ஹெச்.ஜி.ரசூல்
திருவனந்தபுரம் வயலோப்பில் சன் ஸ்கிருதி பவனில் இந்திய அரசு சாகித்திய அகாடெமி சார்பில் நடைபெற்ற வ்டகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் பங்குபெற்ற இலக்கிய கலைநிகழ்வு மார்ச் 5- 6 தேதிகளில் நடைபெற்றது.
முதல்நாள் அமர்வில் சாகித்திய அகாடெமி செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றிட மலையாள இலக்கிய சிந்தனையாளர் எம்.தோமஸ் மேத்யூ அறிமுகவுரை ஆற்றிட வடகிழக்கு எழுத்தாளர் தெமுசுல அஒ தலைமையுரை நிகழ்த்த மலையாள கவிதைப்படைப்பாளி ஒ.என்.வி.குரூப் நிகழ்வை துவக்கிவைத்தார்.
முதல் அமர்வு கவிதை வாசிப்பில் அசாமிய கவிஞர் தனந்தா தேவி,கன்னடக் கவிஞர் பிரதிபா நந்தகுமார், மலையாளக் கவிஞர் ஜெயகுமார், மணிப்புரி கவிஞர் ஜோஸ்வார் வைகவ, மிசோரம் கவிஞர் தன்மவி தமிழ்கவிஞர் ரவிசுப்ரமணியன், தெலுங்கு கவிஞர் ஷிவரெட்டி ஆகியோர் பங்கேற்று கவிதை வாசித்தனர்.சாகித்திய அகாதெமி துணைச் செயலாளர் கே.எஸ் ராவ் நன்றி கூறினார்.
இரண்டாம் அமர்வு கதை வாசிப்பு அரங்காக நடைபெற்றது. அசாமிய எழுத்தாளர் லட்சுமி நந்தன் போரோ தலை ஏற்றிட போடோ மொழி கதையாளர் ஜனில் குமார் பிரம்மா,மலையாளம் கதையாலர் பிரகாஷ்,தமிழ் கதையாளர் பொன்னீலன்,தெலுங்கு கதையாளர் குடிபதி கலந்து கொண்டு தங்களின் கதை வாசிப்பை நிகழ்த்திக் காட்டினர்.
மாலைநேர மூன்றாம் அமர்வில் கவிதைவாசிப்பு மலையாளக் கவி சுகதகுமாரி தலைமையில் நடைபெற்றது.போடா மொழிக் கவிஞர் பிரேமானந்தா முச்சாரரி,செக்மா கவிதைப் படைப்பாளி பிரகதி சக்மா,கன்னட கவிஞர் சிந்தாமணி கொடலீகர,மலையாளம் அனிதாதம்பி,தமிழ்கவி இளம்பிறை, தெலுங்கு கவி சங்கவேணி ரவீந்திரா ஆகியோர் பங்கேற்று கவிதைகளை வாசித்தனர்.
தொடர்ந்து லோகா – த மெனி வாய்ஸஸ் என்ற முத்திரையோடு அசாமிய மக்களின் பிகு பாடல்கள் நடனங்கள் சிறப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இரண்டாம்நாள் காலை அமர்வுக்கு தெலுங்கு எழுத்தாளர் கேது விஸ்வநாத ரெட்டி தலைமை ஏற்றிட எனது உலகம் எனது எழுத்து என்ற பொருளில் உரையரங்கு நடை பெற்றது.அசாமிய எழுத்தாளர் சிபானந்தா கக்கோட்டி, ஆங்கில எழுத்தாளர் முகுந்த் ராவ், மலையாளம் எழுத்தாளர் சேதுமாதவன், மணிப்புரி எழுத்தாளர் நபகுமார் நான்ங்மெய்கபம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தமிழககவிஞர் சிற்பி பாலசுப்ரம்ணியம் தலைமையில் இலக்கியப் போக்குகள் எனும் பொருளில்கருத்தமர்வு நடைபெற்றது. மலையாளம் எழுத்தாளர் சிறீதேவி கே. நாயர் ,வடகிழக்கு மாநில எழுத்தாளர் ரஞ்சித் தேவ் கோஸ்வமி, தெலுங்கு எழுத்தாளர் நாகமாலேஸ்வரா ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.
இறுதி அமர்வாக வடகிழக்கு பிராந்திய எழுத்தாளர் மமாங் தை தலை ஏற்றிட கவிதை வாசிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அசாமிய கவி பிரஞ்சித் போரா, பொங்சர் மொழிக் கவிஞர் கமல் பொங்சர்,கன்னடக் கவிஞர் ஆரிப் ராசா,கோக்பொரோக் கவி பிரதிப் முர சிங் , மலையாளம் கவிஞர் அன்வர், வினயச்சந்திரன் நேபாளி கவிஞர் தக்கால் ,தமிழ் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல்,தெலுங்கு கவிஞர் ரமணா ஆகியோர் கவிதைகளை வாசித்தனர்.
நிகழ்வின் இறுதியாக மணிப்புரி மார்ஷல் கலை மற்றும் மிரிடங்கா நடனங்கள் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. பொதுவாக வடகிழக்கு மாநிலங்களின் கலைஞர்கள் படைப்பாளர்களின்படைப்பு வாசிப்புகளும் ,பழங்குடி மொழிசார்ந்த படைப்புலகமும், பாரம்பர்ய நடனங்களும் கலைகளின் பன்மைத்தன்மையை அங்கீகரிக்கவும் கலாச்சார பரிவர்த்தனை செய்வதற்குமான மிகப் பெரிய களமாகவும் அமைந்திருந்தன். கவிதை அமர்வுகளில் பெரும்பாலான கவிதைகள் அவரவர் தாய்மொழியிலும் பின்னர் ஆங்கில மொழி பெயர்ப்பிலும் வாசித்தளிக்கப்பட்டன். இந்தியக்கலாச்சாரத்தை ஒற்றைப்படுத்தி மேலாதிக்கப் பண்பாட்டை நிலைநிறுத்தும் அதிகாரங்களுக்கு மாற்றுதிசையில் பன்முக கலாச்சாரவெளியை இந் நிகழ்வு உருவாக்கிக் காட்டியது.
இந் நிகழ்வில் பங்கேற்று வாசிக்கப்பட்ட எனது மூல மொழி தமிழ் கவிதை களும் அதன் மொழிபெயர்ப்பும்
Tamil Poems : H.G.Rasool
English version : R.Premkumar
1)நூலகத்தில் பூனை
நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தது பூனை
பூனையின் மொழியைவிட
தமிழ் எளிதாக இருப்பதாக சொல்லிக் கொண்டு
மொழிபெயர்ப்புகதைகளை வாசிக்க துவங்கியது.
விடுமுறைநாளென்பதால்
நூலகத்தில் யாரும் இல்லாதது வசதியாகிவிட்டது.
பரபரப்பு செய்திகளை தாங்கியிருந்த
அன்றாட செய்தித் தாள்களும்
அங்கங்கே அடுக்கியும் வைக்கப்பட்டிருந்தன.
பூனை அவற்றையும் கலைத்துப்போட்டு படித்தது
பெரிய பெரிய ரேக்குகளில்
அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின்மீது
அது மெய்மறந்தகாதலை
வெளிப்படுத்த தவறவில்லை.
பகல்நேரம் இருட்டாக இருந்ததால்
ஏற்கெனவே அது விளக்கை போட்டிருந்தது.
பேன்சுற்றிக் கொண்டிருந்தாலும் வியர்த்தது.
காலியாக கிடந்த நாற்காலிகள்
ஒவ்வொன்றிலும் உட்கார்ந்து பார்த்தபூனைக்கு
உட்கார்ந்து படிப்பது பிடிக்கவில்லை.
சன்னல்களும்
அறைக்கதவுகளும் தாளிடப்பட்ட நூலகத்தில்
எப்படி நுழைந்தேன் என்பதை
பூனை திரும்ப திரும்ப யோசித்துப் பார்த்தது.
நாளைகாலையில்
நூலகத்தை திறந்துபார்க்கும் பணியாளன்
அடையாள அட்டை இல்லாத தன்னை
இங்கிருந்து வெளியேற்றிவிடுவானென்ற
பீதியும் பயமும் கண்களில்
தொற்றிக் கொள்ளாமல் இல்லை.
