செல்லமே – ஆனந்த விகடன் சினிமா விமரிசனம் (கரெக்ட் செய்யப்பட்டது)

This entry is part [part not set] of 42 in the series 20040930_Issue

சொதப்பப்பா


(முன்குறிப்பு: ஆனந்த விகடன் தமிங்கலமாக தமிழை கொலை செய்துகொண்டிருக்கிறது என்று பலரும் விமர்சித்தாலும், விடாமல் தமிங்கிலத்தை தமிழ்நாட்டில் பரப்பியே தீர்வது என்று விகடன் குழுமம் கங்கணம் கட்டிக்கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் அதன் சினிமா விமர்சனத்தில் சில தமிழ் வார்த்தைகள் இருப்பது கண்டு பொங்கி எழுந்த சொதப்பப்பா, ஆனந்தவிகடனின் சினிமா விமர்சனத்தை திருத்தி ஆனந்தவிகடனுக்கு அனுப்பி வைக்க இருக்கிறார். அது வெளிவரும் என்று கருதாததால், தமிழர்களாக தப்பிப் பிறந்து விட்ட ஆங்கிலேயர்களுக்காக இங்கே பிரசுரிக்கப்படுகிறது)

அன்புள்ள ஆனந்த விகடன் குழுமத்தினருக்கு,

உங்கள் பத்திரிக்கையில் நிறைய தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன என்பது உங்கள் பத்திரிக்கையை தமிங்கிலம் கற்றுக்கொள்வதற்காக படிக்கும் என் போன்ற எண்ணற்ற வாசகர்களுக்கு மிகுந்த வருத்தத்தைத் அளிக்கிறது.

உதாரணமாக உங்கள் பத்திரிக்கையில் வந்த ‘செல்லமே ‘ என்ற சினிமா விமர்சனத்தை திருத்தி அனுப்பி வைத்திருக்கிறேன்.

தயவு செய்து திருத்தம் வெளியிடவும்.

கீழே செல்லமே திருத்தப்பட்ட சினிமா விமர்சனத்தைக் காணவும்.

***

செல்லமே

(ஸ்வீட்ஹார்ட் என்று டைட்டில் வைத்திருக்க வேண்டிய பிக்ஸர்)

சற்று டிஃபரண்டான, நுணுக்கமான, காம்ப்லக்ஸ் ஸ்டோரி. எல்டர் சிஸ்டரைப் போலவே போல் பாசம் காட்டும் நெய்பர் வீட்டுப் பெண் மேல் அபரிமிதமான, புரிந்துகொள்ள முடியாத லவ் கொள்ளும் யங் மேனால், அந்தப் பெண்ணின் லைஃபில் ஏற்படும் திகிலான கன்ப்ஃயூஷன்களை கமர்ஷியலாகச் சொல்லியிருக்கிறார் டைரக்டர் ஏ.ஆர்.காந்தி கிருஷ்ணா.

ரிச் இண்டஸ்டிரியலிஸ்ட் கிரீஷ் கர்னாட்டின் ஒரே ஸன் (பரத்)… பிறந்த அன்றே மதரை இழந்தவன். தன்மேல் லவ் காட்டி ஹக் செய்த, தன்னைவிட சற்றே எல்டரான, நெய்பர் வீட்டு கர்ல்தான் (பிக் கேர்ல் ஆனதும் ரீமாசென்) தனக்கு எல்லாமே என்ற திங்கிங் உடன் பழகுகிறான்.

இன்கம்டாக்ஸ் அபிஷியலான விஷால், கிரீஷ் கர்னாட்டின் ஹவுசுக்கு ரெய்டுக்கு வரும்போது, நெய்பர் ஹவுஸிலிருக்கும் ரீமாசென்னுடன் ஸ்வீட் ஆக்ஸிடெண்டாக மீட்டிங் ஏற்படுகிறது. லக்கபிள் குறும்போடு அவர்களிடையே மலரும் லவ், மேரேஜில் எண்டாகிறது. அதுவரை ரீமாசென்னின் லவ் தனக்கு மட்டும்தான் என திங்க் செய்திருந்த பரத், உள்ளூர ஷாக் ஆகிறான்.

