சி.சிதம்பரம்
பயணம் வாழ்க்கையில் நிகழும் இனிய அனுபவம். பள்ளிக்கூட நாள்களில் சென்றுவந்த இன்பச் சுற்றுலா பற்றிய கட்டுரை எழுதிய அனுபவம் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மறக்க இயலாது. பயணம் என்பது ஓர் இடத்திலிருந்து வேறொரு இடத்திற்குச் சென்று வருதலைக் குறிக்கும். பயணம், தமிழில், சுற்றுலா, சுற்றுச்செலவு, பிரயாணம், யாத்திரை, வழிச்செலவு, வழிப்பயணம், ஆகிய சொற்கள் ‘இடம் பெயர்தல்’ என்ற பொருளையே தருகின்றன. தமிழ் இலக்கியங்களில் ‘பயணம்’ பற்றிய செய்திகள் மிகுதியாகக் குறிக்கப்பெற்றுள்ளன. சங்க இலக்கியத்தில் ஆற்றுப்படை நுல்களின் பெருக்கத்தையே சான்றாகக் கூறலாம். ஆனால் இன்று ‘பயண இலக்கியம்’ என்றொரு இலக்கிய வகையே தோன்றுமளவிற்கு பயணக் கட்டுரைகள் தமிழ் உரைநடையின் மலர்ச்சியால் பல்கிப் பெருகியிருக்கின்றன. ‘பயண இலக்கியத்தின் தந்தை’ என்று போற்றப்படும் ஏ.கே. செட்டியான் பயண அனுபவங்கள் ஒரு கலைப்பெட்டகமாக அமைந்திருப்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
முதல் பயணம்
தமிழில், பயண இலக்கியத்தை பத்தொன்பதாம் நுôற்றாண்டில் ஏ.கே. செட்டியாரே தொடங்கி வைக்கிறார். இவர் தமிழகம், இந்தியா தவிர உலகின் பல நாடுகளுக்கும் பயணம் úம்றகொண்டவர். பயணத்தின் போது ஏற்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்யும் வழக்கம் இளம்வயது முதலே இருந்து வந்தது. அ. கருப்பன் என்பது இவரது இயற்பெயர். நனிபுகழ் நகரத்தார் மரபில் வழிவந்த கருப்பன் செட்டியார் கோட்டையூல் 03-11-1911 அன்று பிறந்தார். இளம் வயதிலேயே கதை, கட்டுரைகள் எழுதும் பழக்கத்தை கொண்டிருந்த இவர் பள்ளிப் பயணத்தை திருவண்ணாமலையில் தொடங்கினார். இளம் வயதில் எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் விளைவாக சிறந்த இதழாளராக பணமிக்கத் தொடங்கினார். பூதலுர் வைத்தியநாத ஐயர் என்பவர் தொடங்கிய ‘ஆனந்த விகடன்’ இதழுக்குத் தன் நண்பர்கள் பலரைச் சந்தாதாரராகச் சேர்த்துக் கொடுத்தார். பிறகு பர்மா நாட்டுக் கோட்டை நகரத்தார் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, அங்கே சென்று சங்க இதழான ‘தனவணிகன்’ இதழின் ஆசியராகப் பொறுப்போற்றுச் சிறப்புடன் பணியாற்றினார். வை. கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழில் பல கட்டுரைகள் எழுதிவந்தார். அவ்வாறு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘உலகம் சுற்றிய தமிழன்’ என்ற தலைப்பில் பின்னாளில் நூலாக வெளிவந்துள்ளது. ஏ.கே. செட்டியார் வணிகம் காரணமாக பல நாடுகளுக்குச் சென்று வந்த அனுபவங்களை கட்டுரைகளாக எழுதி, அதனை வெளியிட்டுவந்தார். 1943-ஆம் ஆண்டில் ‘குமமலர்’ என்ற மாத இதழை தொடங்கித் தன் பயணக் கட்டுரைகளை ‘வாயாடி’, ‘காகன்’ என்ற புனைப்பெயல் வெளியிட்டதோடு, பிறரையும் எழுத வைத்தார். குமமலல் பாரதியார், வ.உ.சி., வ.வே.சு.ஐயர், சுப்பிரமணிய சிவா, மு.வீரராவாச்சாயார், திரு.வி.க. போன்ற பல தமிழ் அறிஞர்களின் கட்டுரைகளை வெளியிட்டார். பாரதியார் எழுதிய இதுவரை வெளிவராத பல அய கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடித்து அதனை குமமலல் வெளியிட்டார். பத்திக்கைத் துறையில் சிறந்து விளங்கிய செட்டியார் புகைப்படக் கலையையும் கற்றுத் தேர்ந்தமையால் குமமலன் ஆண்டுமலரை(1944) முதன் முறையாக போட்டோ ஆப் செட்டில் படங்களை அச்சிட்டு வெளியிட்டார்.
திரைப்படக் கலைஞர்
புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்ட ஏ.கே. செட்டியார் ஜப்பானில் ஒருவருடம் தங்கி (1935-36) புகைப்படக் கலையில் பயிற்சி பெற்றார். காந்தி மீதும் காந்தியத்தின் மீதும் பற்றுக்கொண்ட ஏ.கே. செட்டியார் அன்னல் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். ஆங்கிலேயே ஆட்சி நடைபெற்ற காலத்திலேயே காந்திமகான் என்ற திரைப்படத்தை எடுத்து தமிழிலும், தெலுங்கிலும் வெளியிட்டார். ‘காந்திமகான்’ திரைப்படத்தை எடுப்பதற்குத் தேவையான ஆவணங்களைத் திரட்ட இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிக்கா, அமெக்கா போன்ற நாடுகளுக்குச் சென்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அய படங்களைச் சேகத்தார். அங்கு காந்தியடிகள் வாழ்ந்த வாழ்வியல் சூழல்களைப், பற்றி அறியும் நோக்கில், அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த அனைத்து அறிஞர்களையும் நேல் கண்டு உரையாடிச் செய்திகளைத் திரட்டி, அதனடிப்படையில் திரைப்படத்தை இயக்கினார். காந்திமகான் திரைப்படம் எடுப்பதற்காக அவர் மேற்கொண்ட பயணங்களின் அனுபவத்தை ‘அண்ணல் அடிச்சுவட்டில்’ என்ற நூலில் விவாக விவக்கிறார். இந்தப் படத்தைத் தன் நண்பர்களின் கூட்டு முயற்சியால், ‘தி டாக்குமென்றி பிலிம்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் வாயிலாக வேறு எந்தவித அமைப்பின் நிதி உதவியுமின்றி வெளியிட்டவர் ஏ.கே. செட்டியார் இந்தப்படம் விற்பனை முறையில் வெற்றியடையாவிட்டாலும் ‘காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை ஒரு தமிழன் முதன்முறையாக திரைப்படமாகத் தயாத்தவன்’ என்ற பெருமை ஏ.கே. செட்டியார் பெறுகிறார். இந்தப் படத்தின் ஒருபடி (copy) இந்திய அரசிடம் அன்பளிப்பாக அளிக்கப்பட்டிருக்கிறது.
பதிப்பாளர்
கருப்பன் செட்டியார் தன்னை ஒரு சிறந்த பதிப்பாளராகவும் வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்கவில்லை. 1850 ஆம் ஆண்டு முதல் 1925 ஆம் ஆண்டுவரை பல்வேறு இதழ்களில் வெளிவந்த 140 கட்டுரைகள் அடங்கிய, ‘தமிழ்நாடு பயணக் கட்டுரை’ என்ற நூலைப் பதிப்பித்துள்ளார். இந்நூலின் வழியாக மாற்றம் பெற்றுள்ள தமிழ் நடையின் வரலாற்றையும், பயண வசதிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும், ஊர்களின் இன்றைய வளர்ச்சி வேகத்தையும், விவையும், முன்னாளில் மக்கள் எவ்வளவு துன்பப்பட்டும், துயரப்பட்டம் மன உறுதியுடனும், இறைப்பற்றுடனும் பல இல்லங்களுக்கு சென்றுவந்ததையும் அறிய முடிகிறது. இந்நூலைத் தவிர, கொய்த மலர்கள், ஒளவையார், (ஒளவையார் பாடல்களை இராராஜி மொழிபெயர்த்தது) போன்ற நூல்களையும் பதிப்பித்துள்ளார். சென்னை பாமுனையில் இயங்கிவரும் மிகப் பழமையான நூல் நிலையமான மறைமலையடிகள் நூலக வளர்ச்சியில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.
கருவூலம்
ஏ.கே. செட்டியார் இதழாளர், திரைப்படக் கலைஞர், பதிப்பாளர் பயண இலக்கியவாதி என்ற பண்முகங்களைக் கொண்டு தன் ஆளுமைத் திறனை வெளிக்காட்டும் கருத்துக்கருவூலமாகத் திகழ்ந்தவர். தன் வாழ்க்கையில் வணிகம் தொடர்பான அயல்நாட்டுப் பயணங்களை இலக்கியமாக்கும் திறன் பின்னாளில் பயண இலக்கியத்தின் முன்னோடியாக மாற்றியது. ‘இவருக்கு முன் பலர், பல நாடுகளுக்கும் சென்றிருந்த போதிலும் அவர்களுக்கும் ஏ.கே.செட்டியாருக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு. ஏ.கே. செட்டியார் தமிழன் என்ற கண்ணோட்டதுடன் பல நாடுகளையும் பார்த்தார்’ என்ற கருத்து (செட்டிநாடும்,செந்தமிழும், ப,291) குறிப்பிடத்தக்கது. ஏ.கே. செட்டியார் தமிழ்நாடு, இந்தியா, உலகம் என தன்பார்வையை விசாலமாக பார்க்கத் தொடங்கினார். இதன் விளைவாக, பிரயாண நினைவுகள், குடகு, அண்டைநாடுகள், மலேயா முதல் கானடா வரை, ஐரோப்பா வழியாக, ஜப்பான், அமெக்கா நாட்டில், கபியன் கடலும் கயானாவும் உலகம் சுற்றிய தமிழன், திரையும் வாழ்வும், இட்டபணி ஆகிய பதினோரு பயண நூல்கள் கிடைத்துள்ளன. இவை ஒவ்வொன்றும் ஆவணக் காப்பமாகவே திகழ்கிறது. தகவல் தருதல் என்ற வரையறையை மீறிப் பயில்வோன் உள்ளத்தில் ஓர் எழுச்சி நோக்கத்தை பதிக்கக் கூடிய எதுவும் இலக்கியம் தான். அந்த வகையில் ஏ.கே.செட்டியான் பயணக் கட்டுரைகள் குறிப்பிடத்தக்கன. “தன் இடத்தைவிட்டு அயலிடங்களுக்குச் சென்றே இராதவன் மற்ற மக்களையெல்லாம் எதிகளாகவே நோக்குகிறான். வெவ்வேறு இடங்களுக்குப் பயணம் செய்திருப்பவனோ, தன்னுடைய கூட்டம் வாழ வேண்டுமானால் மற்ற கூட்டங்களோடு ஓரளவாவது ஒட்டுறவு வைத்துக் கொள்ளவேண்டும் என்பதை உணர்கிறான்” என்ற பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் கருத்து ஈண்டு நோக்கத்தக்கத. ஏ.கே.செட்டியார் ஒவ்வொரு நாட்டிற்குச் செல்லுவத்ற்கு முன்பாகவே அந்த இடத்தைப் பற்றி நன்றாக அறிந்த பிறகே பயணிக்கிறார். அந்த நாட்டின் பரப்பளவு மக்கள்தொகை போன்ற செய்திகளைப் புள்ளி விபரங்களுடன் தருகிறார். நன்றாக அறிந்த உணர்ந்த உண்மைகளை மட்டுமே தருகிறார். இதற்கு அவர் தரும் சான்று ‘ஏதோ மூன்று (அ) நான்கு பேரைச் சந்தித்துப் பேசிவிட்டு ஒரு நாட்டைப்பற்றிய பொதுவாக அபிப்பிராயம் கூறுவது மிகவும் தவறு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் பார்த்தால் போதும் என்பார்கள். இது சோற்றைப் பொறுத்தவரை சயாக இருக்கலாம். ஆனால் ஒரு நாட்டைப் பொறுத்தவரை இது சயன்று’ (மலேயா முதல் கானடா வரை பக்.13) என்று குறிப்பிடுகிறார்.
பண்பாட்டுச் சுரங்கம்
பண்பாடு என்பது ஒவ்வொருவருக்கும் சமுதாயத்திடமிருந்து பெறும் செல்வமாகும். இது சடப் பொருள்கள், சடப் பொருள்கள் அல்லாதன என இருவகைப்படும். வீடுகள், கருவிகள், ஆடைகள், அணிகள் , உணவு போன்றவை சடப் பொருள்கள். மொழி, தொழில், மனப்போக்கு, பழக்கவழக்கங்கள், அறநெறி போன்றவை சடப் பொருள்கள் அல்லாதன என விளக்கம் தருகிறது. சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள கலைக்களஞ்சியம். ஏ.கே.செட்டியார் தான் சென்று வந்த நாடுகளின் பண்பாட்டை உணர்த்தும் கலைப்பெட்டகமாகத் அவரது பயணக் கட்டுரைகள் அமைந்துள்ளது. குடகு என்ற நூலில், ‘காவேயும் காப்பியும் தற்காலத் தமிழர்களின் இரு கண்கள். இரண்டும் உற்பத்தியாவது குடகில் தான்’ என்று ஏ.கே.செட்டியார் காவே, காப்பி ஆகியவற்றின் தோற்றுவாயை விளக்குகிறார். குடகு பகுதியில் விளையும் காப்பியைப் பற்றிய கட்டுரை குறிப்பிடத்தக்கது. இக்கட்டுரையில் காப்பியின் வரலாற்றை மிக விவாக விளக்குகிறார். தமிழ்நாட்டில் மட்டும் தான் காப்பியைத் தம்ளல் வழங்கும் பழக்கம் உண்டு. அதற்குக் காரணம் தம்ளல் எச்சில் செய்யாமல் உயரத் துக்கி அருந்தும் பழக்கம் தான் என்ற கருத்து தமிழர் பண்பாட்டின் தனித்தன்மையை எடுத்துக் காட்டுகிறது. லைட்காப்பி, மீடியம் காப்பி, ஸ்டாரங்காப்பி, டபிள் ஸ்ட்ராங் இவற்றுக்குத் தமிழில் இன்றும் கலைச் சொற்கள் இல்லை என்ற கூற்று, தமிழ் மொழியின் கலைச் சொல்லாக்கப் பணிகளின் தேவையை உணர்த்துகிறது. தமிழ் நாட்டில் ‘தேநீர் விருந்து’ என்று அச்சடித்து அழைப்பு அனுப்பினாலும் விருந்தில் வழங்குவது காப்பிதான் என்று குறிப்பிடுவதன் மூலம் தமிழன் விருந்தோம்பல் பண்பாடு புலப்படுகிறது. இவ்வாறு தமிழ்நாட்டில் மக்கள் வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட காப்பியைப்பற்றி ஒரு புராணமே எழுதலாம் என்று குறிப்பிடுகிறார்.
உலகம் சுற்றும் தமிழன் என்ற நுலில், ‘ஹாவாயர்களின் மொழியில் பன்னிரண்டு எழுத்துக்களே உள்ளன’ என்று குறிப்பிடவதும், மலேயா முதல் கானடா வரை என்ற அவரது நூலின் தலைப்பிலிருந்தும், ‘ஏக்கர்’ என்ற நில அளவை ஏக்ரா என்ற சொல்லாட்சியைப் பயன்படுவதும் அவர் காலத்தில் உள்ள மொழி நிலைகளை அறியமுடிகிறது.
செலவா? வரவா?
தமிழில் ‘செலவு’ என்ற சொல் பயணத்தைக் குறிக்கும். பயணம் செய்ய பணம் தேவைப்படுகிறது. இன்று அரசு அலுவலர்கள் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தன் குடும்பத்தாருடன் இன்பச் சுற்றுலா சென்றுவர (400கி.மீ வரை) அரசு விடுமுறையுடன் பயணப்படியும் வழங்கிவருகிறது. இத்தொகையினைக்கூட சுற்றுலா செல்லாது தவறாகப் பயன்படுத்தும் சூழலில் வசதிகள் குறைவான கால கட்டத்தில் உலகம் முழுவதையும் தன் சொந்தச் செலவிலேயே சென்று வந்தவர் ஏ.கே.செட்டியார் சென்றதன் பயனாக பயண இலக்கியம் என்றொரு புதிய இலக்கிய வகையைத் தோற்றுவித்து, தமிழன்னைக்கு புதியதொரு அணிகலனை அணிவித்த பெருமை ஏ.கே.செட்டியாரையே சேரும். தான் செய்த செலவுகளைக் கூடத் தமிழ்மொழிக்கு வரவாக மாற்றியவர். ஏ.கே.செட்டியார். ‘உலகத்தைச் சுற்றிப்பார்க்கும் முன் தமிழ்நாட்டை ஒரு முறையாவது சுற்றிப்பார்க்க வேண்டும்’ என்ற ஏ.கே.செட்டியாரின் நோக்கம் நிறைவேறினால் ஒற்றுமை நிலைபெறும் என்பது உறுதி.
—
முனைவர். சி.சிதம்பரம்., M.A.,M.Phil., Ph.D.,
முது முனைவர் பட்ட ஆய்வாளர், ( PDF).,
தமிழ்த்துறை,அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி-3.
- கணிப்பொறியும் இணையத்தமிழும்
- தமிழில் முதல் அணுசக்தி நூல்
- அதிகமாகும்போது
- வாழ்விக்க வந்த வரிகள் – பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -4
- மாதிரிக்கு ஒரு எளிய காக்கநாடன்
- ராமானுஜ காவியத்தில் சமயப்பதிவுகள்
- இவர்களது எழுத்துமுறை – 32 அ.முத்துலிங்கம்
- தமிழ் நூல்கள் இலவசமாக உலகத்தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்(சுவிசு) பேச்சு
- ”பருத்திக்காடு” – நூல் வெளியீடு
- இலைகள் இலக்கிய இயக்கம் சார்பில் பன்மொழிபடங்கள் திரையிடல்
- பல நேரங்களில் பல மனிதர்கள்.. எனது பார்வையில்..
- நின்றாடும் மழை நாள்
- சமைததெடுத்த மெல்லிய இரவுகள்
- ச. மணி ராமலிங்கம் கவிதைகள்
- சின்னப்பயல் கவிதைகள்
- ஒற்றைக்கால் இரவு!
- அன்று அவ்வெண்ணிலவில்
- பேப்பர்காரன்
- ஆணவம் கொண்டோர்.
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காஸ்வின் நகரில் பச்சை குத்தல் (கவிதை -31 பாகம் -2)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -4)
- உலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011
- உள்ளபடி
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்தி மூன்று
- ஏகே செட்டியார்: உலகம் சுற்றிய தமிழன்
- தருமமும் கருமமும் எவையெனக் கருதிடில்
- ராமாயண நாடக எதிர்ப்பு மறியலை முறியடித்த அண்ணா
- (65) – நினைவுகளின் சுவட்டில்
- சீனா – விலகும் திரை (பல்லவி ஐயர்)
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் (6)
- கற்பது.. கட்டுக்கள்.. இருகவிதைகள்
- கண்ணாடி உலகம்
- கை
- நிழல் மோனம் ..
- வரையறுக்கிற மனம் -2
- வளத்தூர் தி .ராஜேஷ் கவிதைகள்
- சிறு வாழ்வு சிறு பயணம்
- சாளரம் திறக்கையில்..
- புதிர்
- நமீதாவூம் கம்ப்யூட்டரும்
- ‘கூத்துக் கலை அன்றும் இன்றும்’…
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -5
- அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள் (மார்ச் 27, 2011) (Lessons Learned in Three Mile Isl