சகடையோகம்

This entry is part [part not set] of 27 in the series 20021001_Issue

நம்பிராஜன்.


ஒரு கவிதையை எப்படி
எழுதுகிறாய்
எழுதி விட்டாயா
ஒரு கதையை எப்படித்தான்
எழுதுகிறாயோ
எனக்குக் கொஞ்சம் சொல்லேன்
ஒரு கட்டுரையை எவ்விதம்
தொடங்கி முடிக்கிறாய்
தெரியவில்லை

பெரியவர் தெரிந்தா செய்கிறார்
வித்தகர் தெரிந்தே செய்வார்
தலைவர் தெரிந்தும் தெரியாமலும் செய்தார்
திருத்தொண்டன் விருப்பு வெறுப்பு
வரக்கூடாது என்றே பார்க்கிறான்
இரட்டைக்கலைஞர்கள் வேறுமாதிரி
அவன் எழுதுவது எப்படியோ
வாழ்வது கவிஞனாக
ஆயில்யன் தற்கொலை
செய்துகொள்ளக் கூடாது

தூக்கத்தைக் கெடுத்துக்
கொண்டிருக்கின்றன
ஏராளமான சிறுதெய்வங்கள்

***

Series Navigation

நம்பிராஜன்.

நம்பிராஜன்.