கனவுக் குதிரைகள் (Walt Bresette நினைவாக)

This entry is part [part not set] of 19 in the series 20010618_Issue

அல் ஹண்டர் (Al Hunter) (தமிழில்: வ.ந.கிாிதரன்)


1

நிலவு வெளிச்சத்திற்குக்
கீழாக
விண்ணில்
எனது கனவுக் குதிரைகள்
தெற்கு நோக்கி
ஓடும்.

தெற்கு: பயணம் இங்குதான்
முடியும், அத்துடன்

தெற்கு: பயணம் இங்குதான்
மீண்டும் தொடங்கும் –

ஆத்மாக்களின்
பயணத்தில்.
தெற்காகச் செல்லும்
அடிச்சுவட்டில்
செல்லுமிடம் தொியாமல்
ஒருவேளை
மூடப்பட்ட நதிப்
பள்ளத்தாக்கு நோக்கி
அல்லது மறைந்திருக்கும்
மலைப்பாறைகளினுச்சியின்
மேலாகச்
செல்லும்
கிளைவிட்டுச் செல்லும்
பாதைகளுமுண்டு.

குதிரைகள்
அங்கு
போவது கிடையாது.
நான்கு நாட்களாக
இரவும்
பகலுமாகப்
பயணித்து விட்டு
அதிகாலைப் பொழுதில்
உண்பதற்காக
அவை
தங்கும்.
கனவுக் குதிரைகள்
முன்னர்
கடந்து சென்ற
இந்த வழியில்,
நினைவுகளின்
ஞாபகங்களின்
பழந்தீயில்
அவை
இரவுகளினூடும்
அந்திக் கருக்களினூடும்
தம்மைச்
சூடேற்றிக்
கொள்ளும்.

ஐந்தாவது நாட்
காலையில்
அவை
கடக்கத் தேவையில்லாத
ஆற்றங்கரையினை
வந்தடையும்.

மீண்டுமொரு வைகறையில்
மீள்பிறப்பிற்காக
ஏனைய கனவுக் குதிரைகள்
கூடும்
தெற்குக் கரையினை
அடையும் வரையில்,
நீாின் மேற்பரப்பினூடாக
வைரங்களைப் போல்
நர்த்தனமிட்டபடி
அவற்றின் குளம்புகளே
அவற்றினை இழுத்துச்
செல்லும்.

ஓ! உயர்ந்த
ஞாபகசக்தி மிக்கவரே
திரும்பி வாரும்.

திரும்பி வாரும்

எனது கனவுகளின்
வளம் மிக்க
நீல வயல்களிற்குள்…

2

பனித்துளிகள்
ஒட்டிக்
கொண்டிருக்கும்
இனிய
புதிய
புற்களிருக்குமிடத்தில்,
உதிக்கும்
சூாியனை நோக்கி
உனது குதிரையினைத்
திருப்பியபடி, அதன்
பிடாி மயிாினை
ஒரு சேரப் பிடித்தபடி,
கனவுகள்
பயிாிடப்படாத
வயலிற்குள்
முறைத்தபடி
நீல இருதயத்துடன்
நீ!

அதனை
நீர்
அருந்தவிடு.

அதனைச்
சுவைக்க விடு.

அதன் பின்
அதன் மீது
சவாாி
செய்.

***
மூலம்: பிாிட்டிஸ் கொலம்பியாப் பல்கலைக் கழகத்தினால் வெளியிடப்படும்
கனேடிய இலக்கியம் ( Canadian Literature காலாண்டிதழ், மாாி 2000, இதழ் இலக்கம்: 167)

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்