“காவடிச் சிந்து புகழ் சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியார்”

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை


இசைத் தமிழ் மாந்தர் நெஞ்சங்களை இசைய வைக்கும் திறன் கொண்டது. மக்கள் விரும்பும் பலவகை இசைகளில் சிந்து இசை என்பதும் ஒன்று. சிந்து இசை செவியைக் குளிரச் செய்யும். சிந்தையைச் சிலிர்க்கச் செய்து, நாடி நரம்புகளைத் தூண்டித் துள்ளச் செய்யும். சிறுவர் முதல் பொ¢யோர் வரையிலும், கற்றோர் முதல் கல்லாதார் வரையிலும் ஏற்கச் செய்யும் ஒப்பற்ற இசை வடிவானது காவடிச் சிந்து. இது புதியதொரு இலக்கிய விருந்தாகும். இப்புதிய விருந்தை உருவாக்கி வழங்கியவர் ஓர் இளைஞர். அவர் வயது இருபத்தைந்துக்குள் இருக்கும். அவர் தான் சென்னிக்குளம் அண்ணாமலை ஆவார்.

இரண்டாவது கம்பர் எனப் பாராட்டப்பெற்று விளங்கிய தி¡¢சிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை காலத்தில் பிறந்தவர் இவ்வண்ணாமலைரெட்டியார் ஆவார். தென்பாண்டிச் சீமையில் உள்ள நெல்லை மாவட்டத்தில் இருக்கும் சென்னிக்குளம் என்ற சிற்றூ¡¢ல் 1860-ஆம் ஆண்டு சென்னவ ரெட்டியாருக்கும், ஓவு அம்மாவிற்கும் மகனாக அண்ணாமலை ரெட்டியார் பிறந்தார்.

அக்கால முறைப்படி திண்ணைப் பள்ளியில் படிக்கும் வாய்ப்புத்தான் அண்ணாமலைரெட்டியாருக்குக் கிட்டியது. அவருக்குச் சிவகி¡¢ முத்துசாமிப்பிள்ளை என்பவர் ஆசி¡¢யராக அமைந்தார். அவ்வாசி¡¢யர் பல்வேறு நூல்களையும் அண்ணாமலையாருக்குக் கற்றுக் கொடுத்தார். ஒரு நாள் அண்ணாமலையார் பாட்தைக் கவனிக்காமல் விளையாடிக் கொண்டுள்ளார் எனக் கருதிய ஆசி¡¢யர் அவரைக் கண்டிக்கக் கருதினார். தாம் நடத்திய பாடத்தைத் திருப்பிக் கூறுமாறு கேட்டார். விளையாடிக் கொண்டிருந்த அண்ணாமலையார் தங்கு தடையின்றி ஒப்பித்துவிட்டார். அதனைக் கண்டு ஆசி¡¢யர் அவரைப் பராட்டினார்.

ஒருமுறை அண்ணாமலையார் வீட்டுப்பாடம் எழுதி அதன் கீழ் தமைய பருவதம் என்று கையெழுத்திட்டு ஆசி¡¢யா¢டம் தந்தார். தமைய பருவதம் என்பதன் பொருள் ஆசி¡¢யருக்குப் பு¡¢யவில்லை. ஆசி¡¢யர் அண்ணாமலையை அழைத்து, அண்ணாமலை! தமைய பருவதம் என்று இதன் கீழே கையெழுத்திட்டுள்ளாயே! அதன் பொருள் என்ன? என்று வினவினார்.

அதற்கு அண்ணாமலையார், தமையன் என்றால் அண்ணா. பருவதம் என்றால் மலை. அண்ணாமலை என்ற பெயரைத்தான் அவ்வாறு எழுதியுள்ளேன் ஐயா என்று பணிவுடன் கூறினார். அதனைக் கேட்ட ஆசி¡¢யர், “அப்பா அண்ணாமலை! உன் புலமைப் பசிக்கு நான் தீனிபோட முடியாது. நீ வேறு எங்கேனும் சென்று பயில்க” என்று ஊக்கப்படுத்தி அவருக்குப் பள்ளியிலிருந்து விடைகொடுத்து அனுப்பினார். சென்னிக்குளத்தில் உள்ள மடத்திற்குச்சென்று அங்கு மேற்பார்வைப் பணியைச் செய்து கொண்டிருந்த சுந்தரஅடிகளிடம் தொடர்பு கொண்டு அவா¢டமிருந்து பல்வேறு நூல்களை வாங்கிப் படித்தார். அண்ணாமலையின் தமிழ் ஆர்வத்தைக் கண்ட அடிகளார் தாம் கற்றிருந்த நூல்களையெயல்லாம் கற்பித்தார்.

அண்ணாமலைக்குப் பதினாறு வயது முடிந்தது. தம் ஒரே மகன் நல்ல விவசாயியாக வருவான் என்று எதிர்பhர்த்த சென்னவ ரெட்டியாருக்கு அண்ணாமலையின் போக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது. தம் மகன் நிலையை எண்ணி வருந்தினார். தோட்ட வேலையில் கவனம் செலுத்தும்படி நயமாகச் சொல்லிப் பார்த்தார். அண்ணாமலையின் மனம் வேலை செய்வதில் ஈடுபடவில்லை. ஒருநாள், “தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சப் போ” என்று அண்ணாமலைக்கு அவரது தந்தை கட்டளையிட்டார். தந்தையின் வற்புறுத்தலால் தோட்டத்திற்குச் சென்று தண்ணீர் பாய்ச்சத் தொடங்கினார். கவிதைக் கன்னி அவரைக் கட்டித் தழுவலானாள். அண்ணாமலை கடமையை மறந்தார். ஒரு மர நிழலில் கற்பனையில் ஆழந்தார். வாய்ககாலில் வந்த கண்ணீர் தோட்டப் பாத்திகளில் பாயவில்லை. தா¢சில் பாய்ந்தது. அதைக் கண்டு சீற்றம் கொண்ட அவரது தந்தை அவரைக் கடிந்து கொண்டு, வீட்டுக்கு அவர் வந்தால் சாப்பாடு கிடைக்காது என்று கூறிவிட்டார். தந்தையா¡¢ன் சினத்துக்கு ஆளான அண்ணாமலை சுந்தர அடிகளின் மடத்திற்கு வந்தார். அவரைக் கண்ட அடிகளார் அவருக்கு இரங்கி உணவும் தந்தார். தம் மகன் பிச்சைக்காரனைப் போல மடத்தில் சாப்பிடுவதா? எனக் கோபமுற்று அங்கு வந்து அண்ணாமலையை அடித்தார். இதனைக் கண்ட சுந்தர அடிகளார், இவனை ஒன்றுக்கும் உதவாதவன் என்று கருதாதீர்கள். இவன் புகழின் உச்சியைத் தொடப் போகின்றான். நான் இவனை அறிஞனாக்கிக் காட்டுகிறேன் .என்று கூறி அண்ணாமலையின் தந்தையைச் சமாதானப்படுத்தி அவா¢டம் சூளுரைத்தார்.

அண்ணாமலையை சேற்றூர் அரசர் வடமலைத் திருவநாத சுந்தரதாசுத் துரையிடம் அழைத்துச் சென்று அவரைப் பற்றி பாடல்கள் பாடுமாறு அண்ணாமலையைப் பணித்தார். அண்ணாமலையார் பாடிய பாடல்களைக் கேட்ட அரசர், “இந்தச் சிறுவன் இவ்வளவு சிறந்த பாடல்களை எங்ஙனம் இயற்ற இயலும்! இவன் பாடிய பாடல்கள் இவனுடையது அல்ல என்று கருதுகின்றேன்” என்றார். அரசா¢ன் உரையினைக் கேட்ட அடிகள் மனம் வருந்தினார். எவ்வாறேனும் அண்ணாமலையின் திறமையை அரசர் உணரும் வண்ணம் செய்ய வேண்டும் என்று கருதினார். அரசரைப் பார்த்து இவன் செய்யுள் இயற்ற வல்லவனா? ஆற்றல் இல்லாதவனா? என்பதைத் தாங்கள் பா¢சோதித்து உணரலாமே என்றார். அரசரும் அண்ணாமலையைப் பார்த்து, “கா¡¢கை என்னும் சொல் ஒரே செய்யுளில் ஏழு இடங்களில் வெவ்வேறு பொருள்பட வருமாறு அகப்பொருட் துறையமைய ஒரு கட்டளைக் கலிப்பா இயற்றுக” என்றார். அண்ணாமலையார் உடனே பாடினார். பாடலைக் கேட்டு மன்னர் அயர்ந்து போனார். அண்ணாமலையின் திறமையை வியந்தார். அண்ணாமலையின் கவித்திறமை கண்ட அரசர் அவரை முகவூர் இராமசாமிப் புலவா¢டம் இலக்கணம் கற்பதற்கு அனுப்பினார். அண்ணாமலையும் நாள்தோறும் அரண்மனையில் உணவருந்தி முகவூர் சென்று இலக்கணம் கற்று வந்தார்.

ஒருமுறை அண்ணாமலைக்கு எண்ணெய் தேய்த்துவிடுவதற்காக அரண்மனைப் பணியாள் ஒருவன் வந்தான். அண்ணாமலை சிறியவன் தானே என்ற அலட்சிய நினைவால் அவர் அமர்வதற்குப் பலகையிடாமல் தரையில் அமரச் சொன்னான் அவன். அவனிடம் அண்ணாமலை “நீ இருகையுடன் வந்தால் எண்ணெய் தேய்த்துக் கொள்ளமாட்டேன். பலகையுடன் வா” என்றார். பணியாள் ஒன்றும் பு¡¢யாது, எனக்கு இரு கைதான் உள்ளது. நான் பல கைக்கு எங்கே போவேன் என்று கூறிவிட்டு எண்ணெய் தேய்க்காது சென்றுவிட்டான். அரசர் இச்செய்தியை அறிந்து அண்ணாமலையிடிடம் அது குறித்துக் கேட்டார். அண்ணாமலை நடந்ததைக் கூற அரசர் அவா¢ன் சொற் சாது¡¢யத்தை அறிந்து வியந்தார். சேற்றூ¡¢ல் இருந்த கல்லாட சாமியா¢டம் கல்லாடம் பாடம் கேட்டு அண்ணாமலையார் தமது அறிவைப் பெருக்கிக் கொண்டார்.

பல்வேறு இலக்கண இலக்கிய அறிவும், இசைப் பயிற்சியும் பெறவேண்டும் என்று கருதிய அண்ணாமலையார் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சென்று அதன் தலைவராயிருந்த சுப்பிரமணியதேசிகா¢டம் பாடம் கேட்டார். மேலும் அப்போது ஆதீனத்தில் இருந்த தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்களிடம் நன்னூலும், மாயூர புராணமும் பாடம் கேட்டார். திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வருகை பு¡¢ந்த பல கலைஞர்களிடம் இருந்து பல இசை நுட்பங்களையும் அறிந்து கொண்டார். அத்துடன் இசையுடன் பாடல்களைப் பாடும் பழக்கமும் அண்ணாமலையாருக்குக் கைவரப் பெற்றது. ஆதீனத்தில் இருந்தபோது அண்ணாமலையார் சுப்பிரமணியதேசிகர் மீது நூற்றுக்கணக்கான பாடல்கள் புனைந்தார்.

திருவாவடுதுறையிலிருந்து சென்னிகுளம் வந்து சேர்ந்த அண்ணாமலை, மீண்டும் சுந்தர அடிகளின் உதவியினால் ஊற்றுமலைக்குச் சென்று அங்கு அரசராக இருந்த திருஇருதயாலய மருதப்பத் தேவா¢ன் அரசவைப் புலவராக அமர்ந்தார். ஊற்றுமலையரசா¢ன் குல தெய்வமாகிய வீரகேரளம்புதூர் நவநீதகிருஷ்ணர் மீது வீரையந்தாதி, வீரைப்பிள்ளைத் தமிழ் முதலிய சில பிரபந்தங்களைப் பாடினார். அப்பிரபந்தங்கள் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன. மன்னர் பல பா¢சுகளை வா¡¢ வழங்கினார். அண்ணாமலையாருக்கு இப்பிரபந்தங்களைப் பாடியதற்காக அரசர் காரைவீடு ஒன்றையும் கட்டிக் கொடுத்தார்.

மேலும் வீரையந்தாதி, சங்கரன் கோவில் கோமதியம்மன் மீது சங்கரன் கோவில் தி¡¢பந்தாதி, கருவை மும்மணிக்கோவை, கோமதி அந்தாதி உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் அண்ணாமலையார் படைத்தளித்தார். வெள்ளகால் ப.சுப்பிரமணியமுதலியார், வீரகேரளம்புதூர் சுப்பிரமணிய சாத;தி¡¢யார், கா¢வலம் வந்த நல்லூர் உத்தண்டம்பிள்ளை, பாண்டித்துரைத்தேவர் முதலியோர் அண்ணாமலையாருடன் தொடர்பு கொண்ட சம காலத்தவர் ஆவர்.

ஊற்றுமலை ஜமீன்தார் சிறந்த முருக பக்தர். கழுகுமலைக் கந்தன் மேல் அன்பு கொண்டவர். அவர் ஒரு முறை கழுகுமலைக்குப் பால் காவடி எடுத்தார். ஊற்றுமலையிலிருந்து புறப்பட்டு, கழுகுமலை வரையில் காவடி எடுத்துக் கொண்டு கால்நடையாகவே வரவேண்டும். அவருடன் அண்ணாமலையாரும் மற்றும் சில புலவர்களும் உறவினர்களும் பணியாளரும் உடன் வந்தனர். அப்போது அண்ணாமலையார் பலவிதமான சந்தங்களிலே பலப்பல பாடலகளைப் பண்ணிசையுடன் பாடிக்கொண்டே வந்தார். அப்பாடல்களின் நயத்திலும், இசையிலும் ஈடுபட்ட ஜமீன்தாருக்கு வழிநடையால் களைப்பு சிறிதும் ஏற்படவில்லை. தன்னை மறந்து நடந்தார். இதைப்பற்றி,

“அண்ணாமலையாரை ஆதா¢த்துப் போற்றியவர் ஊற்றுமலை ஜமீன்தார் ஆகிய ஹிருதயாலய மருதப்பத்தேவர் என்பவர். அந்த ஜமீன்தார் தமிழ்ப் பயிற்சியுடையவர். அவர் ஒரு சமயம் கழுகுமலைக்குக் காவடி எடுக்கும் பிரார்த்தனை செய்து கொண்டார். அதன்படி காவடி யெடுத்தபோது, உடன் அண்ணாமலை ரெட்டியாரும் சென்றார். ரெட்டியார் அதற்குமுன் தாம் இயற்றி வைத்திருந்த காவடிச் சிந்தை வழிநெடுகப் பாடிக்கொண்டே சென்றார். அதைக்கேட்டு இன்புற்ற ஜமீன்தாருக்கு வழிநடையில் உண்டான சிரமமே தோன்றவில்லையாம். இந்தச் செய்தியை அந்த ஜமீன்தாரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.” என்று டாக்கடர் உ.வே,சாமிநாதையர் நினைவு மஞ்சா¢யில் கூறியிருப்பது நோக்கத்தக்கது.

“சீர்வளர் பசுந்தோகை மயிலான் – வள்ளி

செவ்விதழ்அல் லாதினிய

தெள்ளமுதும் அயிலான்

போர்வளர் தடங்கையுறும் அயிலான் – அவன்

பொன்னடியை இன்னலற

உன்னுதல்செய் வாமே”

என்று தொடங்கிய பாடல் தொடர்ந்து கொண்டே சென்றது. பாடல் கேட்ட அனைவரும் ‘ முருகா முருகா ‘ என்று கூறி மெய் மறந்தனர்.

எத்தனையோ பாடல்கள்! ஒவ்வொரு பாடலும் வெவ்வேறு சந்தம்! வெவ்வேறு மெட்டு. வெவ்வேறு துறை, எல்லாம் புதுமை, எதுகை மோனைகள் வந்து ஏவல் கேட்டன. இயைபுத் தொடை அடிதோறும் அணி வகுத்து நின்றது. அன்றிலிருந்து, “வாக்கிற்கு அருணகி¡¢” என்ற வாசகம் “வாக்கிற்கு அண்ணாமலை” என்று வி¡¢ந்தது. பழைய பாடல்களின் சாயல் அறவே இல்லாத புதுவகை நாட்டுப் பாடலாகக் காவடிச் சிந்து மலர்ந்தது.

