“கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி” –

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

நா.முத்து நிலவன்


அன்பினியீர் வணக்கம்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி”யில் தேர்வு செய்யப்பட்ட சிறுகதைகளின் பட்டியலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். அடுத்த மாதம் (ஜூன்-2007) புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள வண்ணமயமான “கந்தர்வன் நினைவுக் கலை இரவு” நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட உள்ளதோடு தேர்வு செய்யப்பட்ட 10 சிறுகதைகளடங்கிய தொகுப்பு நூலும் –அவ்விழாவிலேயே– வெளியிடப்படவுள்ளது.
திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களிலும், ‘மரத்தடி’ மடற்குழுவிலும் பார்த்துவிட்டு வெளி நாட்டில் வசிக்கும் தமிழ் எழுத்தாளர்களும் இதில் கலந்துகொண்டது மக்கள் எழுத்தாளர் கந்தர்வன் அவர்களுக்கும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கும் கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன்.
அமெரிக்கா,கனடா, ஸ்விஸ்,ஆஸ்திரேலியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை முதலான நாடுகளிலிருந்தும்,டெல்லி, மும்பை, பெங்களூரு முதலான வெளி மாநில ஊர்களிலிருந்தும் மொத்தம் 382 சிறுகதைகள் வந்திருந்தன!
பிரபல எழுத்தாளரும், தமுஎசவின் மாநிலத் துணைப் பொதுச்செயலர்களில் ஒருவருமான மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட நடுவர்குழுவைச் சேர்ந்த எழுவர் இக்கதைகள் அனைத்தையும் கடந்த 22 நாள்களாகக் கூர்ந்து படித்துத் தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எமது வேண்டுகோளை ஏற்று போட்டி அறிவிப்பை வெளியிட்டு உதவிய “திண்ணை”, “பதிவுகள்”இணைய இதழ்கள் மற்றும் ‘மரத்தடி’மடற்குழு நிர்வாகிகளுக்கு எங்களின் தோழமை மிகுந்த நன்றி.
தமிழகத்திலிருந்துவெளிவரும், 1.செம்மலர்-மாதஇதழ், 2.உயிர்மை-மாதஇதழ்,3. தீக்கதிர்- நாளிதழ், 4.தினமணி-நாளிதழ், 5.சிந்தனையாளன்-மாதஇதழ், 6.ஓம்சக்தி-மாதஇதழ், 7.மகளிர் சிந்தனை-மாதஇதழ், 8.புதியஆசிரியன்-மாதஇதழ், 9.உங்கள்நூலகம்-மாதஇதழ், 10.புதியபார்வை-மாதஇதழ், 11.கவிதாசரண்-மாதஇதழ், 12.பயணம்-மாதஇதழ், 13.சிகரம்-மாதஇதழ், 14.மகாகவி-மாதஇதழ் ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவினர்க்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
போட்டியில் உற்சாகமாகப் பங்குகொண்ட எழுத்தாளர் அனைவர்க்கும் அன்புமிகுந்த பாராட்டுதல்கள். அவர்கள் தொடர்ந்து எழுத வேண்டும். தேர்வுபெறாத கதைகள் தகுதியற்றவை என்று பொருளல்ல, அவற்றிலும் தகுதிமிகுந்தவை நிறைய உள்ளன. எனினும் எங்களின் இப்போதைய எல்லைக்குள் அவற்றிற்குப் பரிசு தர இயலவில்லை என்பதே உண்மை.
தேர்வு பெற்ற எழுத்தாளர்களுக்கு நெஞ்சு நிறைந்த பாராட்டுதல்கள்.
விழா அழைப்பிதழையும் இங்கு இடுவேன். வாய்ப்புள்ளவர்கள் வந்து கலந்து கொள்ளுங்கள். நன்றி.
–அன்புடன், நா.முத்து நிலவன், துணைப்பொதுச்செயலர், த.மு.எ.ச., cell +91 9443193293 –

——————————————————————————————-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
“கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி-2007” முடிவுகள் :

