சின்னப் பூக்கள்

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

பவளமணி பிரகாசம்


உயரமான தண்டிலே
ஒய்யார சூரியகாந்தி,
அலையில்லா குளத்திலே
அலங்கார தாமரை,
முட்களின் காவலிலே
பட்டான ரோசாப்பூ,
பல வண்ண தினுசிலே
சிரிக்கும் செம்பருத்தி,
கொத்தாக கொடியிலே
குலுங்கும் மல்லி, முல்லை-
இத்தனை மலர்களும்
அழகாக அணிவகுத்தும்
சாலையோர பரப்பிலே
சில்லென்று பூத்திருக்கும்
சின்னச் சின்னப் பூக்களே,
வண்ண வண்ணத் துளிகளே
கண்ணை ரொம்ப கவருது,
எண்ணத்தான் சொல்லுது
எளிமையான பிறப்பிலும்
ஒளிருகின்ற சிறப்பினை.

Series Navigation

பவளமணி பிரகாசம்

பவளமணி பிரகாசம்