அண்ணாமலையார் பல்வேறு நூல்களை இயற்றி இருப்பினும் அவருக்குப் புகழ் சேர்த்தது காவடிச் சிந்துப் பாடலகளே ஆகும். காவடிச் சிந்து மட்டும் அவர் காலத்திலேயே அச்சாகி விட்டது. ஊற்றுமலையரசர் வழிநடையில் பாடப்பட்ட காவடிச் சிந்துப் பாடல்களையெல்லாம் திரட்ட முயன்றார். இருபத்து நான்கு பாடல்களே முழுமையாகக் கிடைத்தன. மற்றவை ஆசுகவியாகப் பாடப்பட்டமையால் காற்றோடு கலந்து மறைந்து போயின. ஊற்றுமலையரசர் கிடைத்தவற்றை மட்டும காவடிச்சிந்து எனப்பெயா¢ட்டு, ஆயிரக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு நாடெங்கும் இலவசமாக வழங்கினார். காவடிச்சிந்து நூல் அச்சானதற்கு மகிழ்ந்த அண்ணாமலையார் ஊற்றுமலையரசரையும், அச்சிட்ட நெல்லையப்பக் கவிராயரையும் பாராட்டி ஐந்து கவிகள் பாடியுள்ளார். காவடிச்சிந்தின் இனிமையும் பெருமையும் நாடெங்கும் பரவின. இராமநாதபுரம் சேதுபதி மன்னரும் அப்பாடல்களில் ஈடுபட்டு, அண்ணாமலையை வரவழைத்துப் பா¢சளித்துப் பாராட்டினார்.

அண்ணாமலை நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர் இரு பொருள்படப்பேசி, கேட்பவர்க்கு இன்பம் தருவார். உதவி என்று வந்தவர்க்கு ஊற்றுமலையரசா¢டம் கூறி உதவி கிடைக்கச் செய்வார். ஒருமுறை ஓர் ஏழை வந்து அண்ணாமலையிடம் ‘என் வீட்டில் சாமி கும்பிடவேண்டும். அதற்கு அ¡¢சியும் ஓர் ஆடும் வேண்டும். அரசா¢டம் கூறி, அவை கிடைக்கச் செய்ய வேண்டும்’ என்று வேண்டிக்கொண்டான்.

உடனே அண்ணாமலை, “ஒன்று நடக்கும்; இன்னொன்று நடக்காது’. என்றார். அதைக் அகட்ட அவன், நாம் கேட்டதில் ஒன்றுதான் கிடைக்கும் போலும்! என்று எண்ணி முகம் வாடி நின்றான். “ஐயா எப்படியாவது இரண்டும் கிடைக்கச் செய்யவேண்டும்” என்று கெஞ்சினான்.

அந்த ஏழையின் வருத்தத்தை உணர்ந்து, “நீ கேட்கும் இரண்டில் ஆடு ஒன்றுதான் நடக்கும். அ¡¢சி நடக்காது அல்லவா! இதைத்தானே சொன்னேன். நீ ஏன் வருந்த வேண்டும்?” என்றார் இதைக் கேட்ட ஏழை அவர் சொல்லாற்றல் கண்டு மகிழச்சியடைந்தான். பின்னர் அரசா¢டம் அவனை அழைத்துச்சென்று அவனுக்கு உதவி கிடைக்கும்படி செய்தார்.

பி¡¢தொருமுறை அண்ணாமலை, ஊற்றுமலை அரசருடன் உலாவச் சென்றார். அரசர் முன்பே போய்விட்டார். அண்ணாமலை பின் தங்கிவிட்டார். அரசர், ‘ஏன் தாமதம்?’ என்று வினவினார்.

‘முட்டாளுடன் வந்ததால் தாமதமாகி விட்டது’ என்றார் அண்ணாமலை.

தம்மை இவ்வாறு முட்டாள் என்று கூறமாட்டாரே என்று தயங்கினார் அரசர். உடனே அண்ணாமலை, ஆம்! முள் தாளுடன் (காலுடன்) வந்துவிட்டது. அதனால் தாமதம் ஆகி விட்டது’ என்று விளக்கினார். அரசர் மகிழ்ந்து பாராட்டினார்.

திருப்புகழுக்கு நிகராகக் காவடிச் சிந்து பாடிய அண்ணாமலை, அருணகி¡¢க்கு நிகராக வாழ்விலும் இடறி விழுந்தார். அண்ணாமலையா¡¢ன் நிலையை அறிந்த அவரது தந்தையார் காலம் தாழ்த்தாது அவரது இருபத்துநான்காம் வயதில் திருமணம் முடித்து வ¨த்தார். கவிஞரைக் கைபிடித்த கா¡¢கை குருவம்மாள் அழகும் பொலிவும் மிக்க பெண்ணாகத் திகழ்ந்தார். புதுமனைவியுடன் ஊற்றுமலைக்கு வந்த அண்ணாமலை நெடுநாள் இன்பமாக வாழ இயலவில்லை. முன்னரே மேற்கொண்டொழுகிய தீயொழுக்கம் இவர் உடலைக் கெடுத்துவிட்டது.

அருந்தமிழ் பாடிய பெருந்தகையாளனை தீராத நோய் கவ்வியது அப்போது அவயருக்கு வயது இருபத்தாறு. தம் அவைக்கவிஞர் பிணியுற்றதறிந்த ஊற்றுமலையரசர், பலவித மருத்துவங்கள் செய்வித்தார். நோய் நீங்கவில்லை மருத்துவத்தால் இனிப் பயனில்லை எனக்கண்ட அவர், தமது பல்லக்கில் சென்னிக்குளம் அனுப்பி வைத்தார். வேண்டிய பொருள் உதவிகளும் செய்து வந்தார்.

ஒருமுறை ஊற்றுமலை அரசர் தாமே கவிஞரைக் காணவந்தார், அரசரைக்கண்டு மகிழ்ந்த அண்ணாமலை, “வாடா மருதப்பா! வாடிவிட்டேன் பார்த்தாயா!” என்று வரவேற்றார். அங்கிருந்தவர்கள் திகைப்புற்றனர். அரசரை மா¢யாதை யில்லாமல் வாடா என்று அழைக்கின்றாரே என்று எண்ணினர். அவர்களின் திகைப்பை அறிந்த அண்ணாமலை, “நான் அரசரை மா¢யாதையில்லாமல் வாடா என்று அழைப்பேனா? வாடா(த) மருதப்பா என்றல்லவா அழைத்தேன். இன்பம் துன்பம் எதுவந்தாலும் வாடாமலிருப்வர் நம் அரசர் அல்லவா?” என்று விளக்கம் கூறினார். பிணியால் மெலிந்து மரணப் படுக்கையில்இருக்கும்போதும் கவிஞர்பால் மிளிரும் நகைச்சுவையைக் கண்டு அரசர் உட்பட அனைவரும் வியந்தனர்.

அருளாளர்கள் சில குறிப்பிட்ட கா¡¢யங்களுக்காகவே தோன்றுகின்றனர். அக்கருமங்கள் முடிந்தவுடனே விடைபெற்றுக்கொள்கின்றனர். திருஞானசம்பந்தர் பதினாறு ஆண்டுகளே வாழ்ந்து இறையருள்பெற்றார். ஆதிசங்கரரும், விவேகானந்தரும் தங்கள் பணிமுடிந்தவுடனே இளமையிலேயே இவ்வுலகிலிருந்து விடைபெற்றுக்கொண்டனர். அண்ணாமலையாரும் 1891-ஆம் ஆண்டு தைமாதம் அமாவாசையன்று தமது இருபத்தொன்பதாவது வயதில் கழுகுமலைக் கந்தனைக் கருத்தில் கொண்டு தம் கமலக் கண்கள் இமைப்பதை மறந்தார் ; பொன்னுடம்பு நீங்கிப் புகழுடல் பெற்றுவிட்டார். காவடிச்சிந்து புகழ் அண்ணாமலையார் மறைந்தாலும், கழுகுமலைக் கந்தன் மீது அவர் பாடிய காவடிச்சிந்து இன்றும் நம் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அது அண்ணாமலைரெட்டியா¡¢ன் புகழைக் கூறிக்கொண்டே இருக்கிறது எனலாம்.
Malar.sethu@gmail.com

Series Navigation

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.