சத்தியின் கவிக்கட்டு 5

This entry is part [part not set] of 48 in the series 20040506_Issue

சத்தி சக்திதாசன்


இரவுக்கும் கண்கள் உண்டு

இரவுக்குக் கண்கள் உண்டு இதை
இன்றுவரை உணரவில்லையா ?

எமக்குள்ளே ஒரு சப்தத்தை நாமாகவே
மெளனத்திக்கொண்டு
என்ன இது வீணான சிறு பிள்ளை விளயாட்டு

உணர்வுகளில், வலியை மட்டும் இனம் கண்டு
அதை
ஒரு ஓரமாக ஏன் நீ ஒதுக்குகின்றாய் ?

வீணயின் தந்திகளில் முகாரிகளை மட்டும்
அழித்து விட்டதாய் எண்ணி நீ அறுத்த
தந்திகள் இல்லையென்றால் இனி அது
ஆனந்த பைரவியை இசைக்க முடியாது என்று
ஏன் இன்னும் அறிவு உனக்கு ….

அதோ அந்தச் சுவரின் பின்னால் நின்று கூறிய
வார்த்தைகளை கேட்டவர் இல்லையென
நீ நம்ப
ஏன் அந்தச் சுவர் சிரிக்கின்றது ? ஓ அதன்
செவிகளை நீ கணவில்லையோ ?

கணக்கு அது புத்தகத்தில் புதிதாக
இன்பத்தின் பெருக்கல்களையும்
துன்பத்தின் கழித்தல்களையும்
மட்டும்
படித்தால் வாழ்க்கையெனும் சோதனையில்
நீ பாஸா ?

இனியும் எம்மை நாமே ஏமாற்ற வேண்டாம்
இரவுக்குக் கண்கள் உண்டு
சுவருக்குச்
செவிகள் உண்டு

இறங்கும் போது உன் முகத்திலடிக்கும்
தென்றல்
ஏன் ஏறும்போது மட்டும் புயலாய்
மாறுகின்றது ?

இதயத்தின் ஓசைகளை வரிசைப்படுத்தி
உதயத்தின் கீதங்களை ஏனோ
மறைத்து
வாழும் எமது குருவிக்கூட்டு வாழ்க்கை

நிச்சயமாக இரவுக்கு உண்டு கண்கள் !

இன்பத்தின் ஒவ்வொரு இதயத் துடிப்பையும்
இரண்டாம்
தடவையும் அனுபவிக்கத் துடிக்கும்
ஆசையின் தளத்தை அடக்கி வாசிக்கக்
கற்றுக் கொள்

அப்போது நிச்சயமாஉ உனக்குத்தெரியும்
இரவின் கண்கள் எங்கேயென்று

0000

தருவாயா ?

ஏற்றமுடைத்து யான் வயலில் தினமும் நன்றாய் உழைத்தே
ஏங்கியெழும் ஆசைகளுக்கோர் பாத்தி கட்டி மனதில்
கோவில் கட்டி அழகு நங்கயுனை நடுவில் நிறுத்தி தினம்
கொண்டாடி; தேகம் வடித்த பொற்சிலை நினைந்து
காதல் எனும் தூய அன்புச் சிந்தையில் எண்ணங்கள் ஊறி
கல்யாணம் எனும் பந்தம் கண்டு உனை(ப்) பேணி நல்
வாழ்க்கை எனும் இல்லறம் மேவி அதில் காணும் இன்பம்
வரவு வைத்து கனவுலகினில் இன்றுவரை வாழ்ந்திருந்து
சொந்தக் காலில் நல்ல நேர்மை காத்து உன் காதலுக்காய்
சார்ந்த உறவுகளை எதிர்த்து இன்றுவரை எதிர்பார்த்து
வேண்டி நிற்கும் வரமொன்று உன்வசம் ; என் காதல்
வேண்டாம் எனில் காதோடு மட்டும் கல்லறையில் சொல்.

0000
sathnel.sakthithasan@bt.com

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்