ஈரானிய சினிமா

This entry is part [part not set] of 26 in the series 20020525_Issue

வெளி ரெங்கராஜன்

சில சிறப்பான ஈரான் நாட்டு படங்களை பார்க்கக் கூடிய வாய்ப்பு அண்மையில் எனக்கு கிடைத்தது. ஈரான் படங்களின் கலைத்தன்மை பற்றி நான் ஏற்கெனவே கொஞ்சம் கேள்விபட்டிருந்தேன். குறிப்பாக Abbas Kiarostami ஒரு சிறப்பான திரை இயக்குனர் என்பதை அறிந்திருந்தேன். ஆனால் அவருடைய படங்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த ஈரான் படங்களும் அதிக பிரமிப்பை தருவதாக இருந்தன. சினிமா குறித்த இவர்களது அணுகுமுறையும், மனித நிலைமைகள் குறித்த இவர்களது புரிதலும், அவற்றின் கலைச் சித்தரிப்பும் வியப்பூட்டுவதாக இருந்தன. பொதுவாக மத உணர்வுகளின் தாக்கம் மிகுந்தும், கல்வி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் பின் தங்கியும் உள்ள வளரும் நாடுகளின் வாழ்நிலைகள் பற்றிய கலை சித்தரிப்பு என்பது பெரும்பாலும் தீவிரமான உணர்ச்சிகள் சார்ந்ததாகவே இருக்கின்றது. ஆனால் இந்த படங்கள் நடைமுறை வாழ்க்கையில் இருந்து அந்நியப்படாமல் ஆனால் அந்த வாழ்க்கையின் ஊடே இழையோடும் நுட்பமான கணங்களையும், மன ஓட்டங்களையும் துல்லியமாகவும், சரளமாகவும் வெளிப்படுத்துவதாக அமைந்தன. இவைகளில் வெளிப்பட்ட மனித நிலைமைகள் குறித்த புரிதலும் எந்த சந்தர்ப்பத்திலும் வாழ்க்கைக்கான சாத்தியங்கள் குறித்த நம்பிக்கையும் எழுச்சி ஊட்டுவதாக அமைந்தன.

மொத்தம் To be or not to be (kianoush Ayyari) The father(Majid Majidi), Sara (Darioush Mehrjui), Leila (Darioush Mahrjui) The Last Act (Varuzh Karim-Masihi) Close up, And Life Goes on (Abbas Kiarostami) ஆகிய 7 படங்கள் திரையிடப்பட்டன. இவற்றில் Abbas Kiarostamiன் And Life Goes on படமும், Close up படமும் மிகவும் சிறப்பானவை என்று கூற முடியும். And Life Goes on படம் 1970ல் ஈரான் நகரைக் குலுக்கிய பயங்கர பூகம்பத்தை பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ஒரு அப்பாவும், மகனும் தங்களுடைய முந்தைய படத்தில் நடித்த இரண்டு இளம் நடிகர்களை தேடிப்போகிறார்கள். பூகம்பத்தில் அவர்களுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை அவர்களைப்பற்றிய செய்தி எங்கும் கிடைக்கவில்லை. அவர்கள் தங்கி இருக்கும் கிராமத்தைப்பற்றி விசாரித்துக் கொண்டு செல்வதே அவர்களுக்கு பெரும் பிரச்னையாக இருக்கிறது. வழி எங்கும் பூகம்பத்தின் கோர காட்சிகளை அவர்கள் பார்த்துக் கொண்டே செல்ல நேரிடுகிறது. இந்த அவலங்களுக்கிடையிலும் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் உதவி செய்வதற்கும் ஆட்கள் அங்கங்கே இருக்கிறார்கள். சிதறிக்கிடக்கும் தங்களுடைய இருப்புக்கான தேவைகளுக்காக அவர்களும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த முயற்சியில் அற்புதமான மனித கூறுகள் வெளிப்படுவதை அவர்கள் பார்த்துக்கொண்டே செல்ல நேரிடுகிறது. அவர்கள் தேடி அலைய வேண்டிய ஊருக்கான பாதை நீண்டு கொண்டே சென்றாலும், முயற்சிகளுக்கான வழிகள் திறந்த வண்ணம் இருக்கின்றன. பூகம்பத்தின் அழிவுகளுக்கு நடுவில் இப்படிப்பட்ட வாழ்க்கை நோக்கை பிரதிபலிக்கும் ஒரு படம் மிகவும் புத்துணர்ச்சி அளிப்பதாக இருந்தது. படத்தின் ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கைக்கான ஒளிக்கீற்றுகள் அவர்களை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. உதவிக்கான வாகனங்கள் வழி எங்கும் நிறைந்து பாதைகள் அடைப்பட்டிருந்த போதும் ஏதாவது ஒரு வழி கிடைக்கும், என்று தந்தையும், மகனும் பயணத்தை தொடர்ந்தவாறு இருக்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைகளும் வீண்போவதில்லை. சிறுசிறு முயற்சிகளாக அங்கு நடக்கும் வாழ்க்கைக்கான போராட்டத்தில் அவர்களும் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள்.

இன்னொரு படமான Close up கலை ஆர்வத்தால் உந்தப்பட்ட ஒரு வறிய இளைஞன் தன்னை உத்வேகப்படுத்திக் கொண்டிருக்கும் Mohsen Makhmalbaf என்கிற பிரபல சினிமா இயக்குனரின் மாதிரியாக தன்னை பாவித்து, தற்செயலான ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு குடும்பத்திற்குள் நுழைகிறான். அந்த சூழலில் அவர்களை இணைத்து படம் எடுப்பதாக அவர்களை நம்பவைக்க முயற்சி செய்கிறான். அவன் தீய நோக்கங்களுக்காக வந்திருக்கலாம் என்று சந்தேகப்படும் குடும்ப தலைவர் அவனை கைது செய்ய ஏற்பாடு செய்கிறார். விசாரணையில் அவனது கலை ஆர்வமும், வெகுளித்தனமும் வெளிப்பட குடும்பம் அவனை மன்னிக்கிறது. சினிமா இயக்குனர் Makhmalbafம் அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார். மிகவும் தொழில்நுட்ப ரீதியாகவும், கலை திறமையுடனும் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் சமூக நிலைமைகளையும், மனித உறவுகளையும் பற்றிய நுட்பமான புரிதலை வெளிப்படுத்துகிறது. விசாரணையின்போது தனக்கு தீய நோக்கம் இல்லாவிட்டாலும், தன்னுடைய தவறுக்கான தண்டனையை ஏற்க தயாராகும் இளைஞனின் வாக்குமூலமும், அவனுடைய உள் நோக்கங்களை துருவி துருவி ஆராய்ந்து அவன் மேலோட்டமாக குற்றவாளிபோல தோன்றினாலும் உண்மையில் வெகுளித்தனமானவன் என்று கண்டறிந்து கொள்ள நீதிமன்றங்கள் எடுக்கும் பிரயத்தனங்களும், ஒரு விதமான நெகிழ்ச்சியை ஊட்டுகின்றன. அடக்குமுறைகளும், விசாரணையற்ற குற்றவாளிகளும் மிகுந்துள்ள இன்றைய நீதிமன்ற நடவடிக்கைகளை கேலி செய்வது போல் இந்த படம் அமைந்துள்ளது. குற்றமற்றவனுக்கு அளிக்கப்படும் அதிக பட்ச சலுகை சமூக உணர்வு மற்றும், கலை உணர்வின் தீவிரத்துக்கான வெற்றியாக அமைகிறது.

The last Act, To Be or not to be, Leila, Sara ஆகிய படங்களும் கலைத்திறமையில் குறைந்தவை அல்ல. The last Act, கற்பனையின் ஒரு அதீதமான சரளத்தை வெளிப்படுத்திய ஒரு படம். தன்னுடைய சகோதரனின் மனைவிக்கு எதிராக சதி செய்யும் ஒரு சகோதரியும், சகோதரனும் தங்களுடைய சதிக்கு உடந்தையாக ஒரு நாடகக்குழுவை பயன்படுத்துகிறார்கள். அந்த சதித்திட்டம் முழுவதும், அந்த சகோதரியாலும், சகோதரனாலும், ஒரு நாடகமாக அரங்கேற்றப்படுகிறது. கணவனை இழந்த அந்தப் பெண். மனச்சிதைவுற்று மடிய வேண்டும் என்பதாக தீர்மானிக்கப்பட்ட அந்த நாடகம், போலீஸ் குறுக்கீட்டால் கடைசி காட்சியில் தடம் மாறி குற்றவாளிகள் பிடிபட காரணமாகிறது. வலிந்து தீர்மானிக்கப்பட்ட ஒரு நாடகத்தை கதையின் ஓட்டத்துடன் இணைத்து நாடகத்தன்மை குறையாது முடிவுறும் இந்த படம் கற்பனையின் அதிகபட்ச பிரமிப்பைத் தருகிறது. அதேபோல் To be or not to be படம் மூளை மரணத்தால் உயிர்விடும் தருவாயில் இருக்கும் ஒருவனுடைய இதயத்தை, உயிருக்கு போராடும் ஒரு இளம் பெண்ணுக்கு பொருத்தி வைக்க மேற்கொள்ளும் முயற்சிகளும், அடையும் வெற்றிகளும், தங்களுடைய மகனுடைய இதயத்தை கொடுக்க மறுக்கும் பெற்றோர்களே, பூச்செண்டுடன் இந்த பெண் உயிர் பிழைத்ததை எதிர் கொள்ளுவதும் சிக்கலான வாழ்க்கை கணநேரங்களில் மாற்றமடைவதை நுட்பமாக சொல்கிறது. இதேபோல் குழந்தை பேறு இல்லாத Leila தன் கணவனுக்கு ஒரு குழந்தையை தரவேண்டும் என்பதற்காக, தான் விரும்பாவிட்டாலும் இன்னொரு பெண்ணை வாழ்க்கையில் அனுமதித்து, குழந்தை பிறந்ததும் தன் துயரங்களை மறக்கிறாள். படம் நெடுக குழந்தைக்காக அந்த பெண்ணும்,கணவனும் மேற்கொள்ளும் அலைக்கழிப்புகள் மிகுந்த மனச்சோர்வை அளித்தாலும் ஒரு புதிய வரவுக்காக இந்த துன்பங்கள் சகித்துக்கொள்ளக்கூடியவை என்கிற அந்த பெண்ணின் மனத் தெளிவு ஒரு அற்புதமான கணமாக அமைகிறது.

இந்த படங்கள் சொல்லப்படும் விதத்தில் மிகுந்த ஈர்ப்பு கொண்டவையாக அமைகின்றன. பிரச்சனைகளை வசப்படுத்தக்கூடிய சரளமும், துல்லியத்தன்மையும் கொண்டு இயல்புத் தன்மையையும் நம்பகத்தன்மையையும் அதிகரித்தப்படி செல்கின்றன. கலை குறித்த தெளிவையும், நம்பிக்கையையும் அவை அண்மைப்படுத்தும் வாழ்வையும் நோக்கி நம்மை நகர்த்துவதாகவே இந்தப்படங்கள் உள்ளன. உண்மையில் இந்தப்படங்களைப் பார்க்க வந்த பல தமிழ்சினிமா உதவி இயக்குனர்களையும் ,இயக்குனர்களையும் கூட இவை பாதித்திருப்பதை பார்க்க முடிந்தது. சில மாறுதலான படங்களை எடுக்க வய்ப்புள்ளவர்கள் இவைகளால் பயன் அடைவதற்கான சாத்தியங்கள் உண்டு. ஆனால் யதார்த்தம், ரசனை இவை பற்றிய உணர்வு இல்லாத அப்பட்டமான வியாபாரிகளால் ஆளப்படும் தமிழ் சினிமாவில் ஒரு சிறிய மாற்றம் என்பதுகூட கானல் நீராகவே இருக்கும்.

**

Series Navigation