கற்பகம்
——————–
கோலமிடும் பனிக்காலை மயில்களும்
மார்கழியின் மாலைக் கச்சேரிகளும்
பண்பும் அன்பும் நிறைந்த உள்ளங்களும்
பலப் பல வண்ணங்களில் காலிக் குடங்களும்.
நடாஜன் அங்கிள் என்று அபிராமி
அன்பாய் அழைக்கும் ஓட்டுனரும்.
அக்கா அக்கா என்று ஆசையோடு
பின்னால் சுற்றிய உதவிப் பெண்ணும்.
நடைபாதை ஓரத்தில் மசாலாப் பொரி விற்பவரும்
பேரம் பேசாமைக்கு பரிசாய் புன்னகையுடன்
அரை முழம் பூ அதிகம் தந்த பூக்காரியும்.
பத்துக்கு எட்டுதான் என்று கறாராய்க் கூறிவிட்டு
கூடுதலாய் ஒரு பலாச்சுளையை
பொட்டலத்தில் போட்ட மூதாட்டியும்.
சரவண பவனும் , ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸும்
நெரிசல் சுவர்க்கமாய் ரங்கநாதன் தெருவும்
அங்கங்கே நிறுத்தப்பட்ட வாகனங்களும்
ஒய்யாரமாய் ஓடும் டயோடா குவாலீசுகளூடே
சைக்கிள்களின் கிண்கிணிகளும்.
பணக்காரர்கள் பொழுதுபோக்கும் ஸ்பென்சர் ப்ிளாசாவில்
அவர்களோடு சேரந்துவிடப் போராடும் நடுவர்க்கம்.
ஃபூட் வர்ட்டிலும், லாண்ட் மார்க்கிலும் மும்முரமாய்
நோட்டம் விடும் ஒரு பருவக் கூட்டம்!
அத்தனை பேரையும் காணக் காண மனதில்
பூக்காடாய் உற்சாகம் பிறக்கும்!
ஆனால் –
தமிழ் மக்கள் மறந்தும் இங்கே தமிழ் பேசாத கூத்தைக் கண்டு
வருத்தம் வந்து மிகுதியாய் அழுகை முட்டும்!
ஊரைச் சுற்றிவிட்டு தாமதமாய் வீடு வந்தால்
முணுமுணுக்கும் அத்தை,
அடுத்த கனம்… சாப்பிட்டாயா என்று கேட்கின்ற தாய்ப்பாசம்.
எழுந்ததுமே சுடச்சுட ஃபில்டர் காபியை ஆற்றி
கையில் திணிக்கும் மாமாவும்
கறியோ, குழம்போ சமைத்த கடாயில்
சாதம் பிசைந்து ஊட்டி விடும் நாத்தனாரும்
அண்ணியின் சமையல் அற்புதம் என்று
என் மைக்ரோவேவ் பீட்ஸாவைப் புகழ்கின்ற மைத்துனரும்.
அழுத்தமாய் இருந்துவிட்டுப் பிரிகையிலேயே
தழுதழுக்கும் குரலில் தொலைபேசச் சொன்ன அப்பாவும்
அழுதுகொண்டே போகாதே என்று தோளைத் தட்டி
எங்கே சிரி என்று தேற்றிய அண்ணாவும், தம்பியும்
ஒரு குடும்பம் ஒரு வீடு
ஒரு ஊர் ஒரே குடும்பம்.
சென்னை என்னை
ஆழமாய் ஆட்கொண்ட ஆறு வாரங்கள்
விடமுடியவில்லை விடுமுறை நினைவுகளை!
திரும்பும் நாள் வந்தொழிந்தது
விமான நிலையத்தில் நிலை குலைகின்றேன்…
வீட்டுக்குப் போகிறேனா
வீட்டை விட்டுப் போகிறேனா ? ? ? ? ?
–
karpagam610@yahoo.com
- விருமாண்டி – தேவர்மகன் – சாதிஅரசியல்
- தமிழ் லினக்ஸ் – எழுத்தாளர் சுஜாதா, குழுவினரின் அறிவுத் திருட்டு
- குடியரசுக் கொண்டாட்ட தினத்தில் குஜராத்தில் கோரப் பூகம்பம்! [2001 ஜனவரி 26]
- சில மாற்றுச் சிந்தனைகள்
- இயற்கைத்தோட்டம் – 2 களை பிடுங்குதலும், பூச்சி அழிப்பும்
- வண்ணாத்திக்குளம்
- தமிழ் இலக்கியம் – 2004
- ஈரநிலம்
- நந்தன் சரித்திரக் கீர்த்தனைகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 95 – வெறுப்பும் அன்பும்- சாந்தனின் ‘முளைகள் ‘
- கதைஞர்களும் கவிஞர்களும்
- வெங்கட்சாமிநாதனின் விமரிசனப் பயணம்
- கவிதைகள்
- மொழிச் சிக்கல்கள்
- அவன்
- வாரபலன் – புத்தக யோகம்
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது
- தீர்ப்பு சொல்கிறேன்
- வறுமையின் நிராகரிப்பில்
- ஒரு உச்சிப்பனிக்காலத்தில்
- காதலன்
- உண்மையொன்று சொல்வேன்
- உருளும் உலகே
- திருமணமாம் திருமணம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு
- விடியும்! – நாவல் – (32)
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -8)
- நீலக்கடல் – (தொடர்) அத்தியாயம் – 3
- மனசும் மாங்கல்யமும்
- எங்கள் வீட்டுக் காளைக்கன்று
- அறிவிப்பு
- கடிதங்கள் – ஜனவரி 22, 2004
- கேப்ராவின் ‘புலப்படாத உறவுகள் ‘ (Hidden Connections)
- குழந்தைகளின் உலகம்
- யுத்தம்
- உலகமயமாக்கத்திற்கு மனிதமுகம் பொருத்தும் முயற்சி
- அறிவுக்கே போடப்படும் முக்காடு
- இவர்களைத் தெரிந்து கொள்வோம்.
- சென்னை..என்னை…
- விளையாட்டு
- நானும் நானும்
- அன்புடன் இதயம் – 4 – அழிவில் வாழ்வா
- நண்பன்
- கோலம் , வீட்டில் ஒரு பூனை , உட்கடல்
- யாரடியோ ?