புகாரி, கனடா
செந்தாமரையே
செந்தாமரையே
நீ
நிற்பதோ
ஒற்றைக் காலில்…
அதையும் ஏன்
சேற்றில்
செருகி இருக்கிறாய் –
ஆசைகளுக்குள்
செருகிக் கிடக்கும்
மனித மனங்களைப் போல !
அப்படிச் சிரிக்காதே !
வண்டுகள்….
உன்னைத்
தொடுவதற்கு முன்னரே
போதை தாளாமல்
துவண்டு விழுகின்றன !
குங்குமம்
இட்டுக் கொள்ளடி என்றால்…
ஏனதில்
குளித்து விட்டு வந்து
நிற்கிறாய் ?
இந்தக் குளம்…
உன்னைப் பிரதிபலிக்கவே
இப்படி
நிச்சலனக் கோலம் பூண்டு
நீண்டு கிடக்கிறது
குனிந்து பாரடி
அதிலுன் காந்தமுகத்தை
வேண்டாம்
வேண்டாம்
உன்னோடு
அழகுப் போட்டியில்
கலந்து கொள்ள
நெடுநேரமாய் அங்கே
காத்துக் கிடக்கிறாள்
நீலி நிலா
நீ
குனிவதை…
தலைகுனிவு என்று
அவள்
தவறாக
எண்ணிவிடக் கூடாதல்லவா !
*
புகாரி, கனடா
buhari@rogers.com
- முகவரி மறந்தேன்…
- மூன்று கவிதைகள்
- சீதாயணம்!
- ‘தான் ‘ எனும் எண்ணம் நீங்கி வாழ்வெனும் ஓவியம் உயிர் பெற….
- மெளனியின் படைப்புக்களின் இலக்கிய இடம்
- காலச்சக்கரமும் ஒளிவட்டமும் – தாந்திாீக பெளத்தத்தின் தோற்றம் பற்றி
- தயக்கங்களும் தந்திரங்களும் ( சி. ஆர்.ரவீந்திரனின் ‘சராசரிகள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 68)
- தமிழினி வெளியீடாக
- ரவி சீனிவாஸின் இலக்கிய உலகங்கள்
- என் கவிதையும் நானும்
- பிரிட்டன் புளுடோனிய உற்பத்தி அணு உலையில் பெரும் தீ விபத்து [Britain ‘s Windscale Plutonium Production Reactor Fire Accident]
- பனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)
- நேற்றான நீ
- சொல் தேடி பயணம்…
- செந்தாமரையே
- மூன்று கவிதைகள்
- அல்லி-மல்லி அலசல்- பாகம்3
- மூன்று கவிதைகள்
- மறக்கமுடியவில்லை
- என்னுள் நீயானாய் சக்தி ஓம்
- பணமே உன் விலை என்ன ?
- நந்தன் கதை – மு ராமசுவாமியின் இயக்கத்தில்
- குறிப்புகள் சில-10 ஜூலை 2003 (திராவிட இயக்கம்-ஹேபர்மாஸ்,தெரிதா-சூசன் சொண்டாக்-பசுமையாகும் பிரான்சின் அரசியல் சட்டம் ?)
- மனத்தின் ஆழத்திலிருந்து ஒரு குரல் ( தமிழ் நாடகச் சூழல் – ஒரு பார்வை – வெளி ரங்கராஜனுடைய நூல் அறிமுகம்)
- வாரபலன் ஜூலை 4, 2003 (ஆயிஷா, கநாசு, மலையாள இலக்கிய உலகு, வரம்புகளுக்கு அப்பால்)
- கடிதங்கள்
- வீட்டுக் குறிப்புகள் சில
- உலக நடை மாறும்
- விடியும்! நாவல – (4)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினான்கு
- மூன்றாவது தோல்வி
- அம்மா எனக்கொரு சிநேகிதி.