உண்மை பேசும் சிநேகிதம்

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

கிரிஜா


சன்னலைத் தட்டுவதிலிருந்த பதட்டம்
கண்களில் இருப்பதில்லை
தெருக்கதவைத் திறந்து வரவேற்கிறபோது
அன்றலர்ந்த தாமரையும்,
அல்லியும் இன்ன பிற மலர்களும்
முகத்தில் நிறையவே பூக்கின்றன;
பிரித்த உதடுகளில் ஒளிரும் பற்களும்
ஒளிந்திருக்கும் நாவும்
பர்தாவுக்குள் பதுங்காத கண்கள்
உடல் வழக்கிலுள்ள
அத்தனை மொழியிலும்
இலக்கண பிசகின்றி
எழுதவும் பேசவும் செய்யும்;
உரையாடலுக்கிடையில்
ஊரின் மந்தைவெளியைக்கூட
நினைவுகூரும் அதிசயம்;
போகும்போது
பரிசளித்த சொந்தநூலில்
‘உலகின் பயங்கரவாதம், பொருளாதாரநெருக்கடி,
சூழல் மாசு’ அனைத்திற்கும் நானே காரணம்’
எனத் தொடங்கும் வரிகள்.
எங்கேயோ கேட்டதென்றாலும்
இந்த ஒரு விஷயத்திலாவது சிநேகிதம்
உண்மை பேசுகிறதே!

—-

Series Navigation

கிரிஜா

கிரிஜா