என்றாலும் குட்டிரேவதியும்
நவீன தமிழ்கவிகளும் தன் இனம்பற்றி
இவ்வளவு எழுதிகுவித்திருக்கிறார்களா
என்பது பற்றிய ஆச்சர்யத்தால்
பூனை மிரண்டு போயிருந்தது.
CAT IN THE LIBRARY
The cat was reading in the library
Saying that Tamil is simpler than
Its own language
It started reading translated sakkaarias stories
It was comfortable
To have nobody in the library
On that holiday
Sensational newspapers were also
Kept in series here and there
The cat dismantled them and read
It didn’t fail to explicit
Its self negated love upon
The books in the bigger racks.
Since the daytime was dark
It had switched on the lights
Eventhough the fan was revolving it was sweating
After sitting on all the empty chairs
The cat hated sitting for reading.
The cat was thinking again and again
Hoe did it enter the library
Whose wndows and doors are shut
There was fear and horror in its eyes
Thinking about tomorrow morning
When the library employee may
Drive him away
For being without identity card
Anyhow the cat was astonished
To know about
Kuttirevathi and other modern Tamil poets have
Written so much about its race.
2)என்கவிதை சுட்டுவீழ்த்தியதில் பிணங்கள்
என் கவிதை ஒரு துப்பாக்கிக்கு சமம்.
அதிலிருந்து பாயும் குண்டுகள்
எதிரிகளை ஒவ்வொன்றாக
சுட்டு வீழ்த்திக் கொண்டிருக்கின்றன.
புத்தனை கொன்றுவிட்டு வந்த
சீடனொருவன் பிணமானான்.
காந்தியை படுகொலை செய்த
இந்தியன் ஒருவன் பிணமானான்
மாவோவை கொன்று புதைத்துவிட்டு
ஆயுதத்தோடு வந்தவனும் அப்படியே.
என் இருப்பிடத்திலிருந்து
முன்னோக்கிச் செல்ல எத்தனிக்கிறேன்
பரவும் புகை மண்டலங்களில்
எதிரியின் முகம் துல்லியமாய் தெரியவில்லை.
ஏற்கெனவே என்மீதுபட்ட காயங்களிலிருந்து
ரத்தம் பீறிட்டு கிளம்புகிறது.
நெற்றிப் பொட்டிலும் நெஞ்சுக் குழியிலும்
குண்டுகள் துளைத்திருக்கின்றன.
என் விரல்களின் வேகம் குறைய
என்னுடல் தளர்ச்சியுற்று தடுமாறுகிறது.
தூரத்தில் ஒரு பொம்மைத் துப்பாக்கிவைத்து
என் மகளும் விளையாடிக் கொண்டிருக்கிறாள்
அவளுக்கும் தெரியாது
அது பொம்மை துப்பாக்கியல்ல என்பது.
குண்டுகள் தீர்ந்த பின்னரும்
என்கவிதை சுட்டுக் கொண்டேஇருக்கிறது.
CORPSES SHOT BY MY GUN
My poetry is equal to a gun
Bullets emanating from it are
Killing the enemies one by one
A disciple returning after killing Budha
Was killed
An Indian who mured Gandhi
Was dead
It was the same for the man
Who buried Mao and coming with weapons
I am trying to go forward
From my dwelling
The enemys face is blurred
By the spreading layers of smoke
Blood oozes from my injuries
Bullets have rifted my Forehead and heart
My fingers are slowing down and
My body shivers with weakening
My daughter is also playing at a distance
With a toy gun
She doesn’t know it is Not a toy gun
Even after the bullets are finished
My poetry is going on firing
3)ஹவ்வா
தனது இடப்பக்க விலாஎலும்பை
தேடிக் கொண்டிருந்த ஆதம்
எதிரே நின்ற ஹவ்வாவைப் பார்த்து
மூர்ச்சையாகி விழுந்தான்
தன்னிடம் இல்லாத மார்பகங்கள்
ஹவ்வாவிற்கு எப்படி முளைத்தன..?
Eve
Caressing and searching his
Left rib
Adam looked upon Eve
Opposite to him
And fell down unconscious
How breasts sprout upon Eve
Which he didn’t possess.
