குயவன் (குறுநாவல்)

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர்.


(அ)

1941 ஆம் வருடம் மலேயாவிற்குச் சோதனை ஆரம்பமான நேரம். ‘புலி வருது புலி வருது’, என்கிற கதையாய் ‘ஜப்பான் காரன் தோ வரான், அதோ வரான்’ என்று எங்கும் ஒரே பரபரப்பு. சில மாதங்களாகவே மக்கள் பொழுது போகவென்றேனும் கூட பல விதமான புரளிகளைக் கிளப்பி விட்டபடியிருந்தனர். தனூடே பயமும் நடுக்கமும் ருக்கவே செய்தது. ஆங்கிலேயர்களும், ‘ஜப்பானியர் வருவது சாத்தியமே ல்லை’, என்ற தொனியில் தங்கள் ஆட்சியை ஜம்பமாய் நடத்திய படி ருந்தனர்.

உயர் மட்டத்தில் உள்ள அரசாங்க அதிகாரிகளுக்கும் மற்றும் ராணுவத்தினருக்கும் வேண்டுமானால் ஜாப்பானியரின் வருகையோ, அதையெண்ணிப் பல்வேறு திட்டங்கள் தீட்டவோ அல்லது சாகசங்களை எதிர் பார்ப்பதோ கூட அதி முக்கியமானதாய் ருந்திருக்கலாம். ஆனால், பொதுமக்களுக்கு யார் ஆண்டாலும், தங்கள் தினசரி வாழ்க்கை செவ்வனே நடந்தாகவேண்டிய நிர்பந்தம் மட்டுமே குறிக்கோளாக ருந்ததில் வியப்பில்லையே! தில் அவற்றைப்பற்றி அறிய அறிவும் அவகாசமும் ஏது ?!

ஜோஹூரில் வாழ்ந்த பல தமிழ் குடும்பங்களில் திரு. ராஜமாணிக்கம் குடும்பமும் ஒன்று. ரப்பர் தோட்டமும், துணி மற்றும் தர வியாபாரமும், வீடுகள் மூன்றுமாய் வளர்ச்சியடைந்திருந்தார் அவர். அவரது குடும்பம்,செல்வம் மற்றும் கல்வியில் குறையில்லாத குடும்பங்களில் ஒன்று என்றே சொல்லலாம். முப்பத்தைந்து வருடத்திற்கு முன்னர் ந்தியாவிலிருந்து தன் சொத்து, நிலம் போன்றவற்றை விற்று, வணிக நோக்கத்தோடு மலேயா வந்தவர் அவர். பல வருடங்கள் பருவமழைகள் தொடர்ந்து பொய்த்ததில் விவசாயத்தில் ருந்த நம்பிக்கையைத் துறந்து அவ்வாறு செய்ய வேண்டிய க்கட்டு அவருக்கு அச்சமயம் ஏற்பட்டது. தமிழ் பண்டிதராய் அமோகமாய் வாழ்ந்த ராஜமாணிக்கம் தன் ளம் மனைவியுடன் ந்தியாவிலிருந்து மலேயாவிற்குக் கப்பலேறி வந்தவர். புகுந்த நாட்டையே தனது சொந்த நாடாகக் கொண்டு வாழப் பழகியிருந்தார்.

எதிர் பார்த்தது தானென்றாலும் கூட, திடாரென்று 1941 ஆம் வருடம் டிசம்பர் திங்கள் ஏழாம் நாள், ஜப்பானிய விமானப்படை மலேயாவின் பெரும் பகுதியில் குண்டு வீசிய போது ஆங்கிலேயர்களே கூட ஆடித்தான் போய் விட்டனர். வடக்குப்பகுதி முதலில் பெரிதும் தாக்கப்பட்டது. ஜப்பானியப்படை மலேயாவை ஆக்கிரமித்ததோடல்லாமல் அமெரிக்க விமானங்களையெல்லாம் தகர்த்து தூள்தூளாக்கியது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிதென்று சும்மாவா சொன்னார்கள்! மக்களின் வாழ்வில் துன்பப்புயல் வீசத் தொடங்கியது.

யார் நினைத்திருப்பார் அன்று ஜப்பானியரின் ஆக்கிரமிப்பு நடக்குமென்று. என்றும் போல அன்றும், ஆதவனின் தயவால் விடியற்காலை அழகாய்த்தானே பூத்திருந்தது. ஆனால், ப்போது நாடே அமர்க்களப்பட்டுக்கொண்டிருந்தது. குறிப்பாக பினாங்கு மாநிலத்தில் மக்கள் அடைந்த பீதிக்கு அளவே ல்லை. உயிர் உடல் சேதம் பற்றிய தகவல்கள் அங்கிருந்து வந்த வண்ணம் ருந்தன.

தமிழ் பற்று சிறிதும் குறையாமல் ஆசாரமும் அமைதியுமாய் வாழ்ந்த திரு ராஜமாணிக்கத்தின் ஒரே செல்வ மகன் பிறந்ததே மலேயாவில் தான். உயரமும் அதற்கேற்ற பருமனுமாய், அடர்ந்த மீசையுடன் கம்பீரமாய் திரைப்பட நடிகர் எஸ் வீ ரங்காராவை நினைவு படுத்துவார். நிறம் மட்டும் மிகவும் குறைவு. ஏன் கருப்பு என்றே சொல்லலாம்.

ஆனால் கணபதி தன் தாயைப்போல மாநிறத்துடன், அதிக உயரமும் ல்லாமல் குள்ளத்திலும் சேராமல் அளவான உயரமாய் ருப்பான்.மகனுக்குத் தமிழில் தந்தையளவு புலமை ல்லையென்றாலும், பற்று நிறையவே உண்டு. ஆனால் மொழியில் அவனுக்கிருந்த ஆர்வம் மதம் சார்ந்தவற்றில் அப்போது ருந்ததில்லை.

மகனின் சில நடவடிக்கைகள் காரணமாய் சிற்சில சமயங்களில் வாக்கு வாதங்கள் ருவரிடையேயும் வருவதுண்டு. ஆங்கிலேயரை எதிர்க்கும் யக்கங்களில் முழு மூச்சாய் ஈடு பட்டிருந்த ந்திய ளைஞர்களுள் கணபதியும் ஒருவன். தன் காரணமாய் அவனால் ஒரே டத்தில் வேலையில் ருக்க முடிந்ததில்லை. து தகப்பனை அதிகம் பாதித்தது என்பதையே அறியாதவன் போல தன் போக்கில் ருந்தான் கணபதி. அத்தகைய அரசியல் ஈடுபாடு நமக்குத் தேவையில்லை என்று அவரும் ஆயிரம் முறை சொல்லி அலுத்து விட்டார். தந்தையும் மகனும் பேசிக்கொள்வதே குறைந்து விட்டது.

மெள்ள மெள்ள ஜோஹூரைக் கைப்பற்ற மேலும் ருபதே நாட்கள் எடுத்தனர், ஜப்பானியர். நாட்டின் வடபகுதியில் நடந்த எல்லாச் சம்பவங்களும் ஜோஹூரை வந்தடைந்ததால், அங்கும் மக்களிடையே அச்சம் குடி கொண்டது.ராஜமாணிக்கம் குடும்பத்தினரையும் அவ்வச்சம் விட்டுவைக்கவில்லை.

கால் கட்டுப் போட்டால் குடும்பத்தில் தன் கவனத்தைத் திருப்புவான் என்ற நம்பிக்கையில் ஏழு வருடத்திற்கு முன் கணபதிக்கு திருமணத்தையும் முடித்து வைத்தார். வரிசையாக மூன்று மகன்களைப் பெற்றெடுத்தானே தவிர வேறு ஒரு பலனும் ல்லை. ப்போது நான்காவதாய், மருமகள் சரஸ்வதி நிறை மாத கர்பிணியாயிருந்தாள். ம்முறையேனும் தனக்கு ஒரு பேர்த்தி பிறக்க வேண்டுமென்று பெரியவருக்குக் கழுத்துவரை ஆசை.

‘உத்யோகம் புருஷ லட்சணம்’ என்று அறிந்திருந்த கணபதியும் ஏதோ ஒரு வேலைக்குக் ‘கடனே’ என்று போனபடியே ருந்தான். குடும்பம் அவன் வருவாயை நம்பியிருக்கவில்லை. பெரியவர் மருமகள், பேரப்பிள்ளைகளை சீரும் சிறப்புமாகவே பார்த்துக்கொண்டார்.

வேலை நேரம் போக மீதி நேரத்தில் நண்பர்களுடன் பேசுவது, தான் நடத்தும் ரகசிய தமிழ் பத்திரிக்கையைத் தயாரிப்பது, அச்சடிப்பது போன்றவற்றைச் செய்தான். கணபதிக்கு அந்நடவடிக்கைகள் தவறாகவே தெரியவில்லை. தான் ஒரு யதார்த்தவாதியாகவும் நியாயத்திற்குக் குரல் கொடுக்கும் ஒரு பிரஜையாகவுமே தன்னைத் தானே நினைத்துக் கொண்டான்;செயல் பட்டான். குடும்பத்தில் பெரிய அக்கறை என்றில்லாவிட்டாலும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் கூடியபடியே ருந்தது.

தோ, ப்போது கூட மனைவியின் பிரசவ நேரமென்றும் பாராது, தன் உயிர் நண்பன் அலோங்கைக் காண பினாங்கு சென்றிருந்தான். அங்குள்ள நிலவரத்தை எண்ணி வீட்டில் சரஸ்வதியும் பெரியவரும் பெரிதும் பயந்தனர். மகன் பத்திரமாய் வீடு திரும்பவேண்டும் என்று கவலை. ஆயிரம் கருத்து வேறுபாடானாலும் அவருக்கு அவன் ஒரே பிள்ளையாயிற்றே! மனைவியைப் பறிகொடுத்த பின் அவருக்கு ருக்கும் ஒரே பிடிப்பாய் ருந்தவனாயிற்றே! மகனின் வருகையையே எண்ணியவாறிருந்தார் பெரியவர். வாய் தன் போக்கில் ‘கந்தர் சஷ்டி’யில் லயித்திருந்தது.

(ஆ)

“மாமா எனக்கு நோவு கண்டுடிச்சின்னு தான் நெனைக்கிறேன். மருத்துவச்சியும் ஊருல ல்லாத நேரம். தெருக்கோடியில ஒரு மலாய் மருத்துவச்சி ருப்பால்ல மாமா, அவளையாவது கூப்பிட்டனுப்புங்களேன். ரொம்ப நேரம் தாங்க முடியும்னு தோணல.. .. .ம்,ஐயோ அம்மா”, என்று முக்கியும் முனகியும் சொல்ல வந்ததை மிகவும் சிரமப்பட்டுச் சொல்லிவிட்டு அறையினுள் சென்று விடுகிறாள், சரஸ்வதி.

“ஏம்மா, கணபதி எப்போம்மா வருவான் ? பினாங்குக்குப் போறேன் ஒரு வாரமாகும்னு ரத்தினச் சுருக்கமா சுவத்தப்பார்த்து சொல்லிட்டு, விருட்டுன்னு போனானே தவிர, வேற விவரம் ஒண்ணும் சொல்லயே. உங்கிட்ட ஏதும் சொன்னானா ? ஒரு வாரம் முடிஞ்சி மூணு நாளுமாயிடிச்சி. ன்னும் வனக் காணம்.” கவலையினூடே மருமகளைக் கேட்கிறார், ராஜமாணிக்கம்.

“ அவரோட நண்பர் அலோங்கை பார்க்கதான் மாமா போயிருக்காரு. சாதாரணமாவே ரெண்டு பேரும் சேர்ந்தா மணிக் கணிக்கா பேசுவாங்க. ப்போ ஒரு வருஷக்கதையையும் பேசணுமே, அதான் ன்னும் காணோம். அவருக்கு விடுப்பென்னவோ ஒரு வாரம் தான். ந்த மூணு நாளைக்கும் சம்பளம் ருக்காதுன்னு தான் நினைக்கிறேன். அலோங்கோட சம்சாரத்துக்குக் கூட து தான் மாசம் மாமா. அநேகமா பிரசவம் ஆயிட்டிருக்கும்னு நினைக்கிறேன், ஐயோ, அம்மா,…”, அடுத்த தவணை வலி சாட்டையாய் அடிக்க துடிக்கிறாள் வலியில்.

“ என்னிக்கி என்கிட்ட மொகம் பார்த்து பேசியிருக்கான். நானே ஏதும் கேட்டாலும், சுருக்குன்னு தைக்கிறாப்புல தான் பதில் சொல்லுவான். சரி,.. நீ படுத்துக்கம்மா, மருத்துவச்சிக்கி சொல்லியிருக்கேன், வந்துடுவா. கணபதி ன்னிக்காவது வந்தா பரவாயில்ல. வந்துடுவானா ?” அறை வாசலிலிருந்தே மருமகளிடம் அங்கலாய்க்கிறார்.

“ வந்துடுவார்னு தான் நம்பறேன். ஒண்ணும் தெரியல. வரும்போதே ஆணா பொண்ணான்னு கேட்டுக்கிட்டே தான் வருவாரு. பொண்ணு பொறந்தா ரொம்ப சந்தோசப்படுவாரு. அவருக்கும் பொண்ணு பொறக்கணும்னு கொள்ளை ஆசை தெரியுமா மாமா ?” , வலி மின்னலாய் வெட்ட, பேச்சு வெட்டுப்படுகிறது.

