இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- 3

This entry is part [part not set] of 18 in the series 20010513_Issue

விஜயா தேஷ்பாண்டே

சீனக் கண்மருத்துவத்தில் இந்தியப் பாதிப்பால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. சுஸ்ருதர் கண் நோய்களைப் பல வழிகளில் பிரித்தார். அதில் ஒன்று கண்ணின் உள்ளீடு பற்றியது. இது அந்தக் காலத்தில் புரட்சிகரமான ஒன்று. ஏனெனில் பிற மருத்துவங்கள் நோயின் அறிகுறிகள் கொண்டே நோயைக் கணிக்க முற்பட்டன. உடல் பாகங்களை ஆய்வதை அடிப்படையாய்க் கொண்ட பார்வை நோய்ப் பகுப்பு முறைகளில் புதிய கருத்துகளைக் கொண்டு வந்தது. மருந்துகளும் இப்போது இந்திய அறுவை சிகிச்சையும், சீன மருத்துவமும் இணைந்ததாய் இருந்தது. ‘அமாலிகா ‘ என்ற மருந்து ‘அன் மோ லே ‘ என்று அழைக்கப் பட்டது.

தங்க ஊசி கொண்டு கண்ணின் புரையை அகற்றும் முறை அற்புதம் என்று உணரப் பட்டது. அறுவை சிக்கிச்சை முறை மட்டுமல்லாமல், எந்த நேரத்தில் செய்வது நல்லது, எந்த இடத்தில் வைத்துச் செய்ய வேண்டும், அறுவை சிகிச்சைக்கு முன்பும் பின்பும் என்ன முன்னெச்சரிக்கைகள் மேற்கொள்ள வேண்டும், எப்படிப் பட்டிகள் அணிய வேண்டும், உணவு என்ன உட்கொள்ளலாம், நோயாளியின் நடமாட்டம் பற்றி பல விஷயங்கள் தெரிவிக்கப் பட்டன.

ஏழாவது நூற்றாண்டிலிருந்து பதினாலாவது நூற்றாண்டு வரையில் ஒரு சில மருத்துவக் கருத்துகள் மட்டுமே வளர்ச்சி பெற்ற சீனாவில், இந்திய பாதிப்பினால் பெரிதும் மருத்துவ வளர்ச்சி பெற்றது. யுவான், மிங் , சிங் முதலிய அரச குடும்பத்தினர் ஆட்சியின் போது னல மருத்துவ நூல்கள் வெளியிடப் பட்டன.

விஞ்ஞான வளர்ச்சி என்பது எப்படி நாடுகள் தாண்டி பரவின என்பதற்கும் இந்த அறிவுப் பரிமாற்றம் சரியான உதாரணம் என்று சொல்ல வேண்டும்.

(நன்றி : எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி)

இவர் சீனத்தின் தாவோயிசம் மட்டுமல்லாமல், பெளத்தக் கோட்பாட்டிலும் தேர்ந்தவர். ‘புதிய விமல்கீர்த்தி ‘ என்ற அடைமொழி கொடுத்து இவர் அழைக்கப் பட்டார். அவர் மருந்துச் சீட்டுப் புத்தகங்கள் உடல் உறுப்புகளின் பாகங்களின் பெயர்கள், அறுவை கு வெளீவந்த பல சீன மருத்துவக் கையேடுகளில் நாகர்ஜ்உனரின் கண் மருத்துவம் குறிப்பிடப் பட்டுள்ளது. நான்கு-ஐந்து நூற்றாண்டுகளில் வெளி வந்த பல சீன ஏடுகளில் இந்திய மருத்துவம் குறிப்பிடப் பட்டுள்ளது. 752-கி பியில் கண் மருத்துவ ஏடு வெளிவந்தது. பிறகு 8-ம் நூற்றாண்டின் நடுவில் ‘போதிசஹ்ட்துவர் நாகார்ஜ்உனரின் கண் மருத்துவ நூல் ‘ வெளி வந்தது. 12-ம் நூற்றாண்டில் மீண்டும் நாகார்ஜ்உனரின் முழுமையான நூல் வெளி வந்தது.

முற்றும்

Series Navigation

இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு- 2

This entry is part [part not set] of 16 in the series 20010505_Issue

விஜயா தேஷ்பாண்டே

குறியீட்டளவில் ஊசி (ஷலகம்) கொண்டு கண்ணில் காணும் மறுவை அகற்றுவது குறிப்பிடப் படுகிறது. உதாரணமாக ‘ததாகதர் சாதாரண மருத்துவர்களைக் காட்டிலும் சிறந்தவர் ஏனெனில், அறியாமைக் கண்மறுவை ஞானம் என்னும் தங்க ஊசி கொண்டு அகற்றவல்லவர். ‘ என்று பேசப் படுகிறது. கண் மருத்துவ அறிவு கொஞ்சம் கொஞ்சமாக சீனாவிற்கு பெளத்தம் வழியே பரவியது. அறுவை சிகிச்சையும், கண் மருத்துவமும் சீனாவில் அவ்வளவாக வளர்ச்ச்சி பெறாத நிலையில் சீனாவின் மேல்தட்டினரான பெளத்தர்களை இது கவர்ந்தது.

சீன மருத்துவத்தில் அறுவை சிகிச்சை.

பழங்கால இந்திய மருத்துவம் அறுவை சிகிச்சையையும், மருந்து சிகிச்சையையும் பேணி வந்தது. சீன மருத்துவம் அறுத்துப் பார்த்து உடல் உறுப்புகள் பற்றி அறிவது போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வில்லை. இதன் காரணம் இரண்டு : கன்பூஷியஸ் உடல் தம் பெற்றோரிடமிருந்து பெறப் பட்ட புனிதமான பேறு அதனை எந்த விதஹ்திலும் சின்னாபின்னம் செய்வது தவறு என்று செய்த போதனை. இன்னொன்று உடலின் யின் யாங் என்ற இரண்டு சக்திகளின் சமநிலைக் குலைவே உடல் நோய்க்குக் காரணம் என்ற கருத்து. எனவே பொதுவாக மருந்து கொடுத்துக் குணம் செய்தால் போதும் என்ற எண்ணம்.

இந்திய அறுவை சிகிச்சை அறிவுப் பரவலுக்கு முன்பு சீன மருத்துவம் அறுவை சிகிச்சையைப் பெரிதும் பேணாததால், கண் மருத்துவம் இந்தியாவிலிருந்து வந்த போது பெரிதும் அரவணைக்கப் பட்டது. இந்திய மருத்துவம், மற்றும் மருந்தியல் பற்றி மேன்மேலும் அறிந்து கொள்கிற ஆர்வமும் பரவலாயிற்று. சுயி வம்சாவளி மன்னர் (581-619 கி பி) வரலாற்றில் இந்திய விஞ்ஞான நூல்களும், கணித நூல்களும், மருந்தியல் நூல்க்ளும் குறிப்பிடப் படுகின்றன. மஹாயானம் நிறுவிய ‘போதிசத்துவர் நாகார்ஜ்உனர் ‘ இதன் ஆசிரியராய்ச் சொல்லப் படுகிறார். மருத்துவர் நாகர்ஜ்உனரைக் குறிப்பிடாமல் தத்துவ வாதி நாகார்ஜ்உனரைக் குறிப்பிடுகின்றனர்.

இந்தக் கால கட்டத்தில் பரவிய இந்த அறிவினால், மனித உடல் பற்றியும், நோய்க் காரணங்கள் பற்றியும் சீனாவில் அறிமுகம் செய்யப் பட்டது. யின் மற்றும் யாங் பஞ்ச பூதங்கள் அடிப்படையாய்க் கொண்ட கருத்துகள் மாறி , முதன் முறையாக பெளத்தர்களின் நான்கு மூலக் காரணங்களை அடிப்படையாய்க் கொண்ட மருத்துவ இலக்கியம் உருவாகிற்று.

இந்திய மருத்துவக் கோட்பாடுகளின் தாக்கம் முதன்முதலில் ‘ஆயிரம் பொற்காசுகள் மதிப்புள்ள மருத்துவச் சீட்டு ‘ என்ற பெயரில் எழுதப் பட்ட கண் மருத்துவ நூலில் காணப்பட்டது. தாங் மன்னர் (618-907 கி பி) காலகட்டத்தைச் சேர்ந்த சுன் சிமியோ என்ற மருத்துவ இலக்கியவாதியால் இது எழுதப் பட்டது. இவர் சீனத்தின் தாவோயிசம் மட்டுமல்லாமல், பெளத்தக் கோட்பாட்டிலும் தேர்ந்தவர். ‘புதிய விமல்கீர்த்தி ‘ என்ற அடைமொழி கொடுத்து இவர் அழைக்கப் பட்டார். அவர் மருந்துச் சீட்டுப் புத்தகங்கள் உடல் உறுப்புகளின் பாகங்களின் பெயர்கள், அறுவை சிகிச்சை முறைகள், லேகியம் மூலிகை மருஹ்துவம் , ஈரலை வலுப்படுத்த மருந்துகள் என்று இந்தியக் கண் மருத்துவத்தினை நினைவு படுத்துகின்றன. சுஸ்ருதரின், மூன்று விதச் சிகிச்சை முறைகள் – மேல் பூச்சு,. உள் மருந்து, அறுவை சிகிச்சை -இவற்றைக் குறிப்பிடக் காணலாம்.

சீன மருத்துவத்தில் நாகர்ஜ்உனரின் கண் மருத்துவம்

ஆறாவது நூற்றாண்டின் பிறகு வெளீவந்த பல சீன மருத்துவக் கையேடுகளில் நாகர்ஜ்உனரின் கண் மருத்துவம் குறிப்பிடப் பட்டுள்ளது. நான்கு-ஐந்து நூற்றாண்டுகளில் வெளி வந்த பல சீன ஏடுகளில் இந்திய மருத்துவம் குறிப்பிடப் பட்டுள்ளது. 752-கி பியில் கண் மருத்துவ ஏடு வெளிவந்தது. பிறகு 8-ம் நூற்றாண்டின் நடுவில் ‘போதிசஹ்ட்துவர் நாகார்ஜ்உனரின் கண் மருத்துவ நூல் ‘

வெளி வந்தது. 12-ம் நூற்றாண்டில் மீண்டும் நாகார்ஜ்உனரின் முழுமையான நூல் வெளி வந்தது.

(தொடரும்)

இந்திய மருத்துவம் சீனாவில் பரவிய வரலாறு

This entry is part [part not set] of 15 in the series 20010430_Issue

விஜயா தேஷ்பாண்டே

தகவல் தொடர்பில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் ஒரு பகுதியில் நிகழும் நிகழ்ச்சிகள் மற்ற பகுதிகளில் உடனுக்குடன் தெரிய வருகின்றன. வெவ்வேறு நாடுகளில் நடக்கும் ஆய்வுகள் ஒன்றை ஒன்று சார்ந்து வளர வேண்டியுள்ளன. உலகின் மற்ற பகுதிகளில் நடக்கும் ஆய்வு பற்றித் தெரியாமல் எந்தத் துறையும் இயங்க முடியாது. இந்தச் சார்புத் தன்மை நவீன உலகினது மட்டுமல்ல. பழங்காலத்திலும் ஒரு கலாசாரத்தின் அறிவு கண்டு கொள்ளப் பட்டு, மதிக்கப் பட்டது. வெளியிருந்து வரும் புதிய செய்திகள் , கருத்தானாலும் சரி, நடைமுறைச் செய்முறையானாலும் சரி, அங்கீகரிக்கப் பட்டு, தமதாக்கிக் கொள்ளப் பட்டது.

கிரேக்க விஞ்ஞானம் அரேபியா வழியாக ஐரோப்பாவை அடைந்தது அனைவரும் அறிந்ததே. கான்ஸ்டாண்டி நோபிள் 1453 கி மு-வில் வீழ்ச்சி பெற்ற பின்பு, ஐரோப்பிய அறிவாளிகள் ஐரோப்பாவை நோக்கிச் செல்லத் துவங்கினர். பழைய கிரேக்கச் செவ்வியல் படைப்புகளை அரேபிய மொழியில் மொழியாக்கம் செய்து மேற்கிற்கு அறிமுகம் செய்வித்தனர். இதன் மூலம் இதை ஒத்த மற்ற படைப்புகளைத் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற தாகமும், அவற்றை லத்தீனில் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது. அரேபிய மொழியாக்கங்களிலிருந்து கிரேக்க விஞ்ஞானம் இப்படித் தான் பரவலானது.

அரேபிய விஞ்ஞானமும் கூட இப்படித் தான் ஐரோப்பியர்களிடையில் பரவியது. கிரேக்க விஞ்ஞானத்தைப் பயின்றதன் மூலம், அரேபிய விஞ்ஞானம் வளர்ச்சி பெற்றது எனப்து, இதனால் ஐரோப்பியர்களை விட அவர்கள் முன்னேறியவர்களாய் இருந்தார்கள் என்பது புரிந்து கொள்ளப் பட்டது. ஐரோப்பா இந்தக் காலம் இருண்ட காலம் என்று பின்னாளில் அழைக்கப் பட்ட கால்ப் பகுதியில் இருந்தது. மருத்துவமும் வெகுவாகப் பின் தங்கி இருந்தது. எல்லா அரேபிய அறிவுத் துறையும் கிரேக்க விஞ்ஞானத்தில் வேர் கொண்டதல்ல. மருத்துவமும், ரசவாதம் என்ற ரசாயனத் துறையும் கீழை நாடுகளன் விஞ்ஞானத்திலிருந்து பெறப் பட்டவை. ஐரோப்பிய மறு மலர்ச்சியே , கீழைத் தேசத்து கண்டுபிடிப்புகளான வெடி மருந்து, அச்சுக் கலையிலிருந்து பிறந்தது என்று சொல்லலாம். உண்மையில் எல்லாக் காலங்களிலும், விஞ்ஞான வளர்ச்சி உலகின் வெவ்வேறு பகுதிகள் அறிவுப் பரிமாற்றம் பெற்றதால் நிகழ்ந்ததேயாகும்., தகவல் தொடர்பு மிக மெதுவாக நிகழ்ந்ததால், காலப் பரப்பு சில சமயம் நூற்றாண்டுகளாய்க் கூட நீடித்தது. உபயோகமான விஞ்ஞானக் கூறுகள் பலக் கலாசாரங்களிலிருந்தும் கொணரப் பட்டு, ஓர்மை பெற்றதும், ஒழுங்கு செய்யப் பட்டதும் நிகழ்ந்தது. இப்படி வெளிநாட்டு அறிவியல் ஒழுங்கு செய்யப் பட்ட வுடன், உள்நாட்டுத் தன்மை பெற்று சீரான வளர்ச்சி பெற்றது. இது தனித்துவம் பெற்றதாகவும் இருந்தது. இங்கு இந்தியா சீனாவிற்கிடையில் ந்கழ்ந்த ஒரு பரிமாற்றம் பற்றியும் அது எப்படி சீனாவின் விஞ்ஞானப் பரப்பின் ஓர் அங்கமாய் மாறிப் போனது என்றும் ஆராயலாம்.

பழங்கால இந்திய மருத்துவம்

பழங்காலத்தின் மற்ற கலாசாரங்கள் எந்தப் பாதையில் மருத்துவ வளர்ச்சி பெற்றனரோ, அதே பாதையில் தான் இந்திய மருத்துவமும் வளர்ந்தது. பேய் பிசாசு நம்பிக்கைகளில் தொடங்கி மந்திர மாயம் மருத்துவமானது. இதன் பின் மருத்துவ இயல் அறிவு பூர்வ வளர்ச்சி பெற்று, ‘நோய்க் காரணவியலை ‘க் கைக்கொண்டது. பின் காரணம் தொடர்ந்து சிகிச்சையியல் என்று உருவாயிற்று. இந்த மருத்துவத் தத்துவம், சமகால சமூக பொருளியல் பின்னணிகளைச் சுவீகரித்துக் கொண்டது. இதன் மருத்துவச் சொல்லகராதியும் அவ்வக்கால எழுத்தாளர்களின் கொடை தான். முதல் கட்டமாக மாய மந்திரத் தன்மை அதர்வ வேதத்தில் காணப் படுகிறது. மந்திரம் போட்டு குணமாக்குவதும் கூடவே மூலிகை மருத்துவமும் இதில் காணப் படுகிறது. அறிவு பூர்வமான அணுகல் முறை முதன் முதலில் சராகஸம்ஹிதா என்ற நூலிலும், சுஸ்ருத ஸம்ஹிதா என்ற நூலிலும் காணப் படுகிறது. இவை புத்தருக்கு முற்பட்ட காலத்தியவை. சாரகர், சுஸ்ருதரின் மருத்துவ இயல் அணுகல் முறை அன்று நிலவி வந்த பிரபஞ்சக் கொள்கை , அணுக்கள் பற்றிய கொள்கை, மனித உடலுடனும், நலத்துடன் இவை கொண்ட உறவு பற்றிப் பேசுகிறது.

இதற்குப் பின் பெளத்த காலம். மனித வேதனைகள் பற்றியும் நோய்கள் பற்றியும் ஆழ்ந்த அக்கறை பெளத்தர்களுக்கு இருந்தது. எல்லாத் துயரங்களிலிருந்தும் விடுபட்ட நிலையான நிர்வாணம் , அதற்கு வழிகாட்டுபவர் (அதாவது புத்தர்) மருத்துவர் என்றுரறிய்ப்பட்டார். ‘பைஷாஸ்யகுரு ‘ (மருத்துவர்-ஆசிரியர்) என்ற பெயர் அதனால் அவருக்குத் தரப் பட்டது.சஞ்சலமற்ற அறிவுத் தேட்டத்திற்கும், விடுதலை முயற்சிக்கும் ஆரோக்கியமான உடல் மிக அவசியம் என்று கருதப் பட்டது. புத்தர் மற்றும் போதிசத்துவர்களின் பிரதான கடமையாக மக்களை உடல் நலம் பெற வைப்பது கருதப் பட்டது. ‘துயரம் ‘ பேருண்மையாய்க் கண்டறியப் பட்டவுடன், வாழ்வின் இன்ரியமையாத அம்சமாய்க் காணப் பட்டதால், தொடர்ந்த பேருண்மைகள் ‘துயரத்தின் காரணத்தை அறிதல், அதை வெல்லும் வழியை அறிதல், அதை இறுதியாய் வெல்லுதல் ‘ என்று காணப் பட்டன. இந்த நான்கு உண்மைகளும் , நோயை அறிதல், நோய்க் காரணம் அறிதல், மருத்துவம் , நோய் நீங்கல் என்பது மருத்துவச் சொல்லாடலில் முக்கிய இடம் பெறுகின்றன. இந்தக் கருத்துகள் இந்திய மருத்துவத்திலிருந்து பெற்று அதனைத் தத்துவ மெருகு அளித்தனரா என்பது விவாதத்திற்குள்ளாகி வருகிறது. ஆரம்ப கால பெளத்த மடங்களில் சிறப்பான மருத்துவ வளர்ச்சி ஏற்பட்டு, பிற்பாடு இந்து மயமாக்கல் நிகழ்ந்தது என்று கருத்துத் தெரிவிக்கின்றனர். மேற்கொண்டு ஆய்வு நிகழாமையால் இது வெறும் ஊகமாகவே நிற்கிறது. புத்த நூல்களில் மருத்துவம், அறுவை சிகிச்சை போன்றெவை போகிற போக்கில் குறிப்பிடப் படுகின்றனவே தவிர சாரகர், சுஸ்ருதர் போன்ற தொகுப்பாளர்களை அளிக்க வில்லை. எனவே ஆயுர்வேதக் கருத்துகளை பெளத்தர்கள் பெற்றுக் கொண்டார்கள் எனக் கருதலாம். 2-3-ம் நூற்றாண்டில் பெளத்த மதத்துடன் சேர்ந்தே இந்த மருத்துவக் கருத்துகளும் சீனாவைச் சென்றடைந்தன.

சீனா இந்திய மருத்துவத்தைப் பின்பற்றுதல்

பெளத்தர்கள் சீனாவிற்குச் சென்று வந்த பயணங்களினால் , இந்திய மருத்துவம் சீனாவில் அறிமுகமயிற்று. சீனச் சமூகத்திலும் தன் பாதிப்பைச் செலுத்தலாயிற்று. சூயி (கி பி 581-618), தாங் (கி பி 618-907) அரசாட்சிக் காலத்தின் போது இது உச்சம் பெற்றது. பெளத்தத்தின் வருகையுடன் கூட உஷ்ண உணவு, குளிர்ந்த உணவு போன்ற கருத்தாக்கங்கள் வந்தன. மன உளைச்சல்களையும் குணப் படுத்துவது பற்றிய கருத்தாக்கம் வந்தது. தியானக் கலையும் , இதுவே ஜென் பெளத்தப் பிரிவாகவும் உருப் பெற்றது.

போதிதர்மர் என்றழைக்கப் பட்ட ‘தா மோ ‘ 527-கி பியில், தனிமனிதச் சண்டைக் கலையை ‘ஷாவோ லின் ‘ பெளத்த மடத்தில் பெளத்த குருமார்களுக்குக் கற்றுக் கொடுக்கத் துவங்கினார்.இதுதான் ‘ஷாவோ லின் ‘ பாணிச் சண்டைக் கலையாய் உருப் பெற்றது. கி பி 399-ல் ஃபா சியான் , கி பி 629-645-இல் யுவான் சுவாங், கி பி 671-695-இல் யி சிங் ஆகியோர் இந்தியாவிற்கு வந்தனர். அவர்கள் வருகையின் காரணமாக இந்தியர்களுக்கு ஊசி சிகிச்சை, நாடி பார்த்தல் ஆகியவை அறிமுகமாயின. அவர்கள் திரும்பிச் செல்லுகையில் மருத்துவ மூலிகைகள் பற்றிய அறிவையும், இலவச மருத்துவ மனைகள் நிர்வாகம் பற்றிய அறிவையும் கொண்டு சென்றனர்.

ஆயிரமாண்டு வளர்ச்சியில் சீன மருத்துவம் இவற்றின் உபயோகமான விஷயங்களைத் தன்னகப் படுத்தியது. இந்தியா மட்டுமல்லாமல், பெர்சியா, அரேபியா போன்ற நாடுகளின் மருத்துவ அறிவும் பெறப்பட்டது. கி பி 5ம் நூற்றாண்டு தொடங்கி 12-ம் நூற்றாண்டு வரையில் இந்திய மருத்துவம் சீனாவின் தொடக்க கால மருத்துவ வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்தது. சீனா இந்தியாவிற்குத் தந்த மருத்துவக் கொடை சரியாய் பதிவு பெறவில்லை.

சீன அரசர்கள் பெளத்தர்களுக்கு ஆதரவு அளித்ததில் அறிவுத் தேட்டம் ஒரு காரணம் , அரசியல் காரணமும் உண்டு. ஹான் அல்லாத இனத்தவரோ அல்லது, பெரிது வெளித்தெரியாத அரச குடும்பத்தினரோ ஆட்சிக்கு வரும்போது, பெளத்தர்கள் தரும் அங்கீகாரம் அரசாட்சிக்கு முக்கியமாகி விடுகிறது. இந்த அங்கீகாரம் கிடைக்காத போது, பெளத்தர்கள் முக்கியமான குழுவாகவோ, செல்வம் படைத்த குழுவாகவோ இருக்கும் போது அவர்கள் வேட்டையாடப் பட்டதும் உண்டு. அதில்லாமல், மக்கள் நோய்வாய்ப்பட்டால் அவர்களின் உற்பத்தித் திறன் பாதிக்கப் பட்டு வரி வசூலும் குறைகிறது. பெளத்தர்களின் முக்கியத்துவம் மேலோங்குவதும் கீழிறங்குவதுமாக இருந்து வந்திருக்கிறது. தாங் அரச குடும்பத்தைச் சேர்ந்த டாய் சாங் (627-650 கி பி) பெளத்தக் கலைகளையும், அறிவியலையும் சீனாவில் பரப்பியதில் முக்கியமானவர்.

கண் மருத்துவத்தில் இந்தியச் செல்வாக்கு பெரிது உணரத் தக்கது. சீனாவின் வரலாற்று ஆவணங்களில் இந்தியர்கள் கண் அறுவை சிகிச்சை செய்வது குறிப்பிடப்ப்பட்டுள்ளது.வெகு ஜன இலக்கியத்திலும் இதன் குறிப்புகளைக் காணலாம். புகழ் பெற்ற சீனக் கவிஞர் போ ஜ்உயி (772-846 கி பி ) ஒரு கவிதையில் நாகர்ஜ்உனரைப் பற்றிக் குறிப்பிட்டு , அவருடைய ‘ கண்ணைப் பிரகாசமாக்கும் மருந்து ‘ என்று ஒரு மருந்தைக் குறிப்பிடுகிறார். லியு யுஸி (772-842 கி பி) என்ற இன்னொரு கவிஞரின் ஒரு கவிதை ‘கண்களைத் தந்த ஒரு பிராமண பூசகர் ‘. ஒரு பிராமண மருத்துவர் எப்படி கண்ணில் பூ விழுந்ததை சிகிச்சை செய்து அக்ற்றினார் என்று குறிப்பிடுகிறார். நாகார்ஜ்உனர் கண் மருத்துவத்தில் நிபுணராய்க் குறிப்பிடப் படுகிறார். தங்க ஊசி கொண்டு கண்ணில் விழுந்த பூவை (காடராக்ட்) அகற்றுவது பற்றிய குறிப்புகள் இதில் உள்ளன. சீன – இந்திய மருத்துவத் தொடர்புகளில் கண் மருத்துவம் முக்கிய இடம் வகித்ததை புத்த மதப் புத்தகங்களைக் கொண்டும் அறியலாம். கண்ணில் படர்ந்த அறியாமை என்னும் நோயை , விழிப்புணர்ச்சி என்னும் ஊசி கொண்டு அகற்றுவதைக் குறிப்பிடுகிறது.