ப.வி.ஸ்ரீரங்கன்
Hier
fremd geblieben
dort
fremd geworden
Vielleicht
sollten wir
ein land suchen
einen Staat gruenden
fuer alle
die irgenwo
irgenwie
Fremde sind. -Hans-Herbert Dreiske, Dueseldorf,im August 1984
(இங்கே அந்நியராய் இருந்தோம்|அங்கே அந்நியராக்கப்பட்டோம்| எனினும்,நாம் ஒரு வனாந்திரத்தைத் தேடி ஒரு நாட்டை உருவாக்குவோம்| எங்கெங்கு| எப்படியெப்படியோ அந்நியர்களாகிய அனைவருக்குமாக.)
உலகமெல்லாம் இடர் படும் மானிடர்களுக்காக -அகதிகளாகி அலையும் எமக்காக ஜேர்மனியக் கவி தன்னால் முடிந்ததைச் சொல்கிறான்.இன்றைய இந்த இருள்சூழ்ந்த நிலையை நாம் உணர்வுப+ர்வமாகக் கருதிக்கொள்ள முனையும்போது நமக்கு முன் வாழ்ந்தவர்களை எண்ணிப் பார்க்கும்படி நேர்கிறது, லியோ ரொக்ஸ்சி(டுநழ வுசழவணமை): ‘ ளுழஅநழநெ றாழ றளைாநள ய ஙுரநைவ டகைந றழரடன ாயஎந னழநெ டிநவவநச ழெவ வழ டிந டிழசெ ைெ வாந வறநவெநைவா ஊநவெரசல ‘ என்று கூறியது ஞுாபகத்திற்கு வருகிறது.
சரிதாம்! ஆனால் நாம் பிறந்துவிட்டோம். இது எமது தப்பா ? இல்லை, இல்லவே இல்லை! கலவியை மறுத்த சமூகம் காதல் வயப்பட்டு ஆவதொன்றுமில்லை,எனவேதாம் ஜேர்மனியக் கவிஞுர் புதியவுலகு குறித்துப் பேசுகிறார்.இதை ஒரு கலகக் காரனுக்குரிய ஆத்ம பலத்தோடு பேசுகிறார், எமது வாழ்வு உண்மையானது,எப்படி நாம் உண்மையோ அவ்வண்ணமே. எனவே,
நாம் வாழ்வுதேடி அலைதலும்,உயிர்த்திருத்தலுக்காக ஓயாது விருப்புறுதி கொள்வதும் இயற்கையானது.இந்த இயற்கையுரிமையைப் பறிக்க எந்தக் கொம்பர்களுக்கும் உரிமையில்லை.
சுமார் அறுநுறாண்டுகளுக்கு முன் உலகெங்கும் நாடோடிகளாகச் சென்று குடிபெயர்ந்து-கொலை செய்து… குந்த வந்த இடங்களெல்லாமின்று அவர்தம் வரலாற்றுப் பூமியாக, பின்னால் வந்த நாமோ அவர்களால் நாடுகடத்தும் நிலையில் வாழ்விழந்து போதல் நீண்ட வலியுணர்வை நெஞ்சில் விதைக்கின்றது!
வேலைக்குப் போனகணவன் வீடுமீளும் போது மனையாளும் மைந்தர்களும் மாயமாய் மறைந்து போகிறார்கள்,இறுதியில் செய்தி : ‘நாடு கடத்தப் பட்டுவிட்டார்கள். ‘ எப்படியிருக்கும்
இந்தக் கணம் ? இது, இங்கே ஜேர்மனியில் சர்வசாதரணமாக நடைபெறும் நாடுகடத்தல் நிலைவரம். என்றபோதும் இந்தப் பதினைந்து வயதுப் பாலகியினது( நாடுகடத்தல் தர வன்புணர்வு மூலம்… ) இன்றைய இருள்சூழ் நிலை சற்றுக் கடினமான ஒரு கனத்த உணர்வை நமக்குள் கொட்டுகிறது. நியூஸ்லாந்தரசின் எமது சமுதாயத்தின் இந்த நீசச் செயலை நாம் விளங்கிக் கொள்தலும்,அதனுடே உலக அகதிகளுக்கான தார்மீக உரிமைகளை வென்றெடுப்பதும்,எமது விடுதலையின் ஒரு பகுதிதாம்.
அரசியல் தஞ்சமும்,கோரிக்கையும்:
நாம் நாடுவிட்டு நாடுகளுக்கும்,கண்டம்விட்டு கண்டங்களுக்கும் புலம் பெயர்கிறோம். இருபதாம் நுற்றாண்டின் இறுதியிலும் இருபத்தியோராம் நுற்றாண்டின் இன்றைய பகுதியிலும் அதிகம் பேசப்படும் வார்த்தை இந்த ‘அரசியல் தஞ்சம் ‘எனும் வார்த்தைதாம்!இன்றைய நிலவரப்படி சொந்தநாட்டிலும்,வெளிநாடுகளிலுமாக மக்கள் அகதியாகி அல்லற்படும் நிலை அதிகரித்தபடியேதாம் இருக்கிறது, இந்த அகதிய வாழ்வை வாழ நிர்பந்திக்கப்பட்ட நம் தொகை
கிட்டத்தட்ட 300 கோடியாகும். இது உலக சனத்தொகையில் 50 வீதமாகும்,(என்ன முழிக்கிறீர்கள் ? தொகை பிழையானதென்றுதானே கூற வருகிறீர்கள் ?) எனினும் இ/து உண்மையே! உள்நாட்டில் உதிரிகளாகவும்,வெளிநாடுகளில் அடிமைகளாகவும் நாம் வாழ்கிறோம். இந்தத்தொகை 300 கோடிக்கு மேல் வரும்.இந்தியத்துணைக் கண்டத்திலிருந்து அவுஸ்திரேலியா,பின்பு அமெரிக்காவிலிருந்து ஆபிரிக்கா ஊடாக மத்திய கிழக்கு ,மற்றும் ஐரோப்பாவரையும் நமதுறவுகள் காடுகளில் -வீதிகளில் அலைந்தபடி உயிர் வாழ முனைவது இன்றைய உலக நடப்பில் பெரிதாக ஒன்றுமில்லைத்தாம்.என்றபோதும் இந்த அகதிய வாழ்வின் சூத்திரமென்ன அதன் உற்பத்திக்கு ஏதுவாக எந்த இயக்கு சக்தி உந்துதலளிக்கிறது-அரசியல் தஞ்சம் கோர யார் தகுதி(! ?) உடையவர் ? என்பதை நாம் சற்று அவதானிப்போம்.
Du bist das elendeste Wesen unter der sonne Europas. Fremder-! Die alten Griechen nannten die Fremden Barbaren-aber sie uebten Gastfreundschft an ihnen. Du aber wirst von ort zu ort gejagt, du Fremder unserer zeit,du bekommst hier keine Einreiseerlaubnis und dort keine Wohnunggenehmigung,und dort darfst du keinen Speck essen , und da von da keinen mitnehmen -Fremder! ‘-Peter Panter (1920)
‘கூய்,அந்நியரே! ஐரோப்பாவினது சூரியனுக்குக் கீழே நீயோ வறுமையான உயிராத்மா. அந்நியன்-!பழைய கிரேக்கமோ நாகரீகமற்ற அந்நியனென அழைத்தது-எனினும் விருந்தாளிபோன்றே உன்னை நடாத்த முயன்றார்களாம்.ஊரூராய் நீயே வேட்டையாடப்பட்டாய், எமது காலத்தினது அந்நியன் நீ, இங்கோ உனக்கு நாடுவிட்டு நாடுகள் பயணிக்க அனுமதியில்லை,அங்கோ வதிவதற்கு அனுமதியில்லை,அத்தோடு நல்ல உணவருந்தவும் முடியாது,கூடவே எதையுமே எடுத்துக்கொள்ளவும் முடியாத -அந்நியன்! ‘
வுரஉாழடளமலஇமுரசவ இன் மனித இரங்கலின் அதியுன்னத வெளிப்பாடிது,வெள்ளைத் தேசமெங்கும் நாடோடிகளாக அலைந்து வரும் ஜிப்சிகளின் நிலை கண்ட சொல்ஸ்க்சி கூர்ட் இப்படியிரங்கி நொந்து கொண்டார்.