விஷாலுடன் கோவாவில் குடியேறும் ரீமாவைத் ஸர்ச் பண்ணி போகிற பரத், டைமிங் பார்த்து அவரை சென்னைக்கே ஸ்மக்கிள் பண்ணி வந்து, தன் அப்பாவின் சப் அர்பன் பில்டிங்கில் அடைத்து வைக்கிறான். ரீமாவை ரிட்ர்ரைவ் விஷால் நடத்தும் ஸ்ட்ரக்கில்களுடன் எண்ட் ஆகிறது படம். ஒரு அடலசண்ட் பாயின் பொஸஸிவ்தனத்தை ஸ்டோரியின் செண்டராக டேக் பண்ணிய டைரக்டர், அவனுக்கு ரீமாசென் மீது இருக்கும் ஈர்ப்பு செக்சுவல் ரீதியானதா இல்லையா என்பதை ஸ்டார்ட்டிங் விறுவிறுப்பின்போது எக்ஸ்பான்ஸிவாக சொல்லவில்லை. அதனாலேயே, ரீமாசென் ஸ்மக்கிள் செய்யப்பட்டு பரத்தின் பிடியில் இருக்கும்போது, அருவருக்கத் தக்க அத்துமீறல் காட்சிகள் எதுவும் வந்துவிடுமோ என்ற பதற்றம் நமக்கு எழுகிறது. ஆனால், கங்கிராட்ஸ் டைரக்டர்! பரத் கொண்ட பொஸஸிவ்தனம் இது வரை டமில் சினிபீல்ட் காணாத ஸர்ப்ரைஸஸ் கொண்டது.

நியூ பேஸ் விஷாலிடம் துடிப்பு தெரிகிறது. ஆனால், லவ் ஸீன்களில் டாச்சர் தோரணையான டைட் பேசியல் எக்ஸ்பிரசன் ஏனோ.. ?

பக்கவாதத்தால் பாதிக்கப் படும் கிரீஷ் கர்னாட்டின் ஆக்டிங் ‘அட’ போட வைக்கிறது. ஃபிங்கர் சூப்புகிற மேனரிஸத்தோடு உலவும் பரத்துக்குப் சூப்பர் காரெக்டர்தான். பட், அதற்கான இம்பார்டன்ஸ் கொடுக்கப்படாததால் அவரால் பின்னியெடுக்க முடியவில்லை.

டோட்டலி ஸ்கோர் பண்ணுவது ரீமாசென்தான். கிளாமர் பிக்கிளாக இருந்தவருக்கு இந்த பிக்ஸரில்தான் ஆக்டிங் செய்ய நல்ல சான்ஸ். விஷாலோடு லவ் சடுகுடு ஆடும்போதும், பரத் பண்ணும் மிஸ்டேக்குகளுக்கு சைல்ட் போல செல்லமாக ஸ்கோல்டிங் உருட்டல் போடும்போதும், அதே பரத் தன்னைக் ஸ்மக்கிள் பண்ணி வைத்து த்ரெட்டென் பண்ணுகையில் டாயர்சும் தவிப்புமாக அவருக்கு அட்வைஸ் பண்ணும்போதும் நன்றாகவே ஷைனிங் பண்ணுகிறார் ரீமா.

பிக்சர் முழுக்கவே ஸ்கிரீன் பிளே பண்ணப்பட்ட விதத்தில் எக்ஸ்பிரஸ் பரபரப்பு. அதற்கேற்ற விறுவிறு ஸ்கிரீன்பிளே ஒருபக்கம் என்றால், ஆங்கிள்ஸ் வைப்பதிலேயே பிக்ஸரை டிஃபரண்ட் லெவலுக்கு மாற்றி இன்னும் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் கே.வி.ஆனந்த். ஸ்வார்ட் மேல் நடக்கிற ஸீன்களுக்கெல்லாம் நாசூக்கான டயலாக்ஸ் பக்கபலம். சுஜாதாவுடன் சேர்ந்து டைரக்டர் காந்தி கிருஷ்ணாவும் பென் பிடித்திருக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜின் பெக் கிரவுண்ட் மியூஸிக்கில் எக்ஸ்ட்ரா கிக். ‘ஆரிய உதடுகள் உன்னது’ சாங்கின் ஸ்கிரீன் பிரசன்சும் படு ரொமான்டிக்.

