கன்னிமணியோசை

This entry is part [part not set] of 28 in the series 20051230_Issue

எஸ்ஸார்சி


அத்திமலை அடிவாரத்தில் அப்பனின் திருக்கோவில் .அத்திமலை எப்போதும்போல் அடர்ந்த மரங்களைப்போர்த்திக்கொண்டு பச்சை மாமலையாய்க் காட்சி தந்தது. மலை மக்கள் ஆங்காங்கே சுற்றித்திரிந்து ஆனந்தம ாய் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

மலையடியில் திண்ணன், பன்றிகள் சில மேய்த்து சீவனம் செய்து வந்தான். பன்றிகளின் தாகமும் பசியும் தீர்ப்பது அவன் பணி.. அத்திமலையான் கோவிலுக்கு அருகாமையில் என்றும்போல் அவன் பன்றிகள் மேய்ந்துகொண்டிருந்தன.

திண்ணன் தன் தோளில் செங்குத்தாகச்சாய்ந்து நின்று கொண்டிருந்த நீளக்குச்சியை அனாயாசமாய்க் கீழே விட்டெறிிந்தான். அத்திமலையனை, இன்று , போய் தான் தரிசித்து வந்தால் என்ன என்று எண்ணிணான். ஆமாம் மெய்யாகவே எண்னினான்.

அத்திமலையானை ப்பார்க்கும் ஆராதித்துக்கும்பிட்டு எழும் பாக்கியம்

அவனுக்கும் அவனொத்தோருக்கும் மறுக்கப்பட்டிருந்தது. &nbs p; இன்றும் நாளையும்கூடத்தான் அது என்றால் இடைப் பிற வரல் என்பார்கள். ஆக நம் கதைக்கு வருவோம் அம்ம லைக்கட்கு என்று தனி இறை உண்டு. அவ்விறைவனை த்தூக்கிச்சிரம் வைத்து ஆடலாம் பாடலாம்.

தினம் அத்திமலையானுக்கு சூரியன் நடு உச்சிவருவதற்குள்ளாய் பூசை முடியும்.

. அத்திமலையான் கோவில் மணியோசை கேட்டு ே வகு நேரம் கழித்து மட்டுமே திண்ணன் கோவில் வாசலைக்கடந்து செல்லமுடியும். அத்திமலையானுக்கு ஆராதனை செய்யும் ஐயர் பூசை முடித்து திரும்புவதற்கான காலாவகாசமிது. ஐயரின் பார்வை திண்ணன் போன்றவர் மீது பட்டுவிட்டால் கண்ட முட்டு ஆகிவடுமே என்ன ஆவது. ஆகவே இந்த ஏற்பாடு. இதில் ஏதும் பிசகுகள் ஏற்படின்

மலைச்சாதிக்காரன் உயிர் பறி போய்விடும்.

திண்ணன் பன்றிகளைக் குட்டை ஒளரமாய் விரட்டி நிறுத்தினான். தன் தோளில் துயிலும் அழுக்கில் இறுகி விறைத்துபோன வேட்டியின் கிழிசலைத் தண்ணிரில் நனைத்துப்பிழிந்து கொண்டே குட்டை நீரில் தானும் ஒரு முங்கு முங்கினான்.

பன்றிக்குட்டிகள் ஒன்றையொன்று துரத்திக்கொண்டு மகிழ்ச்சியில் உறுமிக் கொண்டு நின்றன அவன் அத்திமலையானை மனதில் நினைத் தான். ஆலும் அரசும் ஆங்காங்கே முளைத்து வான் தொங்கும் கரும்பச்சை மொட்டைக்கோபுரம் நோக்கி இரண்டு கைகளையும் சென்னி மேல் உயர்த்தி அத்திமலையானே ஆண்டவா என்று கூப்பிட்டுப்பார்த்தான். பன்றிக்குட்டிகள் இப்போதோ சகதியில் குழப்பிக்கொண்டு விளையாடின. வீல் வீ…இல் என்று தமக்குள்ளே உறுமிக்கொண்டன.

அத்திமலையானுக்கு பூசை முடித்து ஐயர் திரும்பி இருக்கலாம் என நினைத்தான். இன்று கோவில் மணியோசை ஏனோ இன்னும் ஒலிக்கவில்லை. ஒருக்கால் தனக்குத்தான் அது கேட்கவில்லையோ என்றும் நினைத்தான்.

இப்டியாய் யோசனையில் மிதந்தபடி வேகு வேகென நடந்து அத்தி மலை

யான் சந்நிதியை அடைந்தான். ஆலயம் திறந்துதான் இருந்தது. உள்ளே ஐய்யர் இருந்திருக்கவேண்டும். திண்ணனின் மன அடித்தளத்தில் வரலாற்று ப்பிரளயம் உறுமி எச்சரித்தது. பேரிமயம் துகளாகி விண்ணில் பிரவாகித்து வர் ?ித்து சுழித்தோடியது.

யாரது ?

திண்ணன்

பேர கேக்குல யாரு நீ, ஐயர் சன்னமாய்க்கேட்டார்.

திண்ணன் சாமி.

பேர க்கேக்குல யார் நீன்னுதான் கேக்குறேன்

பண்ணிக்கொறவன் திண்ணன் சாமி

ஐயோ போச்சி மோசம் போச்சி அத்திமலையானே அபசாரம் அபசாரம் கட்டிக்காப்பத்தின பெருங்காப்பு பறி போச்சு இனி என்ன செய்வேண்டாஅத்திமலையானே

அரண்டு பேய்க்குரல் கொடுத்தார் ஐயர்.

ஏன் சாமி எ என்ன ஆச்சி

நீ ஏன் இங்க வந்தே எல்லாம் என் பிராருத்தம்/

மலையானை கும்பிடத்தான் சாமி

மணி அடிச்சி வெகு நாழிக்கப்பறம் தானே நீ வரணும்

வந்துட்டேன் சாமி , ஆமாம் சாமி ஒரு சின்ன சேதியாச்சே அந்தப்பரமசிவன்

எங்க சனத்தில பொண்ணு தானும் கட்டி ஒரு மவனுக்கு எங்கசனத்துல யும் பொண்ணு எடுத்து, சவம் சுடுற சுடலை க்கரை மணிய மும் பாத்தது நெசமா இல்லயா

அபச்சாரம் அபச்சாரம் சி வ சிவா காத மூடிக்கிறேன்

என் ஆயா சொன்னது சாமி அதான் கேட்டேன்.

ஐயர் மணியைப்பார்த்தார். மணியின் நாக்கிலிருந்து கயிறு அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது. மணியை தான் ஒலிக்க முடியாமல் போனதற்கு அதுவேகாரணம். அத்திமலையான் ஆலயமணியோசை கேட்டுத்தான் ஊர்த்தலைமகன் மதிய உணவு முடியும் என்பது ஐயருக்கு அத்துப்ப டியான வி ?யம். ஐயர் யோசனை செய்தார் இந்த திண்னனைக்கொண்டு மணியின் அறுந்த கயிற்றினைக்கட்டி சரி செய்தால் என்ன என்று மனதிற்குள் திட்டம் போட்டார்.

ஏண்டா திண்ணா இந்த மணியோட அறுந்த கயத்தை சித்த கட்டித்தாயேன்

தெறித்த கோபக்கனல் இப்போது எங்கோ ஒளிந்து கொள்ள திண்ணனைக்கெஞ்சினார்.

என் அப்பாத்தா சொன்னது சாமி

ரொம்ப சிரமப்படுத்தாதே திண்ணா கெஞ்னார் ஐய்யர்.

ஆராய்ச்சிமணியைப்பார்த்தார்.

திண்னனுக்கு ஐயரைப்பார்க்க பரிதாபமாக இருந்தது.

சரி சாமி அத உடு

திண்ணனும் மணியைப்பார்த்தான். கயிற்றினைப்பார்த்தான். இது தனக்குக்கிடத்த பெரும் பாக்கியமாய் எண்ணினான்.

கருங்கல் தூணைக்கட்டிக்கொண்டு மேலே ஏறினான்.

ஆராய்ச்சிமணியின் அறுந்து தொங்கும் கயிற்றினை இணைத்து நொடியில் ஒரு முடிச்சுப்போட்டான். மணியினை க்கைகளால் தொட்டு ஒருமுறை தடவிப்பார்த்தான்.

நான் மணி அடிக்கட்டுமா சாமி

அடியேன்

ஐயர் சிரித்தார். அத்திமலையானைப்பார்த்துக்கொண்டார்.

ஊர்த்தலைமகன் ஆலய மணியோசை கேட்டுமட்டுமே போசனம் முடிக்கும் பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதில் நிறைவு ஐயருக்கு.

திண்ணன் மணியின் கயிற்றினை இழுத்து இழுத்து அடித்தான். இளைப்பாறினான் .தன் இனத்துக்காரன் முதன்முதலாய் அடித்த கன்னிமணியோசை அல்லவா அது. நினைத்து நினைத்து ப்பெருமிதப்பட்டான்.

குதித்து குதித்துக்கூத்தாடி தரை புரண்டு எழுந்து நின்றுகொண்டான். ஐயர் தன் இடுப்பில் செருகியிருந்த திருநீர்ப்பையை வெளியே எடுத்து ஒரு துளி விபூதியை அவன் உள்ளங்கையில் உதறி ,

அங்கமெலாம் குறைந்தழுகும் தொழுநோயராய்

ஆவுரித்துத்தின்றுழலும் புலையரேனும்

கங்கைவார் சடயர்க்கு அன்பராகில் அவர் கண்டார்

நாம் வணங்கும் கடவுளாரே. சொல்லி முடித்தார்.

திண்ணன் தன் நெற்றியில் திருநீற்றை நிறைவாய் பூசி , அத்தி மலையானே என்று தரைமீது மீண்டும் விழுந்து வணங்கி எழுந்து நின்று கொண்டான்.