ரூ.5,000 முதல்பரிசு பெற்ற சிறுகதை: “எச்சங்கள்”
செய்யாறு தி. நா. நாராயணன்,
1,புதுத் தெரு, முதல் குறுக்குத்தெரு,
செய்யாறு-604 407 தி.மலை.மாவ. — தொலை பேசி:04182-220798

ரூ.3,000 இரண்டாம்பரிசு பெற்ற சிறுகதை : “மாடன்”
சங்கர் பாபு,
48-3/13 ஆனந்த பவனம்,
சிதம்பரனார் தெரு,
கயத்தாறு – 628 952 – செல் பேசி: 9442125035

ரூ.2,000 மூன்றாம்பரிசு பெற்ற சிறுகதை : “எதிர்கொள்ளல்”
கே.எஸ்.சுதாகர் – ஆஸ்திரேலியா.
முகவரி: “K.S.Suthakar”
28 Throsby Crescent
Deer Park , Vic 3023, AUSTRALIA — Telephone: +61 03 93631124

பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகள்:
4.– “11மணி பஸ்”——- கே.பாலமுருகன்,
No.28A, Jalan Kebavu, Kampung Raja,
08000-Sungai Petani, Kedah Darulaman, – MALAYSIA

5.–“ஈயத்தட்டு”——– தாண்டவகோன்
6,திருவள்ளுவர் நகர் வடக்கு விரிவு,
சிறுபூலுவப்பட்டி அஞ்சல்,
திருப்பூர்-641 603 செல்பேசி:9360254206

6.–“மரங்களைச்சுமக்கும் பிஞ்சுகள்”——— ராஜமாணிக்கம்
நகர்மன்றத்தலைவர்
பழனி தொலை பேசி: 241 813 (R)

7. “தோற்றம்” ————- ரோஜாக்குமார்
61-ஆர்.சி.சர்ச் சாலை,
மேலூர் 625 106, மதுரை மாவட்டம்

8.–“கருப்பையா” ———– மரபூர் ஜெயச்சந்திரசேகரன்
1,சிட்டாடல் பில்டிங், 1A-Cenotpa 2nd lane,
தேனாம்பேட்டை – சென்னை-600 018

9.–“மனதைத் தொலைத்துவிட்டு” ——– எம்.சந்திரகாந்தா
81,Manning Place, Colombo-6

10–“மணற்கேணி” ———– மு.சுப்ரமணி
429-இ, முதல்தரக் குடியிருப்பு,
வட்டம்-29, நெய்வேலி-607 807

Series Navigation

தகவல்: நா.முத்துநிலவன்

தகவல்: நா.முத்துநிலவன்

கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி

This entry is part [part not set] of 35 in the series 20070301_Issue

அறிவிப்பு



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் – நடத்தும்
“கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி”
முதல் பரிசு ரூ.5,000/
இரண்டாம் பரிசு ரூ.3,000/
மூன்றாம் பரிசு ரூ.2.000/
ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.
2007-மார்ச்-20ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.
படைப்பாளியின் சொந்தக் கற்பனையாகவும் எதிலும் வெளிவராததாகவும் இருக்கவேண்டும். பக்க,உள்ளடக்க வரையறை இல்லை.
நடுவர் குழுவால் தேர்வு பெற்ற கதைகள், நூலாக வெளியிடப்படும். புதுக்கோட்டையில் நிகழும் வண்ணமிகு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
கதைகளை அனுப்ப வேண்டிய அஞ்சல்/மின்னஞ்சல் முகவரி:
நா.முத்து நிலவன்,
(மாநிலத் துணைப் பொதுச்செயலர்-தமுஎச),
96, சீனிவாச நகர் 3ஆம் தெரு,
மச்சுவாடி – அஞ்சல்,
புதுக்கோட்டை-622 004 – தமிழ் நாடு.
மின்னஞ்சல்:naamuthunilavan@yahoo.co.in
செல்பேசி: 94431-93293.

இவண்:
அருணன், ச.தமிழ்ச்செல்வன்,
மாநிலத்தலைவர். மாநிலப் பொதுச்செயலர்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மாநிலக்குழு.
57/11-மேலப் பெருமாள் மேஸ்திரி வீதி-மதுரை-625001
================================================
அன்புடன்,
நா.முத்து நிலவன்,
25-02-2007

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு