தனித்துப் போன மழை நாள்

This entry is part [part not set] of 41 in the series 20110220_Issue

ஷம்மி முத்துவேல்


நீயே இருந்து இருக்கிறாய்
வலியின், ஒவ்வொரு துளி விழிநீரின்
தாக்கத்திற்கான பிண்ணனியில்

சத்தியமாகத் தெரியவில்லை இதுவரை எனக்கு
நீயே வியாபித்திருந்தது
என் அனைத்திலுமாக

இருட்டடித்திருந்தன பழைய நினைவுகள்
இருந்தும் காந்த விசை கொண்டு இழுத்திடும்
அவைகளின் நேர்த்தி

மௌனங்கள் போர்வைகளாகின்றனதான்
நினைக்கவே மனம் சோர்கிறது
‘நாம் பிரிந்து விடலாம்’ என உரைத்து
தனித்து நடந்தாய் குடை விரித்து

மீளவுமோர் மழை நாளில்
யாருமற்ற வீதியில் நடக்கிறேன்
பத்திரங்களில் கையெழுத்திட்ட கையோடு
என் கண்ணீருக்கு இணையாக
மழையும் அழுவதை அறியாயா என்ன ?

ஷம்மி முத்துவேல்

Series Navigation

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்