ஆசாரகீனன்
சூடானின் ஆப்பிரிக்கக் கருப்பின முஸ்லிம்களின் மீது, அரசு ஆதரவு பெற்ற அரபு முஸ்லிம்களின் ஆயுதம் தாங்கிய கும்பல்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி இனப் படுகொலை செய்து வருவது மேலை நாட்டுப் பத்திரிகைகளைப் படிப்பவர்களுக்கும், பி.பி.சி. போன்ற வானொலிகளைக் கேட்பவர்களுக்கும் தெரிந்திருக்கும். இந்தியப் பத்திரிகைகள் இதை அதிகம் பொருட்படுத்தாதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பொதுவாக ஆப்பிரிக்கா பற்றி இந்தியப் பத்திரிகைகள், இதர ஊடகங்களுக்கு அதிகம் கவனம் கிடையாது. இந்தியர் ஆப்பிரிக்காவில் தாக்கப்பட்டாலோ அல்லது ஓர் ஆப்பிரிக்க நாட்டுத் தலைவர் இந்தியா வந்தாலோ மட்டுமே ஆப்பிரிக்கா பற்றி செய்தி பிரசுரமாகும்.
தமிழில் எனக்குத் தெரிந்து, திண்ணை இணைய இதழ் மட்டுமே இது சம்பந்தமான செய்திகளை வெளியிட்டுள்ளது.
சூடானில் கடந்த பல மாதங்களாகப் பல ஆயிரக்கணக்கான கருப்பினத்தவர் ஆயுதம் தாங்கிய அரபுக் கொலை வெறியர் கும்பல்களால் (ஜஞ்ஜாவீது என அழைக்கப்படும் கும்பல்கள் இவை) படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு, பெண்களின் மீது பாலியல் வன்முறையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. கிராமம் கிராமமாகத் திட்டமிடப்பட்ட வகையில் கருப்பினத்தவரின் வீடுகளும், கால்நடைகளும், பிற உடமைகளும் அழிக்கப்பட்டுள்ளன. பல லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து ஓடிப் போய் அகதி முகாம்களிலும், நாட்டை விட்டே வெளியேறி அண்டை நாடான சாடிலும் தஞ்சம் புகுந்து உள்ளனர். அகதி முகாம்களில் இவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட கிடைப்பதில்லை. அகதிகள் முகாமில் உணவு, எரிபொருள் ஆகியன கிட்டாத நிலையில் முகாமை விட்டு வெளியே போய் சுள்ளிகள் பொறுக்கப் போகக் கூட முடியாது துன்புறுகிறார் இந்த ஆப்பிரிக்க இனச் சூடானியர். முகாம்களிலேயும் வெளியிலும், தினம் குதிரைகளிலும், விமானங்களிலும், இதர ஊர்திகளிலும் படை எடுத்து வரும் அரபுப் போராளிகள் கண்ணில் படும் கருப்பரை உடனடியாகக் கொன்று குவிக்கின்றனர்.
ஏன் உடனடியாக சூடானின் இந்த இனப் படுகொலை நிறுத்தப்படவில்லை ? ஏன் அகதி முகாம்களில் இருக்கும் கருப்பின சூடானியருக்கு உலகளாவிய உதவி அனுப்பப்படவில்லை ? அடுத்த பல மாதங்களுக்காவது அவர்களுக்குப் போதுமான உணவாவது கிட்டுமா ? இக்கேள்விகளுக்கு எளிதில் விடை கிடைக்காது. ஏற்கனவே ஆஃப்கானிஸ்தான், இராக் போர்களில் துன்புற்றுள்ள மக்களுக்கும், இதர ஆப்பிரிக்க உள் நாட்டுப் போர்களிலும் துன்புற்றுள்ள மக்களுக்கும் உணவு, உடை, இருப்பிடம், மருத்துவ வசதிகள் தருவதில் ஈடுபட்டுள்ள பன்னாட்டு உதவி நிறுவனங்கள் தமது கையிருப்பு நிதி நிலையும், பொருள் வசதியும் மிகக் குறைந்து விட்டது. சூடானின் அகதிகளைப் பராமரிக்க நிறைய நிதி திரட்டினால்தான் ஏதும் செய்ய முடியும் என்று பரிதவிப்பான நிலையைத் தெரிவிக்கத் தொடங்கி விட்டார்கள்.
சரி, குறைந்த பட்சம் பல நாட்டு அரசாங்கங்கள் சூடானின் அரசை இந்தப் படுகொலையை நிறுத்தச் சொல்லி வற்புறுத்தலாமே என்றால்,
பல போர்களில் ஈடுபட்டுத் தமது ராணுவங்களை ஏற்கனவே கூடதிகமாகப் பயன்படுத்தி ஓய்ந்த நிலையில் அமெரிக்கா இருக்கிறது. ஐரோப்பியர் எந்தப் போரிலும் ஈடுபடத் தயாராக இல்லை. வேறு எந்த நாட்டுக்கும் சூடானை வற்புறுத்த வலுவும் இல்லை, மனமும் இல்லை.
ஏனெனில், சவுதி அரேபியாவிலிருந்து கிளம்பி உலகையே பீடிக்கும் வஹாபி வழி இஸ்லாமியத் தூய்மை வாதம், அரபு இனவாதம் மேலும் அரபு ஏகாதிபத்திய சிந்தனைப் போக்கே இப் பிரச்சினையின் மூல காரணம் என்பதாலும், இயற்கை வளங்கள் அவ்வளவாக இல்லாத,
நகரமாகாத பகுதி ஒன்றில் வாழும் மக்களே பலியாகின்றனர் என்பதாலும் உலகின் பல நாடுகளிலும், குறிப்பாக இடதுசாரியினரால் இப் பிரச்சினை கண்டு கொள்ளப்படவே இல்லை. இஸ்லாம் என்று முத்திரை கொண்ட எதையும் விமர்சிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராக இல்லை. அரபுகளைக் கடந்த பல்லாண்டுகளாகத் தம் நண்பர்களாக்கிக் கொள்ளவே ஐரோப்பியர் முயல்கிறார். அமெரிக்காவோ மேலே சொன்னபடி அரபு நாடுகளில் தன் அரசியல் வலுவை இழந்து விட்டது.
சரி, அரசாங்கங்கள் கண்டு கொள்ளவில்லை, எதிர்க் கட்சிகளான இடதுசாரியினர் மேலை நாடுகளில் என்ன செய்கின்றனர் ?
கடந்த பல வருடங்களாக அமெரிக்கா மற்றும் மேலை நாடுகள் அரபு நாடுகளில் அல்லது ஆப்பிரிக்கப் பகுதிகளில் நுழைவதோ அந்தப் பகுதி அரசியலில் தலையிடுவதோ ஏகாதிபத்தியம் அல்லது முதலாளியத்தின் வளர்ச்சி என்றும் அதை எதிர்க்க வேண்டும் என்றும் சத்தம் போட்ட இடதுசாரியினர், இப்போது யாரை உதவிக்குக் கூப்பிட முடியும் ?
உலக இடதுசாரியின் தற்காலக் கூட்டாளிகளான அரபு இன வெறியர்களையா, அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகளையா ? அவர்கள் தானே சூடானின் கருப்பர்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்! இத்தகைய அரபு இனவாதத்தால் முஸ்லிம் அல்லாதவர்களை விட அரேபியர் அல்லாத முஸ்லிம்களுக்கே அதிக ஆபத்து என்பதும் சூடானில் நடக்கும் இனப் படுகொலையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில், ஐ.நா. பொதுச் செயலாளர் கோஃபி அன்னான், டார்ஃபர் பகுதியில் இருக்கும் ஓர் அகதி முகாமைப் பார்வையிடத் திட்டமிட்டிருந்தார். அவர் வருவதற்குச் சில மணி நேரங்கள் முன்னால், அம் முகாமில் இருந்தவர்களை சூடானின் தேசிய இஸ்லாமிய முன்னணி அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றி, வேறு இடங்களுக்கு விரட்டியுள்ளது. உண்மையை மறைக்க உலகில் எல்லா அரசுகளுக்கும் கிட்டத் தட்ட ஒரே விதமான வழிமுறைகள்தாம் தெரிகின்றன. (செய்தி:
http://www.nytimes.com/2004/07/02/international/africa/02suda.html ?ex=1089736833&ei=1&en=5a1b0587d3769851)
இப் பிரச்சினை தொடர்பாக சூடான் மனித உரிமைகள் அமைப்பு பின் வரும் வேண்டுகோளை வெளியிட்டுள்ளது:
Appeal:
Dear Activist,
In less than one working week (April 16), the UN Human Rights commission will decide on the Sudan Government ‘s unwarranted attempts to free itself from the Commission ‘s human rights monitoring, which, if it ever succeeds, will grant this terrorist rule the prolonged chance of consolidating its non-democratic practices at the expense of the Sudanese struggle for democracy and human rights.
The postponement of the Commission ‘s decision came about as a result of a serious campaign by Sudanese and non-Sudanese human rights organizations and activists. The Camping was timely expressive of the grave concerns about the human rights situation in the country, that has never improved under the same system of rule that is suppressing the country.
To help the Commission decide favorably for the cause of human rights in the Sudan, it is expedient to stop the Sudan Government, and those supporting it in the Commission, especially France, from attaining such ill-desired goal. The Government must realize that it has a long way to go freeing itself from the Commission ‘s human rights close monitoring and reporting before it could be trusted for decent human rights performance towards the Sudan and the international community.
Please use the documents posted below, that already are in possession of the Commission, or any statements of your own choice to the same effect, to strengthen the ongoing Campaign, which is actively supported by the Sudanese inside the country – through their own creative ways, and the Diaspora fellows:
The Commission ‘s e-mail is:
1503@ohchr.org
If interested, please forward your name to the writer of this message to include you in the unified list.
Let us Act Now for the sake of the innocent Sudanese in Upper Nile, DarFur, and the other victims of the Sudan Government all over the Sudan.
Mahgoub
இடதுசாரிகளின் கைப்பிடியில் சிக்கி இருக்கும் இந்திய மனித உரிமை நிறுவனங்கள் இந்த இனப் படுகொலை குறித்து என்ன நிலை எடுத்துள்ளன, மேலும் என்ன வகை செயற்பாட்டில் இறங்கி உள்ளன என்றும் கவனிப்பது வாசகருக்கு நிலையைத் தெளிவு படுத்தலாம். எனக்குத் தெரிந்து அவை இந்தப் படுகொலையைப் பற்றி மெளனம்தான் சாதிக்கின்றன.
இது குறித்து இந்திய தினசரிகளோ, அல்லது இதர பத்திரிகைகளோ அதிகம் எதுவும் வெளியிடவில்லை என்றும் கவனித்திருப்பீர்கள். மடிவது கறுப்பரான ஆப்பிரிக்கர்தானே என்ற மெத்தனம்தான் காரணமா ? ஒரு வேளை இந்தியாவில் மனித உரிமை நிறுவனங்கள் ஏதும் குரல் கொடுத்தன அல்லது நிதி திரட்டுகின்றன அல்லது வீதிகளில் ஊர்வலம் போயின என்று யாருக்காவது தெரிந்தால் இங்கு எழுதித் தெரிவித்தால் உதவியாக இருக்கும்.
தொடரும் இந்த இனப் படுகொலையைத் தடுத்த நிறுத்தக் கோரியும், அரபு வன்முறையாளர்களை ஆதரிக்கும் போக்கை சூடான் அரசு கைவிடக் கோரியும், ஐ.நா. பாதுகாப்பு அவை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், சூடான் அரசாங்கம் ஆகியவற்றை வலியுறுத்தி பின் வரும் கடிதத்தையோ, அல்லது இதே போன்ற கருத்துடைய கடிதங்களையோ அனுப்ப வேண்டியது மனித குலத்தின் உடனடிக் கடமையாகிறது.
To:
The United Nations Security Council, First Avenue at 46th Street, New York, NY 10017
United Nations Human Rights Commission, Geneva
Sudan Government, Khartoum
Prompt Appeal to the United Nations Human Rights Commission:
– The Sudan Government Must Stop Genocide of the People of Upper Nile and DarFur.
– The Sudan Government Must not be Relieved of Item 9.
– The Government of Sudan Deserves Continuous UN Human Rights Monitoring till it comes out with clean hands.
– The Sudan Government Must Stop Genocide of the People of Upper Nile.
– The International Community must exercise its will and urge the Sudan Government to stop using the Arab militia in massacring the Sudanese – African peoples of Darfur and adhere to the international law and the will of nations.
– The International Community must not reward the National Islamic Front Government of Sudan for its crimes against humanity.
– We the undersigned appeal to the International Community to monitor human rights violations in Sudan and protect the innocent citizens.
The Sudan Government is exercising a daily genocide of the Sudanese people of the Western Upper Nile (Unity State). Authenticated reports by researchers, humanitarian organizations, and the other reliable sources of information have repeatedly confirmed the incidence of genocide of the innocent children, women, and men of the Upper Nile region for the cheap gain of oil and land at the expense of people.
We ask the Sudan Government to immediately stop any military action against the innocent citizens of Upper Nile. We demand the immediate disarmament of the government-militias that daily terrorize, starve, displace or extra-judicially kill the indigenous population of the Upper Nile.
We ask the United Nations Security Council to take immediate measures to stop the Sudan Government crimes against humanity in the Upper Nile.
We urge the People of Sudan and the International Community to show support to the Upper Nile Sudanese whose very existence is daily eradicated by the savagery, criminality, brutality, and non-humanness of Omer al-Bashir, his ruling junta and ruthless militias.
Aggrieved by the scourge of our people in Upper Nile, We strongly alert the International Community to the evil intention of tyrant Omer al-Bashir to crush by force the human rights ‘ struggles of the innocent people of DarFur and the most recent brutality his regime is exercising to silence the peaceful demonstrations protesting war, emergency law, and the other human rights violations.
The United Nations Human Rights Commission must stay with the interest of the country and its urgent needs for peace, democracy, human rights and civil freedoms, not the economic interests of a government or who ever anticipates such interests with it while the same government continues to act as the worst violator of human rights.
மின்-அஞ்சல் வசதி இருப்போர், 1503@ohchr.org என்ற முகவரிக்கு கடிதங்களை அனுப்பவும்.
இந்த இனப் படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு யுனிஸெஃப் அமைப்பின் மூலம் நிதி உதவி அளிக்க விரும்புவோர் பார்க்க:
http://www.unicefusa.org/site/pp.asp ?c=duLRI8O0H&b=50755
- கடிதம் – ஜூலை 8, 2004
- அறிவியலில் ஒரு வாழ்க்கை – நூறுவயதாகும் எர்னஸ்ட் மேய்ர்
- செல்பேசிகளைத் தெரிந்துகொள்வோம்
- சனிக்கோளையும் அதன் துணைக் கோளையும் உளவு செய்யும் காஸ்ஸினி ஹியூஜென்ஸ் விண்வெளிக் கப்பல் [Cassini Huygens Spaceship Probing Saturn
- வெள்ளைப் புலாவ்
- மெய்மையின் மயக்கம்-7
- குறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி
- ஓரம் போ – பாராட்டு வருது
- நாளை மறுநாள் – திரைப்படமும் அப்பாலும்
- Spellbound (2003)
- ஆட்டோகிராஃப் ‘ஓடி வரும் நாடி வரும் உறவு கொள்ள தேடி வரும் ‘
- பூச்சிகளின் மிமிக்ரி
- கடிதம் ஜூலை 8 , 2004
- கடிதம் ஜூலை 8,2004
- கடிதங்கள் ஜூலை 8, 2004
- நேரடி ஜனநாயகம்
- சூடான் இனப் படுகொலை: ஒரு வேண்டுகோள்
- தமிழவன் கவிதைகள்-பதின்மூன்று
- கருக்கலைப்பு
- வேடத்தைக் கிழிப்போம் -1 (தொடர் கவிதை)
- மயிற்பீலிகள்
- என் காதல் இராட்சதா …!!!!
- அக்கினிகாரியம்
- மஸ்னவி கதை — 12 : சூஃபியும் கழுதையும் ( தமிழில் )
- விழிப்பு
- ஒரு மரக்கிளையில் சில நூறு குருவிகள் – நாடகம்
- நாமக்கல் – பெண் சிசுக்கொலையும், லாரி தொழிலும், எய்ட்ஸ் நோயும்
- கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன்
- விகிதாச்சார முறை பற்றிய விமர்சனங்களும் பதில்களும் -2
- சேதுசமுத்திரம் திட்டம் தேவையா ?
- திருவள்ளுவர் சிலை பாதுகாப்புப் போராட்டம் : பெங்களூரில் அல்ல… கன்னியாகுமரியில்!
- நீலக்கடல் – (தொடர்) – 27
- கறியாடுகள்
- மரபணு மாறிய.
- கற்பின் கசிவு
- மனம்
- கோடிமணி நிலை
- கவிக்கட்டு 14 – மண்ணுக்கும் விண்ணுக்கும்
- உழைப்பாளர் சிலையோரம்….
- என்னைப்போலவே
- மயோ கிளினிக் ஆராய்ச்சியாளர்கள் முதுமைக்கும் இனவிருத்திக்குமான மரபணுவைக் கண்டறிந்துள்ளார்கள்