தாகூரின் கீதங்கள் – 14 புதிய பந்தத்தில் பிணைத்திடு !

This entry is part [part not set] of 34 in the series 20080131_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


இதுதான் முடிவா என் இனியவனே !
எதற்காக வாழ்ந்திட வேண்டும்
என்று எண்ணுவதற்கு ?
இயற்கை எழிலுக்கா ?
பாட்டுக்கா ? பரிவுக்கா ?
விழிப்பு உணர்வுக்கா ?
இல்லை ஆழ்ந்த கனவுக்கா ?
தளர்ச்சி அடைந்தன என்
கைப்பிடிகள்;
உணர்ச்சி கூட்டா தென்
முத்தங்கள்.

இரவு அந்திமச் சந்திப்பு
என் மரக்குடி வாழ்வில்
ஏற்கனவே விடிந்து விட்டது !
மேலும் பிளந்து
இன்றைய தோரண அமைப்பு
புதிய கோலத்துடன்
கொண்டுவரும்
புது வடிவம் !
அது புதியவனாய் என்னை
ஆக்கும் !

ஆதரிப்பாய் மீண்டும், என்னைப்
புறம்போக்கு
மூதாள னாய் எண்ணி !
புத்துயிர் பெற்ற ஒரு பிறவியுடன்
அடுத்ததோர்
திருமணத்தில் பிணைத்து விடு
பாச பந்தத்தில்
நெருக்கி என்னை !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 28, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா