யாழினி அத்தன்
பரிமாணமில்லாத
இருட்டுப்
பிரதேசத்துக்குள்
வீர நடைபோடும்
கொலம்பஸ்களாக
கடிகாரங்கள்…
பிறப்புக்கும், இறப்புக்கும்
உள்ள இடைவெளியில்
இரயில்வண்டியாக
நம்மையும்
ஏற்றிச்செல்லும்…!
ஏ.சி. பெட்டியில்
இருந்தாலும்,
ஓசி பெட்டியில்
இருந்தாலும்
ஊசிமுனை அளவுகூட
வித்தியாசமில்லை…
சக பயணியர்க்கு
கண்ணீர் மல்க
கையசத்து விட்டு
ஏதோ ஒரு
நிறுத்தத்தில்
இறங்கும் போது
எல்லாருமே
ஒன்றுதான்…!
சைவமாயிருந்தாலும்
அசைவமாயிருந்தாலும்
மென்று அதை
விழுங்கிச் செல்லும்
எல்லோருமே
அசைவப்
பிரியர்கள்தான்…
விழுங்கினாலும்
இல்லை
தூர நின்று
புழுங்கினாலும்
ஒரு மலைப்பாம்பு
போல
நம்மை விழுங்காமல்
விடுவதில்லை…!
வெட்டியானும்
விஞ்ஞானியும்
ஏழையும்
பணக்காரனும்
அரசியல்வாதியும்
முனிவனும்
மற்றவரோடு
ஒரே கூண்டில்
நின்று
ஏக்கத்துடன்
கம்பி வழியே
பார்க்கும்
சமத்துவபுரச்
சிறையாக
உலகம்…!
இருட்டுக்களைத் தின்று
வெளிச்சங்களும்
கோடைகளைத் தின்று
குளிர்களும்
ஒன்றைத் தின்று
இன்னொன்றாக
ஒரு ஃசிப்ட்
தொழிலாளி போல
மாறி மாறி
பணி புரியும்…!
ஒரு நீரோடையாக
நிற்காமல் ஊர்ந்து
சென்றாலும்
ஒரு கூழாங்கல்லாய்
அங்கேயேதான்
அமர்ந்திருக்கும்…
காற்றைப் போல
புலப்படாமல்
இருந்தாலும்
உரசலின்
சலசலப்பில்தான்
இருப்புகளைத்
தெரியப்படுத்தும்…!
விடியற்காலை
ரசம் பூசிய
கண்ணாடிகள்
மௌனமாய்
வினவி நிற்கும்
முகச்
சுருக்கங்களின்
கதைகளை…!
சாயம் பூசிய
தலைமுடிகள்
கோடி பொய்கள்
சொன்னாலும்
வழித்த தாடையில்
துளிர்விடும்
ஒரிரு வெள்ளி
தண்டுகள் காட்டிக்
கொடுத்துவிடும்…!
கல்யாணப் பந்தியில்
கைநக்கி,
விரல்கள் சூப்பி
வயிறு முட்ட
சாப்பிட்டுவிட்டு
வீசியெறிந்த எச்சில்
இலைகளாக
வரலாறுகள்…
குப்பைமேட்டுப்
பிராணிகளின்
மீத இலைப்
போராட்டத்தில்
உணரப்படும்
வரலாறுகளின்
மகிமை…!
p.d.ramesh@gmail.com
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா
- புத்தகங்கள்: வாங்குவது அதிகமாகி வாசிப்புக் குறைந்து போனது எதனால்?
- இலை போட்டாச்சு ! – 17 -புளிக்காய்ச்சல்
- கடித இலக்கியம் – 49
- அசோகமித்திரனின் “ஒற்றன்!” : மார்க் டுவெயினுக்கு விடைகொடுத்த கரை தெரியாத மிசிசிப்பி நதி
- ஸ்ரீ சந்திரசேகரானந்த சரஸ்வதி – காஞ்சி மடத்தில் ஒரு ஞானி
- சினிமா — Eve and the fire horse
- விந்தையான யாத்திரிகர்கள்
- தனித்து தெரியும் உண்மையின் இருண்மை
- சாபமும், வீழ்ச்சியும் – சதாம்ஹுசைனை முன் வைத்து மூன்று படங்கள்
- அன்பின் விளைச்சல் (எனது இந்தியா – ஜிம் கார்பெட் நூல் அறிமுகம்)
- கருமையம் மூன்றாவது ஆண்டு நிகழ்வுகள்
- பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 9
- கசக்கிறதா உண்மை….?
- கடிதம்
- ஆராய்ச்சிகள் எப்போதும் மேல்நோக்கியிருக்கும், சூழ்ச்சிகள் ஒருபோதும் ஆராய்ச்சியாகாது
- ரெ.கார்த்திகேசுவின் புதிய நாவல் “சூதாட்டம் ஆடும் காலம்” தலை நகரிலும் பினாங்கிலும் வெளியீடு
- வேதங்கள், உபநிஷதங்கள், சனங்கள்
- காலக் கண்ணாடி
- இலை போட்டாச்சு ! – 18 .சாம்பார் வகைகள் : அரைத்துவிட்ட சாம்பார்
- வால்மீனில் தடம் வைக்கப் போகும் ரோஸெட்டா விண்ணுளவியின் திட்டப் பணிகள் -2
- கூகிள் கெத்தாக மாற…
- ஹாக்கிங் கதிரியக்கம்
- தைத்திருநாள் விழா கவியரங்கம் – 2
- துரத்தப்பட்ட நிழல்
- அரசியல் விஞ்ஞானம் / மேடை
- காலப் பிரவாகம்
- காதல் நாற்பது (12) துன்ப மயமான இசை !
- எங்கே நான் வாழ்ந்தாலும்
- மறுபடியும் மனு ஸ்மிருதி
- யோகா: ஒரு சமுதாயத் தேவை
- தொடர்நாவல்: அமெரிக்கா -II – அத்தியாயம் ஒன்று: ‘இன்று புதிதாய்ப் பிறந்தேன்’
- மடியில் நெருப்பு – 28
- நீர்வலை – (14)
- மாத்தா-ஹரி – அத்தியாயம் – ஒன்று