கடிதம் ஜூலை 29,2004 – நாக இளங்கோவனுக்கு சில கேள்விகள்

This entry is part [part not set] of 41 in the series 20040729_Issue

ஞானதேவன் பாஸ்கரன்


நாக இளங்கோவனின் ஒருசில வாதங்களை மட்டு ம் ஏற்கிறேன். ஆனால் 500 ரூபாய் சம்பளத்துக்கு வேலை செய்யும் ஆசிரியர்களை துரத்துவது வெறும் பம்மாத்து என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

நாக இளங்கோவனுக்கு சில கேள்விகள்.

– 50,000 ரூபாய் சம்பளம் குடு த்திருந்தால் அவர்கள் போராடி இருப்பார்களா ? ?

– தனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை அதான் 50,000 சம்பளம் வாங்குகிறோமே என்று இளம் பிஞ்சுகளை காப்பாற்றி இருப்பார்களா ?

– தீ பற்றி எரிந்த போது, எச்சரிக்கை கூட செய்யாமல் தப்பி ஓடியது எந்த வகையில் நியாயம்.

– மக்கள் கோபத்தில் அடித்து கொன்று விடு வார்கள் என்று எப்படி முட்டாள்தனமாய் சிந்திக்க முடிந்தது ?

– கொலைகாரர்கள் தான் வந்து தீயில் சிக்கிய குழந்தைகளை காப்பாற்ற முயன்றார்களா ?

– சமையல் செய்பவருக்கு தெரியாதா ? எப்படி சமைக்க வேண்டு ம் என்று ? அப்படியே தீ பரவினாலும் மற்றவர்களை எச்சரிக்கக் கூடாதா ? ?

விபத்துக்கு ஆசிரியர்கள் மட்டு மே, ஆயாக்கள் மட்டு மே, தாளாளர் மட்டு மே என்று நான் சத்தியமாய் சொல்லவில்லை. நாம் அத்தனை பேரும் தான் காரணம். நான் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் விபத்திற்க்கு அருகில், சில உயிர்களையாவது காப்பாற்ற கூடிய தூரத்தில் இருந்த, ஆசிரியர்கள் ஏன் ஓடிப் போனார்கள் ?. குழந்தைகள் இங்கே கருகி கொண்டு இருக்க, ஓடிப்போவது என்ன நியாயம் ?. காப்பாற்ற கூட வேண்டாம், உதவிக்கு யாரையாவது அழைத்திருக்கலாம் அல்லவா ? அதுவுமா முடியாமல் போய்விட்டது ? அத்தனை குழந்தைகள் கருகுவார்கள், மக்கள் நம்மை மிதிப்பார்கள் என்று தெரிந்து தலைமறைவாய் ஓடிப் போவது கேவலமாய் இல்லை ? ? ? எந்த பெற்றோரும் தாசில்தார், கலெக்டர்,அதிகாரிகளை நம்பி குழந்தைகளை ஒப்படைப்பதில்லை. அவர்களுக்கு எது முறை, எது முறையல்ல தெரியாது. அவர்களுக்கு தேவை, அவர்களின் குழந்தைக்கு படிப்பு. அவ்வளவு தான். ஏதெனும் பிரச்சினை என்றால் அவர்கள் நாடு வது ஆசிரியரை தான்.. கல்வி அதிகாரியை போய் பார்த்து, என் பையன் சரியா படிக்கிறதில்லை கவனிச்சிகங்க என்று சொல்வதில்லை. நிலைமை இப்படி இருக்கும் போது, தீ பிடித்த சமயத்தில், ஆசிரியர்களுக்கு தான் முழு பொறுப்பு உள்ளது. அது 1 ரூபாய் சம்பளம் வாங்கினாலும் சரி, 1 கோடி வாங்கினாலும் சரி.

அடி முதல் முடி வரை ஊழலில் திளைத்ததால் தான் இந்த கொடூரம் நடந்தது என்றாலும், உயில் பலி எண்ணிக்கை அதிகரித்ததற்கு ஆசிரியர்களின் அலட்சியமே முக்கிய காரணம். அவர்களை துரத்துவதில் தப்பே இல்லை.

—-

gyanadevan@gmail.com

Series Navigation

ஞானதேவன் பாஸ்கரன்

ஞானதேவன் பாஸ்கரன்