சாமி வற்ரேனுங்க சொல்லி சுற்றும் முற்றும் பார்த்து திண்ணன் கோவிலைவிட்டு வெளியே வந்தான். மணியொலி எழுப்ப வகை செய்து ஊர்த்தலைமகன் விரதம் முடிக்க உதவிய திண்ணனை இரு கைகளால் வணங்கி நெகிழ்ந்துபோனார் . ஐயரின் கன்னி வணக்கம் அது.

ஒங்கி ஒங்கி அடித்த ஆலய மணியோசை க்கேட்ட ஊர்த்தலைமகன்,

இத்தனை தாமதம் எப்படி. இத்தனை அசுர நாதம் தானெப்படி ?

என்று தீவிரமாய் சிந்தனையில் இறங்கிக் குதிரை மீதேறி நொடியில்

அத்திமலையான் கோபுர வாயிலில் ஒய்யாரமாய் வந்து நின்று கண்காணித்தான்.

யார் நீ ?

திண்னன் சாமீ

யார்நீன்னு கேக்குறேன் பேர கேக்குல

பண்ணி மேய்க்கிற திண்ணன் சாமீ

அப்பிடி சொல்றா எங்கே கோவிலுக்குள்ளாரேந்து வர

சாமி கும்பிட்டு வர்ரேன்

தன் நெற்றியிலுள்ள திருநீற்றை காட்டினான்.

யார் உனக்கு திரு நீரு குடுத்தா

ஐயரு சாமி

சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த ஐயரைக்காண்பித்தான்.

தலைமகனுக்கு க்கண்கள் சிவந்தன. உடல் படபடத்தது. இந்த கண்ணாலதானே ந ீ எஞ்சாமிய பாத்தே

தன் இடுப்பில் துயின்று கொண்டிருந்த கூரிய வாளினை உருவி

திண்ணனின் இரு கண்களையும் தோண்டி வீசி எறிந்தான். குருதி பீறிட்டுக்கொட்டி நிலம் சிவந்தது. அத்திமலையானே என்று அலறி கீழே வீழ்ந்தான் திண்ணன். ஊர்த்தலைமகன் குருதிகொட்டும் வாளினைக் கைப்பிடித்து க்கோவிலை வலம் வந்து

பசு மாடு பீயதின்னுதா வா ஐயரே வா திண்ணனுக்கு திருநீறா குடுத்த

கர் ?ித்தபடியே ஐயரின் வலது கரத்தை வெட்டிக் கீழே சாய்த்தான்.

தலைமகனின் குதிரை புயலெனக்கிளம்பி ஊர் வந்தது.

அத்திமலை ய ானுக்குப் படைக்கும் ஐயரைக்காணாத சனம் அவர் கங்கைக்கரையில் தவம் இயற்றுவதாய் குசுகுசுத்துப்பின் அதுவே உண்மை என்று பேசிப்பழகியது.

பஞ்சாயத்துக்கூட்டிய ஊர்த்தலைமகன் அரசும் வேம்பும் பிணைந்த மர நிழல் அமர்ந்து,

அத்திமலை அப்பன் கண்கள் ஒன்றிலிருந்து குருதிகொட்ட தன்கண் ஒன்றையே திண்ணன் எனும் பெயர்கொண்ட ஒரு மலைமகன் தன்கூரிய அம்பால் பிடுங்கி அவ்விடம் அப்பினான். பின் மறு கண்ணிலும் என் அப்பன் ஈசன் அத்திமலையானுக்குக்குருதிச்சொட்ட தன் கால்கட்டைவிரல் கொண்டு அக்கண் அடையாளம் வைத்து தன் மற்றொரு கண்ணையும் அம்பால் பிடுங்கும் சமயம்

அத்திமலையான் பிரத்யட்சமாய்த் தோன்றி

கண்ணப்பா போதும் நிறுத்து என்று உரைத்தார்.

திண்ணனின் பேரன்பை மெச்சிய பெருங்கடவுள்

வா கண்ணப்பா நீ வந்து விடு என்று அழைத்துக்கொண்டு தன் விரு ?ப வாகனத்திலேயே அமரவும் செய்து கைலாயம் சென்றார். அந்த த் திண்ணன் இனி கண்ணப்பன் என்றே திருநாமம் பெறுவார் ? முழங்கி முடித்தார்.

அத்திமலையானே அத்திமலையானே என்றபடி குரல் கொடுத்தகூட்டம்

மவுன மாய்க்கலைந்தது.

நிகழ்ந்துபோன சோகத்தை கரைத்துவிடமுடியாமல் திகைத்து திகைத்துத் திண்டாடியது திருக்குளம்.

தினம் தினம் பன்றிகள் விளையாடும் அச்சகதிக்குட்டையின் ஆழ்குழியில் ஊர்மக்கள் அறியாமல் திண்ணணும் ஐயரும் நீராய் மண்ணாய் இன்னும் பலவுமாய்

திண்ணன் எழுப்பிய கன்னிமணி யோசையைத்திரும்பவும் எழுப்பத்தான் இன்னும் யாரும் சித்திக்கவில்லை. அந்தஅத்திமலையானுக்கு மட்டுமே வி ?யங்கள் அத்துப்படி.

essarci@yahoo.com

Series Navigation

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி