உயிர்க்குடை

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)


அதன்
நிர்வாண காந்தத்தில்
இழந்து கிடக்கிறது
குரங்கு

சிரித்துக் குலுங்கும்
புன்னகையில்
கையும் கண்ணும்
தாவும்

எல்லாருக்காகவும்
வெட்டவெளியில்
கற்பு காயப்படாமல்
திறந்து கிடக்கிறது

பட்டப்பகலில் ஒரு
சயன அனுபவம்
கிடைக்காத ஏக்கத்தில்
கிரங்கிக்கழிகிறது இளமை

இதம்
குளுமை
சுகம் கலந்தத் தழுவலை
யாரும் தரமுடியாது

நிர்வாணமாகவும்
ஆடையாகவும் ஓர்
அர்ப்பணிப்பு

மரம்போல என்பதினும்
அறம்போல என்பதிலேதான்
அவ்வளவும் புதையலாய்…

ilango@stamford.com.sg

Series Navigation

பிச்சினிக்காடு இளங்கோ

பிச்சினிக்காடு இளங்கோ