சிதறிய கவிதைகள்

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue

மணி


மெட்ரோ ஹோட்டலின்
மேல்மாடி நீச்சல் குளத்தில்
அலகால் கொத்தி
இறகால் நீர் குடிக்க முயற்சிக்கிறது குருவி.
*

கால்களில் ஓட்டிய
இலைத்துகள்

மணல்போல சீக்கிரம்

உதிர்வதில்லை..

*

யாரை தேடிக்கொண்டிருக்கிறான்

தெருவில் அவன்.

கவிதையாயிருக்கலாம்.

*

ஏதோ ஒரு திடுக்கிடல்

சாவிதேடும்போது

அலைபேசி மாற்றிவைத்து மறந்து போகும்போது

வங்கி அட்டை தேய்க்கப்பட்டு

வயர்களால் பணம் கடத்தப்பட்டும்போது

என் பெயர் பயணச்சீட்டில் அவரால் டிக் செய்யப்படும்போது

நான் நானே என மற்றவர் உறுதி செய்யும்போதெல்லாம்.

*

 

என் படத்தை அவன் வரைந்து கொண்டிருந்தான்.

நான் அவன் படத்திற்காய் சிரித்துக்கொண்டிருந்தேன்.

வழிப்போக்கனாய் அவள் கடந்து செல்ல

படம் செத்து, நான் உயிர்பெற்றேன்.

ஏன் சிரிப்பு

Series Navigation

மணி

மணி