“ ஆமா, அதுக்கொண்ணும் கொறைச்சலே ல்ல. ஆசைக்கென்ன காசா பணமா ? எனக்கும் தான் பேத்தி ஒண்ணு பொறக்கணும்னு ஆசை. அதெல்லாம் நம்ம கையிலயா ருக்கு ? ஆமா , பொண்ணு பொறந்துட்டா மட்டும் வரு, பொறுப்பா பொண்ணாட்டி பிள்ளைகளை கவனிச்சுப்பாராமா ? ஏம்மா நீ வேற, அப்பயும் அவன் தன் போக்குலயே தான் ருப்பான். ஆமா, ப்பிடியே ஏட்டிக்கிப் போட்டியா பேசி தனக்குப் பிடிச்சதையே செய்றானே, என்னோட காலத்துக்கப்புறமா ந்தக் குடும்பத்தோட கதி தான் என்ன ? ந்தப் பிள்ள பொறக்கற வேளையாவது அவனுக்குப் புத்தி வந்தாச்சரி. “

சரஸ்வதிக்கு மாமனாரிடம் பாசம் அதிகம். அதைவிட கணவனிடம் காதலும் அதிகம். ருவரிடையே அகப்பட்டுக் கொண்டு சில வேளைகளில் செய்வதறியாமல் தவிப்பாள். வீட்டிற்கேற்ற மருமகளாய் ருப்பாள் என்று ராஜமாணிக்கம் போட்ட அன்றைய கணக்கு பொய்க்கவில்லை.

தஞ்சையில் அம்மாப்பட்டி என்ற குக்கிராமத்தில் அவரது தூரத்து சொந்தமான பெண் தான் சரஸ்வதி. கணபதிக் கேற்றாற் போல அடக்கம் அமைதியுடன், ஓஹோ என்ற அழகில்லாவிட்டாலும் ஓரளவு லட்சணமாய் ருந்ததால் பெரியவருக்குப் பிடித்திருந்தது. சரஸ்வதியின் பெற்றோர் லகுவில் சம்மதிக்கவில்லை. பெண்ணை வெகு தூரத்தில் ருக்கும் மலேயாவிற்கு அனுப்ப அவர்களுக்குத் துளியும் மனமில்லை. பல முறை ஆள் அனுப்பிப் பேசிப் பார்த்துத் தான் பெரியவர் கல்யாணத்தை முடித்தார். ன்னும் பல டங்களில் ருந்து பெண்களைப் பெற்றோர் வந்தனரென்றாலும் அவருக்கு சரஸ்வதியை மிகவும் பிடித்து விட்டதால், சொத்திற்கு ஆசைப்பட்ட மற்றவர்களை நாசூக்காக ஒதுக்கி வைத்தார்.

மருத்துவச்சி வந்து விட, சரஸ்வதிக்கு பிரசவவேதனை அதிகரித்து சகப்பிரசவமும் ஆகிவிடுகிறது. பெரியவர் வாய் மட்டும்

‘எந்தா யும் எனக் கருள்தந் தையுநீ

சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்

கந்தா கதிர்வே லவனே உமையாள்

மைந்தா குமரா மறைநா யகனே!’

கந்தரநுபூதியை முணுமுணுத்தபடியேயிருந்தது. அவர் மனம் போல பேர்த்தியே பிறந்து விடுகிறாள். தன் நாட்குறிப்பை எடுத்து அவசர அவசரமாக மணி, நிமிடம், நொடியோடு, தேதி 2, மார்கழி , 1941 என்று குறித்து வைக்கிறார். பழமையில் ஊறியவரான அவருக்கு ஜாதகம், பிறந்த நேரம் போன்றவற்றில் அபார நம்பிக்கை. கணபதிக்கு திலெல்லாம் கடுகளவும் நம்பிக்கை கிடையாது.

ராஜமாணிக்கத்திற்கு ஒரே மன நிறைவு அவருடைய பேரன் ஆறுமுகம் அவரிடம் தேவாரம், திருபுகழ்,திருவாசகம் போன்றவற்றைக் கற்றுவருவது தான். ஆறுமுகம் தவிர சண்முகமும் முருகனும் கூடிய சீக்கிரமே கற்க ஆரம்பிப்பர் என்றும் அவர் மனம் நம்பியது. கணபதிக்கு தமிழில் ருந்த ஆர்வம் சமயத்தில் ருந்ததில்லையே. அதனால், அவற்றையும் அவன் மொழிக் கண்ணோட்டத்தோடு மட்டுமே பார்த்தான்.

“கணபதி எங்கயிருக்கானோ, பினாங்குப் பக்கமெல்லாம் ஒரே கலவரம்னு வேற பேசிக்கிறாங்க. நேரத்துக்கு வீட்டுல ல்லாமப் போயிடறதே வனுக்கு வழக்கமாயிடிச்சி. பொம்பளப்பிள்ள வேற பொறந்திருக்கு. முருகா, பழனியப்பா, வன் நல்லபடியா வீடு வந்து சேரணும்”, உரக்கவே புலம்புகிறார். பேர்த்திக்கு ‘காமாட்சி’ என்று பெயரும் சூட்டுகிறார்.

மருத்துவச்சி பச்சிளங்குழந்தையை அவரிடம் கொண்டு வந்து காட்டுகிறாள். வாயெல்லாம் பல்லாகப் பூரிக்கிறார் பெரியவர். மகிழ்ச்சியில் வாய் குழறுகிறது. செய்வதறியாமல் ‘சாயாங் ,சாயாங்’ என்றபடியே தன் கை விரல் மோதிரத்தைக் கழற்றி கிழவி கையில் கொடுக்கிறார்.’தெரிமா காசி, தெரிமா காசி’ என்றபடியே, புதையலைக் கண்ட பொலிவுடன் வீடு திரும்புகிறாள், மருத்துவச்சி.

மகள் பிறந்த விஷயமே தெரியாமல் மேலும் ரண்டு வாரம் சென்றதும் தான் கணபதி வீடு திரும்புகிறான். திரும்பியவன் உடன் பெரும் குழப்பத்தையும் சேர்த்துக் கொண்டு வருகிறான். கையில் ஒரு சீனப் பெண் குழந்தை ! அதுவும் பிறந்து ஓன்றரை மாதமே ஆன சின்னக்குழந்தை !

()

ஒழுங்கே ல்லாமல் கலைந்து வழிந்த கற்றை முடியும், நீரைக் கண்டு பல நாட்களான உடையும், முகம் முழுவதும் முட்களாய், காலணியில்லாத கால்களுமாய் கணபதி அடையாளமே தெரியாதபடி ருந்தான். தேங்கியிருந்த சோகத்தையும் மீறி அவன் முகத்தில் கோரப்பசி தெரிந்தது. அவன் உணவு உண்டு நாட்களாகியிருந்தன.

முதலில் சரஸ்வதி அவனுக்கு உண்ணச் சோறு தான் கொடுத்தாள். அவனால் அதை மென்று விழுங்கவும் முடியவில்லை. அதைப் பார்த்ததும், பத்தே நிமிடங்களில் குருணைக் கஞ்சி செய்து குடிக்கக் கொடுத்தாள். குடித்ததும் தான் அவனுக்குப் பேசவே முடிந்தது. அவன் மடியில் அந்தக் குழந்தை அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது.

தந்தையும் மனைவியும் மாறி மாறிக் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல், பிரமை பிடித்தது போல டிந்து போய் உட்கார்ந்திருக்கிறான். கையில் ருந்த குழவியோ விழித்துக் கொண்டு பசியில் வீல் வீல் என்றலறுகிறது. அதைக் கேட்டு உள்ளே உறங்கிக் கொண்டிருந்த காமாட்சியும் சேர்ந்து அழுகிறாள். ரெட்டை நாயனம் தோற்றது! சரஸ்வதி குழந்தையைக் கையில் வாங்கி அதற்குப் புட்டியில் ருந்த பாலைப் புகட்டுகிறாள்.

மெள்ள மெள்ள சுதாரித்துக்கொண்டபின், “அப்பா, சரஸ்வதி, து என்னோட உயிர் நண்பன், அலோங்கோட,..க்ஹ்ம்,..”, துக்கத்தை அடக்கமுடியாததால், சொற்கள் வெளிவராமல் திணறுகிறான். ராஜமாணிக்கத்திற்கு மகனின் நிலை புரியவே, “கணபதி, நிறுத்தி நிதானமாச் சொல்லுப்பா. சரஸ்வதி, வனுக்கு ஒரு தம்ளர்ல குடிக்க தண்ணீ கொண்டு வாம்மா”, மகனை ஆசுவாப்படுத்துகிறார்.

ஒரு மடக்குத் தண்ணீரைக் குடித்தவன் மிடறியவாறே தொடர்கிறான்.

“அலோங்கோட மகளப்பா து. ஐயோ என்னன்னு சொல்லுவேன். அவன ஜப்பானியர் அரக்கத்தனமாக் கொன்னுட்டாங்கப்பா. அவனோட அழகான மனைவியே அவனுக்கு எமனா வாச்சிட்டா. அப்பாவியான அவனை அநியாயமாக் கொன்னுட்டாங்கப்பா. என் நண்பனை நா ழந்துட்டேனேப்பா. அந்தப் பெண்ணையும் தூக்கிட்டுப் போயிட்டாங்கப்பா. பிரசவம் முடிஞ்சு ஒரு மாசம் கூட ஆகாத உடம்புப்பா. கைக் கொழந்தையையும் ஏதும் செய்யாம விட்டாங்களே. சீனர்களக் கண்டா ந்த ஜப்பாயினனுக்கு ஏன் தான் வ்வளவு வெறுப்போ தெரியல. எத்தனை ஆவலாய் என் நண்பனோட ருக்கும் அந்த நந்நாளை எதிர் பார்த்து ங்கிருந்து புறப்பட்டுப் போனேன் ? நான் கடைக்கிப் போயிட்டு நாளிதழ் வாங்கிட்டு வரதுக்குள்ள என்னென்னவோ நடந்து போச்சுப்பா. “

“அந்தப் பெண்ணைப் பத்தின விவரம் ஏதும் தெரிஞ்சுதாங்க ?”, சரஸ்வதி சோகத்தினூடே பரிதாபமாய் பதற்றத்துடன் கேட்டதும்,

“ ஐயோ அவளக் கசக்கிக் கொன்னுட்டானுங்களே. நேத்தைக்கித் தான் கேள்விப் பட்டேன். அந்தப்பெண்ணோட சினேகிதி அழுதுக்கிட்டே வந்து சொல்லிச்சு. அலோங் சாகும் போது ந்த கொழந்தைய கொடுத்து காப்பாத்தச் சொல்லிட்டு என் கண்ணு முன்னாலேயே செத்துட்டாம்மா. கொழந்தைக்கி அம்மாவாவது உயிரோட கெடைப்பான்னு நெனச்சேன். அவகிட்ட பிள்ளையக் கொடுக்கத் தான் நான் காத்திருந்தேன். அவளும் செத்துட்டாம்மா. ந்தப் பிஞ்சு ப்போ யாருமில்லாத அனாதையாயிடிச்சி. என்ன செய்யிறதுன்னே தெரியாம ஒரு புட்டி பாலோட தையும் தூக்கிக் கிட்டு எப்படியோ வீடு வந்து சேந்துட்டேன்.”

“அதெல்லாம் சரிடா, ப்ப உனக்கே ஒரு பொண்ணு பொறந்திருக்கு. அதைப் பத்திக் கூட தெரிஞ்சுக்காம ரெண்டு வாரத்துக்கப் புறமா வந்திருக்க. ப்ப த்தனச் சின்னக் கொழந்தைய என்னடா செய்யப்போற ?” கோபமாயும் யதார்த்தமாயும் தகப்பன் கேட்டதும்,“ என்னப்பா கேள்வி து ? வளர்க்கத்தாம்ப்பா போறேன். னிமே துக்கும் வேற யாரிருக்கா ? ஒரு சொந்தமும் ல்லையே. என்னோட சொந்த மகளாவே வளர்க்கப்போறேன்”, மகன் தீர்மானமாயும் உணர்ச்சியுடனும் சொல்கிறான்.

சரஸ்வதியின் முகத்தில், ‘சரி, னிமேல் அப்பாவுக்கும் பிள்ளைக்கும் வாக்குவாதத்திற்கு வலுவான ஒரு விஷயம் கிடைத்து விட்டது’, என்ற ஊகம் அப்பட்டமாய்த்தெரிந்தது.

“ டேய் கணபதி, ஏதாவது நடக்கறதா பேசுடா. ஒரு சீனக் கொழந்தைய எப்படிடா வளர்க்க ? ங்க என்ன பிள்ளையில்லாத கொறையா என்ன ? ஏம்மா சரஸ்வதி, ஒம்புருஷனுக்கு நீயாவது எடுத்துச் சொல்லேன். வன் எடுக்கற முடிவெல்லாம் ஏதாவது கொழப்பத்தையே தான் கொண்டு வருது”, கோபமாகவே பேசுகிறார்.

“ஏங்க, மாமா சொல்றதையும் கொஞ்சம் கேளுங்களேன். ப்போதைக்கு ரெண்டு நாள் யோசிப்போம். யோசிச்சி முடிவெடுப்போம். ம்,..யாரும் பிள்ளையே பிறக்காத சீனத் தம்பதிகள் கிடைக்காமயா போவாங்க ?” சரஸ்வதி ருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சியில் றங்குகிறாள்.

“ என்ன சரஸ்வதி நீயும் ஒரு தாய் தானே, உன்னோட பொண்ணுக்கு ந்த நிலை வந்தா எப்பிடியிருக்கும் ? யோசிச்சுப்பாரு. என்னோட உயிர் நண்பன் அலோங். உனக்குத்தெரியாது ?,..ம் அவனோட மகளுக்கு னிமே அம்மாவும் அப்பாவும் நீயும் நானும் தான். பச்சமண்ணு, சரஸ்வதி , த அனாதையாக்க மனசு வருதா,ம் .. சொல்லு ? நம்ம மகளவிட ஒரு மாசமோ என்னவோ தானே பெரிசு. ங்க பாரு, நமக்கு ரெட்டப்பிள்ளைங்க பொறந்ததா நெனச்சி வளர்த்துடுவோம், சரியா ?து தான் என்னோட முடிவு. தப்பத்தி னிமே யாரும் பேசவே வேண்டாம் தெரிஞ்சுதா ?” மனைவியிடம் பேசுவது போல தந்தைக்கு எச்சரிக்கை விடுகிறான்.

ராஜமாணிக்கமும் விடுவதாய் ல்லை. குட்டி பதினாறடி பாய்ந்தால், தாய் எட்டடி கூடவா பாயாது! ? “ நீ முடிவெடுத்தா சரியாப்போச்சாடா ? சரி, நீ விருப்பப்பட்ட மாதிரியே ந்த ஊரான் பெத்த பிள்ளையையும் என் பேர்த்தியாவே ஏத்துக்கறேண்டா. நீ மட்டும் எனக்கு ஒரு வாக்குறுதி கொடுத்தா.” சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் மகனை மடக்குகிறார் பெரியவர்.

மகனும் மருமகளும் ‘என்ன ?’ என்பதுபோல் அவர் முகத்தைப்பார்க்க, “ நீ ன்னியிலேர்ந்து, ஏன் ந்த நிமிஷத்துலேயிருந்து,ந்த பத்திரிக்கை, அரசியல், யக்கம் புரட்சி, புடலங்கா எல்லாதையும் விட்டொழிக்கணும். செய்யறதா எனக்குச் சத்தியம் பண்ணிக்குடுடா. அப்ப நானும் உன்னோட முடிவ ஏத்துக்கறேண்டா. உனக்கும் குடும்பம் பெரிசாயிட்டிருக்கு தெரியுமா ? எப்பதான் உனக்குப் பொறுப்பு வரது ? நான் சொல்றதுக்கு நீ ஒத்துக்கிட்டா, தையும் வளர்ப்போம், ல்லன்னா ல்ல, தெரியுதா ?” என்று முடிக்கிறார்.

அவர் பேச்சில் மட்டுமில்லாது, முகத்திலும் என்றுமே ல்லாத கண்டிப்பு ருந்ததை உணர்ந்த கணபதி தரையையே வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தான். பெரியவர் அதைச் சிறிதும் பொருட்படுத்தாது டத்தை விட்டு அகன்றார். உடனே கையை நீட்டிச் சத்தியம் செய்வான் மகன் என்று அவர் நிச்சயமாய் நம்பவில்லை. அவன் பிடிவாதம் அவருக்குத் தான்அத்துப்படியாயிற்றே. கணபதிக்கு அச்சமயம் அவருடைய வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாகவும், கோபத்தில் வெடித்தவையாகவுமே ருந்தன.

(ஈ)

கணபதியின் நினைவெல்லாம் அவனுடைய நண்பன் அலோங்கைச் சுற்றியபடி ருந்தது. நட்புக்கு ஒரு லக்கணமாகவே அல்லவோ சிறுவயது முதல் பழகியிருந்தனர்! பெரியவரும் எல்லாவற்றையும் தெரிந்து தான் வைத்திருந்தார். ருப்பினும், நடைமுறையைத் தான் அவர் பேச வேண்டியிருந்தது. குழந்தையால் நாளைக்கு வேறு ஏதும் பிரச்சனை கூட முளைக்கலாம் என்று அவர் நினைத்தார். அதையெல்லாம் தவிர்க்கவே அவர் அவ்வாறு பேசினார்.

வட்டாரத்திலேயே அவர்களின் நட்பு மிகப் பிரபலம். வெவ்வேறு னத்தவர் நகமும் சதையுமாகப் பழகியது, காண்பவர் கவனத்தை ஈர்க்கும் படியிருக்கும். பொறாமைக் கண்கள் சிலவும் அதில் ருக்கவே செய்தன. சைக்கிள், சீருடை, புத்தகம், காலணி என்று எல்லாவற்றையும் பேதம் பாராமல் கணபதி அலோங்கிற்குக் கொடுப்பான். அலோங் பெற்றோரில்லாமல் ஏழை உறவினரிடம் வாழ்ந்து வந்தான். எல்லாச் சுகதுக்கங்களையும் பகிர்ந்து, ‘சண்டை’ என்ற சொல்லே அறியாது நட்பு கொண்டார்கள். அலோங்கிற்குப் பள்ளிப் புத்தகங்கள் வாங்க முடியாத பல நேரங்களில் தன் தந்தையிடம் சொல்லி ருவருக்கும் சேர்த்தே வாங்கியிருக்கிறான் கணபதி. பலருடன் பழகி மகிழ்ந்து, விலகி ருக்கிறான். ன்னும் சிலரிமோ பழகி, பின் வருந்தியும் விலகியிருக்கிறான். பிரதிபலன் பாராத அத்தகைய நெருக்கமான நட்பு வேறு எப்போதுமே எவரிடமும் கணபதிக்கு ஏற்பட்டதே ல்லை.

படிப்பு முடிந்து ருவருக்கும் வேலையும் ஒரே டத்தில் அமைந்த போது ருவருக்குமே சொல்லொணாத மகிழ்ச்சி ஏற்பட்டது. கணபதிக்கு சீக்கிரமே திருமணம்; ருப்பினும் திருமணம் நட்புக்குத் தடையாக ஒரு நாளும் ருந்ததில்லை. நட்பெனும் ஆழியில் அன்பெனும் படகேறிச் சென்ற அவர்கள் வாழ்வு நிலையானதாய் ருக்குமென்று தான் நம்பினார்கள். ஆனால் அலோங்கிற்கு பினாங்கில் நல்ல வேலை கிடைத்து போகும் படியாயிருக்கும் என்று ருவருமே எண்ணவில்லை. சமீபமாய் ந்த ஒரு வருடப்பிரிவைத் தவிர ருவரும் ஒரே ஊரில் தான் ருந்து வந்திருக்கின்றனர். ஒரு வருடமே ருவருக்கும் ஓராயிரம் வருடங்களாய் ருந்தது.

நண்பனைப் பிரிந்த துயரம் வாட்ட வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே யந்திரகதியில் அடைந்து கிடந்தான் கணபதி. நண்பர்களும் யக்கக் கூட்டாளிகளும் மட்டும் அவனைச் சும்மா ருக்கவிடவில்லை. அவர்கள் வருவதும் போவதுமாய் ருந்தனர். தையெல்லாம் கவனித்தும் கவனிக்காததுமாக ருந்த ராஜமாணிக்கம் மட்டும் , ‘ந்தப்பய மட்டும் வீட்டை விட்டு வெளிய றங்கட்டும், அப்பப் பேசிக்கலாம்’, என்றண்ணியபடியே கவனித்துக் கொண்டு ருந்தார்.

தே நேரத்தில் ஜப்பானியனுக்கு ஜோஹூரையும் சிங்கையையும் ணைக்கும் பாலத்தைத் தகர்த்து விட்டால் சிங்கப்பூரைச் சுலபமாய் கைப் பற்றிவிடலாம் என்ற எண்ணம் . ஜப்பானியர் ஜோஹூர் பாலத்தைத் தகர்க்கத் தீட்டியிருந்த திட்டத்திற்கு எதிராக ஒரு திட்டம் தீட்டப்பட்டு வந்தது. தற்கு ஆஸ்திரேலியா, பிரிடிஷ் ஆகிய நாட்டு படைப் பிரிவுகள் கூட்டணி வேறு. தையெல்லாம் பாவம் பெரியவர் அறியவில்லை. அவருக்குத் தன் மகனைத் திருத்தும் முனைப்பே முதன்மையாக ருந்தது. ஆகையால் அவனை மட்டுமே கண்காணித்து வந்தார்.

ஒரு வாரம் சென்றதும், ஒரு நாள் கணபதி சரஸ்வதியிடம் வந்து, “சரஸ்வதி, நான் லெபோ அம்பாங் வரைக்கும் போயிட்டு வரேன். நான் போயே தீரணும். கவலப்படாத. சீக்கிரமே வந்துடுவேன்”, என்று கூறிவிட்டு உடை மாற்ற அறையினுள் சென்றவன், பெரியவரின் வார்த்தைகள் திகைக்க வைத்தன. “சரஸ்வதி, அப்பிடியே அவன் போறப்போ அந்த ‘ஊரான்’ வீட்டு பிள்ளையையும் சேர்த்துத் தூக்கிட்டுப் போகச்சொல்லு. திரும்ப வரும் போது யார் கிட்டயாவது தத்து குடுத்துட்டு வரட்டும்”, என்று சுருக்கமாய் ஆனால் அழுத்தமாகச் சொல்கிறார்.

‘தென்னடா வம்பாகிப்போச்சு, அப்பா தீவிரமான்னா ருக்காரு. மறக்காம நிபந்தனைய ஞாபகப்படுத்தறாரு, ப்ப என்ன செய்யலாம் ?’, என்று தீவிர யோசனையில் ஆழ்கிறான். தற்காலிகமாய், அழைக்க வந்திருந்த கூட்டாளியை தான் பிறகு வருவதாய் சொல்லி அனுப்பி விடுகிறான்.

வீட்டிற்குள் நுழைந்தவன் குழந்தைகளின் அழுகுரல் கேட்டுச் சிலையென நிற்கிறான். தினமும் நடக்கும் நிகழ்ச்சி தானென்றாலும், கணபதி நண்பனுக்குத் துக்கம் அனுஷ்டித்து முடித்து நனவுலகிற்கு வந்த பின் முதன்முதலில் காண்கிறான். ரண்டும் போட்டி போட்டபடி அலறின.

எந்தக் குழந்தையை எடுப்பது, எப்படிச் சமாளிப்பது என்று சற்று குழம்பி பிறகு ஒரே சமயத்தில் கணபதி தன் மகள் காமாட்சியையும், சரஸ்வதி அலோங்கின் மகளையும் கையில் எடுக்கின்றனர். மனைவியின் பரிதாப நிலை, அவள் ரண்டு சிசுக்களை வைத்துக் கொண்டு படும் கஷ்டம் அவன் மனதை உருக்குகிறது.

தில் த்தனை சிரமமாவென்று வியக்கிறான். அப்பா சொல்வதிலும் நியாயம் ருப்பதை உணருகிறான். னிமேல் தான், தன் குடும்பமென்று வாழ்வதே உத்தமம் என்றெண்ணுகிறான். னிமேல் பத்திரிக்கை, யக்கம் எல்லாவற்றிற்கும் முழுக்குப்போட்டு விடுவது என்று மனதில் தீர்மானிக்கிறான். சுலபமில்லை தானென்றாலும், செய்தே ஆகவேண்டும் என்று திட்டவட்டமாய் மனதில் உறுதி எடுக்கிறான். தீமானித்ததை அவன் தன் மனைவியிடமோ ல்லை தந்தையிடமோ சொல்லவில்லை; செயலில் காட்டவே விரும்பினான்.

(உ)

ஆறுமுகம், சண்முகம் மற்றும் முருகனுக்கும் தங்கள் அப்பா என்றுமில்லாத திருநாளாய் அவர்களுடன் கூடி விளையாடுவது ஆச்சரியமாக ருந்தது. மூத்தவன் ஆறுமுகத்திற்காவது ஐந்து வயதாகி விட்டதால் ஏதோ கொஞ்சம் புரிய வழியுண்டு; சந்தேகமும் உடன் ருக்கவே செய்தது. சண்முகமும் முருகனும் மூன்று, ரண்டு வயது பச்சிளம் பாலகர்கள், ஒன்றும் புரியாமல் ஆட்டம் போடுகிறார்கள். ‘நின்னு பிள்ளைங்க கிட்ட ஒரு நாளும் ஒரு வார்த்தையும் பேசாதவரு, ப்ப என்னாயிடிச்சி’, சரஸ்வதிக்கும் கணவனின் மாறுதல் புதிராயும் ஆச்சரியமாகவும் ருக்கிறது. மகனின் மாற்றம் பெரியவருக்கு புரிந்ததுடன் பெருமகிழ்ச்சியைக்கொடுத்தது. அவன் னிமேல் நிச்சயம் குடும்பப் பொறுப்புடன் ருப்பானென்று அவருக்குத் தோன்றியது. அத்தனை நாட்களாய் சோககீதம் பாடி வந்த அவர் உள் மனம் ன்பப்பண் பாடத்தொடங்கியது.

திட்டமிட்டபடி 1942ஆம் வருடம் ஜனவரி மாதம் 31ம் நாள், ஜப்பானியர் சிங்கையைக் கைப்பற்றினர். ஒரே மாதத்தில் சாமர்த்தியமாயும் தந்திரமாயும் எல்லாப் பகுதிகளையும் மளமளவென்று கைப்பற்றினர். ஆங்கிலேயருக்குச் சரணடைவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. ஜப்பானியரின் அராஜகம், அரசாங்கம் என்ற பெயரில் ஆரம்பித்து விட்டிருந்தது.

நாட்டில் அலுவலுகங்கள் சரிவர யங்கவில்லை. கணபதியின் நிறுவனம் முற்றிலும் அழிந்து போனது. கணபதி மட்டுமில்லாமல் பல்லாயிரக் கணக்கானோர் வேலை ழந்திருந்தனர். தாவது பரவாயில்லை, உறுப்பை, உற்றாரை உயிர் பலிகொடுத்தோரின் நிலை பரிதாபமாயிருந்தது. பலர் பட்டினியில் வாடினர். மனிதாபிமானம் என்றால் வீசை என்ன விலையென்று கேட்டனர் ஜப்பானியர். அவர்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஏராளம். அவர்களின் வெறிச் செயல்களால் அழிந்த உயிர்களுக்கு கணக்கே ல்லாதிருந்தது. ரக்கமின்றி உடல்கள் வெட்டிக் குவிக்கப்பட்டன. ஓநாய்களாய் ருந்தனர் ஜப்பானியர்.

ராஜமாணிக்கத்திற்கு ருந்த வசதிக்கு குடும்பம் நடத்துவது ஒன்றும் சிரமமாயில்லை. பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்பதைத் தவிர ஒரு குறையும் ல்லை. பெண் குழந்தைகளிருவரும் ரட்டைப்பிள்ளைகள் போலவே வளரத்தொடங்கினர். அலோங்கின் மகளுக்கு கணபதி நண்பனின் நினைவாக ‘அலமேலு’ என்று பெயரிட்டிருந்தான். குடும்பத்தில் காமாட்சி மட்டுமல்லாது அலமேலுவும் கூட செல்லப் பெண்ணாகிப் போனாள்.

ழுத்து மூடப்பட்ட பள்ளிகளும் கல்லூரிகளும் ஜப்பானியரால் திறக்கப்பட்டன. பள்ளிகளில் ஜப்பானிய மொழியே கற்றுக் கொடுக்கப் பட்டதுடன், பள்ளியில் மாணவர்கள் ஜப்பான் நாட்டுத் திசையை நோக்கி நின்று அந்நாட்டு தேசிய கீதத்தைப் பாடவேண்டும். பிள்ளைகள் ஜப்பானியரை அரக்கர்களைக் காணும் மிரட்சியுடன் கண்டனர். ஆங்கிலம் ருந்த சுவடே தெரியாமல் அழிக்க ஜப்பானியர் பாடு பட்டனர். ந்நிலையில் தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கவா செய்வார்கள் ?!

தமிழைத் தன் சுவாசமாய் நினைக்கும் ராஜமாணிக்கம் தன் பேரன்களின் பள்ளிப்படிப்பு பற்றிய கவலையில், “ கணபதி, நீ வேலை கிடைக்கிறப்போப் போ. பிள்ளைங்களுக்கு நானே வீட்டுல எனக்குத் தெரிஞ்சத சொல்லித்தரேம்பா. கணிதம், ஆங்கிலம், தமிழ் மூணுமே ஓரளவுக்கு சொல்லிக் குடுக்கலாம்னு பாக்கறேன். பள்ளிக் கூடத்துல மட்டும் என்னத்த பெரிசா படிக்கப் போகுதுங்க ? வீட்டிலேயே படிக்கட்டுமே, நீ என்ன சொல்ற ?” என்று கேட்கிறார்.

“கேக்கறதுக்கு நல்லா ருக்குப்பா. ஆனா உங்களுக்கு முடியுமா ?”கணபதி தந்தையின் வயதை எண்ணிக் கேட்கிறான்.“ப்போதைக்கி முருகன் அருளால நான் நோய் நொடியில்லாம நல்லாத்தானே ருக்கேன். நானே சொல்லிக் குடுக்குறேம்பா.” என்கிறார். எண்ணத்தைச் செயலாக்குகிறார் பெரியவர். பிள்ளைகள் வீட்டிலே ஆரம்பக் கல்வியைக் கற்கிறார்கள்.

(ஊ)

நாட்டில் ஜப்பானியரின் அட்டூழியம் தாங்க முடியாதபடியிருந்தது. முக்கியமாக ளம் பெண்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலை; நடமாடவே பயந்தனர்.போர்க்காலக் கைதிகளை விலங்கையும் விடக் கேவலமாய் நடத்தினர். சாவை வரவேற்றபடியிருந்தனர் அத்தகையோர். வேறு வழியும் ருக்கவில்லையே!கள்ள மார்கெட் வேகமாய் வளர்ந்தது. பண்டங்கள் வாயில் வந்த விலைக்கு விற்கப்பட்டன. மக்கள் தனால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஒரு கட்டுப்பாடோ முறையோ ல்லாது ஷ்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் பணத்தை அச்சடித்தது. பணவீக்கம் ஏற்பட்டது. தனால், பணத்திற்கு துளியும் மதிப்பில்லாமல் போனது.

ச்சமயத்தில் ஜப்பானிய எதிர்ப்பு யக்கங்கள் உருவாயின. எல்லாமே ரகசியமாகவே நடத்தப்பட்டன. யார் மீதும் ராணுவம் சிறிது சந்தேகம் கொண்டாலும் போதும், உடனே ழுத்துச் சென்று வழக்கோ, நீதிமன்றமோ, தீர்ப்போ ல்லாது கொன்று விட்டு மறுவேலை பார்த்தனர். கணபதி ‘தமிழ் முரசு’ போன்ற நாளிதழ்களை வாசித்து, சிலவற்றை ஆர்வக்கோளாரால் அறிந்து கொண்டானே தவிர எதிலும் நேராகவோ, மறை முகமாகவோ கூட ஈடுபடவில்லை. சரியான நிரந்தர வேலை கிடைக்காமல் ஏதோ ஒரு தொழிற்காலையில் வேலை பார்த்து வந்தான். ச்சமயத்தில் தான், சிங்கையில் அவன் நண்பனொருவன் அவனுக்கு ஒரு வேலை தேடித் தருவதாய் சொன்னான். குடும்பத்தில் ஏற்பட்ட பிடிப்பே கணபதியை அதற்கு உடனடியாய் ஒத்துக் கொள்ள விடவில்லை. பிறகு பார்க்கலாமென்று கூறிவிட்டான்.

சரஸ்வதிக்குப் பெண் குழந்தைகளுடன் நாள் முழுவதும் மூச்சுவிடவும் நேரமில்லாது ருந்தது. பேரன்களைத் தாத்தா பார்த்துக்கொண்டார். அவர்களின் படிப்பு வீட்டிலேயே நடந்தது. காமாட்சியும் அலமேலுவும் ஊர்ந்து, தவழ்ந்து எல்லோரையும் குதூகலித்தனர். ருவரிடமும் ம்மியளவும் வேறுபாடின்றி குடும்பத்தினர் அன்பைப் பொழிந்தனர். பேரன்களுக்குத் தாத்தா கற்பித்த பாடங்கள் யாவும் பேர்த்திகளையும் கவர்ந்தது. மெள்ள தத்தித்தத்தி நடை பழகினர் ருவரும். தமிழ் பாடம் சொல்லிக்கொடுக்கும் போது அலமேலு மைக்க மறந்து பாடத்தில் லயித்தது பெரியவருக்கு எட்டாவது உலக அதிசயமாய் ருந்தது.

“ ஆறுமுகம், சண்முகம் ந்தப் பிள்ளைங்களக் கொஞ்சம் பார்த்துகுங்கப்பா. அம்மா குளிச்சிட்டு வந்துடறேன். அலமேலு குறும்பு செய்ய மாட்டா. முக்கியமா காமாட்சி விழுந்துடாமப் பார்த்துக்கங்க, என்ன ?”, சரஸ்வதி மகன்களிடம் கூறி விட்டு குளியலை அவசரமாய் முடித்து விட்டு வருவது வாடிக்கை.

காமாட்சியும் அலமேலுவும் பேச ஆரம்பித்ததும், வீட்டிற்குத் தனிக்களை உண்டானது. காமாட்சி சதா பேசிக்கொண்டு ருந்தாள். அவள் சொற்கள் மழலையாய் ருந்தன. சீக்கிரமே பேசவும் தொடங்கியிருந்தாள் அவள். அலமேலு சற்று தாமதமாய்ப் பேசினாலும் தமிழை உச்சரித்த விதம் தெளிவாய் ருந்தது. அவள் குறைவாகப் பேசினாலும் கூர்ந்து தாத்தா பேசுவதைக் கவனிக்கத் தவற மாட்டாள். து ராஜமாணிக்கத்திற்கு பெரிய ஆச்சரியம்! அவளுக்குத் தமிழைக் கற்பிக்கத் தொடங்கினார். ஈரமண்ணாய் ருந்த அலமேலுவிற்கு ஒரு குயவனாய் உருவம் கொடுக்க ஆரம்பித்தார் பெரியவர். சிறந்த மண் கிடைத்தால் உடனே ஆர்வமாய் பாண்டம் வடிக்க கருமமே கண்ணாய் அமரும் ஒரு கைதேர்ந்த குயவனின் ஆர்வம் அவருக்கு ஏற்பட்டது.

‘ஊரான் பொண்ணு’ என்று முதலில் ஒதுக்கிய அலமேலுவைத்தான் ராஜமாணிக்கம் அதிக அன்புடன் நேசித்தார் என்று சொல்லவேண்டும். கணபதிக்கு காமாட்சியின் மேல் பாசம் அதிகமாய் வளர்ந்தது. ப்படியாக பிள்ளைகள் ருவரும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தார்கள். அலமேலு, தாத்தா கற்பித்த தமிழ் பாடங்களை தனி ஈடுபாட்டுடன் ஆர்வமாகக் கற்றாள். மகுடிக்கு மயங்கும் பாம்பாய் அவள் தீந்தமிழில் மயங்கினாள்.

(எ)

1947 ஆம் வருடம் மீண்டும் ஆங்கிலேர் ஆட்சியைப் பிடித்தனர். மக்களுக்கு உள் மனத்தில் தன் நாடு தங்கள் வாழ்க்கை என்ற உணர்வுகள் மறையாமல் ருந்தன. ருப்பினும், ஜப்பானியனைப் பார்த்த மக்களுக்கு ஆங்கிலேயன் பன்மடங்கு மேல் என்றாகிப் போனது. நாட்டை அந்நியராட்சியிலிருந்து மீட்கப் பலவிதமான முயற்சிகள் மட்டும் தொடர்ந்து நடந்தவண்ணம் ருந்தன. முயற்சிகளிலேயே வருடங்களும் உருண்டோடின.

சிங்கை நண்பன் உதவியில் சிங்கையில் வேலை ஒன்றைத் தேடிக்கொண்டார் கணபதி. குடும்பம் சிங்கப்பூரில் அங் மோ கியோ வட்டாரத்தில் குடியேறியது. ராஜமாணிக்கம் தன் சொத்துக்களை விற்காமல் ஜோஹூரிலேயே விட்டு வைத்தார். அவர் நடத்திய துணிக்கடை, சொந்த வீடுகள் ரண்டு, மற்றும் ரப்பர் தோட்டமும் அப்படியே ருந்தது .கவனித்துக்கொள்ள நம்பகமான ஆட்கள் ருந்ததால், வாரமொருமுறை தானே அங்கு சென்று கவனித்துக்கொண்டார். ராஜமாணிக்கம் ஒரு வீட்டை மட்டும் விற்று பணத்தை மகனுக்குக் கொடுத்தார். கணபதி ஒரு தனி வீட்டை சற்று பழையதானாலும் பரவாயில்லையென்று வாங்கினார். வீடு குடும்பத்திற்கு ஏற்றாற்போல பெரியதாய் ருந்தது ஒரு காரணம். மேலும் தன் வேலையிடத்திற்கும் அருகில் ருந்தது கணபதிக்கு அந்த வீடு பிடித்திருந்ததற்கு மற்றுமொரு காரணம்.

ஆங்கிலே ஆட்சியில் பள்ளிப்படிப்பு நன்றாக ருந்ததால் கணபதி தன் பிள்ளைகள் ஐவரையுமே அருகில் உள்ள பள்ளியில் சேர்த்தார். தமிழ்ப்பாடம் மட்டும் வீட்டில் தாத்தாவிடமே பயின்றனர்.

கீற்றுக்கண்களும், மஞ்சள் கலந்த பொன்னிறமும் மட்டும் தான் அலமேலுவுக்கு வேற்று னத்தின் அடையாளமாய் அமைந்தன. மற்றபடி நீண்ட கூந்தலும், நெற்றியில் திலகமும் சின்னக் கண்களில் மையும் வாயில் அழகிய தமிழுமாய் அவள் முற்றிலும் ஒரு தமிழ்ச் சிறுமியாகவே ருந்தாள். அவள் கண் மூடி கைகூப்பிப் பாசுரங்கள் மற்றும் அபிராமி அந்தாதி பாடும் போது பெரியவர் உள்ளம் பனியாய் உருகும். ஆறுவயதில் த்தனை அழகிய உச்சரிப்பா என்று வியந்து போவார்.

காமாட்சி நல்ல பெண் தான் என்ற போதிலும் பொறாமை கொஞ்சம் அவளிடம் அவ்வப்போது தலை தூக்கவே செய்தது. சுருட்டை முடியும் மாநிறமும் அகன்று விரிந்த கருவிழிகளும் அவளுக்கு அப்பாவிடமிருந்து வந்தவை. நினைத்ததைச் சாதிக்கும் குணமும் காமாட்சிக்கு உண்டு. அப்பா தரும் செல்லமே அவளுக்கு தைரியத்தைக் கொடுத்தது. அலமேலு யல்பாகவே பெரும்பாலும் அனுசரித்து போய் விடவே விரும்புவாள். ருவரிடையே நட்பு ல்லாமல் ல்லை.

ஒரு முறை, அவர்களின் பதும்பைப் பருவத்தில்,தொடக்கப்பள்ளியில் படிக்கும் போது ஒரு முறை உப்புச்சப்பற்ற விஷயத்தில்,கூந்தலை அலங்கரிக்கும் ரிப்பனில் தொடங்கியது பிரச்சனை.

“ எனக்கு அந்த பச்சை ரிப்பன் தான் வேணும், ந்த சிவப்பு ரிப்பனயே நீ எடுத்துக்கோயேன்”, என்று பிடிவாதம் பிடித்தாள் காமாட்சி. சிவப்பு ரிப்பன் வேண்டுமென்று தானே வாங்கி விட்டு, அலமேலுவின் பச்சை ரிப்பனை எல்லோரும் நன்றாக ருப்பதாய்ச் சொன்னவுடன்,’ பச்சை தான் தனக்கு வேண்டும்’, என்று ஒரே ஆர்பாட்டம்!

சரஸ்வதி டையில் புகுந்து, “ஏண்டி சிவப்பு ரிப்பன நீயே பிடிச்சித் தானே வாங்கின, ப்ப ஏண்டி த்தனை அமர்களம் ? அதையே வச்சிக்கோ, சும்மா சண்ட போடாத”, என்று சரஸ்வதி குறிக்கிட்டும், காமாட்சி மசியாமல் போகவே, அலமேலு,”அம்மா, காமாட்சியே அத எடுத்துக்கட்டும்மா. நா ந்த சிவப்பையே எடுத்துக்கறேன்”, என்று பிரச்சனைக்குத் தீர்வு சொல்கிறாள்.

“நீ ப்பிடியே விட்டுக்கொடுத்துக் கிட்டே ருந்தா அவ திருந்தவே போறதில்லடி, அலமேலு”, சரஸ்வதி சொன்னதுமே அவசரமாய் , “ல்லம்மா, அதுக்கில்ல. அவளுக்கு ரொம்பப் பிடிச்சிருக்குன்னு தானம்மா கேக்கறா. எனக்கும் சிவப்பே பிடிச்சிருக்கும்மா”, அம்மாவைச் சாந்தப்படுத்த எப்போதும் போலவே அலமேலு சொல்கிறாள்.

“எப்படியோ போங்க, எனக்கு வேல ருக்கு, ஆள விடுங்க”, சரஸ்வதி தன் வேலையைக் கவனிக்கச்செல்ல, காமாட்சி சிணுங்கியபடியே தன்அப்பாவிடம் சென்று,”அப்பா, ந்த அம்மாவுக்கு எப்பயுமே அவ தாம்பா ஒசத்தி. எப்பயும் என்னையே ஏசுறாங்க”, செல்லமாய்ச் சொல்கிறாள்

“ அவளுக்கு வயசாச்சில்ல அதான் ஒண்ணுமே புரியறதில்ல. நீ கவலயே படாதடா கண்ணு. அப்பாதான் உனக்கிருக்கேனில்ல. ப்ப பச்சைய நீயே எடுத்துக்க, அலமேலு சிவப்பயே எடுத்துக்கட்டும். ன்னொரு தடவ கடைக்குப் போகும் போது அவளுக்கு நான் பச்ச ரிப்பன் வாங்கித் தரேன், என்ன சரியா”, என்று அருமை மகளுக்கு சமாதானம் சொல்கிறார். ப்படி எத்தனையோ சம்பவங்கள் வீட்டில் அவ்வப்போது!

பள்ளியில் காண்போரைக் குழப்பும் அலமேலுவின் தோற்றம். தெரிந்தவர்களுக்குப் பழகிப்போயிற்று. புதியவர்கள் பதினாயிரம் கேள்விகள் கேட்டனர். அலமேலுவுக்கு அதெல்லாம் பழகி விட்டிருந்தது. அவளுக்கு தான் வேறு பெற்றோருக்குப் பிறந்திருக்கலாமோ என்று கூட எண்ணத் தோன்றவில்லை.

அலமேலுவின் பதினைந்தாவது வயதில் தான் கணபதியும் சரஸ்வதியும் அலமேலுவுக்கு அவளுடைய பெற்றோரைப் பற்றி விவரமாகக் கூறினர். அதுவரை அவள் ஒரு வளர்ப்பு மகள் என்று மட்டுமே அறிந்திருந்தாள். விவரங்கள் அவளை சற்றும் பாதிக்கவில்லை. அவள் தன்னை அன்னியமாகக் கருதவே ல்லை. குடும்பத்தினரின் அன்பு அத்தகையதாயிருந்தது. கணபதியிடம் ருந்த அவளுடைய மதிப்பும் மரியாதையும் பன்மடங்கு உயர்ந்தது.

ராஜமாணிக்கமே வியக்கும் வண்ணம் அலமேலு கம்பராமாயணம், சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களையும், காவியங்களையும் ஆழ்ந்து படித்தாள். பல நேரங்களில் அவள் கேட்கும் கேள்விகள் பெரியவருக்குப் பதில் சொல்லவும் கடினமானதாய் ருக்கும். முடிந்தவரை அவள் சந்தேகங்களை தீர்ப்பதுடன், தன் பால்ய சிநேகிதரான தஞ்சை சிவராம பண்டிதருக்கு கடிதம் எழுதிக்கேட்டு பின் அவளுக்கு விளக்குவதைத் தன் வழக்கமாகக் கொண்டார்.

(ஏ)

ஆறுமுகம் புகுமுகவகுப்பையும் சண்முகம் உயர்பள்ளிப்படிப்பையும் முடிக்கும் நேரம், நாட்டில் ஆங்கிலேய எதிர்ப்பு வளர்ந்தது. சிங்கையில் மாணவர் போராட்டம், 1954 ஆம் வருடம் நடை பெற்றது. மகன்களுடைய படிப்புத் தடைபடும் என்பதையறிந்த கணபதி செய்வதறியாது குழம்புகிறார்.

ராஜமாணிக்கத்திற்கு வெகு நாட்களாகவே வயதின் ஆயாசம் மிகுதியாக ருந்தது. மனதிற்குள்ளேயே தான் பிறந்த மண்ணின் ஏக்கம் அவருக்குத் தலை தூக்கியிருந்தது. ந்தியா சுதந்திரம் பெற்றிருந்தது. பெரியவருக்கு சுதந்திர ந்தியாவில் சுவாசிக்க ஆவல் பெருகியது.

அப்போது தான்,சண்முகம்,”அப்பா, பாடமெல்லாம் ஒண்ணுமே நடக்கல்லப்பா. தேர்வே நடக்குமான்னு சந்தேகம்னு பேசிக்கிறாங்கப்பா, அண்ணனாவது பல்கலைக் கழகத்துல சேரணும், எனக்குத் தான் ஒரு வருஷம் வீணாயிடுமோன்னு பயமா ருக்குப்பா”,என்று சொல்லி கவலைப்படுகிறான்.

சில நாட்களாய் ந்தியாவிற்குச் செல்ல ஆசை பிறந்திருந்தும், பெரியவர் தன் மகனையும் குடும்பத்தையும் பிரிய நேரும் என்ற ஒரே காரணத்தால் மகனிடம் தன் ஆசையை வெளிப் படுத்தாது ருந்தார்.ப்போது அவருக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றுகிறது. பேரன்களுடன் ந்தியாவிற்குப் போனால் தான் தனிமையில் தவிக்கவும் வேண்டாம், பிள்ளைகளுடைய படிப்பும் தடை படாதில்லையா ?! பேரன்களாவது தன்னோடு ருப்பார்களே என்று யோசித்தார்.

பெரியவர் மகனிடம், ”கணபதி, பெண்பிள்ளைங்க ரெண்டும் ங்கயே ருக்கட்டும். என் பேரனுங்களையாவது நான் கூட்டிக்கிட்டு ந்தியா போறேன். அவங்களும் அங்க படிக்கட்டும். எனக்கும் வயசாச்சில்லையா ? ஆனா னிமே நீ தான் ஜோஹூருக்கும் போக வேண்டியிருக்கும் . உன்னால முடியுமா, நீ என்ன சொல்ற ?..”, என்று கேட்கிறார்.

“ஜோஹூருக்குப் போயி தோட்டத்தப் பார்த்துக்கறதொண்ணும் எனக்கு சிரமமில்லப்பா. அதெல்லாம் நானே பார்த்துப்பேன். ஆனா ந்த வயசுல நீங்க எங்கள எல்லாம் விட்டுட்டு ஏன் ந்தியா போகணும்னு தான் தயங்கறேன்”.

“ல்லப்பா. கூட தான் பிள்ளைங்க ருப்பாங்களே. நான் போயி அங்க ருக்கேனே, கணபதி. உறவுக்காரங்களும் நிறைய பேர் ருக்காங்கல்ல. தனியாவா ருக்கப்போறேன். நீ ஏன் கவலப்படறேன்னே எனக்குப் புரியல.” அவரைப் பிரிந்து ருக்கவேண்டும் என்பதைத் தவிர அப்பாவின் யோசனை சரியெனப்படவே அரை மனதாய் கணபதியும் சரஸ்வதியும் பெரியவர் மற்றும் பேரன்களை ந்தியாவிற்கு அனுப்பி வைக்கிறார்.

அலமேலு தானும் உடன் போவதாய் விடாமல் சொல்லிப் பார்க்கிறாள். அவளுக்குத் தாத்தாவைப் பிரிய மனமேயில்லை. மேலும் தமிழ் நாட்டில் தமிழ் மொழியில் சிறப்புப் பட்டமும் வாங்கலாமென்ற ஆசை. கணபதி மறுத்துவிட்டார். ன்னும் கொஞ்சகாலம் போனதும் பார்த்துக் கொள்ளலாமென்று சமாதானம் கூறிவிட்டார். சரஸ்வதிக்கு மகன்களைப் பிரிவதில் தாங்கொணாத்துயர்; வேறு வழியில்லாமல் விடை கொடுத்தனுப்புகிறாள்.

அதன் பிறகு தினமும் கடிதத்தை எதிர் பார்ப்பதே வேலையாகக் கொண்டாள். “ஏங்க, பிள்ளைங்க கிட்டயிருந்து கடுதாசி வந்து நாளச்சில்ல ?”, து அவள் அடிக்கடி கணபதியிடம் கேட்கும் கேள்வி. “ஆமா, உனக்கு தினமும் லெட்டர் போட்டாலும் கூட திருப்தியிருக்குமா ? வந்து நாலு நாள் தானே சரஸ்வதி ஆவுது, உனக்கு ஞாபக மறதி வந்திடுச்சி”,

“ஆமாங்க, ஞாபக மறதி அதிகமாத்தானிருக்கு. உடம்பே கூட முன்ன மாதிரி ல்ல. சீக்கிரமே அசதியாயிடுது. அலமேலு மட்டும் வீட்டு வேலைகள்ள உதவி செய்யலன்னா, என் பாடு திண்டாட்டமாயிடும். உங்க கிட்ட சொல்லணும்னு ரொம்ப நாளாவே நினைக்கிறேன், ஆனா மறந்துடுது. ந்த காமாட்சி ல்ல, ஒருவேலையும் செய்யறதே ல்லைங்க. செஞ்சி பழகினாத் தானே நல்லது”, என்றவுடன், கணபதி,” அவள ஏதாவது சொல்லிட்டே ருக்கணுமா உனக்கு, விடுவியா, எல்லாம் தானா தெரிஞ்சுப்பா, நீ உன் உடம்பப் பார்த்துக்கோ”, என்று கூறி விட்டு டத்தை விட்டு அகல்கிறார்.

பின்னாலேயே சென்று,” நீங்க குடுக்குற செல்லம் தான் அவளக்கெடுக்குது. நினைச்சதச் சாதிக்கிறா. பிடிவாதமும் அதிகமா ருக்கு”, என்று விடாமல் புலம்பினாலும், கணபதி கேட்டதாய்க் காட்டிக் கொள்ளாமல் குளியலறைக்குள் நுழைந்து விடுகிறார். காமாட்சியிடம் அவர் வைத்திருக்கும் பிடிப்பு வியக்கத்தக்கது. அவரது பலவீனம் அவருக்குத் தெரியும்; அதைச்சுட்டிக் காட்டினால் அவருக்குச் சற்றும் பிடிப்பதில்லை. அத்தகைய நேரங்களில் அவர் டத்தைக் காலி செய்துவிட விரும்புவார். து சரஸ்வதியும் அறிந்ததே.

1959ஆம் மலேயா சுதந்திர நாடக அறிவிக்கப்பட்டது. உள் நாட்டுப்பிரச்சனைகள் பல கிளம்பின. அலமேலுவும் காமாட்சியும் கல்லூரியை முடித்துவிட்டு பல்கலைக்கழத்திற்குச் செல்லவேண்டும். காமாட்சி கணிதத்தில் அதிக நாட்டம் காட்டியதால் அப்பாடத்தையே படிக்க ஆரம்பித்தாள். அலமேலு தனக்குப்பிடித்த தமிழை அஞ்சல் வழி கற்றாள். அண்ணன் ஆறுமுகம் அவளுக்காக பாடங்களைத் தபாலில் அனுப்பி வைத்தான். வீட்டிலிருந்தபடியே தமிழைப் படித்தாள். ஆறு மாதத்திற்கு ஒரு முறை சில நாட்களுக்கு ந்தியா சென்று தேர்வு எழுதினாள்.

காமாட்சி யாரைப் பார்த்தாலும் கலகலப்பாகப் பழகுவாள். நவநாகரீக உடைகளையே விரும்பி அணிவாள். சரஸ்வதி எத்தனை கெஞ்சினாலும், காமாட்சி சேலை மட்டும் அணியவே மாட்டாள். எத்தனை சிறியதாய் முடியுமோ அத்தனை சிறியதாய் முடியை வெட்டிக்கொள்வாள். போனால் போகிறதென்று அம்மாவிற்குப் பெரிய ஒத்துழைப்பு தருவது போலக் கடுகளவிற்கு ஒரு பொட்டு மட்டும் ட்டுக் கொள்வாள். தற்கெல்லாம் அவளுக்கு அப்பாவின் முழு அனுமதியோடு ஆதரவும் கிடைத்தது.

அலமேலு நேர் எதிராய் எப்போதும் தழையத் தழைய சேலை கட்டிக்கொண்டு, நெற்றியில் பளிச்சென்று திலகமுமாக தமிழ் பெண்ணிற்கிலக்கணமாய்த் தான் திகழ்வாள். முக்கியமாக தாத்தா கற்றுத் தந்த தமிழ் பாடங்களை அவள் காமாட்சியைப் போல மறந்து விடவில்லை. வருடங்கள் பலவானாலும் அவள் மனதில் அவை ஆழமாய் பதிந்து ன்னமும் நினைவிலிருத்தன.

காமாட்சி கணிதத்தில் தேறிய பின் வங்கி ஒன்றில் வேலையில் அமர்ந்தாள். அலமேலு, தான் நினைத்தபடியே தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றாள்.“ தமிழைக் காக்க வந்த தமிழ் தாயே, ம்,..தமிழ் படிச்சிட்ட, தாத்தாவுக்கு வாரிசாயாச்சி, சரி, னிமே என்ன செய்யப் போறயாம் ?”, காமாட்சி அலமேலுவைச் சீண்டுவாள். “கேலி செய்யாத காமாட்சி, உனக்கு கணக்கு எப்பிடியோ அப்பிடித்தான் எனக்கு தமிழ். துக்கேன் கிண்டல் செய்யிற ?”, பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு அலமேலு நியாயம் பேசுவாள்.

“ஏண்டா, தமிழ் படிச்சி என்னடா செய்யப்போற ?”, மடக்கப் பார்ப்பாள் காமாட்சி. “ ஏன், வேலை அது துன்னு ஒரு நோக்கத்தோட தான் படிக்கணுமா என்ன ? எனக்கு பிடிச்சதால படிச்சேன்”, அலமேலு விவாதிப்பாள்,

விடாமல். “அம்மா தாயே உன்னோட பக்குவம் எனக்கு கிடையாது. அது தெரிஞ்ச விஷயம் தானே. அத விடு. ‘கல்யாணப் பரிசு’ போட்டிருக்கானாம், தெரியுமா ? போவோம் வரியா ?” ரகசிய குரலில் அம்மாவுக்குக் கேட்டு விடாதபடி அலமேலுவுக்கு மட்டுமே கேட்குமாறு பேசுவாள். “அம்மாவுக்கு உடம்பு சரியில்ல. காமாட்சி, பாவம் படுத்திருக்காங்க. நான் தான் சமைக்கப்போறேன்.”

அலமேலுவின் மறுப்பிற்கு, “ஏண்டா நீ மாறவே மாட்டியாடி ? சரி சரி, நான் என் சிநேகிதி விஜயாவோட போகப் போறேன். நீ அம்மாகிட்ட நான் போனபிறகு சொல்லிடு, சரியா ?”, கூறிவிட்டு உடை மாற்றப்போய் விடுவாள். து போல பல முறை காமாட்சி உல்லாசமாய் திரைப் படம் காணச்சென்று விடுவாள்.

அலமேலு காமாட்சியைப் போல உல்லாசத்தை விரும்புபவள் அல்ல. அவளுக்கு அம்மாவுக்கு உதவி செய்யவும், தையல் பழகவும் பிடிக்கும். வீட்டிலிருந்த படியே சில வேளைகளில் கோலம் போட்டுப் பழகுவாள். வேறு சில நேரங்களில் அவள் மனம் கவிதை உலகில் உலா வரும். தமிழில் பாரதி, பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டையார் போன்றோரின் வரிகள் மட்டுமே அவளை வெகுவாய் ஈர்த்தன. திரைப்படங்கள் காணச் சென்றாலும் அவள் கவனம் முழுவதும் பாடல் வரிகளில் தான் ருக்கும். மனதுக்குள்ளேயே விமரிசித்து கொள்வாள்.

(ஐ)

கணபதி தன் சொந்த வியாபாரம் தொடங்கி ஓரளவு நிலைத்தன்மை அடைந்த சமயம் அது. ந்தியாவில் மகன்கள் மூவரும் ஒவ்வொருவராய் படிப்பை முடித்து அமெரிக்கா சென்று விட்டனர். பெரியவர் வேலைக்காரர்கள் ருவரின் துணையுடன் தமிழகத்திலேயே ருந்தார். சிங்கை வர அவர் சம்மதிக்கவே ல்லை. தன் கடைசி காலத்தை அங்கு தான் கழிக்கப்போவதாய் பிடிவாதமாய் மறுத்துவிட்டார். தந்தை தனியாய் ருப்பது தனயனுக்கு உறுத்துகிறது. வேறு வழிதெரியாமல், அவர் போக்கில் விட்டுவிட்டார்.

மகன்கள் வருடத்திற்கு ஒரு முறை வந்து போவது வழக்கமானது. மூவரும் வெவ்வேறு டங்களில் ருந்தாலும் ஒரே நேரத்தில் சிங்கை வருமாறு திட்டம் தீட்டிக் கொண்டு வந்தனர். தனால், வருடத்திற்கு ஒரு முறையேனும், ஒரே நேரத்தில் சில வாரங்களுக்கு அவர்களால் சேர்ந்து ருக்க முடிந்தது.

1961 ஆம் வருடம், அவர்கள் அப்படி வந்த போது ஆறுமுகம் மட்டும் சிங்கையில் ருந்து விட்டு திரும்பும் வழியில் தாத்தாவைப் பார்க்க ந்தியா போகிறான். அவன் அங்கிருந்த ஒரு வாரத்தில் பெரியவர் பேரனைப் பார்த்த பூரிப்பில், அதற்காகவே காத்திருந்தது போல உலக வாழ்க்கையிலிருந்து விடை பெறுகிறார். அவர் உயிர் உறக்கத்தில் அமைதியாகப் பிரிந்தது.

ரவு தந்தி வந்ததும் கணபதி ஆடிப்போய் விடுகிறார். வீட்டில் சோகம் கவிழ்கிறது. கடைசி நேரத்தில் தந்தையுடன் தான் ருக்க முடியாமற் போனதில் அவருக்குப் பெரும் வருத்தம் ருந்தாலும் செய்யக் கூடியதொன்றும் ல்லையாததால், ஒரு வாரத்திற்கு ந்தியா சென்று வந்தார்.

சரஸ்வதி தான்,”ஏங்க மனச திடமா வச்சிக்கங்க. அவரு நல்லா வாழ்ந்து பேரன் பேத்திகளயெல்லாம் பார்த்துட்டு, சீக்காப் படுக்காம நல்ல விதமா கஷ்டமே படாம தானே போய் ருக்காரு. அவருக்கு நல்ல சாவு கிடைச்சிருக்குன்னு நாம சந்தோஷப்படணும் தெரியுமா ?கவலப்படாதீங்க. நீங்க தைரியமா ருக்கறதையே தான் அவரும் விரும்புவாரு, தைரியமா ருங்க”, என்று பல விதமாய் தேற்றுகிறாள். அலமேலுவிற்கு அழுது அழுது கண்களில் கண்ணிரே வற்றி விட்டது.

தற்குள் ஆறுமுகம் எல்லாவிதமான ஏற்பாடுகளையும் செய்து முடித்து விட்டிருந்தான். கணபதிக்குத் தந்தையின் சடலத்தைக் கூட பார்க்க முடியாது போனது. பேரனின் கொள்ளியை வாங்கிக் கொண்டு பெரியவர் போய் சேர்ந்தார்.ஆறுமுகத்திற்கு ஏற்பட்ட துயருக்கு அளவேயில்லை. அவன் தந்தையை விட தாத்தாவிடமே அதிகம் வளர்ந்திருந்தான். தனால் அவனைத் தேற்ற முடியாமல் கணபதி மிகவும் சிரமப்பட்டார். அவனுடைய சோகத்தைப் பார்த்ததும் தன் சோகத்தை மறந்தார். ஒரு வாரத்திற்கு அப்புறம் ஆறுமுகம் அமெரிக்காவிற்கும் கணபதி சிங்கைக்கும் பயணப்பட்டார்கள்.

ராஜ மாணிக்கம் றந்து ஒரு வருடத்திற்குப் பிறகு மகன்கள் மூவரும் சிங்கப்பூர் வந்திருந்த சமயத்தில் சரஸ்வதி ஏற்கனவே பேசியிருந்த பெண்ணை ஆறுமுகத்திற்கு மணமுடிக்கிறாள். தாயின் வற்புறுத்தலுக்கு சைவதைத் தவிர வேறு வழி அவனுக்கு ருக்கவில்லை. மூன்று வருடமாய் அம்மா தைப்பற்றி சொல்லி வருகிறாரே என்று அவன் ல்லறம் புகுகிறான். குடும்பத்தின் முதல் திருமணம். வீட்டில் ஒரே மகிழ்ச்சி நிறைந்தபடி ருந்தது. காமாட்சிக்கும் அலமேலுவுக்கும் அண்ணி வரும் களிப்பு. ருவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.

பெண் வீட்டார் அலமேலுவைப் பார்த்து ‘யார் ?’ , என்று கேட்டனர். பலவிதமாய் துருவித் துருவிக் கேட்டனர். கணபதியும் சரஸ்வதியும் பலமுறை து போன்ற கேள்விகளை எதிர் கொண்டு பழகி விட்டிருந்ததால், விவரமாய் எடுத்துக் கூறிப் புரிய வைத்தனர். புரிந்ததும் பெண் வீட்டார் கணபதியின் பெருந்தன்மையை வெளிப்படையாகவே புகழ ஆரம்பித்தனர்.

ஜோஹூரிலும் தே போல பல முறை பலர் கேட்டிருக்கின்றனர். பள்ளியில் அலமேலுவை அறிந்திராதவர்களும் தே போல கேட்டிருக்கின்றனர்.பொறாமை பிடித்த சிலர் புரளியையும் கிளப்பி விட்டிருந்தனர். கணபதி ஏதோ தகாத உறவு கொண்டு, அப்படிப் பெற்றெடுத்த பெண் என்றும், அவளைத்தான் அவர்கள் வளர்ப்பதாயும் வதந்தி ருந்தது.

அத்தகைய சமயங்களில் அலமேலு தன் உயிர் தோழி கமலாவிடம் மட்டும் தான் மனம் விட்டுப்பேசுவாள். “என்னைப் பொருத்தவரை என்னைப் பெத்தவங்க ருந்திருந்தா கூட என்னை ந்த அளவுக்கு சிறப்பா வளர்த்திருப் பாங்களான்னே தெரியாது. எனக்கு எங்க அம்மா அப்பா யாருன்னே தெரியாது. ஒரு மாசக் குழந்தையா என்னை தூக்கிட்டு வந்து, தாத்தாவோட சண்டையெல்லாம் போட்டு, வீட்டுல வச்சி என்னைய வளர்த்திருக்காரு அப்பா. நட்புக்கு அவரு எத்தனை உயர்வான டம் கொடுத்திருக்காருன்னு பலமுறை நான் வியக்கறதுண்டு. காமாட்சிக்கும் எனக்கும் எங்க வீட்டுல எந்த விதமான வித்தியாசமும் கிடையாது தெரியுமா ? நா பார்க்க சீனத்தியோன்னு சந்தேகிக்கற மாதிரியிருந்தாலும் மனதளவுல நா ஒரு தமிழச்சி. என் தாய் மொழி தமிழ் தான். எனக்கு சீனத்துல ஒரு சொல் கூட தெரியாது. ப்பிடியிருக்கும் போது ஊருல அப்பாவப் பத்தித் தப்பா பேசினா எனக்கு ரொம்பவே வேதனையா ருக்கு தெரியுமா ?”

“அட விடுலா, ஊருக்கென்ன அலமேலு, ஆயிரம் பேசும். ஊரா வந்து உனக்கு சோறு போட்டு வளர்த்து ஆளாக்கினது ? மனசப்போட்டு அலட்டிக்காத லா”, என்று சமாதானம் செய்வாள் தோழி.

விமரிசையாக ஆறுமுகத்தின் திருமணமும் முடிந்தது. அவன் மனைவியும் சரஸ்வதிக்கேற்ற மருமகளாய் வாய்த்திருந்தாள். தில் எல்லோருக்குமே மகிழ்ச்சி. புதுமணத் தம்பதியர் அமெரிக்காவிற்குக் கிளம்பிச் சென்றதும் வீடே வெறிச்சென ஆனது.

(ஒ)

1965 ஆம் ஆண்டு கோலாலம்பூர் மத்திய அரசிற்கும் சிங்கப்பூர் மாநில அரசிற்கும் பற்பல கருத்து வேற்றுமைகள் நிலவின. தன் முடிவு சிங்கையை மலேயாவிலிருந்து பிரித்துத் தனிமைப் படுத்தியது. மாண்பிமிகு லீ அவர்கள் ப்பிரிவினையைப் பெரிதும் முயன்று தடுத்தார். பலன் மட்டும் ல்லாமல் போனது.நாடு தனியானதும் சோர்ந்து விடாமல் உழைத்து நாட்டை வழி நடத்தி உயர்த்தினார்.

தனி நாடன சிங்கப்பூரில் அரசாங்கம் தமிழை அரசாங்க ஆட்சி மொழிகளுள் ஒன்றாக அறிவித்ததும் தமிழினம் பேருவகையடைந்தது. அலமேலுவிற்கும் தில் அளவிலா மகிழ்ச்சி. “அப்பா, சிங்கையில தமிழுக்கு னிமே மெளசு கூடிடும்பா. பள்ளியிலெல்லாம் கூட பிள்ளைங்களுக்கு தமிழை ரண்டாம் மொழியாகக் கொண்டு வாராங்கப்பா”, அப்பாவிடம் பூரிப்புடன் சொல்கிறாள்.

அதுவரை நாட்டமிருந்த அக்கம்பக்கத்துப் பிள்ளைகளுக்கு மட்டும் தமிழைக் கற்பித்து வந்த தனக்கு னிமேல் ஒரு வேலை கிடைக்க வாய்ப்புண்டு என்பதே அவளுக்கு ரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்தது.“ எல்லோரையும் விட உனக்குத் தாம்மா துல அதிக மகிழ்ச்சியா ருக்கும்”, கணபதி அவள் ஆனந்ததில் பங்கு கொள்கிறார்.

காமாட்சி வழக்கம் போல,” நீ படிச்ச படிப்பு வீண் போகலன்னு சொல்ல வரயா ?,என்று கேலி பேசுகிறாள்.“ வேலைக்காகவே நான் தச்சொல்லவல்ல தெரியுமா ? மொரீஷியஸ், மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகள்ள தமிழர்கள் ஒரு னமாய் பெயரளவுல தான் ருக்காங்க. ஆனா பாவம், அவங்களுக்கு அவங்க மொழி தெரியாது. புழக்கத்துல ல்லாம அழிஞ்சு போன மொழிய ப்போ உயிர்ப்பிக்க முடியாம தவிக்கிறாங்க. ப்ப நமக்கு அந்த மாதிரியான ஆபத்தே ல்லாம போயிடிச்சி. அத நெனச்சி தான் எனக்கு ரொம்ப சந்தோஷம்”, என்று விளக்குகிறாள்.அலமேலு ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து வேலையில் சேர்ந்தும் விடுகிறாள். தான் எடுத்த பிறவியின் பயனையே அடைந்து விட்டாற்போல் உணர்கிறாள்.

காமாட்சி தன் வங்கி வேலையை விடாமல் தொடர, அமெரிக்காவில் சண்முகம் உடன் வேலை பார்த்த ந்தியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான். முருகனோ ஒரு அமெரிக்க வெள்ளைக்காரியையே மணந்தான். அனைவரும் சேர்ந்து ஒரு முறை சிங்கைக்கு வந்திருந்தனர்.

சரஸ்வதிக்கு மூன்று மருமகள்களையும் பார்த்து ஒரே ஆனந்தம். சீக்கிரமே காமாட்சிக்கு மணமுடிக்க எண்ணினாள் சரஸ்வதி. ஆனால் அந்தப் பேச்சை எடுத்தாலே வெட்டெனப் பேசி மறுத்தாள் அவள். தனக்குத் தோன்றும் போது தான் மணமுடிக்க எண்ணுவதாகத் தெளிவாய் கூறிவிட்டாள். பெற்றோர் விருப்பத்திற்கெல்லாம் தன்னால் மணக்க முடியாதென்று முடிவாகவும் சொல்லி விட்டாள். அலமேலுவோ அம்மா அப்பாவின் முடிவைத் தான் ஏற்கத் தயாரென்று அமைதியாய் உணர்த்தினாள்.

சரஸ்வதிக்குத் தான் காமாட்சியின் போக்கு அச்சத்தைக் கொடுத்தது. அவளுக்கு வயது ஏறிக்கொண்டே போவதாய் அவளுக்கு எண்ணம். “ஏங்க, காமாட்சி கல்யாணத்துக்கு ஒத்தே வரமாட்டா போல ருக்கேங்க”, என்று பல முறை கணவனிடம் புலம்புவாள். அப்போதெல்லாம் அவரும், “விடு சரஸ்வதி. வீட்டுக்கு கடைக்குட்டி அவ; தைரிய சாலி வேற. அவளப்பத்தி எனக்குக் கவலையே ல்ல தெரியுமா. நம்ம அலமேலுவ நெனச்சாத்தான் கவலயா ருக்கு. யாரோடையும் அதிகம் பேசறதில்ல. அவளுக்கு நல்லபடியா ஒரு கல்யாணம் நடக்குமான்னு தான் கவலயா ருக்கு எனக்கு”, தன் பங்குக்கு அலமேலுவைப் பற்றிய கவலைகளில் மூழ்குவார்.

“ஏங்க, எதுக்கும் சத்தியன ங்க வரவழைச்சா என்ன ? பையன் தங்கக் கம்பி. காமாட்சிக்கும் பையனுக்கும் பிடிச்சா கல்யாணத்த முடிப்போம்”, என்று சரஸ்வதி தன் பெரியப்பாவின் மகனான சத்தியனைத் தன் மருமகனாக்கும் யோசனையில் சொல்கிறாள்.“ சரி, வரச்சொல்லி கடுதாசி போடுவோம். ஆனா தெல்லாம் நம்ம கையில ல்லம்மா. நீ நெனக்கிறது நடந்தா சந்தோசந்தான். ம்,.. பார்ப்போம்”, என்று கணபதி உடனடியாக ஒரு கடிதமும் எழுதி விடுகிறார்.

ரண்டு வாரத்தில் சத்தியன் சிங்கை வந்து சேர்கிறான். காமாட்சியுடன் பேச முயற்சிக்கிறான். ஆனால் அவளின் அகம்பாவமும் எடுத்தெறிந்து பேசும் யல்பும் அமைதியான அவனை அவளிடம் நெருங்கவே விடாமல் செய்கின்றன.

தஞ்சையில் வளர்ந்திருந்த சத்தியனுக்கு அலமேலுவிடம் ஓர் ஈடுபாடு ஏற்பட்டு வளர்ந்தது. சப்பை மூக்கும், மஞ்சள் நிறமும், சிறிய கண்களையும் விடுத்துப் பார்த்தால் அவள் முழுத்தமிழ் பெண்ணாகவே அவனுக்குத் தெரிந்தாள். அவளுடைய அடக்கம், தமிழார்வம் மற்றும் எல்லா யல்புகளும் அவனைக் கவர்ந்தன. தைச் சொல்லவே முதலில் அவன் மிகவும் தயங்கினான். சரஸ்வதி போட்ட கணக்குத் தப்பாய் ருந்தது. ஆனால் வேறு ஒரு விதத்தில் அவளுக்குச் சாதகமாயும் ருந்தது.

சத்தியன் அவலட்சணமானவன் ஒன்றும் ல்லை. கட்டுமஸ்தான உடலும் உயரமுமாய் ருந்தான். ஏதேனும் குறை வைக்கும் நோக்கத்துடன் யற்கையன்னை அவன் உடலில் கருமையைச் சற்று வாரி வழங்கியிருந்தாள். தனாலேயே கூட காமாட்சி அவனை நெருங்கவில்லை. ஆனால் அவனது வெள்ளை நெஞ்சம் அவளுக்குத் தெரியவில்லை. தன் நிறம் காரணமாய்ச் சத்தியன் தன் விருப்பத்தைத் தன்னுள்ளேயே பூட்டி வைக்க எண்ணினான். தான் அலமேலுவுக்குத் தகுதியில்லாதவன் என்று அவன் எண்ணினான்.

ரண்டு மாதங்கள் யோசித்துப் பின் தன் அத்தையிடம் அவன் தன் விருப்பத்தைத் தெரிவித்தான். தையறிந்து சரஸ்வதிக்கும் கணபதிக்கும் மிகவும் திருப்தி தான். அலமேலுவின் கல்யாணம் குறித்துக் கவலையடைந்திருந்த கணபதிக்கு பழம் நழுவிப்பாலில் விழுந்தது போல ருந்தது. ருப்பினும், அலமேலுவின் விருப்பத்தை அறிய அவளைக் கேட்டனர். அவள் தாய் தந்தையரின் விருப்பமே தன் விருப்பம் என்று கூறி விட்டாள். தன் தமிழாசிரியர் பணிக்கு மட்டும் தடை வரக்கூடாதென்று ஒரே ஒரு நிபந்தனையை அவள் போட்டாள். சத்தியன் அதற்கு முழு மனதாய் ஒப்புக்கொண்டான்.

தையறிந்த காமாட்சி அலமேலுவை கட்டுப்பெட்டி, கர்நாடகம் என்றெல்லாம் கேலி பேசினாள் வழக்கம் போல. ஆனால் அலமேலு எல்லாவற்றிற்கும் சிரித்து மழுப்பினாள். “ஏம்மா தமிழ் நாட்டுல தமிழ் தவிர எல்லாமே உனக்கு புதுசா ருக்குமே அலமேலு, பழகிட்டு ருந்துப்பியா ? ங்கயே வாழ்ந்த உனக்கு அங்க புடிக்குமான்னு தான் கொஞ்சம் கவலையா ருக்கு”, கணபதி அவளிடம் கேட்கும் போது கூட,”அப்பா, என்னப்பத்தி உங்களுக்கு தான் நல்லாத் தெரியுமே. நான் பழகிப்பேம்பா. நீங்க கவலையே படாதீங்க, உங்களையெல்லாம் பிரியணுமேன்னு தான் எனக்குக் கவலையா ருக்கு மத்தபடி நான் சமாளிச்சுப்பேம்பா”, என்று ஆறுதல் கூறுகிறாள்.

“க்ஹூம்,.. உனக்கு மட்டுமா ? எங்களுக்கெல்லாமும் உன்ன விட்டுட்டு ருக்கணும்னு நினச்சாலே என்னவோ போல ருக்கு. அலமேலு நீ பசியாறிட்டு வேலைக்குக் கிளம்பு”, என்று சரஸ்வதி பெரு மூச்செரிகிறாள். காமாட்சிக்குக் கல்யாணம் ஒன்று நடப்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தனர் பெற்றோர். ஆனால் அவளோ பிடி கொடுக்காமல் தனிக்காட்டு ராஜாவாகத் திரிந்தாள். நிறைய சம்பாதித்தாள். ஷ்டம் போல் செலவு செய்து அனுபவித்தாள். கல்யாணம் ஒரு சிறையென எண்ணினாள்.

(ஓ)

கணபதிக்கு அருமையாய் வளர்த்த சாதுவான தன் மகளைத் தொலை தூரத்திற்கு அனுப்ப மனமே ல்லை. சத்தியனுக்குச் சிங்கையில் வேலை செய்ய விருப்பமிருந்தால், அவனுக்கு ஒரு வேலையைத் தேடிக்கொடுத்து விட்டால், பிறகு மகளைப் பிரிய வேண்டாமே என்று அவர் மனம் கணக்குப் போடுகிறது. முதலில் சத்தியனுக்குச் சிங்கையில் வேலைக்கு அமர்ந்து ங்கேயே ருக்க விருப்பமா என்று அறிய வேண்டும்.

காலம் தாழ்த்தாமல் தன் யோசனையை கணபதி சத்தியனிடம் கூறியதும், அவனும் தயங்காமல் ஏற்க, அவருக்கு ஒரு நிம்மதியே உண்டானது. கணபதி அலைந்து திரிந்தார்; பலரைப் பார்த்தார். சத்தியனின் படிப்பிற்கேற்ற வேலை ஒன்றை அவனுக்கு வாங்கி விட்டார். காரியம் பழம் ஆகும் வரை அவருக்கு நம்பிக்கையே ல்லாதிருந்தது. வேலைக்கான உத்தரவு கையில் வந்ததும் தான் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. குடி நுழைவு அலுவலுகத்திற்குச் சென்று எல்லா ஏற்பாடுகளையும் செவ்வனே முடித்தார்.

தான் செய்து முடித்த விவரங்களை வீட்டினரிடம் கூறியதும் அலமேலு, காமாட்சி, சரஸ்வதி ஆகியோரின் முகங்கள் ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாய் மலர்ந்தன. அலமேலு ங்கேயே ருக்க முடியுமென்ற செய்தியே னிப்பாய் ருந்தது அனைவருக்கும்.அடுத்து, திருமணம் தண்டாயுதபாணி கோயிலில் எளிமையாய் , ஆனால் சிறப்பாய் நடந்தேறியது. வீட்டில் விருந்துபசாரமும் ஏற்பாடு செய்தார் கணபதி.

“ அங்க பாருங்கப்பா, எள்ளையும் அரிசியையும் கலந்து வெச்சாப்போல ருக்கில்ல,” என்று சத்தியன், அலமேலு ருவரையும் காமாட்சி வருணித்த போது, சரஸ்வதிதான், “ என்ன காமாட்சி, உனக்கு வயசு மட்டும் தான் ஆகுது, நாலு பேரு கூடியிருக்கும் போது ப்பிடியெல்லாம் பேசலாமா ? ம்,.. எனக்கு தெல்லாம் பிடிக்கல்ல. கொஞ்சம் அடக்கமாவே ரு, தெரிஞ்சுதா ?” எச்சரிக்கிறாள் தன் மகளை.

“பரவாயில்ல விடுங்க அத்தை. உண்மையத்தானே சொல்லுது காமாட்சி. கல்யாணத்துல தெல்லாம் கூட ஒரு கலகலப்புத்தானே ? காமாட்சி! நீ என்னையும் அலமேலுவையும் ஷ்டம் போல கேலி பண்ணலாம்”,என்று சத்தியன் கூறியதும் தான் சுருங்கிய காமாட்சியின் முகம் சகஜ நிலைக்குத் திரும்பியது.

“என்னம்மா, அலமேலு ஒண்ணுமே பேசல்ல. என்னவோ யோசனயாவே ருக்கியே ?” கணபதி தன் மகளைக்கேட்கிறார். “ல்லப்பா. அண்ணனுங்க யாருமே கல்யாணத்துக்கு வரல்லன்றத நெனச்சாத்தான் வருத்தமா ருக்குப்பா.” என்றவுடன், “ம்,.. அதுக்கு என்னம்மா செய்யிறது ? அவங்களுக்கு வரமுடியாத சூழ்நிலை. துக்கெல்லாம் வருத்தப்படாதம்மா. எப்பிடியும் அடுத்த வருஷம் வருவாங்க. அதுக்குள்ள நீயும் ஒரு பேரனப் பெத்து எனக்கு குடுத்திடுவியாம்”, கணபதி அலமேலுவைச் சமாதானம் செய்கிறார்.குபீரென்று எழுந்த சிரிப்பலை ஓயவே வெகு நேரமானது. அலமேலுவுக்கு நாணத்தில் நா வறண்டது. அவள் முகம் செந்தூரமானது.

கணபதி கூறியது போலவே, அமெரிக்காவிலிருந்து அண்ணன்கள் வந்தனர். அலமேலு அப்போது கர்பமாயிருந்தாள். வீடு நிறைய மக்கள் கூடியதும் சரஸ்வதிக்கு ஒரே ஆனந்தம். மகளுக்கு வளைகாப்பு நடத்தி எல்லோரையும் திக்குமுக்காட வைத்தாள்.

சத்தியனுக்கு ஒரே வருடத்தில் நிரந்தரவாசத் தகுதி கிடைத்தது. அவன் தன் மனைவியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினான். அவளிடம் பெருமதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தான். ரண்டு வருட டைவெளியில் முதலில் மகனும் பிறகு மகளும் பெற்றெடுக்கிறாள் அலமேலு. சரஸ்வதி மகளுக்கு உதவுகிறாள். ல்லையென்றால், அவளால் தன் பணியைத் தொடர்ந்து சிறப்பாகச் செய்ய வழியில்லை.

பிள்ளைகள் பெரும்பாலும் சரஸ்வதியின் பொறுப்பில் வளர்ந்தனர். அருகிலேயே அலமேலு வீடு வாங்கியதும் தற்கு பெரிதும் துணை புரிந்தது. மகனுக்கு தாத்தாவின் நினைவாய் ‘ராஜா’ என்றும் மகளுக்குத் ‘தமிழரசி’ என்றும் பெயரிட்டிருந்தாள். ருவருக்கும் அவளைப்போலவே தமிழில் ஆர்வம் அதிகமாய் ருந்தது. திருக்குறள், ஆத்திச்சூடி , கொன்றை வேந்தன் என்று எல்லாவற்றையும் போட்டி போட்டுக் கொண்டு ஒப்பித்தனர். தொடக்கப்பள்ளியில் சேர்ப்பதற்குள் ருவரும் தமிழில் சரளமாய் வாசித்துப் புரிந்து கொண்டனர்.

அலமேலு குடும்பம் நடத்திய அழகை கணபதி கண் குளிரக்கண்டார்.அவளைக்காணும் போதெல்லாம் பூரிப்பில் கண்கள் அவருக்குக் கலங்கின.தன் நண்பனுக்கு தான் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றி விட்ட நிம்மதியில் மனம் நிறைகிறது.

காமாட்சி யாரும் எதிர்பாராத திருப்பத்தை வீட்டில் ஏற்படுத்துகிறாள். உடன் பணியாற்றும் ஆசாத் என்ற ஸ்லாமிய ளைஞனை வீட்டிற்கு அழைத்து வந்து அறிமுகப்படுத்தி , தான் அவனை மணக்கப்போவதாய் கூறியதும் சரஸ்வதி அதிர்ந்து, அழுது வீட்டில் எல்லோரையும் புலம்பியே கொடுமைப் படுத்துகிறாள். சரஸ்வதிக்கு உடல் நிலை மோசமாகி ஒரு வாரம் ரத்த அழுத்தம் அதிகமாயிருக்கிறது என்று மருத்துவமனையில் சேர்த்து ,பின் குணமாகிறது. மகளின் போக்கு அவளை படுக்கையில் கிடத்தி விடுகிறது. தற்கெல்லாம் காமாட்சி அசைவதாய் ல்லை. அம்மாவுக்கு உடல் நிலை சரியானதும் மறுபடியும் தன் திருமணப்பேச்சை எடுக்கிறாள்.

காமாட்சியின் பிடிவாதம் தெரிந்திருந்ததால், அவள் மனம் மாறாது என்று அறிந்து வேறு வழில்லாமல் அரை மனதுடன் திருமணத்திற்குச் சம்மதிக்கிறாள் சரஸ்வதி. கணபதி சற்று முற்போக்கானவர் என்பதால் மட்டுமின்றி மகள் மணமுடிக்கமாட்டாளோ என்று பயந்ததால், யதார்த்தத்தை ஏற்கிறார்.

“ஏங்க, நம்ம னப்பையனா ல்லைன்னாலும், ரொம்ப மரியாதையா ருக்காங்க. கவனிச்சீங்களா ?” சரஸ்வதி அவர்களின் திருமணப்பதிவு தினத்தன்று மெள்ள கணபதியிடம் கேட்கிறாள்.” ஆமாம் சரஸ்வதி. நல்லா ருந்தாச் சரி. காமாட்சி கல்யாணமே கட்டமாட்டான்னு பயந்தேன். ஏதோ தன்னிஷ்டப்படியாவது பண்ணிக்கிட்டாளே. ப்போ எனக்கு ஒரு கொறையும் ல்ல, சரஸ்வதி. அந்தப் பையன் கடைசி வரை அவளைக் காப்பாத்துவான்னு தான் எனக்கு தோணுது.”

ஆசாத் ஈப்போவைச் சேர்ந்த மலாய் னத்தவன். ருவரும் வேலையை விட்டுவிட்டு, தொழில் செய்யும் நோக்கத்தில் ஈபோவில் குடியேறுகின்றனர்.

(ஒள)

அலமேலு தன் தமிழாசிரியர் பணியை உயிர் மூச்சாகக் கொண்டு உழைத்தாள். பாடங்கள் கற்பிப்பதில் அவள் ஒரு முன்னுதாரணமாகவே திகழ்ந்தாள். தன் பள்ளியில் மட்டுமின்றி, வேறு பள்ளிகளிலும் கூட அலமேலுவின் திறமை பிரபலமானது. உயர் நிலைப்பள்ளியொன்றில் தலமையாசிரியர் பொறுப்பை ஏற்று ஒரே வருடத்தில் தமிழ் ஆசிரியராய் சேவையாற்றியதற்காக, 1978ல் அலமேலுவிற்கு அரசாங்கம் சிறந்த ஆசிரியருக்கான விருதைக் கொடுத்துச் சிறப்பித்தது. ச்செய்தி கேட்டதும் கணபதிக்கும் சரஸ்வதிக்கும் பெருமையில் விண்ணில் பறப்பது போலிருந்தது.

விருது வழங்கும் விழாவிற்கு அமெரிக்காவிலிருந்து அண்ணன்மார்கள் குடும்பங்களுடன் வந்தனர். ஈப்போவிலிருந்து காமாட்சியும் ஆசாதும் வந்தனர்.

நாளிதழ்கள் மற்றும் பற்பல பத்திரிக்கைகளிலிருந்து நிருபர்கள் விதவிதமாய் பல கேள்விகள் கேட்டனர் அலமேலுவை. சுபாவமாகவே சற்று கூச்சம் நிறைந்த அவளுக்கு திடாரென்று தான் கவனிக்கப்படுவது சொல்லத்தெரியாத உணர்வைத் தந்தது. குடும்பத்துடன் புகைப்படங்கள் சிலவற்றை எடுத்து விட்டுப் பேட்டியெடுத்தார்கள்.

ஒரு நிருபர்,” நீங்கள் பார்க்க சீனப்பெண் போல ருக்கிறீர்கள். ஆனால் தமிழ் ஆசிரியராய் ருக்கிறீர்கள். து எப்படி ?தற்கு உங்களுக்கு ஊக்கம் கொடுத்தது யார் ? நீங்கள் பிறப்பால் தமிழரா ல்லை சீனரா ?”, என்று கேட்டதும் அலமேலுவிற்கு உடனே பதிலளிக்க முடியவில்லை. எத்தனையோ முறை எதிர் கொண்ட கேள்வி தான் என்றாலும் ப்போது கேட்பது பத்திரிக்கை நிருபர். பதில் சாதுர்யமாய் ருக்க வேண்டியிருந்தது. ல்லையென்றால் மறுபடியும் அப்பாவைப் பற்றிய வதந்தி பரவத் தானே காரணமாகக் கூடுமென்ற அச்சம் அவளுள் பரவியது.

பத்து நிமிடங்கள் வரை யோசித்தாள். அனைவரும் பற்பல முக பாவங்களுடன் அவள் வாயிலிருந்து வரப்போகும் பதிலுக்குக் காத்திருந்தனர். சிலருடைய முகத்தில், ‘து என்ன அப்படி ஒரு கடினமான கேள்வியா, த்தனை யோசிக்கிறார்களே ?’, என்ற ஏளனமும், ன்னும் சிலருடைய முகங்களில், ‘தில் ஏதோ மர்மம் ருக்கிறது போலும், ன்று சூடான தகவல் கிடைப்பது நிச்சயம்’, என்ற ஆவலும் அப்பட்டமாய் தெரிந்தது.

அலமேலு தொலைவில் அறைக்கு வெளியில் கண்ணாடிக் கதவிற்கு மறுபுறம் ருந்த தன் குடும்பத்தைப் பார்த்துக்கொண்டே யோசித்தாள். தாத்தாவின் நினைவும் அவளுக்கு வந்தது.

“ க்ஹ்ம்,.. ப்போ ஒரு மண் பானையோ ல்லை, அழகுக்காக பூக்கள் வைக்கும் ஒரு ஜாடியையோ பார்த்தால் நீங்கள் உடனே யாரை நினைப்பீர்கள் ? அதை வாங்கிய கடைக்காரரையா ? நிச்சயமாக ல்லை. அதை வடித்த குயவன் தான் ங்கு சிறப்பிற்கு உரியவன். அந்தக் குயவனுக்கு, முதல் நாளிலிருந்து கால் நோக மிதித்து மிதித்து, மண்ணைத் தயார் படுத்திக் கொடுத்த வேலைக்காரன் கூட எல்லோராலும் மறக்கப் படுகிறான். குயவனைத் தவிர நம் கவனத்தை ஈர்ப்பது அவனின் கைகளும், அவன் சுழற்றி உபயோகிக்கும் சக்கரம் என்று வேண்டுமானால் சொல்லலாம், ல்லையா ?”

அலமேலு சொன்ன பதில் யாரும் எதிர் பார்க்காதது. கேட்ட கேள்விக்கும் சொல்லப்பட்ட பதிலுக்கும் என்ன சம்பந்தம் என்று நிருபர்களிடையே சலசலப்பு. ஏதோ ஒரு வித புதிரோ என்று எல்லோரும் குழம்பினார்கள்.

நிருபர்கள் விடாமல் விளக்கம் கேட்கவே,” நீங்கள் விளக்கம் கேட்பதால், …க்ஹும்,. . . சொல்கிறேன். தில் அந்த வேலைக்காரனே எனக்கு உடலும் உயிரும் கொடுத்த என் பெற்றோர். தில் நான் சொன்ன சக்கரம் தான் என் குடும்பம். குயவன் என் தந்தையைப் பெற்ற என் தாத்தா ராஜ மாணிக்கம். குயவனின் கைகள் தான் என் அப்பா. கடைக்காரன் என்பது ஆசிரியர் பணி. நான் பிறந்த ஒன்றரை மாதத்திலேயே என் அப்பாவால் வளர்க்கப்பட்டேன். அப்பாவின் உயிர் நண்பனின் மகள் நான். அதனால், நான் முற்றிலும் ஒரு தமிழ் பெண் தான்”, தைக் கூறி முடிப்பதற்குள் அலமேலுவிற்கு உணர்ச்சிப் பெருக்கில் கண்கள் பனித்து நாக்குக் குழறி விடுகிறது.

“ சிறுவர்களிடையே தமிழ் மொழியார்வத்தை ஊட்ட பெற்றோருக்கு உங்கள் அறிவுரை ?”

சமாளித்துச் சிரித்தபடி,“ம்,.. வீட்டில் தமிழிலேயே பேசி , மேலும் அவர்கள் நிறைய தமிழை காதில் கேட்கும் சூழலை ஏற்படுத்தினாலே போதுமானது. தமிழை அவர்களிடம் வலுக்கட்டாயமாகத் திணித்தால் நிச்சயம் வெறுப்பு வரும் அபாயமே உண்டு என்பது தான் என்னுடைய எண்ணம்”, என்று பதில் அளிக்கிறாள்.

விழா முடிந்து வீடு நிறைய பேரப்பிள்ளைகளுடன் ஒரே கோலாகலமாக ருந்தது. கணபதி தன் வயதையும் மறந்து பத்து வயதுப் பாலகனாகத் துள்ளி விளையாடினார். ஆகா! அமெரிக்க, சீன, மலாய் மற்றும் ந்திய முகங்களில் அந்த மழலைகள் தான் அவரை எப்படி மயக்கின. தன் தந்தையை நினைவு கூர்கிறார். அவர் அல்லவா தனக்கும் அலமேலுவுக்கும் வாழ்க்கையில் ஒரு பொருளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். அவர் மட்டும் அன்று பிடிவாதமாய் கணபதிக்கு பொறுப்பை உணர்த்தியிராவிட்டால், ந்தக் குடும்பமே எப்படியிருந்திருக்குமோ, மற்றும் அலமேலு எங்கிருந்திருப்பாளோ என்று அவர் வியப்பிலாழ்கிறார்.

மிகச் சர்வசாதாரணமாக தன் மகனான தன்னைத் திருத்தியதுடன், அனாதையாகவிருந்த அலமேலுவுக்கும் வாழ்வளிக்க சைந்ததோடு அவளுக்குத் தமிழ்ப்பால் ஊட்டி ஆளாக்கியவர் அல்லவா ?!அலமேலு சொன்ன உவமையை மனதிற்குள் அசை போட்டுச் சுவைக்கிறார். பச்சை மண்ணாக க்குடும்பத்தில் புகுந்த அவளைப் பக்குவப்படுத்தி, பாடம் செய்து, ஒர் உயர்ந்த உருவம் கொடுத்த குயவரல்லவா அவர் ?!பிரம்ம தேவனையும் விஞ்சி நின்றார் தந்தை, தனயனது நினைவிலே! அவரது படைப்புத்தான் எத்தகையது; கலை நயத்துடன் குலவிளக்காய் காலத்தால் அழியாதது ! வீட்டுக் கூடத்தில் தனக்கென்று அலமேலு போட்டுக் கொடுத்த ஊஞ்சலில் ஆடியபடி பிள்ளைகளுடன் விளையாடுகிறார். ராஜாவும் தமிழரசியும் தமிழ்ப்பாட்டுப் பாட ஆரம்பித்ததும் ஆரவாரம் நின்று அமைதி நிலவுகிறது. மற்ற பிள்ளைகளெல்லோரும் புரிகிறதோ ல்லையோ அமைதியாக அமர்ந்து, அவர்கள் பாடும் பாட்டுக்களைக் கேட்கின்றனர்.

கணபதி மெள்ள சாய்ந்தவாறு அமர்ந்து கொள்கிறார். எல்லோருடைய முகங்களையும் கூர்ந்து நோக்கி ரசிக்கிறார். “ தமிழ், நீயும் அண்ணனும் சேர்ந்து கந்தசஷ்டி கவசம் பாடுங்கம்மா.அம்மாடி, . . தாத்தாவுக்குக் கேக்கணும் போல ருக்கு”, என்று அவர் கூறியது தான் தாமதம், உடனே கூச்சமோ தயக்கமோ ல்லாமல் கணீரென்று குரலெடுத்துப் பாடுகின்றனர் ராஜாவும் தமிழரசியும். கேட்டபடியே படுத்துக் கொள்கிறார். ஆடிய ஊஞ்சல் மெள்ள வேகம் குறைந்து, மெல்ல அடங்கி நிற்கிறது.

(Dedicated to the people of Singapore)

—————–(முற்றும்)—————– தமிழ் முரசு ( 05-10-02/12-10-2/17-10-02/24-10-02)

Series Navigation

ஜெயந்தி சங்கர்

ஜெயந்தி சங்கர்