கருவண்டாகி பறந்துபோகும் சித்தன் – நவீனம் தாண்டிய கவிதை பற்றி

This entry is part [part not set] of 57 in the series 20060317_Issue

ஹெச்.ஜி.ரசூல்


நவீன கவிதையின் இயங்குதளம் தனிமனித மனவெளி உலகம் சார்ந்து இயங்கியது. அறிவியலுக்கும் யதார்த்தத்திற்கும் முதன்மையளிக்கும் நனவு மனத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட செயல்பாடாகவும், உயர் ஆன்மீகப்பொறி கலந்த ஒன்றாகவும் கருதப்பட்டது. இத்தகையதான புனிதப்படுத்தப்பட்ட நனவுமனமீறல் ஆளுமைச்சிதறல், தன்முனைப்புவாதத் தன்மை, தாழ்வு மனச்சிக்கல், குற்ற உணர்வு, அந்த 6யப்படுதல், பிளவுபடுதல் சார்ந்ததாகவும் வடிவெடுத்தது. இவ்வகை மனத்தின்குரல் அபத்தகணங்களை சித்தரிப்பதாகவும் தோற்றமளித்தது. இதனருகே நனவிலி மனத்தின் செயல் தூண்டல்களாக கனவுக்கு முக்கியத்துவமளிக்கும் மிகை எதார்த்தமும் உருப்பெற்றது. காலத்தையும், வெளியையும் உடைத்துப் போடுகிறது கனவு. எனவேதான் இறந்துபோனவர்கள் கனவில் வந்து பேசுகிறார்கள். கனவின் காலம் மாயத்தன்மை கொண்டதாகிறது. கனவின் உள்நுட்பச் செயல்களாக நாடாகீயப்படுத்துதல், இடப்பெயர்ச்சி செய்தல், குறியீடாதல் இதன் குணங்களாகவும், பகுதிகளாகவும் துலங்கின. பாலியல் ஆழ்மனப்பிறழ்வும், இதனோடு இணைந்திருந்தது. ஐரோப்பிய வகைப்பட்ட கோட்பாட்டின் சிதறல்களாக இவற்றை அனுசரித்தும் பார்க்கலாம். சார்யலிசம், பிராயிடாயம் இருத்தலியம் என இதன் தோற்றங்களின் மூலங்கள் வ€ 0கப்பாட்டினைக் கொண்டிருந்தன.

சங்ககாலகவிதை மனிதவாழ்வின் புற அக அனுபவங்களை இணைத்துப்பேசியது. சமண, பெளத்த, சைவ வைணவ பக்தி மரபில் எழுதப்பட்ட இலக்கிய வடிவங்கள் அனைத்தும் சமயத் தளத்தினுள் ஆன்மீக உச்ச லையையும் குறியீடாக்கி பேசின. வாய்மொழி மரபு இலக்கியங்கள் இதற்கு விதிவிலக்காகவே இருந்தன. நவீன கவிதை மதநீக்க தோற்றத்தை அந்திருந்தாலும் அதில் வைதீக சமய தத்துவ ஆளுமை உள்ளுறைந்தே இருந்தது.

உண்மைக்கும் பொய்க்கும் இடைவெளிகள் இல்லாதுபோன ஒன்றாக, உடலும் வாழ்வும் பொய்ப்பிரதிகளாக, சிதைவுள்ள அழிவின் பிம்பத்தின் தீவிரக் குரலாக. இழந்துபோன உன்னதங்களின் தேடல்களாக நவீன கவிதை ஒலித்தது. எந்த இருப்பின் குரலென்று இதனை கட்டுடைத்துப் பார்த்தால், கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் சிதைவுக்குள்ளாக்கப்பட்ட பிராமஇய வைதீகத்தின் அத்வைதக் கு_ ccலாகவும் இது இருந்தது.

இதிலிருந்து மீட்டெடுத்து இருப்பின் சாரம்சமழிப்பை அந்யப்படுத்துதலை, தொழில்துறை முதலாளித்துவ மூர்க்கத்தின் வன்முறையால் சிதைக்கப்பட்ட மனமாகவும் நவீன கவிதை தன்னை உருமாற்ற முயற்சி செய்தது.

இந்லையின் மற்றுமொரு போக்காக மனித மைய நோக்கும் பழைமை மரபெதிர்ப்பும் அகவயதற்சார்பும் அதீத கற்பனையும் புனைவியற் படைப்புலக கூறுகளாக வெளிப்பட்டன. இதனூடே வினைபுரிந்து பொது வாழ்வினை யதார்த்த வகையில் ஒற்றைப்படுத்துதலும் கழ்ந்தது.

யதார்த்த வகைப்பட்ட வெளியினை பேசிய கவிதைப்போக்கு அனுமானம், தரிசனம், அனுபவம் என்பதான அறிதலின் வகைப்பட்ட கோணங்களை சமூக வெளிச்சார்ந்து முன்வைத்தது. இதன் வேறுபட்ட கூறாக பிரதிபலிப்பு கொள்கை படைப்பின் வண்ணத்தை ஒரு உடைந்த கண்ணாடிபோல வெளிப்படுத்துவதாகவும், நேர்க்கோட்டுத் தன்மையை மறுத்து துண்டுதுண்டாகவோ, வினோதமிக்கதாகவோ பிரதிபலி

‘bfபு செய்வதாகவும், பிரதிபலிக்காமல் மெளனமாய் விட்ட பகுதிகளே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கூறின. பியர் மாஷரி, லியான் டிரான்ஸ்கி, மாரிஸ்கான்பர்த் உட்பட்டோரின் சிந்தனைகள் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தன.

தமிழ்கவிதைச் சூழலில் ‘சமூகவெளி ‘ பரவலான பொதுஅனுபவ வெளியைச் சார்ந்து இயங்கியது. நேரடி பிரகடனம், ஒற்றைத் தள புரிதல், வாழ்வியலின் புறப்பிரச்சனைப்பாடுகளை மையப்படுத்துதல், முரயக்க உத்தியை விரிவுபடுத்துதல், புனைவியல் சொல்லடுக்குகளை உற்பத்தி பண்ணுதல், றுவனம் சார் அரசின் ஒடுக்குமுறை மீது எதிர்ப்புணர்வை காட்டுதல் என்பதான வெவ்வேறு வகைப்பட்ட தளங்களில் இதன் பே e க்குகள் வெளிப்பட்டன.

இதில் தொனித்த கோட்பாட்டு பாதிப்புகளாக மானுடநேயம், திராவிட சிந்தனை, தமிழ்-தமிழன் வகைப்பட்ட உணர்வு, மார்க்ஸ“ய பின்ன சார்ந்த மக்கள் சார்பு ஊடாடியிருந்தன.

மற்றுமொரு முக்கியப்போக்காக வெளிப்பட்ட ‘தன் அனுபவவெளி ‘- பிறருக்கு தட்டுப்படாத தனித்த மாறுபட்ட படைப்புலகமாக தென்பட்டது. கடல், வண்ணத்துப்பூச்சி, நதி, பறவை, பூ, சிட்டுக்குருவி, சிலந்தி, செடி கொடிகள், நட்சத்திரங்கள் என பிரபஞ்சம் சார்ந்த எல்லா உயிர்களிடத்தோடும், பொருட்களோடும், உறவாடும் மர்மத்தன்மை பொருந்திய நுண்அனுபவங்களாக படைப்பில் பிரதியாகு 9கம் செய்யப்பட்டன. குழந்தைகளின் உலகத்தோடும், காதலோடும், தாய்மையின் பரிதவிப்போடும், தொலை தூரமாகிவிட்ட உறவுகளின் சிதைவுகளோடும் உரையாடலை கழ்த்தின.

நவீனம் தாண்டிய கவிதை படைப்பாளியின் சட்டகத்தை மீறி படைப்பாளி, படைப்பு, வாசகன் முப்பரிமாண லைப்பாட்டில் உயிர்ப்புமிக்க மொழியின் செயல்பாடாக மாறுகிறது. ஒற்றை அர்த்தம் தாண்டி வாசகனின் அர்த்தப்படுத்தல்களில் மிக அதிக கவனத்தை குவிக்கிறது. நுகர்விய சந்தைப் பொருளாக மட்கிப்போகாமல், பயன்பாட்டுக்கு பின்பும், புதுப்புது உலகங்களைக் கொண்டு வந்து சேர்க்கிற து. பிரதியின் பின்னயில் கவிதையின் மேற்பரப்புத்தளம் ஆழ்லைத்தளத்தோடு, இருதள இயக்கமாகவும், பிரதியின் சூழல் பின்னயில் பல்வித அர்த்தப் பரிமாணங்களோடு பன்னொலிமப் பண்பினையும் சொல்வெளியில் படைக்கிறது. இங்கு ஒற்றைப் பிரதிகூட பல்விதக்குரல்கள் வெவ்வேறு அலகுகளின் ஊடிழைப்பனுவலாக மாறிவிடுகிறது.

