புகாரி, கனடா
சொற்களின் கல்லறையோ – நாக்கு
சுழல்வதால் சுகமில்லையோ ?
பற்களின் கூடுகளில் – சொல்லின்
பசியோடு திரிகின்றதோ ?
சொல்லுங்கள் மெளனிகளே – செவியுள்
சொல்லற்ற ஊமைகளே !
சொல்கின்ற சொல்லென்பதும் – மண்ணில்
செல்லாத காசல்லவோ !
காற்றினில் பிறக்காமலே – உங்கள்
குரல்குஞ்சின் மரணங்களோ ?
தேற்றவும் வழியின்றியே – தேம்புதல்
தேன்மொழித் தாகத்திலோ ?
மூச்சில்லா வேளையிலும் – நெஞ்சின்
பேச்சற்றுப் போவதுண்டோ ?
பேச்சுக்காய் நின்றபோது – இறைவன்
பேசாமல் போனானோ ?
ஆனாலும் துயரில்லையே – இதுவோர்
ஆகாயக் குறையில்லையே
தேனாளும் அபிநயத்தால் – சொற்பூ
தெளிவாகப் பூக்கின்றதே
ஏராள மனக்கனவை – தலையின்
எழிலான அசைவுகளால்
தாராள வார்த்தைகளாய் – கவிதைத்
தரமோடு கூறுகின்றீர் !
அள்ளித்தரும் இயற்கைமொழி – காலம்
அழிக்காத உங்கள்மொழி
சொல்லுக்கினி தாகமுண்டோ – எண்ணச்
சுரப்பிற்கும் மரணமுண்டோ ?
அண்டத்தின் இரத்தமானதும் – அன்பு
இதயத்தின் அமுதமானதும்
உண்டவரின் உயிர்தொடுவதும் – காதல்
உயர்மொழியே ஊமைமொழிதான் !
*
buhari2000@hotmail.com
- அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி
- சிக்கன விமானம் – உரைவெண்பா
- மண்
- அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி
- உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள்![Fast Breeder Reactors]
- அறிவியல் துளிகள்-17
- MANAVELI PERFORMING ARTS GROUP TO PRESENT TENTH ANNUAL FESTIVAL
- திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும் (மு.தளையசிங்கத்தின் ‘கோட்டை ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 51)
- பயணக் குறிப்புகள் 2003
- பயணக் குறிப்புகள் 2003
- மூன்றாம் பிறை
- பரீக்ஷா தமிழ் நாடகக்குழு வெள்ளி விழா கொண்டாடுகிறது.
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 14
- இந்த வாரம் இப்படி (மார்ச் 9, 2003- சாத்தன்குளம் வெற்றி, மாயாவதி ஊழல், சவர்க்கர் படத்திறப்பு, இந்தி மைல்கல்)
- மன்னிக்க வேண்டுகிறோம்
- பனியின் மடியில்….
- அன்புடனும், நன்றியுடனும் லூஸிபருக்காக
- பெண்
- நான்கு கவிதைகள்
- விஷமாகும் மனம் (பள்ளிக்கூட புத்தகங்களில் வெறுப்பு ஒரு பாடம்)
- கண்ணாடிக்கு அப்பால்
- இன்னா செய்தாரை ஒறுத்தல்…
- வாயு – அத்தியாயம் நான்கு
- நினைத்தேன்…சொல்கிறேன்…காதலும் கல்யாணமும் பற்றி…
- நசிந்த கிராமங்களும், நரகமாகும் நகரங்களும்
- ஆசியாவில் வளர்ச்சி வறுமையைக் குறைத்தது என்கிறார் சுர்ஜித் எஸ் பல்லா.
- ராஜதந்திரமும் இலக்கியமும் (சுராவின் பேட்டி)
- கடிதங்கள்
- அவனோட கணக்கு
- இந்தியாவுக்கு புத்த மதம் திரும்பி வருகிறது
- என் கண்ணில்
- உயர் மொழி !
- ‘ஊக்கும் பின்னும் ‘
- வறளையின் வீச்சு
- உறவுக்காலம்
- நீ வருவாய் என…..