கீதாஞ்சலி (36) புனித பீடத்தில் களவு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 22 in the series 20050819_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


பகற் பொழுதில்
அவர்கள் யாவரும் ஒருங்கே
புகுந்தனர்
இல்லத்திற் குள்ளே!
‘உங்கள் வீட்டின் மிகச்சிறு
ஓர் அறையே
எமக்குப் போது மானது!
உமக்கு நாங்கள்
உதவிட விழைகிறோம்
இன்று,
நீங்கள் கடவுளை,
வழிபடும் வேளையில்!
எமக்காக இறைவன் அளிக்கும்
பகுதி அருள்
வெகுமதி போது மானது!
ஏற்றுக் கொள்வோம்,
பணிவுடன் அதனை, ‘
என்று
தணிவாய்க் கூறினர்.

அவ்விதம் கூறி
அனைவரும் பரிவுடன்,
பவ்விய மாக வீட்டு மூலையில்
அமைதியாய்
அமர்ந்து கொண்டனர்.
காரிருள் சூழ்ந்த நள்ளிரவில்,
திடாரென எழுந்து,
பேராசைத் தனமாக
ஆரவாரமாய்
வன்முறை வலுவினைக் காட்டி
என்கண் முன்பாக
எனது
புனித பீடத்தின்
பூட்டை உடைத்து உள்ளே
புகுந்து
வேட்டை யாடிச் சென்றார்,
சன்னிதியில் ஆராதனை
சமர்ப்புகளைக்
களவாடிக் கொண்டு!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (August 15, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா