தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா
ஈரம் வரண்டு இதயம் கடினமாய்
இறுகும் போது, நீ
மேனி அனைத்தையும் ஒருங்கே
குளிப்பாட்ட வா,
கனிவு மழை பொழிந்து!
வாழ்க்கையின் நளினம் மங்கி
வற்றிப் போனால்,
உள்ளத்தில் கீத
வெள்ளம் அடித்திட
விரைந்தோடி வா!
அரவத் தொல்லை எழுப்பும்
வேலைக் கொந்தளிப்பு
நாற்புறமும்,
சிறையிட் டென்னை அப்பால்
நகரத் தடைசெய்தால்,
மெளன அதிபதியே!
உந்தன் மோன அமைதி
ஏந்தி என்னிடம்
வந்துவிடு!
மண்டி யிட்டுக் கையேந்தி
அண்டி யாசிக்கும்
என்னிதயம்
முக்கு ஒன்றிலே
சிக்கிக் கொண்டால்,
என்னரும் வேந்தே!
கதவை யுடைத் தென்னைக்
காண வா,
மங்கலச் சடங்குகள் முழங்கிடும்
வேந்தன் போல்!
மண் புழுதிகள் படிந்து
மயக்கம் தரும்,
மாய இச்சைகள் எனது
நெஞ்சைக் குருடாக்கி விட்டால்,
துஞ்சாமல் கண் விழிக்கும்
தூயனே!
ஒளிமயமான உன்னுருவில்,
என்னிடம் வா
மின்னல் இடியோடு!
****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (September 4, 2005)]
- உயிருள்ள அதிசயம்..
- பால் கடன்
- காலம் இலக்கிய மாலை – ஒக்டோபர் 8 சனிக்கிழமை – மாலை 6.00 மணி
- கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி
- கடிதம்
- கடிதம்
- வடக்கு வாசல் வெளியீடு
- கடிதம்
- சொன்னார்கள்
- தொட்டி ஜெயா : விமர்சனம்
- ஹரிக்கேன் பாதுகாப்புக் கரைமதிலைத் தகர்த்து நியூ ஆர்லியன்ஸ் நகரை நிர்மூலமாக்கிய கேட்ரினா (Breaking of Levees By Hurricane Katrina
- விசும்பல்
- எடுப்பார் கைப்பிள்ளை
- ஞானப்பழத்துதி…
- அஸ்காரிக்கு மற்றுமொரு வழி
- காவல் பூனைகள்
- ராண்டி நியூமானின் கவிதை
- ‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘
- கீதாஞ்சலி (39) புனிதனே ஒளிமயமாய் வா! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 55 – ( திருநாவுக்கரச நாயனார் புராணம் தொடர்ச்சி )
- நடை – பகுதி – 4 – திருப்பதி பெருமாள்
- சே குவாரா – புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல்
- முதலாளித்துவ சூழலியற் சிக்கல் (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 2 – கண்டல் காடுகள் (Mangroves)
- தலாய் லாமா: அறிவியல், மதம், அரசியல்
- ஏ.வி.எம்-ரஜினி-ஷங்கர் கூட்டணியில் ‘சிவாஜி ‘
- மத்ரீதில் பீஹார்
- தொன்மமும், குழந்தை மரணமும் அல்லது ஆண்களுக்கு காது குத்துதல்
- நிழல் நிஜமாகிறது…
- நினைவெல்லாம் நித்யா !
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-7)