என்ன நடந்தது ?

This entry is part [part not set] of 53 in the series 20040827_Issue

புஷ்பா கிறிஸ்ரி


என்ன நடந்தது எங்கள்
ரொரோன்றோ நகரத்து
ஆடி மாதத்து
அடிக்கும் வெய்யிலுக்கு..
ஓடித் தேடி
உடைந்து நடந்து
கடிக்கும் மழைக்குக்
கால்கள் மரத்து விட
குடை தேடி
குட்டிச் சுவராகி
பஸ்ஸை விட்டுவிட்டு
மழையில் நனைந்து
காத்துக் கிடந்து
மீண்டும் பஸ் வந்து
வீடு வந்து சேர்ந்த போது
வானம் கொட்டி முழக்கியது
நான் வீடு வந்து சேர்ந்ததை..
இன்னும் விடவில்லை மழை
பொழுது விடிந்து விட்டது..
மழைக்கு விடியவில்லையா ?
நன்மை தான் நமக்கு
இல்லை எப்படி தாங்குவது
இந்த ஆடி வெய்யிலை ?

(கலைப்) புஷ்பா கிறிஸ்ரி
pushpa_christy@yahoo.com

Series Navigationரவி சுப்பிரமணியன் கவிதைகள் >>

புஷ்பா கிறிஸ்ரி

புஷ்பா கிறிஸ்ரி