ஆதிக்குலமனம் இயற்கைக்கும் கலாச்சாரத்திற்குமிடையே நெருங்கிய உறவினைக் கொண்டிருக்கிறது. பிரபஞ்சத்தின் சகலவகை உயிர்களோடும், தனது உயிரை கரைத்துக் கொள்கிறது. பறவைகளாக செடிகொடி தாவரங்களாக, விலங்குகளாக, தேவதைகளாக உருமாறுகிறது. நம்பிக்கைகள், சடங்குகள், புதிர்களினூடே தனக்கானதொரு விசித்திர உலகை கட்டமைத்துக் கொள்கிறது. நவீனம் த e ண்டிய இக்கவிதைப் பயணம் அறிவினை இடப்பெயர்ச்சி செய்து கவிதையை புனைவுகளால் ரப்புகிறது. ஆழ்மனம் புதிர்வழியில் பயணம் செய்யும் புனைவு மீதான மோகமாக உருவாகிறது. அறியப்பட்ட உலகத்தினுள் புதைந்துகிடக்கும் அறியப்படாத உலகைச் சொல்ல எத்தனிக்கிறது. காண்உலகில் பார்வைப் புலன்தாண்டி கழும் நுட்ப உலகை வாசகனோடு பகிர்ந்து கொள்கிறது. சொற்களின் மூல ஓசை அதிர்வுக€ழு 3 முடிவற்ற லையில் பெயர்த்துச் செல்கிறது. வாழும் பிரதேசமும் கலாச்சாரமும் சார்ந்ததொரு, உணர்வுலகமாகவும் இது தகவமைக்கப்படுகிறது.

இருப்பின் குரலை ஒற்றைப்போக்காக அல்லாமல் பன்மைத்துவ அடையாளமாக அணுகுதல் இன்றின் சூழல் சார்ந்த படைப்பின் அடையாள அரசியலாக கருதலாம். இதுவே அடையாளம் ததும்பும் புதுவெளிகளை கவிதைப்படைப்புலகில் பல மட்டங்களில் உருவாக்கி காட்டுகிறது. உயர் குடிமனோபாவமும், நகர்புற நடுத்தர வர்க்கத்தின் முணுமுணுப்புகளும் விலக்கப்பட்டு அடித்தள மக்கள் மொழியும் தொன்ம, வரூ dக்காறுகளும், குறிமப்பண்புகளோடு விகசிக்கிறது. நவீனத்துவத்தில் மிகத் தீவிரமாக ஒலித்த தனிமனித பிரக்ஞை நவீனம் தாண்டிய கவிதைவெளியில் கூட்டுமனப் பிரக்ஞையாக முகிழ்க்கிறது.

லவியல் ஒலிகள், வாசனை, தட்பவெட்பம், மண்மணம், பூகோளரீதியாகவும் ஞாபகரீதியாகவும் லக்காட்சியாக உருவெடுக்கிறது. இங்கு மரபு வழியிலான மொழி, ஆதிக்கத்திற்கு பய மறுக்கும் மொழியாகிறது. கலக அழகியல் விரிகிறது. இது பன்மைத் தன்மைமிக்க தலித்/பழங்குடி/விளிம்போர/ அடித்தள பெண்ய/ சிறுபான்மையின மொழிதலாகவும், கதைமொழி சொல்லாடல்களாகவும் உரு வாகுகிறது.

பெருங்கதையாடல்களின் மீதான கட்டுடைப்பும், மொழி, குடும்பம், பாலியல், உடல் என நுண் அளவில் செயல்படும் அதிகாரத்தின் மீதான எதிர்ப்புணர்வும். அம்பலப்படுத்துதலும், பகடி செய்தலும் இக்கவிதைகளில் கழ்கிறது. மைய நீரோட்டத்திலிருந்து புறக்கக்கப்பட்ட குரல்களின் கலாச்சாரம் சார்ந்த கூட்டுப்பண்பாட்டு வடிவங்களின் தொன்மங்களோடு நவீனம் தாண்டிய கவிதைகளின் இடையறாத பயணம் தொடர்கிறது.

நவீனம் தாண்டிய கவிதையின் வேர்களை சாதீய முதன்மையை தக்கவைத்த வைதீக மரபுக்கு மாற்றாக செயல்பட்ட தாந்திரீக, சித்தரிய மரபுகளிலிருந்தும்கூட உட்செரித்துக் கொள்ளமுடியும். சித்தனொருவன் கருவண்டாகி பறந்துபோவதும், எறும்பொன்று குழந்தையாய் உருமாறுவதும் கடலில் வீசப்பட்ட கரும்பாறை இலவம்பஞ்சாக மிதப்பதும், மயிலிறகு தூக்க முடியாத பளுவாக மாறுவதும், € னத்த நேரத்தில் ஒரே உருவம் எல்லா திசைகளிலும் தோன்ற முடிவதும், இறந்துபோன உயிர் இன்னொரு உடம்பில் நுழைந்து தோற்றம் கொள்வதும், பல துண்டுகளாக வெட்டப்பட்ட பறவைக்கு திரும்பவும் உயிர்கொடுப்பதும், மிரண்டுவரும் யானையை பா‘வையாலேயே தடுத்து றுத்துவதும், பறவைகளோடு பேசுவதுமான ஜாலயதார்த்தம் நவீனம் தாண்டிய கவிதையைப் படைக்கும் படைப்பு மனத்தின் புதிய வகையான மொழியாக மாறுகிறது.

—-

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்