சாயல்கள்

This entry is part [part not set] of 41 in the series 20110102_Issue

ஷம்மி முத்துவேல்


வார்த்தைகள் எங்கும் பரவி கிடக்கின்றன
தடங்கலின்றி பேசவோ ,
எழுதவோ நினைக்கையில்
அவை சிக்குவதேயில்லை ….
ரசிப்பாகட்டும் , லையிப்பாகட்டும்
வார்த்தைகளை சரிவர கோர்க்க
என்றுமே இயல்வதில்லை ….
மீறி எத்தனிக்கையில் அவை
ஓவிய பலகையில்
கோடுகள் ஆகவோ அல்லது
வர்ண தெளிப்புகள் ஆகவோ
வெறும்சாயல்கள் மட்டும் தாங்கியே
நின்று விடுகின்றன …

Series Navigation

ஷம்மி முத்துவேல்

ஷம்மி முத்துவேல்