ஒரு வகையில் இது நம்மெல்லோருக்கும் பொருந்திவிடுகிறது! அன்றைய ஐரோப்பிய மனோபாவத்தை கிழக்கு ஜேர்மனியின் மனிதநேயப் படைப்பாளி சொல்ஸ்க்கி கூர்ட் மிக மிக அழகாகப் படம் பிடித்துள்ளார்கள்.இந்த மனோபாவம் 16,17ஆம் நுற்றாண்டுகளின் தொடர்ச்சியாய் விருத்தியாகி 20ஆம் நுற்றாண்டுகளில் இரண்டு உலகயுத்தங்களில் சுமார் 80மில்லியன்கள் அப்பாவிமக்களை வேட்டையாடியது.இந்த ஈனத்தனத்திற்குப் பின் ஐரோப்பிய மனிதவுரிமை ஆணையகம் மற்றும் ஜெனிவா அகதிகள் ஆணையகமும் சில வரைவுகளை -ஒப்பந்தங்களை செய்துள்ளார்கள்,இந்த வரைவுகள் ‘சட்டத்தின் முன் சகலரும் சமனம் ‘என்றபடி எதையுரைத்ததோ அ/து இவ்வைரோப்பியரசுகளால் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சிதாம் நியூஸ்லாந்தினது இன்றைய அகதிகள் மீதான சட்ட நடவடிக்கை.
அரசியல் தஞ்ச உரிமை சட்டமாக்கப்பட்ட வரலாறானது 1946 இல் ஆரம்பமாகிறது ,ஐ.நா.சபையின்பொதுக்கூட்டம் சர்;வதேச அகதிகள் கழகத்தை மேற்கூறிய ஆண்டில் ஆரம்பித்தது. இக்கழகமானது முதலில் நான்கு வருடங்களும் அதன்பின் மீள இரண்டாண்டுகளும் தொடர்ந்தியங்கியது,ஆரம்பத்தின் நோக்கம் உலகயுத்தத்திற்குப் பின்பான சமூகப்பிரச்சனையை
ஓரளவு தீர்க்கக்கூடியமாதிரி இது இலக்கு வைத்து மீள் குடியேற்றம் மற்றும் புதிய குடியேற்றங்களை யும் அதுசார்ந்த தேவைகளுக்காக இயங்கிக் கொண்டது.எனினும் முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் யுத்தத்தை இரண்டாவது உலக யுத்தத்தோடு நிறுத்தி விடவில்லை,மாறாகத் தனது குருதிதோய்ந்த வலுக்கரத்தை உலகம் ப+ராகவும் விரிகத் தொடங்கியது.இதன் போக்கால் இந்த அகதிகள் பிரச்சனை ஒரு தொடர் இயக்கமாக இயங்கிக்கொள்ள ஐ.நா.சபை அகதிகளுக்கான உயர் ஸ்தானிக சபையை உருவாக்கிச் சட்ட வரைவைச் செய்தது, பொதுவான மனிதவுரிமை விளக்கப்படி 10.12.1948ஆம் ஆண்டு ஆக்கப்பட்ட சட்டம்: Art.14 Abs 1 ‘Jeder Mensch hat das Recht, in anderen Laendern verfolgungen Asyl zu suchen und zu genieணூen. ‘(வேறொரு நாட்டுக்குச் சென்று அரசியல் தஞ்சம் கோருவதற்கும்,அதை அனுபவிப்பதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு.) இந்த அழகான வார்த்தை ஜாலம் அதை குடிசார் சட்டவாக்கத்திற்குள் அடக்காது நாடுகளினது கடமையாக -அவர்களே அதை நிறைவேற்றும்படி அரசியல் யாப்புச் சட்டத்தில் அடக்கியதன் விளைவு இப்போது ஒவ்வொரு நாடுகளும் தாம் நினைத்தபடி தார்ப்பார் காட்டிக்கொள்கிறது.
இந்தத் தவறைச் சரிக்கட்ட 1951ஆம் ஆண்டு யூலை 28 பிரேரிக்கப்பட்டு 22.04.1954 இல் அமூலுக்கு வந்த ‘அகதிகளுக்கான சட்ட அமூலாக்க ஒப்பந்தம் ‘ ஜெனீவா ஒப்பந்தமாக அறியப்படுகிறது.இதுவே அரசியல் தஞ்சம் கோருபவரின் காரணத்தைக் குறித்து இந்திந்தக்காரணம் மட்டுமே அரசியல் தஞ்சம் கோர உரித்துடையதென வகுத்து வைத்துள்ளது.
இதன்பிரகாரம் ஒரு தனிநபர் தனது மத, இன, பிரஜாவுரிமை இவைகளின் பொருட்டு அல்லது தனது அரசியல்,சமூகக் காரணிகளால் பாதிக்கும்போது வேறு நாட்டிற்குள் சென்று புகலிடம் கோர உரித்துடையவராகிறார்,
நம் தோல்வி:
‘அகதியென்று சொல், அதிலிருந்துதாம் விடுதலை பெறவேண்டும் ‘. இன்றைக்கு நம்மில் பலர் அகதியென்ற சொல்லையே கேட்கப்பொறுக்காதவர்களாய், தாமும் அகதிகளென்பதையே மறந்து வாழும் நிலையில் நாம் இந்தப் பிரச்சனை குறித்து விக்கிரமாதித்தன் பாணியில் எழுதிக்கொள்கிறோம்.இதுவொரு வகையில் எமது சமூகத்திற்கு அவசியமான தேவை! கணக்கு வைத்துச் சொல்லமுடியாதளவுக்கு நமது சனங்கள் நாடுகடத்தப்படுகிறார்கள்,பலர் ஏமாற்றுக்காரரிடம் சிக்குண்டு பணத்தைக்கொட்டியும் அரசியல் தஞ்சக்கோரிக்கையை ஏற்கப்பண்ண முடியாது துரத்தப்பட்ட நிகழ்வு நாளாந்தம் இடம்பெற்றபடியேதாமிருக்கிறது.
இவைகள் எதைக்குறித்துரைக்கிறது ?
நம்மிடம் போதிய ளவு அறியாமை நிலவுவதென்பதைத் தவிர வேறெதையுமில்லை.
நியூஸ்லாந்து அரசால் பாதிக்கப்பட்ட சிறுமியின் நிலையோ மிகவும் பரிதாபகரமானது, அவள் பாலியல் வன்புணர்வுகுட்படுத்தப்பட்ட நிகழ்வுடன் தனது அரசியல் தஞ்ச விண்ணப்பத்தை இணைத்திருக்கிறாள், சிறுமி, இவ்வளவு காரணங்களும் கூட அவளைக்காக்கவில்லை. இங்கு மனிதாபிமான அடிப்படை மட்டுமே தாம் அவளைக்காத்திருக்க முடியும், சட்மும்,நீதித்துறையும் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டே சிந்திக்கப்பயிற்றப்பட்டது. இவ்விடத்தில் நமது அறிவு வேலை செய்திருந்தால் நிச்சியம் அவளைக்காத்திருக்க முடியும் ,அதை நாம் தவற விட்டுவிட்டோம்.
பொதுப்படையான காரணங்களைத்தாண்டி தனிப்பட்ட காரணத்தை நமது அகதிய விண்ணப்பம் கோரிநிற்க நாமோ காரணத்தைத் காட்ட முடியாது தவிக்கின்றோம். எமது வாழ்சூழல் பாதிக்கப்பட்ட வாழ்சூழல்,தமிழ் பேசும் ஒரே காரணத்தால் நாம் இன்று நாட்டை,வீட்டை விட்டு வெளியேறியுள்ளோம்.இது ‘ ஓரத்தே நீரின்றித் தவிக்கும் தவளை போல் ஊரின்றித் தவிக்கும் நம்மை யாரறிவார் ‘என நொந்துகொள்ள வைக்கிறது.மனிதாபிமானமற்ற நீதித்துறைகளும்,ஆட்சியாளர்களும் தத்தமது நாடுகளினது கதவுகளை இறுக மூடிக்கொண்டு எமது நாடுகளினது கதவுகளை நன்றாகத்திறந்து – தமது நாடுகளின் நலத்தின் பொருட்டு- எம் மண்ணில் யுத்தப் பிசோதனை செய்யும்போது நாம் இடம்பெயராது சாகவாமுடியும் ?
புலம் பெயரும் சூழலும்,அகதிகளாய் நாம் மாறும் பரிதாபமும்:
மனிதர்கள் எதைவேண்டுமானாலும் இழக்கலாம்,சொத்து,சுகம், ஏன் அன்னையைக்கூட இழக்கலாம்,ஆனால் தான் பிறந்து ,தவழ்ந்து,மண்விளையாடி,வளர்ந்த மண்ணை இழக்கவே கூடாது! இந்த இழப்பு இழந்த பின்பேதாம் இதயத்தைத் துளைக்கும்,அதுவரையும் அதன் சிறுமைகள்தாம் புலப்படும்.ஒருவகையில் இந்தச் சிறுமைகளேதாம் எம்மை வளர்த்திருக்கிறது!
இந்தச்சிறுமைகள் எம்மை கேவலப்படுத்தலாம்,அவை நம் முன்னோர்களின் தொடர்ச்சி.அவற்றை நாம்தாம் களைந்தெறியவேண்டும், எனினும் தேசம் தொலைத்த இந்த மனோபாவம் படும் வேதனை எத்தனை நம் அரசியல் வாதிகளுக்குத் தெரியும் ? அப்படித் தெரிந்திருந்தால் நம்நாடுகள் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்யத்திற்கு கூஜாத்துக்கும் நிலைக்குப்போயிருக்க முடியாது,இதனாற்றான் நாம் மீளவும்,மீளவும் ஓலமிடுகிறோம்,எமது
படைப்புகள் அந்த வலி குறித்தே திரும்பத்திரும்பப் பேசுகின்றன.நாம் எழுதித்தாம் இது தெரிய வேண்டியதில்லை,நம் பாட்டன் பாப்பாக்களுக்குப் பாடி வைத்ததே போதும்.
‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே -அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே …
இன்னுயிர் தந்தெமை ஈன்று வளர்த்து,அருள்
ஈந்ததும் இந்நாடே -எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந் நாடே-அவர்
கன்னிய ராகி நிலவினிலாடிக்
களித்ததும் இந் நாடே-தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடி,இல்
போந்ததும் இந் நாடே… ‘ என்று மனதாற வாழ்த்திப்பாடுகிறானே! இதுதாம் வலி.
இந்த வலியை யார் விதைக்கிறார்கள் ?,எம் மண்ணை விட்டு நாம்நெடுந்துரம் போய் அகதியாக எது உந்தித்தள்ளியது ?
யுத்தம்,மண்அபகரிப்பு,துரோகியெனும் கழுத்தறுப்பு,பயங்கரவாதியென்று கொல்லும் அரசு-அமைப்புகள், இத்யாதி இத்யாதி.இன்றைய முதலாளிதுவ அரசுகள் யாவும் பேருக்கு ஜனநாயகம் பேசியபடி போர்களை நடத்துகிறார்கள், போர்கள் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாகச் சந்தைப் பொருளாதாரத்துள் நிலவுகிறது.முதலாளியத்தின் கொடுமையான சுரண்டலினாலேற்படும்வறுமை, வேலையில்லாப்பிரச்சனை மற்றும் சமூகச் சமமின்மை ஆளும் அரசிற்கு நெக்கடியை வழங்கும்போது அவற்றைத் தணிப்தற்காக மூன்றாமுலக நாடுகள் போரை ஒரு ஆயுதமாப் பயன் படுத்துகின்றன, அல்லது இன வாத,மதவாத கருத்தியலை அழுத்தமாகப் பரப்புகின்றன. இதனால் சகோதரங்களாக இருந்த இனங்கள் முட்டி மோதி இரத்த ஆற்றில் மூழ்கி வாழ்வைத் தொலைக்கின்றன.இங்கே சொந்த மண்ணிலேயே வாழ்வு அகதி வாழ்வாய் மாற்றப் படுகிறது!
வளர்ச்சியடைந்த நாடுகள் தமது வருவாய்க்கு தடங்கல் ஏற்படும்போதும் தமது தொழிற்சாலைக்களுக்கு மூலவளம் தொடர்ந்து கிடைப்பதற்காகவும் மற்ற நாடுகள் மீது தொடர்ந்து படையெடுப்பைச் செய்து யுத்தம் நடாத்தி பல இலட்சம் மக்களைக் கொன்று பல கோடி மக்களை அகதி வாழ்வுக்குள் தள்ளுகிறார்கள். சமீபகால அவ்கானிஸ்தான், ஈராக்கு இதற்கு நல்ல உதாரணங்கள்.
இதனால் நாம் வாழ்வைத் தொலைக்கிறோம்.அகதியாய் நாடுவிட்டு நாடு புகுகிறோம், புகல் நாடுகளோ நம்மை வேண்டா விருந்தாளியாகப் பார்க்கிறது , நாடுகடத்தி தன் கதவை இறுக மூடுகிறது.தமிழ்பேசும் மக்களாகிய நாம் கால் நுற்றாண்டாக அகதிவாழ்வை மேற்குலகில் வாழ நிர்பந்திகப்பட்டுள்ளோம்,இந்த மோசமான -சோகமான சூழலில் உயிர் வாழ்வதற்கே உழைத்து ஓடாய்ப்போகின்ற நிலை வேறு.இந்நிலையில் ஒத்து ஒருமித்த செயற்பாட்டை எதற்குமே நாம் வழங்குவதில்லை,இதனால் சமூகக்கூட்டான வாழ்வு இல்லாது போய்விட்டது,இதன் உள்ளார்ந்த அர்த்தம்யாதெனில் ,சமூகக் கூட்டுணர்வுக்கு சமூக வாழ்வில்லாது போய்விட்டதென்பதாகும்.
இன்றைய எமது வாழ்வானது உதிரிவாழ்சூழலை எமக்குத் தந்துள்ளது.இந்தச்சூழலில் நாம் ஒற்றை மானிடர்களாக ,நாடோடி நிலைக்குத் தள்ளப்பட்டு சமூக சீவியம் உடைந்து சிதறிவிட்டது.
இதன்போக்கால் சமூதாய விருத்திக்கிட்டுச் செல்லும் ஆன்மீகப்பலமின்றி வெறும் கோவில் கட்டிக் கும்பிடும் அகவயத் தன்மைக்குள் நமது படைப்பாற்றல் முடங்கிவிடுகிறது.இதுவே நம்மை அடக்க முனையும் நடவடிக்கைகளைத் தடுக்க முடியாத நிலையைத் தோற்றுவித்துள்ளது.
பாலியல் வன்புணர்வுகளும் நமது சமூதாயமும்
‘Die Sexualkraft ist die Grundkraft des Leben.Der Sexualtrieb ist der Grundtrieb fuer alle Regungen,Wuensche,Begehrlichkeiten und Gefuehle der Seele.Fast alle nervoesen Stoerungen und seelischen Konflikte haben ihre Ursache im sexuellen Erleben.Selbst die Leistungen schoepferscher Menschen sind der Sexualkraft entsprungen,sind Leistungen sublimierter Sexualitaet dieser Menschen. ‘-(psychoanalytischen Theorie von Siegmund Freud.)
பாலியற்பலமானது வாழ்க்கையின் அடிப்படைப் பலமாகும்.பாலியல் உந்துதலே அனைத்து அடிப்படையான உந்துதலுக்கும் துண்டுதலுக்கும்,விருப்பிற்கும்,இன்பத்திற்கும்,உள்ளத்தினது உணர்வுக்கு;ம் காரணம்.சகல மனப்பிறழ்வுகளுக்கும்,சிதைவுகளுக்கும்உளமுரண்பாடுகளுக்கும்
பாலின்ப வாழ்வே அடிப்படையான காரணியாகும்.பாலியல் இரீதியான உந்துதலே மாபெரும் படைப்பாற்றலுள்ள மனிதர்களை உருவாக்கி அவர்தம் காரியங்களைத் துய்மைப் படுத்தியதும்.
இவ்வளவு முக்கியமான இந்த உணர்வு நமது சமுதாயத்தில் மிக மிக கேவலமான முறைமைகளில் புரிந்துகொள்ளப்படுகிறது! மனிதர்களின் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆற்றலோ, தகமையோ இன்றைய முதலாளிய சமூகத்திற்குக் கிடையாது, இது பாலியலை பண்டமாக்கி,பெண்ணுடலை பண்ட பரிவர்தனையாகச் செய்து வருகிறது.இது இயற்கையான உணர்வை கேடுகெட்ட ஊடகங்களுடாய் கொதிநிலைக்கு கொண்டுசென்று தனது காரியத்தை நிறைவேற்றுகிறது,இந்த ஈனத்தனமான பாலியற்து;பிரயோகம் தற்போது கட்டுப்பாடற்ற விளம்பரப்படுத்தல்கள் மூலம் பெண்ணை வெறும் போகப் பொருளாய்ச் சித்தரிக்க அதுவே தற்போதய குறியீடாய் பெண்மீது சுமத்தப்படுகிறது,இந்த வக்கிரமான வியாபாரம் தெருத்தெருவாய் பைத்தியக்காரர்களை உருவாக்கி விடுவதில் பாரிய பங்கு வகிக்கிறது.
இந்தப்பைத்தியங்களின் அகத்தில் வடிவமைக்கப்பட்ட பாலியற் கனவுகள் இன்றைய தமிழ்ச்சினிமா வடிவமைக்கும் பெண்ணாக த் தமிழ்ச்சமூகத்தில் வெளிப்படுகிறது.
இந்த காமப் பரிணாம வளர்ச்சியானது இன்னும் மேலே சென்று பாலியற் சுதந்திரமென்றும் பேசப்படுகிறது, தமிழ்ப் படைப்புச் சூழலில் மஞ்சள் பத்திரிகைகளில் வந்த ‘கத்தரிக்காய் காயத்திரியை ‘ சாருநிவேதிதா தனதாக்கி படைப்புகள்(! ?) தருகிறார்,அதுவும் ‘உன்னத சங்கீதம் ‘என்ற பிரமணியத்தனமான விழித்தலுடன் சனதரும போதினியில் இடம்பெற நாம் மெளனிக்கிறோம்.
இன்றைக்குப் பாலியலைத் துண்டிப் பணம் பண்ணும் சமூகம் அதற்கேற்றவாறு வடிகால் அமைக்காததால் பாலியலில் இரட்டைத்தன்மை கடப்பிடிக்கப்படுகிறது, இ/து பார்க்கின்ற பெண்களையெல்லாம் அழைக்கின்ற பெண்ணாய்ப் பார்க்கத்துண்டுகிறது.இது ஒரு தலைமுறையையே பாழாக்கிவிட்டது.ஐரோப்பாவெங்கும் வாழும் தமிழ் இளைஞுர்களில் பலர்
(குறிப்பாக கனடாவில் வதிபவர்கள்)தாம் ஆடிமுடித்ததும் கனடாவில் வதியும்தமிழ் பெண்ணை
நிராகரித்து இலங்கையை நோக்கிப் போவது வரை கொண்டுவந்து விட்டுள்ளது.
இத்தகைய சூழலில் சிறார்கள் பாலியற் பலாத்காரத்திற்குப் பலியாவது நாளாந்தம் நிகழும் காரியமாகி விட்டது,
எய்தவர்கள் பட்டொளி வீசும் வெளித்தோற்றத்துடன் கோவில் முகப்புகளிலும்,பெரியமனசு படைத்த கொடை வள்ளல்களாகவும் பவனி வருதல் நம் மத்தியில் சகஜம்.
