ஹெச்.ஜி.ரசூல்
பிரபஞ்சக்குடில் வலைப்பக்கத்தில் பகுத்தறிவின் விளிம்பில் பதிவின் தொடர்ச்சியாக 2010 அக்டோபர் 20 ல் சகோதரர் ரமீஸ்பிலாலி மொழிகளின் விளிம்பில் என்றொரு பதிவையும் எழுதியுள்ளார்.
மணலில் சுழன்றாடும் பம்பரம் அதன் ஆட்டத்தை சில நிமிடங்களில் முடித்து தள்ளாடி சரிந்து விழுவதைப் போன்ற ரமீஸ்பிலாலியின் பம்பரச் சுழற்சி எழுத்தை கருத முடியும்.இதில்வேறு பதில் சொல்லமுடியாத தருணங்களில் கோபம் தலைக்கேறி வசவு சொற்களை பயன்படுத்துவதும் நிகழ்ந்துள்ளது.
மொழிகளின் விளிம்பில் கட்டுரையில் பிலாலி விவாதத்திற்கு எடுத்துக் கொண்ட அல்லாஹ்வை ஆண்பால் சொல்லாக அழைப்பதன் சமூக வரலாற்று பின்னணி எதையுமே அவர் உருப்படியாக விவாதிக்கவில்லை.இனி ரமீஸ்பிலாலியின் விவாதங்களையும் அவற்றிற்கான பதில்களையும் இங்கே தொகுத்துக் கொள்வோம்.
எனது விவாதம் (இஸ்லாமியப் பெண்ணியம் நூலில் இடம் பெற்றது)
இங்கே அல்லாஹ் செய்கிறான்/பார்க்கிறான் எனச் சொல்லுகையில் அல்லாஹ்வை மொழிரீதியாக ஒரு ஆணுக்கு இணைவைத்துவிடுதல் நிகழ்ந்துவிடுகிறது. இணைவைக்காமல் தமிழில் எப்படி அழைப்பது என்பதுதான் தமிழ்மொழிசார்ந்த பிரச்சினையாகவும் உள்ளது.
ரமீ-பி (ரமீஸ்பிலாலி)
இது இணைவைப்பே கிடையாது.மேலும் இது தமிழ்மொழிசார்ந்த பிரச்சினை மட்டுமல்ல. எல்லா மொழிக்கும் இந்தப் பிரச்சினை உண்டு. இதைவிட்டும்அரபிமொழி தப்பித்துவிட்டதாக அவர் சித்தரிக்கிறார்
பதில்
மொழிரீதியான இணைவைப்பு இல்லை என்பதை ஆதாரபூர்வமாக மறுக்கவில்லை.எனது வரியில் இடம் பெற்றுள்ள தமிழ் மொழியின் பிரச்சினையாகவும் உள்ளது என்பதில் வும் என்ற குறிப்பானில் அரபுமொழியும் உள்ளடங்கியுள்ளதுதான்.
ரமீ-பி
இறைவன் என்று கூறுவதாலேயே கடவுளை ஆணாக சித்தரிக்கிரோம் என்பதெல்லாம் அராஜகமான கருத்தாகும்.அப்படிக் கூறுவதாலேயே அல்லாஹ் ஆணாகிவிடமாட்டான்.
பதில்
இங்கு விவாதம் கருத்துநிலை,மொழிநிலை என்கிற இருபரிணாமங்களில் உருவாகியுள்ளது.
அல்லாஹ் ஆணுமில்லை, பெண்ணுமில்லை, அவன் யாரையும் பெறவுமில்லை,அவனை யாரும் பெறவுமில்லை என்ற கருத்துநிலையை மொழிரீதியாகச் சொல்லும் போது தமிழில் அவன் என்றும்,அரபியில் ஹுவ என்றும் குறிப்பிடும் போது ஆண்தன்மை உருவாகிறது..இது குறிப்பான்களின் வழி உருவாகும் குறிப்பீடு.மொழிரீதியாக அவன் எனக் குறிப்பிடும்போது ஆணுக்கு அல்லாஹ் இணையாகிவிடுவதால் இதனை மொழிரீதியான
ஷிர்க் எனக் குறிப்பிட்டிருந்தேன்.பிலாலியின் கருத்துப்படி பார்த்தால் பாரசீகர்களையும்,கலீல்மெளலானாவையும் தவிர நபித்தோழர்கள் முதல் பிலாலிவரை அல்லாஹ்வைக் குறிப்பிடுவதில் மொழிரீதியான இணைவைப்பாளர்கள் போலும்.
ரமீ-பி
வேண்டுமானால் இறைவன் என்று சொல்லாமல் இறை என்று சொல்லுங்கள் கலீல் அவ்ன் மவ்லானா அப்படித்தான் கூறுகிறார்கள் இறை கூறிற்று.. இறை அருளிற்று.. என்றுதான் எழுதுவாராம்
பதில்
இறைவன் அருளுகிறான் எனச் சொல்வதில் கலீல் அவ்ன் மவ்லானாவுக்கு பிரச்சினை இருந்ததால்தான் அவர் இறை அருளிற்று என எழுதியுள்ளார். நல்லகாலம் ரமீஸ்பிலாலி அவரைக்கூட நெத்துமண்ண்டையாக இருப்பார்போல என்று வசவு செய்யவில்லை.
ஆட்டையும் மாட்டையும் கூட அது இது என்றழைப்பதால் இறை வந்திற்று,அது அருளிற்று என்று இறையை அவன்,அவள் என்பதற்கு மாற்றாக அது என்று சொல்வதிலும் பிரச்சினை இருப்பதாக முஸ்லிம் அறிஞர்களும் ஏற்கெனவே விமர்சனம் வைத்துள்ளனர். என்றாலும் கூட மூலமொழி அரபியில் அல்லாஹ்வை ஹுவ என்ற பொருளில் ஆண்பால் சார்ந்து அழைக்கப்படுவதற்கு ஏதாவது மாற்றுச் சொல்லை மவ்லானா
கூறியிருக்கிறாரா?
ரமீ-பி
அரபு மொழியின் இலக்கணப்படி பாலில்லாத நியூட்டர் பெயர்ச் சொற்களுக்கு ஆண்பால் விகுதி கொடுத்து கூறுவது பொது மரபு. அதன்படிதான் அல்லாஹ்வுக்கு ஆண்பால் விகுதி கொடுக்கப்படுகிறது.
பதில்
அல்லாஹ் என்ற சொல்லை பாலினமற்ற சொல்லாக ரமீஸ்பிலாலி விளக்குகிறார்.ஆனால் அரபு மொழி வரலாற்றில் அல்லாஹ் என்ற சொல் பாலினமற்ற சொல்லாக குறிப்பிடப் படவில்லை.
சொல்லியலில் பிரதியியல் அர்த்தம்,சூழலியல் அர்த்தம் என்ற இருவகைத் தளங்கள் செயல்படுகின்றன்.
நபிமுகமது அவர்களின் வரலாற்றுச் சூழல்சார்ந்து அல்லாஹ் என்ற சொல்லை புரிந்து கொள்ள முற்படும் போது கிபி ஏழாம் நூற்றாண்டிற்கு முன்பு தொல் அரபுப் பழங்குடிமக்கள் கபாவில் முன்னூறுக்கும் மேற்பட்ட சிறுதெய்வங்களை உருவ வடிவில் வணங்கிவந்தனர். அவற்றில் அல் லாத், அல் உஜ்ஜாத்,அல் மனாத் உள்ளிட்ட பெண் தெய்வங்கள் முக்கியமானவை. அக்காலக் கட்டத்தில் அம் மக்கள் கபாவில்
ஆண்சந்திரக் கடவுளையும் வணங்கி உள்ளனர். இந்த ஆண் சந்திரக்கடவுளை , அல் லாஹ்வை தந்தைக்கடவுளாககருதிய காரணத்தால் அல் லாத், அல் உஜ்ஜா,அல் மனாத்தை அல்லாவின் மகள்களாக கருதுகிறீர்களா என குரான் கண்டித்தது.
மேலும் அல் இலாஹ் என்ற ஆண்பால் சொல்லுக்கு எதிர்ப்பதமாக அல் இலாஹா என்ற பெண்பால் சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பின்னணியில் அல்லாஹ் சொல்லை பலினம் கடந்த நியூட்டர் சொல்லாக கூறுவது எவ்வாறு பொருந்தும்.
ரமீ-பி
சூபிஅறிஞர் இப்னுஅறபியின் ஆணுக்குள் பெண் அடக்கம் பெண்ணின் சாராம்சம் ஆணுக்குள் மறைந்திருந்தது ஹூவ – அவன் என்று அழைத்தால் அதில் ஹீய அவள் என்பதும் அடங்கும்
பதில்
இந்த விவாதங்களின் கருத்தாக்கமெல்லாம் திரும்பவும் பெண்ணை இரண்டாம் பாலினமாக கட்டமைக்கும் முயற்சியின் பல்வேறு வடிவங்கள்தான்.
இந்த விவாதங்களுக்கு மாற்றாக இஸ்லாமிய பெண்ணியவாதிகளின் குரான் குறித்த மாற்றுவாசிப்பை பிலாலி முன் நிறுத்த முயலலாம்.
பெண் என்பவள் ஆணின் விளைநிலம் என்பதான குரானிய வசனத்தில் இடம் பெறும் ஹார்த் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு. அவற்றில் ஒன்று சொர்க்கம் என்பதாகும். பெண்ணும் ஆணும் பரஸ்பரம் சொர்க்கங்களாகும் என்ற இஸ்லாமிய பெண்ணியலாளர் அஸ்மாபர்லாஸின் அர்த்தப்படுத்தலை நாவலாசிரியை கதிஜாமும்தாஜ் சுட்டிக் காட்டுவதை இங்கு கவனிப்பிற்குரிய மாற்றுவாசிப்பாகவும் ஏன் கருதமுடியாது
என்ற கேள்வியே முன்வந்து நிற்கிறது.
- சத்யானந்தன் கவிதைகள்
- வினோத மலரொன்றின் இதழ் நுனி..
- விடியாக்கனவு
- அவள் சொன்ன காதல்!
- இடம்பெயர் முகாமிலிருந்து
- குழந்தை
- சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி.
- ஈழப்போராட்டம் பற்றிய நாட்குறிப்பு புத்தகம்
- “மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை“ (தொடர்ச்சி-3)
- இவர்களது எழுத்துமுறை – 16 -சா.கந்தசாமி
- சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 17
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் வடதுருவத்தில் ஆறுகரச் சட்ட அலைமுகில் (Hexagonal Wave) கண்டுபிடிப்பு ! (கட்டுர
- தண்ணீரும் நாமும்
- இதமானதொரு நகைப்பு …!
- தீர்வும்.. தெளிவும்!!!
- முள்பாதை 56
- வசீகரத்தினை இழந்துவிடும் பூக்கள்
- உருத்தலில் உருவாகி
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -2
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிரிவின் நினைவுகள் கவிதை -25
- தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 7 The Evolutionary Point பரிணாமவியலின் பார்வையில்
- லிவ்விங் டுகெதர் – கலாச்சார புற்றுநோய்.
- டாக்கா: பிசாசு நகரம்
- இரண்டு சொர்க்கங்கள் விளிம்பின் மொழி
- பெயர்வு
- கள்வர்க்கு இரவழகு
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -5
- பரிமளவல்லி 21. க்ளின்டாமைசின்