சரணாகதி

This entry is part [part not set] of 46 in the series 20040129_Issue

திருவையாறு ஸ்ரீ தியாகராஜர்


(கெளள) (ஆதி)
(ப) துடுக்குகள் புரியுமென்னை
நெடுமால் காப்பனோ ? அந்தோ!
(துடுக்குகள்)
(அ.ப) கடு துர்விஷயத் தொழிலில்
கணந்தோறும் மூழ்கி – மிகவும்
(துடுக்குகள்)
(ச) 1. திருவுளக் குமுத மலர் திங்காள்!
மருவுள வாக்கேகா மாதவ!
(துடுக்குகள்)
2. ஸகல பூதமுளுறை நீயென
உணரா மதியற்று போயே (துடுக்குகள்)
3. சிறு ப்ராயமுதநாளே நும் பஜநாம்
ருத ரஸம் பருகா குதர்க்கனென
(துடுக்குகள்)
4. பிறதனங்கோரி அவர்மதி
கிறங்காற்றி வயிறு நிரப்பித் திரிந்தே
(துடுக்குகள்)
5. ஊழ்வினை புவியில் ஸெளக்ய ஜீவனமே
வாழ்வென ஸதாதினமும் கழித்தே
(துடுக்குகள்)
6. வெகுளிய நடண விடண வரிய வனிதையர்
வசம் செய களித்துபதேசி
ஸ்வரம் லயமறியாக் கல்மனமொடு செருக்குடன்
ஸுபக்தன் ஸமானமென (துடுக்குகள்)
7. கண் ஸாரமாம் கனிகையர் குழவியர்
மண் ஸேனை மட்டற்ற செல்வம் நம்பி
பண் ஸாரமாம் தேவாதிதேவ! நின் (திருப்) பாதம்
பஜனையால் பற்ற மறந்தே
(துடுக்குகள்)
8. நுக்கனி முக கமலம்ிபூவை ஸதா
என் மனதில் த்யானிக்காமலே
துர்மதாந்த வாழ்வு கோரி பரிதாபச்
சேறில் சிக்கி முங்கி – துர்விஷய
துராஸை துறக்கவியலா – அன
வரத மபராத சபல சித்துடன் (துடுக்குகள்)
9. மானிட ஜென்மம் துர்லபமெனயெண்ணி
பரமானந்த மடைந்திடாது
மத மனமாஸு காம லோப மோக
தாஸனாகி மோஸம் போனேன்
இட்ட குலமாயின் இடாதோர் நாடி
கெட்ட செயல் புரிந்து
ஸாதித்தேன் தாறுமாறாய்
ஸாரமற்ற மதங்கள்தனை
(துடுக்குகள்)
10. பெண்டிர்க்கு சிலகாலம்
மண்ணிற்கு சிலகாலம் – என
பணந்திரட்டயிப்
புவியில் திரிந்தேனைய்ய!
தியாகராஜ நேஸ! காப்பாயோ (இப்பாவியை) ?
(துடுக்குகள்)

(அன்புள்ள திண்ணை ஆசிரியர்க்கு,

ஸ்ரீ தியாகராஜரின் ‘துடுகுகல ‘ எனத் தொடங்கும் கெளள ராகக் கீர்த்தனையைத் தமிழில் தந்துள்ளேன். இது அவரது பஞ்சரத்ன கீர்த்தனைகளுள்ி இரண்டாவது கும். இக்கிருதியில் இறைவனிடம் பாவமன்னிப்பு கோரி ஸம்பூர்ண சரணாகதி அடைகிறார். மானுடம் தன்னிலையிலிருந்து தெய்வீகம் இடைப்பட்டுப் படும் அல்ல்லைப்ி பக்தி ரஸம் சொட்டப் பாடுகிறார். மானுடம் + நாதம் = பக்தி எனும் ஸமண்பாட்டை விளக்குகிறது இக்கிருதி.

மதநல்லிணக்கம் கோரி (வடலூர் வள்ளல் வழியில்) கர்நாடக ஸங்கீத்த்தில் கிறித்துவ, இஸ்லாமிய (இன்னும் ஏனபிற ஸமய) பக்தி பாடல்களைப்பாட வித்வான்கள் முன்வர வேண்டும். இஃது, அனைத்து மதங்களிலும் (நாதோபாஸனையால்) ஆன்மீக பக்தி நெறி தழைத்தோங்க உதவும். இந்திய பாரம்பரிய ஸங்கீதம் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் ஸொந்தம் அல்ல. இது பாரதம் உலக மக்களனைவர்க்கும் விட்டுச் செல்லும் பாரம்பரியச் சொத்து, ஸம்ப்ரதாயம், பிறப்புரிமையும் கூட.

நா. வெங்கடேஸன்
128 குட்வுட் வே
கேனிங்வேல், பெர்த்
மேற்கு ஆஸ்திரேலியா 6155.)
—————————————–
venkyswamy@yahoo.com

Series Navigation

திருவையாறு ஸ்ரீ தியாகராஜர்

திருவையாறு ஸ்ரீ தியாகராஜர்