தாகூரின் கீதங்கள் – 11 வாழ்வுக்கு ஆதிமூலன் நீ !

This entry is part [part not set] of 54 in the series 20080110_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா



என் உள்ளத்தின்
உள்ளே
உட்கரு வானவனே !
உன்னுடைய தாக மெல்லாம்
தணிந்து விட்டதா
மண்ணில் இறங்கி வந்து
என்னுடனே
தங்கி விட்டதில் ?

நிலைமாறி ஓடும் எண்ணற்ற
இன்ப துன்ப நீரோடைகளில்
என் பேழையை நிரப்பிச்
சமர்ப்பணம் செய்வேன் உனக்கு !
சிறிதும் பரிவின்றி
என் இதயத்தைப் பிழிந்து
சாறை எடுத்துள்ளேன்
திராச்சைப் பழம் போல்
மிதித்து !

பல்வேறு தாள லயத்துடன்
நல்லிசைக் கீதங்கள்
பற்பல பாடி
நறுமணத்தைப் பரப்பி
உருவ வழிபாடு செய்து
உன்னை ஓர் மணமகனாய்
வரவேற்கப்
பின்னி யுள்ளேன்
மாலை சூட !

உனது ஒரு நொடி
மகிழ்வுக்கு
என்னிதய இச்சையைப்
பொன்னைப் போல்
உருக்கிப்
புதிய தான
ஒரு காட்சியை
உருவாக்கினேன் உனக்கு
ஒவ்வொரு நாளும் !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (January 7, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா