ஆர்ஜன்டான திரைப்பட இயக்குனர் பெர்னான்டோ பெரி (தமிழில் யமுனா ராஜேந்திரன்)
நான் பார்த்தேன்-
பெர்லின் மிருகக் காட்சிச்சாலையில்
ஒரு பச்சைக்கிளியை நான் பார்த்தேன்-
நான் நினைத்தேன்-
புதிய இலத்தீனமெரிக்க சினிமா என்பது இன்று
ஒரு நடைமுறை யதார்த்தம்
ஆனால்
ஆனால்
ஆனால்
இருபத்தைந்து ஆண்டுகளின் முன்பு
அது ஒரு கற்பனாவுலகு
இன்றைய தினத்துக்கு
எது கற்பனாவுலகு ?
அப்புறமாக அந்தப் பச்சைப் பசேலென்ற
பச்சை நிறக்கிளி
-இலத்தீன் மொழியில் அந்தக்கிளியின்
பெயர் சொல்வது சிரமம்-
எமது மேல் பரானா பிரதேசத்தில்
அதன் பெயர் நிச்சயம் எனக்குத் தெரியும்
ஐியன்ஸிட்டோ என்றோ
நெமிஸியோ என்றோ அதனை அழைப்போம்
அவை எமது சகோதரரருடையதும்
மச்சான்மார்களதும் பெயர்கள்
நான் பார்த்தேன்
நான் பார்த்தேன் அப்பச்சைக்கிளியை
அப்புறம் நான் யோசித்தேன்-
தேசிய அடையாளம்-
-அதாவது தேசிய ரீதியிலான அடையாளம்
(விமர்சன ரீதியிலான) அடையாளம்-
அந்தக் கிளிக்குத் தேவையா என்ன ?
ஆனால் எமக்கு
எமக்கு அது இருக்கிறது
எமக்கு அது தேவை
யதார்த்தவாத
விமர்சனபூர்வ தேசிய சினிமாவுக்கு
அவ்வடையாளம் வேண்டும்
அப்புறமாக வெகுஜன சினிமாவுக்கும் அது வேண்டும்
எனச் சேர்த்துக் கொண்டோம்
நானறிவேன் ஆம் நானறிவேன்
பெர்லின் மிருகக் காட்சிச்சாலையில்
சாம்பல் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பச்சைக் கிளி
நெருங்கிய இருப்புக் கம்பிகளால பின்னப்பட்ட
கூண்டுக்குள்ளிருந்து என்னைப் பார்த்த அக்கிளி
சோகமாயிருக்கவில்லைதான்-
ஆயினும் அக்கிளி சோகத்தைப் பிரதிபலித்தது
ஆதன் சூழலை எதிரொலி செய்தது
அப்புறமாக நான் யோசித்தேன்
நான் நினைத்தேன் ஆமாம் நான் நினைப்பதாக
நான் கருதினேன் –
தாத்தா லுாமியர்
தாத்தா மெலிஸ்
தாத்தா எடிசன்
அவர்கள்
இந்தப் புதிய இலத்தீனமெரிக்க சினிமாவும் வரப்பெற்றார்கள்
பிரிவுபட்டவற்றுள் ஒன்றாக
பிரிவுற்றவற்றுள் ஒருமை நோக்கியதாக
தனித்துவம் கொண்டதாக
சமவேளையில் பிரபஞ்சமயமானதாக
இந்தப் புதிய இலத்தீனமெரிக்க சினிமாவும் வரப்பெற்றார்கள்
இதுவரையிலும்
ஆசிரியனின் சினிமா
சினிமா சிந்தனைப் பள்ளிகள்
பல்வகை சினிமா போக்குகள்
இயக்கங்கள் இருந்தன
இன்று
ஒரு முழுக்கண்டத்தினதும் சினிமா
ஒரு புதிய வகை சினிமா
முழுக் கண்டமும் தழவியதான
புதிய இலத்தீனமெரிக்க சினிமா வந்திருக்கிறது
நான் சொல்ல விரும்புகிறேன் இதை
தொலைஒளி சினிமாக்கிளி
தனது தரிசனங்களை வெளியிடுகிறது
அதனது பதற்றங்களை
அதனது பெருமிதங்களை
பனி பெய்தலை
அதனது கொடுஞ்சினத்தை-
நாம் எமது கேமராவை
மனித தரிசனத்தின் உச்சத்தில் வைப்போம்
மனிதனை மறு உருவாக்கம் செய்யும்
உச்சத்தில் வைப்போம்
இன்றைக்குப் பிரச்சினையாகவிருப்பது
மொழி-
( கருத்தியலையும் நாங்கள் கவனம் கொள்கிறோம் )
இரத்தம்
உமிழ்நீர்
விந்துத்துளி
மரணம்
புலப்பெயர்வு
எதிர்ப்புணர்வு
வன்முறை மிகு களங்கமற்ற விடுதலை
மனசாட்சியின் பசியினின்று விடுதலை
புரட்சி
மொழிகளை
அரிச்சுவடிகளை
சமிக்ஞைகளை
பார்வைக் கோணங்களை
புரட்சிகரமாக்காத எதுவும் தனக்குத் தானே
ஏதிரியாகி மரணமுறும்
( இப்பொது கிளி ஆழ்ந்து மூச்சுவிட்டுக் கொண்டது
விழிகளை படபடத்துக் கொண்டது)
நாங்கள் படைப்போம்
சினிமாக்கவிதை
எதிர் இலக்கியம்
எதிர் அரங்கம்
ஜீவனுள்ள உருவகங்கள்
கவிதா அரசியல் ஒளி
புரட்சியும் உச்ச முயக்க சந்தோஷமும்
நாங்கள் படைப்போம்
நான் பார்த்தேன் ஆமாம் நான் பார்த்தேன்
பச்சைக்கிளி மட்டமல்ல
பிறவும் அடைக்கப்பட்டிருப்பதை நான் பார்த்தேன்
பெர்லினின் தூர ஆகாயத்தில்
ஓரு பச்சை நிறப்பனித்துகள் போலும்
ஓரு இறகு உதிர்ந்தது
நான் சொல்கிறேன் :
இந்த முன்னுரைதரும் பொறுப்பினின்றும்
எனை விடுவியுங்கள்
என்னைப் பேசவிடுங்கள்
(நான் ஏற்கனவே பேசத்துவங்கிவிட்டேன்)
PAN-ZOOM-
TRAVELLING-DECIBELS-
MIX-
அத்தோடு நொடிக்கு 24 பிரேம்கள் போன்றவற்றை
எனது மொழியில்-
திரைநோக்கிச் செலுத்திய ஒளியினூடே
என்னைப் பேசவிடுங்கள்
(நான் ஏற்கனவே பேசத்துவங்கிவிட்டேன்)
பெர்லினில்-
பெர்லின் மிருகக் காட்சிச்சாலையில்
நான் பார்த்தேன்
நான் பார்த்தேன் ஒரு பச்சைக்கிளியை
அந்தப் பச்சைக்கிளி
என்னைப் பார்க்கவேயில்லை.
—————————————————-
ஆதாரம்:
Twenty Five Years of New Latin American Cinema
Edited by :
Michael Channan
Published by :
British Film Institiute and Channel Four Cinema
United Kingdom :1983
- என்னைப் போல…
- தினகப்ஸா – 18 பெப்ரவரி 2001
- கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் :
- கிரிஷ் கர்னாட் – இந்திய நாடகங்களின் பரிமாணங்களை விரிவு படுத்தியவர் – நண்பர் குர்த்கோடி அவர்களுடன் பேட்டி
- புளி அவல்
- காரட்–தேங்காய் மிக்ஸட் பர்பி
- இயற்கை மொழி கணிணியியல் (Natural Language Processing)
- 2 கவிதைகள்
- ஒரு கடற்கரையின் இரவு…
- சூரியனைத் தேடும் இலைகள்
- சினிமா போஸ்டர் வடிவில் ஒரு கவிதை
- ஜெயமோகனின் கடிதம்
- இந்த வாரம் இப்படி – பெப்ரவரி 18 -2001
- ஏன் ஆப்பிரிக்கா பின் தங்கி இருக்கிறது ? (அல்லது ஏன் இந்தியா பின் தங்கி இருக்கிறது ?)
- ஆண்மையின் புதிய அளவு கோல்கள் :ராஜ்குமார் கன்னட வெகுஜன தளத்தில் – இறுதிப்பகுதி
- கியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும் :
- கல்கி