தாகூரின் கீதங்கள் – 39 நான் பாடும் கீதம் !

This entry is part [part not set] of 33 in the series 20080710_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


பிடிக்க வில்லை உனக்கது என்றால்
முடித்து விடுவேன்
பாடிக் கொண்டி ருப்பதை !
உன் நெஞ்சம்
துடிக்காமல் போனால்
முகத்தைப் பாராதென் கண்களை
அகற்றிக் கொள்வேன் !
நடந்து போகையில் கீதம் உனைத்
திடுக்கிடச் செய்தால்,
நகன்று வேறு பாதையில்
நடந்து செல்வேன் !
தொடுத்து மலரைப் பின்னும் போது
கீதம் உனைக்
குழம்பிடச் செய்தால்
உலவிடும் உனது தனிப்
பூந்தோட் டத்தை
புறக்கணித்துச் செல்வேன் !
நீரோட் டத்தைக்
கடுமையாய்க் கொந்தளிக்க வைத்தால்
ஏரிக்கரை யோரம்
இயக்கிச் செல்ல மாட்டேன்
என் படகை !

************
1. The Gardener,
Translated By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 7,, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா