கடவுளும் கண்ணீர்த் துளிகளும்

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

ப மதியழகன்



வாழ்வு நதி வெள்ளம்
கடல் மணல் நுரை
வானம் வெளி காற்று
வாயு அக்னி ஆகாயம்
மண் மழை வெள்ளம்
மனிதன் மனிதம் மானுடம்
கருணை தயை இறைவன்
கூடு இணை குஞ்சுகள்
பருவம் தப்பி பெய்யும் மழை
தாங்க முடியாத கடும் குளிர்
பூமியை எரியூட்டியது போல்
தகிக்கும் வெயில்
ஏதோ நிகழ்வதற்கு அறிகுறியாய்
நிசப்தம்
இறைவனின் கண்களில் கண்ணீர்
பலியாகப்போகும் அப்பாவி
ஜீவன்களை எண்ணி…

Series Navigation

ப.மதியழகன்

ப.மதியழகன்