தமிழ் நாட்டு அரசியலில் நடிகர்கள்

This entry is part [part not set] of 47 in the series 20040603_Issue

-அருளடியான்-


தமிழ் நாட்டு அரசியிலில் எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா மூவரும் முதல் அமைச்சர் பொறுப்பைப் பெற்ற நடிகர், நடிகைகள். திமுகவில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுக்கப் பட்ட நடிகர் டி.ராஜேந்தர் தான். ஆனால் அவர் தனக்கு, கட்சியில் எந்தப் பொறுப்பும் தரப்படாததால் கட்சியை விட்டு நீங்கியுள்ளார். தமிழ் நாட்டு அரசியலில் பதவி தான் முக்கியம் என்று நடிகர் நடிகைகள் நினைக்கிறார்கள். இதே போல, மன்சூரலிகான் அஇஅதிமுகவில் இருந்து தனக்கு பதவி எதுவும் தரப்படாததால் விலகியுள்ளார். இவர் தரங்கெட்ட மூன்றாந்தர பேச்சாளர்.

திமுகவில் மாநிலங்களவை எம்.பியாக இருக்கிறார் சரத்குமார். அவரை விட அப்பதவிக்கு பொறுத்தமான ரகுமான் கான், ஆலடி அருணா போன்றவர்களுக்கு தராத பொறுப்பை சரத்குமாருக்கு கொடுத்துள்ளார் கலைஞர். ரகுமான் கான், ஆலடி அருணா போன்றவர்கள் மாநிலங்களவைக்குச் சென்றால் தமிழ் நாட்டு உரிமைக்காக வாதாடுவார்கள். சரத்குமார் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்கும், தன் துணைவிக்கும் சாதகமாக அதிகார மட்டத்தில் பயன்பெறுவார். இவர் திமுகவில் இருக்கும் போதே அஇஅதிமுகவுடன் ரகசிய உறவு கொண்டவர். திமுகவின் எதிரியான காஞ்சி சங்கராச்சாரியாரை தன் துணைவியுடன் காணச் சென்றவர்.

ராதாரவி அஇஅதிமுகவில் எம்.எல்.ஏவாக இருக்கிறார். இவர் திமுகவிலிருந்த போதே மிகவும் தரக்குறைவாகப் பேசுவார். அஇஅதிமுகவிலும் அதனையே தொடர்கிறார். எஸ்.எஸ். சந்திரன் அஇஅதிமுகவில் மாநிலங்களவை எம்.பி. இவர் ஆபாசமாகவும், அறுவறுப்பாகவும் பேசுபவர். திமுகவில் இருந்த போதும் இதனையே செய்தார். இவர்களால் தமிழ் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. அஇஅதிமுகவில் தகுதி வாய்ந்த பலர் இருக்கும் போது இவர்களுக்கு ஏன் இப்பொறுப்புகள் கொடுக்கப் பட்டன என்று தெரியவில்லை.

ரஜினியைப் பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள் வந்துள்ளதால் அதனைத் தனியே இங்கு குறிப்பிட விரும்பவில்லை. இவரை விட, விஜயகாந்த், அர்ஜூன் போன்றவர்களை நான் ஆபத்தானவர்களாக நான் கருதுகிறேன். பா.ஜ.க வினோத்கன்னா, சத்ருகன் சின்ஹா என்ற இரு நடிகர்களை அமைச்சராக்கியது போலவே, காங்கிரஸும் சுனில் தத்தை அமைச்சராக்கியுள்ளது. இவையெல்லாம் சரியான முடிவுகளல்ல.

—-

aruladiyan@netscape.net

Series Navigation

அருளடியான்

அருளடியான்