தனிமனிதர்களினது பிரச்சனையாக இருந்த இந்தப் பிரச்சனை இப்போது சமூகத்தையே பாதிக்கும் பாரிய பிரச்சனையாக ஊதிப் பெருத்துவிட்டது. இன்றைய சினிமா மற்றும் வர்த்தக விளபரம்கள் வடிவமைக்கும் பெண் தோற்றங்கள் திட்டமிட்ட கயமைத்தனத்தை தன்னகத்தே கொண்டியங்குகிறது,இது முற்று முழுதாக இளைஞுர்களைத் தமது நுகர்வுக்கு ஏற்ற அடிமைகளாக்கி கோடிகோடியாய்ச் சம்பாதிக்கும் தமிழ்ச் சினிமாவாக -அஜீத்தும்,விஜேயும்,5கோடி சம்பாதிப்பதில் வெற்றி பெற அப்பாவிச் சிறார்கள் பாலியல் வல்லுறவுக்குட்பட நாம் கையாலாகாதவர்களாய் சங்கடப்படுகிறோம்.நமது சமூகத்தில் நிலவும் ஆணுக்கும் பெண்ணுக்குமான இடைவெளி பயங்கரமான பாலியற் கற்பனைகளை உருவகப்படுத்துகிறது. இது
மனித வாழ்வின் சகல படைப்பாற்றலையும் கருக்கி வக்கரமான சமூக உளவியலைத் தோற்றவிக்கிறது!இதன் வெளிப் பாடுகள் ‘கொண்டை போட்ட பெண்டுகளின் கோவணத்துள் வெடியமுக்கி கொலை கொள்ளும் ‘ காரியமாக, எத்தனை கோணேஸ்வரிகள்,சின்னஞ்சிறார்கள்
இன்னும் பலி கொள்ளப் படுவார்களோ அத்தனையும் நம் சமுதாயத்தின் முடிவை மிக விரைவாக்கிவிடும்.
அகதிக் குழந்தைகள்:
குறைந்தது ஒரு நாளைக்காகவாவது
இந்தப் பூமிப் பந்தை நாங்கள்
உங்களுக்குத் தந்து பரிசளிக்க வேண்டும்,
பற்பல வர்ணங்கள்கொண்ட பலுன்கள் போன்று
நீங்கள் அத்துடன் விளையாடுவதற்காக,
நட்சத்திரத்தின் அடிவாரத்தில் விளையாடுங்கள்,பாடுங்கள்
ஓருருண்டை ஆப்பிள் பழத்தைப்போன்று
அன்றி சூடான பாண் துண்டைப்போன்று
இந்தப் பூமிப்பந்தை குழந்தைகளுக்குப் பரிசளிக்க
எங்களை விட்டுவிடுங்களேன்
குறைந்ததது ஒரு நாளைக்காகவாவது அவர்கள் திருப்தியாய் இன்புற,
உங்கள்வசமாக பூமிப்பந்து முழுவதும் வந்துவிட்டால்
நீங்கள்
நட்பு என்பது என்னவென்று
குறைந்தது ஒருநாளுக்குள்ளாகவாவது கற்று விடுங்கள்
பின்பு நீங்கள் தாம் எமக்கு நாடாகும்
அந்த நிலையிலும்
மரணமேயற்ற மரங்களை அதில் நாட்டுவதற்கு
உங்கள் கைகளைத் தூக்குங்கள்.
-Nazim Hikmet.
பெப்ரவரி 2004. ப.வி.ஸ்ரீரங்கன்
- கடிதம் – பிப்ரவரி 03, 2005 – திருமாவின் தனித் தன்மை
- கழிவு நீர் பாசனம் ! நல்லா சாப்பிடுங்க சார் !
- கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்
- ‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்
- சித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)
- எழுத்தின் மீது ஒடுக்குமுறை
- தமிள் வால்க
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Splitting & Drift to Smaller Continents)
- கடிதம் பிப்ரவரி 3,2005
- பிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)
- உறவு
- கவிக்கட்டு …. 47
- பேரழிவுச் சூலாயுதம்!
- பெரியபுராணம் – 29
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சுநாமி ஊழியம்
- குருவிகள்
- வின்சன்ட் வான்கோவின் இரத்தம்
- விழிப்பு
- அறிவியல் கதை! – ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு! ‘
- டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்
- தமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.
- உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.
- சென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு
- தமிழா….தமிழா!
- கண்ணன் காலடியில்
- இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!
- துணை – பகுதி 3
- எப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )
- மனைவியின் சிநேகிதர்
- கணவனின் தோழியர்
- தொப்புள் கொடி!
- கவிதை
- உனது மொழியை பு ாியாத பாவி நான்
- சாலையோர நடைபாதை
- ஒவ்வாமை