ரீமாவை ஸ்மக்கில் பண்ணி வந்தபின், அவர் எஸ்கேப் ஆக அட்டம்ப்ட் பண்ணும்போது, வெறித்தனமாக ரிவால்வரை எடுத்து த்ரெட்டென் பண்ணி… அவரைச் சூட் பண்ணாமல் தன் லாஸ்ட் பிங்கரை சூட் செய்து லவ்வை எக்ஸ்பிரஸ் செய்யும் ஸீன், ‘என்கூட செஸ் ஆடி ஜெயிச்சா உன்னை விட்டுடறேன்’ என்று சொல்லி ஆடும் பிளேயில் ஆர்ட்புல் செஸ்போர்டு, ரீமாவிடமிருந்து கழற்றிய சேக்ட்ரட் திரட் அரவுண்ட் த நெக்கை தன் ஃபூட் வேருக்கு மாட்டி அதை செல்போனில் பிக்ஸர் எடுத்து, விஷாலுக்கு எம்.எம்.எஸ். (மல்டிமீடியாமெஸேஜிங்) அனுப்பும் க்ளவர்நெஸ் என்று பிக்ஸரில் அங்கங்கே பளிச்… பளிச்!

ப்ளாஷ்பேக் காட்சிகளில் லாஜிக்கெல்லாம் பார்க்கவில்லை. டிபரண்ட் காரக்ட்ர்களின் பர்ஸ்பெக்டிவில் ஒரே ஸீன்கள் வரும்போது, பார்த்த ஸீன்களையே மீண்டும் பார்க்கும் ஃபீலிங்.

பரத்துக்கு ரீமாசென்னின் மேல் இருப்பது லவ்வா, பாசமா, லோன்லினெஸ்ஸின் ஏக்கமா என்பதற்கான எக்ஸ்பிளநேஷன் பிக்ஸரில் இலைமறையாக ஆடியன்ஸின் பெர்ஸ்பெக்டிவிலேயே விடப்பட்டிருந்தாலும், அதைத் கிளீயராகச் சொல்லியிருந்தால் முழு சாடிஸ்பேக்ஷன் கிடைத்திருக்கும். அதிலும் ரீமாசென், விஷால் சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் சீன்களை பரத் வாயரிஸம் பண்ணுவதுபோல ஆஃபன் காட்டுவதால், பரத் கொண்டது செக்சுவல் ஈர்ப்புதான் என்று ராங் எமர்ஜன்ஸி டிசிசனுக்கு வரவேண்டியிருக்கிறது.

வெல்கம் அட்டம்ப்ட்.

விகடன் சினிமா கிரிடிக்ஸ் டாம்

***

மேற்கண்ட கட்டுரையை வெளியிட்டு எங்கள் தமிங்கில கற்றுக்கொள்தலை முழுமைப்படுத்துவீர்கள் என்று கருதுகிறேன். மேலும் இதில் உள்ள சில தமிழ் வார்த்தைகளுக்கு என்னாலேயே ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்த முடியவில்லை என்பதையும் தெரிவித்துக்கொண்டு நல்ல மொழியியல் வல்லுனரைக்கொண்டு இங்கிருக்கும் தமிழ் வார்த்தைகளுக்கு ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து சினிமா விமர்சனம் மட்டுமின்றி முழு ஆனந்த விகடனையும் வெளியிட்டு உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்தது, எப்போது ஆனந்த விகடன் என்ற பெயரை ஹாப்பி காமெடியன் என்று மாடர்னாக சரியான தமிங்கில பெயருக்கு மாற்றப்போகிறீர்கள் என்று தெரிவியுங்கள். நான் ‘ஆனந்த விகடன் ‘ என்ற பெயரில் ஒரு உருப்படியான தமிழ் பத்திரிக்கை தமிழர்களுக்கு நடத்தலாம் என்று இருக்கிறேன்.

நன்றி

சொதப்பப்பா

**

Series Navigation

சொதப்பப்பா

சொதப்பப்பா