மறைவின் குறிப்புகள்
- தீவிரவாதம்
- மடயர்க்குப் பாடம் சொல்வாய்!
- வார்த்தை டிசம்பர் 2008 இதழில்…
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினேழு
- காயம்பட்ட நியாயங்கள்.