கருமை

This entry is part [part not set] of 10 in the series 20000730_Issue

பசுபதி


அன்புள்ள ஆங்கிலேயா!

அறிந்திடுவாய் உண்மைசில.

ஆப்பிரிக்கன் நான்

அறைகின்றேன் கேள்!

கறுப்பாய்ப் பிறந்தேன் நான்;

கறுப்பாய் வளர்ந்தேன் நான்;

கோடையில் நான் கறுப்பு;

குளிரிலும் நான் கறுப்பு;

பயத்திலும் கறுப்பு; நோய்ப்

படுக்கையில் கறுப்பு; மரணப்

பாடையிலும் கறுப்பு.

வெள்ளையனே! வெள்ளையனே!

வேடிக்கை கேள்!

பிறவியில் நீ ரோஜா நிறம்;

பெரியவனாய் வெண்மைநிறம்;

வெயிலில் சிவப்பு நீ;

வெங்குளிரில் நீலம் நீ;

வியாதியில் பச்சை நீ;

அஞ்சும்போது மஞ்சள் நிறம்; நீ

துஞ்சும்போது சாம்பல் நிறம்.

ஆனால்

நீ என்னைக் கூப்பிடுகிறாய்

‘நிறமுள்ளவன் ‘ என்று!

நிறையக் கொழுப்படா உனக்கு!

( ஓர் அநாமதேய ஆப்பிரிக்கக் கவிஞரின் ஆங்கிலக் கவிதையின் மொழியாக்கம்)

Series Navigation

பசுபதி

பசுபதி