4) ஒரே உதையில் தூரப் போய்விழுந்த
பொம்மை சொன்னது
இப்படி எல்லாம் நடந்திருக்காது
எனக்கும் ஒரு உம்மா இருந்திருந்தால்
Mom
Upon falling away in a single kick
The toy said
This would not have happened
If I had a umma
5)சிங்கத்தை கொலைசெய்வதற்கு
என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை
எனது தூக்கம் கலைந்தபோது அதிர்ந்து போனேன்
ஒரு சிங்கத்தை கட்டிப்பிடித்துக் கொண்டு
படுக்கையில் கிடந்திருக்கிறேன்
எனது இரவையும் படுக்கையையும்
பகிர்ந்து கொள்ள அது எப்போது
என்னிடம்வந்து சேர்ந்ததென்று தெரியவில்லை
மிதமிஞ்சியபயத்தால் அசைவற்றுக் கிடக்க.
சிங்கத்தின் திமிருக்குள்
என்னுடல் நொறுங்கத் தொடங்குகிறது.
என்னை இறுக கட்டியணைக்கும்
சிங்கத்தின் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை.
சிங்கத்தை கொலைசெய்வதற்கு
என்னிடம் ஆயுதங்கள் எதுவுமில்லை.
ரத்தவாடை கசிந்துபரவ
என்னை புணர்ந்து முடித்த
மகிழ்ச்சியை கொண்டாட நினைத்த சிங்கம்
என்னுடலை கடித்து தின்ன ஆரம்பித்தது.
I Don’t Have Weapons To Kill The Lion
When my sleep was disturbed I was shocked
I was reclining in the bed embracing a Lion
I don’t know when did it come
To share my bed and night.
Lying motionless with excessive fright
My body started deconstructed
Within the aggression of the Lion
I could not escape from the embracement of the Lion
I don’t have any weapon to kill the Lion
Spreading the aroma of blood
I was finished seduced
Decided to celebrate the joy
The Lion initiated eating my body..
- அந்தவொரு மழை நாள்..
- “புளிய மரத்தின் கதை” நூல் விமர்சனம்
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -2
- சாகித்திய அகாடெமியின் வடகிழக்கு மற்றும் தென்மாநில படைப்பாளிகள் சந்திப்பு – ஹெச் ஜி ரசூலின் கவிதைகளும் மொழிபெயர்ப்பும்
- இவர்களது எழுத்துமுறை – 31 ஜெயமோகன்
- ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு
- எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு விருது
- சென்னையில் குறும்படப் பயிற்சிப்பட்டறை
- எஸ்.அர்ஷியாவின் இரண்டாவது நாவலான பொய்கைக்கரைப்பட்டி நாவலும் கவிஞர் ஸ்ரீரசாவின் புதிய கவிதை நூலானா எதிர்கொள் கவிதை நூலும்
- சாகித்ய அகாதமி புத்தக கண்காட்சியும் இலக்கிய விழாவும்
- முரண்பாடு
- விடுமுறை நாள் கல்லூரி
- மரணம் பயணிக்கும் சாலை!
- ‘‘காடு வாழ்த்து’’
- அக்கறை பச்சை
- தேவைகள்
- இரண்டு கவிதைகள்
- இருக்கை…
- கொடிய பின்னிரவு
- கைகளிருந்தால்…
- ப மதியழகன் கவிதைகள்
- ‘இவை… நமக்கான வார்த்தைகள்…!’
- இருக்கை
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) உடல் இச்சையைக் கட்டுப்படுத்தல் (கவிதை -30 பாகம் -9)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -1)
- சட்டப்படி குற்றம் (இது திரைப்படமல்ல, ஒரு நிஜக்கதை)
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தொன்று
- விதை
- நாலுபேருக்குநன்றி
- மழை ஏன் பெய்கிறது
- குருவிக் கூடு
- குமார் அண்ணா
- சாமியின் தந்தை..
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -3
- விதியை மேலும் அறிதல்
- நினைவுகளின் சுவட்டில் – 64
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் . (4)
- ஒரே ஒரு துளி – துப்பறியும் சிறுகதை
- ஒற்றை மீன்
- நீ….. நான்…. மழை….
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- கனவுகள் இனிதாகட்டும்!!
- இடைவெளி
- எங்ஙனம்?
- இரவின் தியானம்
- உயிர்ப்பு
- தன்னிலை விளக்கம்
- கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள் [Russian VVER-1000 Reactor]
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 30