மா. சிவஞானம்,
செந்தீ பிழம்புக்கு இரையாகுமுன்…
என் மனங்கோர்த்திழுத்துப் போவதெங்கே ?
உணர்ந்ததில்லை இவ்விதம் எப்போதும் !
உயரம் ஒரு பொருட்டல்ல, இiழுத்து மூடிய
இரும்புக் கதவும் ஒரு தடையல்ல
மேகத்துக்கு மேலே ஆர்த்தெழுந்து போகும்
அதன் வயிற்றுக்குள் அடுத்தடுத்து நாங்கள்
வெடித்துச் சிதறி நகரெரிக்கும் அரக்கன்(ஐ)
விரும்பா காற்றுக் கசிந்திடா கதவிடுக்கு
ஊடுருவிக் கவர்ந்திழுத்துப் போகுமிடம் ?
எழில் மண்டும் எந்த ஊர் ஏரித்தோட்டம் ?
பயமற்றுப் பறத்தலும் திரிதலும் பயில்வித்து
அலைந்தலைந்து கண்மூடிக் கரைந்துருகி
செவ்விளம் வாய்க்குள் அமுதூட்டும் கலை
வெடித்த சிரிப்புக்காய் கன்னங்கள் பூக்கக்
காத்துக் கிடக்குமுன் பூமென் தழுவலில்
தடையின்றிக் கலந்திருக்குமிக் கணம்.
- கயிற்றரவு
- முதல் உலகத் தமிழ்த் திரைப்படவிழா
- முட்டை சமைக்க சில வழிகள்
- மனிதாின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்.
- 1)ச் இந்தியா 2)கருகும் நினைவுகள்
- பின் லேடன்
- நகரத்து மரங்களும் பொந்துப் பறவைகளும்
- அறிவெனும் சக்தி
- வயிற்றுப்பா(ட்)டு
- மேலும் சில மனிதர்கள்…
- ராகு காலம்
- செந்தீ பிழம்புக்கு இரையாகுமுன்…
- எதிர்பார்ப்புகள்…
- இந்த வாரம் இப்படி – அக்டோபர் 7,2001
- தமிழ்த் தேசியம் முதலான கேள்விகளை எழுப்பிய நண்பர் திராவிடனுக்குப் பதில்
- மனிதாின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்.
- சேவல் கூவிய நாட்கள் – 6 – குறுநாவல்
- சிரிக்கிறாளேடா….