கீதாஞ்சலி (24) காலையிலே எழும் கீதம்!

This entry is part [part not set] of 28 in the series 20050526_Issue

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


என்னுடன் நீ
உரையாடாமல் இருந்தால்,
உன்னுடைய மெளனத்தைச் சேர்த்து
நிரப்பிக் கொள்வேன்,
எனது
நெஞ்சில் இட்டு!
எப்படியும் அதைத் தாங்கி
இனிமேல்
பொறுத்துக் கொள்வேன்!
ஆயினும்
விண்மீன்கள் கண் விழிப்புடன்
இரவைக்
கண்காணித்து வருவது போல்
சிரம் கோணிக்
காத்திருப்பேன் கவலையுடன்!
காரிருள் மறைந்து நிச்சயம்,
சூரியன் உதிக்கும்
காலையில்.

அப்போது
வானை இடித்துக் கொண்டு
கீழே
பொன்னொளிக் கதிர்களில் உன்குரல்
பொழிந்து பெய்யும்!
என் பறவைகளின்
ஒவ்வொரு கூட்டி லிருந்தும்
உன்னிதழ்கள் உதிர்க்கும் வாசகங்கள்
சிறகுகளை ஏந்திப்
பறந்து வரும்,
இன்னிசைக் கீதங்களாய்!
என்னுடைய
வனாந்திரத் தோப்புகளில் எல்லாம்
மலர்ந்த
பிஞ்சுப் பூக்களில்
நெஞ்சை உருக்கும்
உன்னினிய மெல்லிசைகள்
ஒலித்து வரும்!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (May 22, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா