K.ரவி ஸ்ரீநிவாஸ்
அருந்ததி ராயின் சமீபத்திய நூலை, கட்டுரையைப் படித்தேன்.அவரது கட்டுரைகளை விட ஆழமான, வலுவான சான்றுகள் கொண்ட கட்டுரைகளை ஒருவர் New Left Review, Alternatives போன்றவற்றில் காண முடியும்.அருந்ததியின் நடை உணர்ச்சிகரமானது, அவரது எழுத்துக்கள் ஒரு தளத்தில் நின்றுவிடுகின்றன.இத்தகைய எழுத்துக்களுக்கு தேவை உள்ளது, ஆனால் அதைத் தாண்டிச்சென்று படிக்கவேண்டியதன் தேவையை மறுக்க முடியாது. ஒரே சமயத்தில் உலகமயமாதல்,ஹிந்த்துவா,அமெரிக்க ஏகாதிபத்தியம் என பலவற்றை கடுமையாக விமர்சிப்பதுடன் தென்னாப்பிரிக்க அரசின் கொள்கைகளையும் அவர் விமர்சிக்கும் போது அறச்சீற்றம் அவர் எழுத்துக்களில் வெளிப்படுகிறது.இது அவரது எழுத்துக்களுக்கு வலுச்சேர்க்கிறது, வெறும் அமெரிக்க எதிர்ப்பாக மட்டும் அது இல்லை.அவரது சொற்களும், செயல்களும் ஒன்றிற்கு மற்றொன்று வலுச்சேர்பதாக உள்ளன. ஒரு நாவல் எழுதிய பின் அந்த நாவல் தந்த புகழினை வைத்து அவர் பொது விஷயங்களில் காட்டிய அக்கறைக்கு பதிலாக இன்னொரு நாவல் எழுதி பணம் சம்பாதிருக்கமுடியும்.அவர் கடந்த ஆண்டு பெற்ற ஒரு பரிசுத்தொகையை இந்தியாவில் உள்ள 50 அமைப்புகள்/குழுக்களுக்கு கொடுத்துவிட்டார்.நீதிமன்ற அவமதிப்பிற்காக சிறை செல்வது,நர்மதைப் போராட்டத்தில் ஈடுபடுவது என பலவழிகளில் அவர் தன் நிலைப்பாட்டினை தெளிவாக்கியிருக்கிறார்.
இவைக் காரணமாகவே அவர் பரவலான மதிப்பினையும், கவனத்தையும் பெற்றுள்ளார். இந்த மதிப்பினையும், கவனத்தையும் அவர் எதற்காக பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை வைத்தே அவரை நாம் மதிப்பிட முடியும். ஒரு இடதுசாரி கண்ணோட்டம் அவர் எழுத்துகளில் தெளிவாக உள்ளது, இந்த விதத்தில் அவர் சோம்ஸ்கியின் நிலைப்பாடுகளுக்கு மிக அருகில் இருக்கிறார். எனவே சோம்ஸ்கியின் நூலிற்கு அவர் முன்னுரை எழுதுவதில் வியப்படைய ஒன்றுமில்லை.
அவரது எழுத்துகள் ஒரு வகையில் பெரியார்,காந்தியின் எழுத்துக்கள் போன்றவை.அவற்றை டாம் பெய்னின் எழுத்துக்கள் போன்றவை எனவும் கூறப்பட்டுள்ளது.இத்தகைய எழுத்துக்கள் இன்று தேவை.அதற்கு ஒரு முக்கிய காரணம் , பல்கலைகழக பேராசிரியர்கள்,அறிவுஜீவிகளின் எழுத்துக்கள் பல கடினமான நடையில் இருப்பதுடன், அவை சாதாரண வாசகரின் தேவைகளை கணக்கில் கொள்வதில்லை.பூக்கோவின் எழுத்துக்கள் குறித்து சோம்ஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளது இங்கு நினைவுகூறத்தக்கது.
ஹிந்த் ஸ்வராஜ், பெண் ஏன் அடிமையானாள் போன்றவை இன்றும் படிக்கப்பட்டு விவாதிக்கப்படுவது போல் அருந்ததியின் எழுத்துக்களும் விவாதிக்கப்படும்.
சராய் என்றால் ஹிந்தியில் முற்றம் என்று ஒரு பொருள்.தில்லியில் உள்ள சராய் என்ற அமைப்பு நகர்ப்புற கலாச்சாரம், திரைப்படம்-வீடியோ, இந்திய மொழிகளில் கணிணி, லினக்ஸ் மற்றும் open source software, cyberculture எனப் பலதுறைகளில் செயல்பட்டுவருகிறது. தொடர்ந்து திரைப்படங்கள்,குறும்படங்களை திரையிடுவதுடன், உரை-விவாதம் போன்றவற்றையும் சாத்தியமாக்குகிறது. சமீபத்தில் லாரா முல்வி என்ற திரைப்பட ஆய்வாளரின் உரைக்கும் ஏற்பாடு செய்திருந்தது.ஆய்வுகளுக்கு நிதி உதவி அளிக்கிறது. ரவி வாசுதேவன்,ரவி சுந்தரம் உட்பட பலர் இதில் தொடர்புடையவர்கள். இது வரை மூன்று தொகுப்பு நூல்களை சராய் ரீடர் என்ற பெயரில் வெளியிட்டுவுள்ளது. சராய் அமைப்பில் உள்ள பலரை நான் சந்த்தித்து உரையாடியுள்ளேன்.இந்தியாவில் குறிப்பிடதக்க ஒரு அமைப்பு, ஒரு முன்னோடி என்று கூடச்சொல்லலாம். சராய் பலதுறைகளில் அக்கறைக்காட்டுவதுடன், பல இணையவிவாதகுழுக்களுக்கும் அடிகோலியுள்ளது.
www.sarai.net
செப்டம்பர் 11 – இது இரண்டு கட்டிடங்கள் இடிக்க்ப்பட்ட நாள், பாரதி நினைவு தினம் மட்டுமல்ல. 1973ல் சிலியில் ராணுவப்புரட்சி மூலம் அலெண்டே அரசு வீழ்த்தப்பட்ட நாள்.பினோசே அரசு சிலியில் அதன் பின் செய்தவைகளை அனைவரும் அறிவர்.அலெண்டே, நெருடாவையும், ராணுவ ஆட்சியினால் உயிரிழந்தோர், பாதிக்கப்ப்ட்டோரையும் இன்று நினைவு கூர்வோம்.
Cry Out Poets Protest the War(1) என்ற தொகுப்பு நூல் ஈராக் போரை மையமாக கொண்டு வெளியிடப்பட்டிருந்தாலும் அதில் வால்ட் விட்மன், எமிலி டிச்கின்சன்,நெருடா, லாங்க்ஸ்டன் ஹுக்ஸ் கவிதைகளும் இடம் பெற்றுள்ளதால் அது போர்களுக்கெதிரான கவிதைகளின் தொகுப்பாக உள்ளது.
கவிதை மூலம் எதிர்ப்பினைத் தெரிவிப்போர் தங்கள் முன்னோடிகளாக விட்மனையும், நெருடாவையும் குறிப்பிடுவதில் வியப்பில்லை.
WOMEN ON WAR AN INTERNATIONAL ANTHOLOGY OF WRITING FROM ANTIQUITY TO THE PRESENT(2) -இதன் இரண்டாம் பதிப்பு 2003 ல்
வெளியாகியுள்ளது.கிட்டதட்ட கி.மு 2300 ல் எழுதப்பட்ட Enhedunna என்ற சுமேரிய கவிதாயினியின் கவிதை முதல் 2002 வரை பெண்களால் எழுதப்பட்டுள்ள கவிதை,கட்டுரை,புனைவுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இது. Cassandra ‘s Daughters என்ற ஒரு சிறப்பான அறிமுகக கட்டுரையும் உண்டு.குறிப்பிடத்தக்க தொகுப்பு. அடுத்த வாரக் குறிப்பில் இது பற்றி விரிவாக
(1) George Braziller,Publisher New York in colloboration with Northshire Bookstore-2003
(2)(Edited and With An Introduction by) Daniela Gioseffi-Feminist Press at City University of Newyork-2003
***
ravisrinivas@rediffmail.com
- அச்சமும் அருவருப்பும் – மலர்மன்னனின் ‘அற்பஜீவிகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 76)
- கணியழகே!
- புலிநகக் கொன்றை.
- நிச்சயமாய் …… நித்தியமாய் …….
- மொழி
- விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி
- விண்கோள் வெள்ளியைச் சுற்றிய மாஜெல்லன் விண்வெளிக் கப்பல் [Magellan Spaceship that Orbited Venus [1989-1996]
- திறனாய்வு, எழுத்தாளர், எழுத்து, மெளனி.
- நியூயார்க் நகரில் இந்திய இலக்கிய மாநாடு
- தமிழே ! தமிழே !
- உதவும் கரங்கள் நிதி திரட்டும் நிகழ்ச்சி
- தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்கள்
- அவளும் மல்லிகையும்…..
- இரண்டு கவிதைகள்
- மகா கவி
- நினைவெல்லாம் பாரதியே
- பாரதி – புதுநெறி காட்டிய புலவன்
- ஞாபகங்கள்
- கண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ்
- மண் பயனுற வேண்டும்
- ‘H1 மாமி ‘
- துபாயில் எழுத்தாளினி மீனா நவநீதகிருஷ்ணன்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து மூன்று
- விடியும்! நாவல் – (13)
- கடிதங்கள்
- மழைநீர் சேகரிப்பு, உயிர்ப்பலித் தடுப்பு சட்டங்கள் யாருக்காக ?
- வாரபலன் (செப்டம்பர் 4, 2003 – இங்கிலீஷ்கார திருடன், வாத்தியார் தினம், வியத்நாம் மிளகு இதர)
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 1 (நெடுங்கதை)
- நிஜ நாடக இயக்கத்தின் கலகக்காரர் தோழர் பெரியார்
- குறிப்புகள் சில-செப்டம்பர் 11 2003- அருந்ததி ராய்-சராய்-செப்டம்பர் 11-இரண்டு நூல்கள்
- குமரிஉலா 2
- இந்த வாரம் இப்படி : செப்டம்பர் 11, 2003 (ஆங்கிலம் என்ற விலங்கு, ஏரியல் ஷரோனும் இடதுசாரிகளும்)
- சென்னை
- சொற்கள்
- எனக்கொரு மரணம் வேண்டுமடா…