எந்த சாமியிடம்

This entry is part [part not set] of 43 in the series 20110117_Issue

செண்பக ஜெகதீசன்


இருட்டிலிருந்த சாமிக்குமுன்
எண்ணெய் விளக்கேற்றினேன்,
இதுதான் தெரிந்தது-
என்றோ தடவிய
எண்ணெய்ப் பிசுக்குடன்,
என்னையும் பாராமல்
ஏதோ சிந்தனையில்
முகம் கறுத்து
மௌனமாய் நிற்கிறதே !

என்ன பிரச்சனையோ..
என் பிரச்சனையையும் சேர்த்து
எந்த சாமியைக் கேட்கலாம் !

செண்பக ஜெகதீசன்

Series Navigation

செண்பக ஜெகதீசன்

செண்பக ஜெகதீசன்